Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-27

● என். பாஸ்கரன், கம்பம்.

நான் மாற்றுத் திறனாளி. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பி.எஸ்ஸி., விலங்கியல் முடித்துள்ளார். இரண்டாவது பெண் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். இவர்களின் வேலைவாய்ப்பு, எதிர்காலம், திருமணம் போன்ற விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

மூத்தவள் திரவியலட்சுமி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 7-7-1996-ல் பிறந்தவர். 2018 ஜூலையில் 22 வயது முடிந்து 23 ஆரம்பம். 8-9-2019 வரை புதன் தசை. அதன்பிறகு கேது தசை ஆரம்பம். கேதுவில், படித்த படிப்புக்கேற்ற வேலை அமையும். பெரும்பாலும் வெளியூரில் வேலை கிடைக்கும். ஜென்ம ராசியில் சனியும் கேதுவும் இருப்பதால், 25 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகளைத் தொடங்கலாம். இளையவள் விஜயதாரிணி ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், மேஷ லக்னம். 1999 ஜனவரியில் பிறந்தவர். 2019 ஜனவரியில் 20 வயது முடியும். 9-2-2011 முதல் ராகு தசை ஆரம்பம்- 18 வருடம். இன்னும் மூன்று வருடம் படிப்பு யோகம் உண்டு. அதன்பிறகு வேலை யோகம்! இவருக்கும் ராகு- கேது தோஷம் இருப்பதால் 27 வயதில் திருமண யோகம் வரும். ஒன்றை இழந்தால் இன்னொன்றை அடையலாம் என்பது விதி! தந்தையின் தேகத்தில் குறையிருப்பதால் பிள்ளைகளின் வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாமல் நன்றாக இருக்கும்.

● எஸ். பொன்ராமன், விளாத்திகுளம்.

எனக்கு 31 வயது. சிறு அளவில் பெட்டிக்கடை நடத்துகிறேன். வருமானம் குறைவு. அதனால் திருமணம் தடையாக உள்ளத

● என். பாஸ்கரன், கம்பம்.

நான் மாற்றுத் திறனாளி. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பி.எஸ்ஸி., விலங்கியல் முடித்துள்ளார். இரண்டாவது பெண் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். இவர்களின் வேலைவாய்ப்பு, எதிர்காலம், திருமணம் போன்ற விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

மூத்தவள் திரவியலட்சுமி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். 7-7-1996-ல் பிறந்தவர். 2018 ஜூலையில் 22 வயது முடிந்து 23 ஆரம்பம். 8-9-2019 வரை புதன் தசை. அதன்பிறகு கேது தசை ஆரம்பம். கேதுவில், படித்த படிப்புக்கேற்ற வேலை அமையும். பெரும்பாலும் வெளியூரில் வேலை கிடைக்கும். ஜென்ம ராசியில் சனியும் கேதுவும் இருப்பதால், 25 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகளைத் தொடங்கலாம். இளையவள் விஜயதாரிணி ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், மேஷ லக்னம். 1999 ஜனவரியில் பிறந்தவர். 2019 ஜனவரியில் 20 வயது முடியும். 9-2-2011 முதல் ராகு தசை ஆரம்பம்- 18 வருடம். இன்னும் மூன்று வருடம் படிப்பு யோகம் உண்டு. அதன்பிறகு வேலை யோகம்! இவருக்கும் ராகு- கேது தோஷம் இருப்பதால் 27 வயதில் திருமண யோகம் வரும். ஒன்றை இழந்தால் இன்னொன்றை அடையலாம் என்பது விதி! தந்தையின் தேகத்தில் குறையிருப்பதால் பிள்ளைகளின் வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாமல் நன்றாக இருக்கும்.

● எஸ். பொன்ராமன், விளாத்திகுளம்.

எனக்கு 31 வயது. சிறு அளவில் பெட்டிக்கடை நடத்துகிறேன். வருமானம் குறைவு. அதனால் திருமணம் தடையாக உள்ளது. வருமானம் பெருகவும் திருமணத்தடை விலகவும் என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம். சந்திரனோடு சனி சம்பந்தம். எனவே தாமதத் திருமணம்! எந்தத் திருமணத்துக்கும் வருமானம், வேலை, தொழில் ஒரு தடையாக இருக்காது! கோவில் வாசலில் பூ விற்பவருக்கும், பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் விற்பவருக்கும் திருமணம் ஆகாமல் போகிறதா? கிரக அமைப்பும் திருமண யோகமும் வேண்டும். உங்கள் ஜாதகப்படி சனிதோஷம் இருப்பதால் 32 வயது முடிந்து 33-ல் திருமணம் கூடும். 2019-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நடக்கும். வருமானப் பெருக்கத்துக்கு சைடு பிசினஸ் எதுவும் செய்யலாம். டீக்கடை, ஈவினிங் டிபன் சென்டர் மாதிரி அக்னி சம்பந்தம் நல்லது.

● விஜய் ஸ்ரீதர், சென்னை.

Advertisment

வெளிநாட்டுப் பெண் என்னை விரும்புகிறார். அவரைத் திருமணம் செய்யும் யோகம் உண்டா? நல்ல குணமுள்ள வெளிநாட்டுப் பெண் அமையுமா?

நீங்கள் அனுப்பிய ஜாதகம் திருக் கணிதப்படி இருக்கிறது. இதை மதுரையில் கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து அனுப்பினால் பதில் சொல்வேன். சுந்தரம், செல்: 92453 28178-ல் தொடர்புகொள்ளவும். திருக்கணித ஜாதகப்படி உங்கள் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய்; அவரை 5-ல் உள்ள நீசச்சனி பார்ப்பதால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் ஆக இடமுண்டு. அது நல்ல மனைவியா? குணவாதியா என்பதெல்லாம் விதிப்பயன்.

● நிர்மலாதேவி, மேலப்பாதி அஞ்சல்.

என் மகன் விஜயராஜ் திருமணம் எப்போது நடக்கும்?

விஜயராஜ் கன்னி லக்னம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு, குரு. அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. நடப்பு வயது 31 முடிந்து 32 ஆரம்பம். நாக தோஷம் இருப்பதால் 35 வயதில் திருமண யோகம் வருகிறது. பெரும்பள்ளம் சென்று கேதுவுக்குப் பரிகார பூஜை செய்தால் 2019 ஆவணிக்குமேல் திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

● வி. முத்துலிங்கம், சென்னை-82.

தங்களை அமெரிக்காவில் உள்ள எனது மகன் விஷயமாக நேரில் சந்தித்து பலன் கேட்டுள்ளேன். தற்பொழுது என் உத்தியோகம் சம்பந்தமான பழைய கேஸ் ஒன்று ஃபைல் மூவ் ஆகிறது. அது இரண்டு கட்டங்கள் கடந்து 3-ஆவது கட்டத்தில் வந்து மூன்று மாதமாகத் தேங்கியுள்ளது. நானும் செப்டம்பரில் இருந்து அபிராமி அந்தாதியைப் படித்துப் பிரார்த்தனை செய்து வருகிறேன். அது எப்பொழுது தீர்வாகும்? வரவேண்டிய நிலுவைத் தொகை எப்பொழுது வரும்?

விருச்சிக லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். நடப்பு புதன் தசையில் ராகு புக்தி 2019 அக்டோபர் வரை. இது முடியவேண்டும். அதற்கு முன்னால் பிப்ரவரி 13-ல் ராகு- கேது பெயர்ச்சி வருகிறது. அதற்குள் திருவக்கரை (திண்டிவனம்- புதுச்சேரி பாதை மயிலம் வழி) சென்று குண்டலினி முனிவர் ஜீவசமாதியில் 18 நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து, அங்கு வக்ர காளியம்மனுக்கும், வக்ர சனிக்கும் அர்ச்சனை செய்துகொள்ளவும். பிப்ரவரிக்குமேல் சாதகமான சூழ்நிலை உருவாகலாம்.

● எஸ். ராமநாதன், மும்பை.

எனது தம்பி மகள் அபூர்வாவுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல இடத்து சம்பந்தம் அமையுமா? தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால் திருமணத்தில் பாதிப்பு ஏற்படுமா?

ஜாதகி அபூர்வாவிற்கு தனுசு ராசி, பூராட நட்சத்திரம், கும்ப லக்னம். சந்திரனோடு சனி சம்பந்தம். 8-ல் சூரியன், புதன், செவ்வாய். 2019 அக்டோபரில் 30 வயது முடியும். அநேக மாக சந்திர தசை முடியும் நிலை. ஒரு ஜாதகத் தில் ஏழரைச்சனி அல்லது அட்டமச் சனி நடக்கும்போது சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் விபரீத விளைவுகள், விபத்து, உயிர்ச்சேதம், பொருள் சேதம், கௌரவத்தை பாதிக்கும் செயல் நடவடிக்கை கள் போன்றவை ஏற்படும். மேலும் சனியை செவ்வாய் பார்க்க, சனி செவ்வாயைப் பார்ப்பதும் ஆகாது; விபரீத எண்ணங்கள், விளைவுகளை உண்டாக்கும். எனவே விரைவில் திருமணம் நடக்கவும், பெற்றோர் சம்மதத்துடன் நடக்கவும், நல்ல கணவன்- நல்ல மணவாழ்க்கை அமையவும் காரைக் குடியில் பிரசன்ன விநாயகர் ஆசிரமத்தில் காமோகர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம் பிரதானமாகச் செய்து அபூர்வாவுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அத்துடன் ருத்ரஹோமம் வளர்த்து சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்கள், 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசவும். செலவைப் பார்க்காமல் இதைச் செய்தால் ஜாதகிக்கும், பெற்றோருக்கும், உடன்பிறப்பு களுக்கும் எந்த விதமான பாதிப்பும் அணுகாது.

● கே. ஜெயராமன், திருச்சி.

2003-ல் தங்களிடம் என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்றும், ஒரு மகளுக்கு அப்பா செய்யவேண்டிய கடமையைச் செய்ய முடியுமா என்றும் கேட்டேன். 2004-ல் திருமணம் நடக்கும் என்றும், அப்பா வுக்குக் கடமையைச் செய்த மன நிறைவு ஏற்படும் என்றும் கூறினீர்கள். தங்கள் அருள்வாக்குப்படி மகளுக்குத் திருமணம் நடந்து, மணமக்கள் நலமாக இருக்கிறார்கள். பேத்தி பிறந்து எட்டாவது படிக்கிறாள். இப்போது எனக்கு 77 வயது. எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் 1983-ல் பிறந்த வன். இன்னும் அவனுக்குப் பெண் அமையவில்லை. இளையவனுக்கும் அதே பிரச்சினை. இப்போதும் அதே கேள்விதான். மகன்களுக்கு என் வாழ்நாளில் திருமணம் செய்து கடமையை நிறைவேற்ற முடியுமா?

அன்பு பாலாஜி என்ற லட்சுமி நாராயணன் பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னம். நடப்பு வயது 36. அவருக்கு 2010 முதல் 31 வயது முதல் ராகு தசை. லக்னத் தில் ராகு. ராசியை சனியும் செவ்வாயும் பார்ப்பது தோஷம். அதனால் திருமணம் தடையாகிறது. திருமணம் ஆகுமா என்பதே கேள்விக்குறி. குரு 7-ல் இருந்து லக்னத்தைப் பார்ப்பது ஒரு "பிளஸ் பாயின்டு.' தாமதமானாலும் நல்ல மனைவி அமையவும், இனிய மணவாழ்க்கை அமையவும் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது இருவருக்கும் (அண்ணன் தம்பிக்கும் சேர்த்து) ஹோமம் செய்து அபிஷேகம் செய்யலாம். ஒரே செலவாகி விடும். இத்துடன் 19 ஹோமங்கள் இணைத் துச்செய்வார்கள். தொழில் உயர்வு, பொருளாதார வளர்ச்சி, வாரிசு யோகம், ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம் ஆகிய எல்லா நன்மைகளையும் அடையலாம். காரைக் குடி சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொள்ளவும். (செல்: 99942 74067)

bala281218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe