Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-24

● கந்தவேலன், மதுரை.

திருமணப்பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் எது? ஆணும் பெண்ணும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்றால் சேர்க்கலாமா?

Advertisment

பத்து பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் ஐந்து. ரஜ்ஜு, வேதை, ராசி, தினம் (நட்சத்திரம்), யோனி ஆகியவை முக்கியம். மற்ற கணம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், வசியம், ராசியாதிபதி என்ற ஐந்தும் முக்கியமல்ல. இதில் தினம் (நட்சத்திரம்) சில சேரும்; சில சேராது. ஏக ராசியாதிபதி சேரும். இதைவிட முக்கியமானது ஆண்- பெண் ஜாதகத்தில் இருவருக்கும் சம ராகு தசையோ சம ராகு புக்தியோ நடக்கக்கூடாது. பத்துப் பொருத்தம் இருந்தாலும் சம ராகு தசாபுக்தி நடந்தால் அந்த ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. அதேபோல திருமணத் தேதி 4, 5, 7, 8 வரக்கூடாது. இது தேதி எண் அல்லது கூட்டு எண் (தேதி, மாதம், வருடம்) இவற்றில் அமையக் கூடாது.

Advertisment

● பி. ராஜேந்திரன், வேலூர்.

நாங்கள் வசிக்கும் பழைய வீட்டை இடித்துவிட்டு புதுப்பித்துக்கட்ட முடியுமா? மகன் சுந்தரத்துக்கு 27 வயதில் திருமணம் செய்ய வ

● கந்தவேலன், மதுரை.

திருமணப்பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் எது? ஆணும் பெண்ணும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்றால் சேர்க்கலாமா?

Advertisment

பத்து பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் ஐந்து. ரஜ்ஜு, வேதை, ராசி, தினம் (நட்சத்திரம்), யோனி ஆகியவை முக்கியம். மற்ற கணம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், வசியம், ராசியாதிபதி என்ற ஐந்தும் முக்கியமல்ல. இதில் தினம் (நட்சத்திரம்) சில சேரும்; சில சேராது. ஏக ராசியாதிபதி சேரும். இதைவிட முக்கியமானது ஆண்- பெண் ஜாதகத்தில் இருவருக்கும் சம ராகு தசையோ சம ராகு புக்தியோ நடக்கக்கூடாது. பத்துப் பொருத்தம் இருந்தாலும் சம ராகு தசாபுக்தி நடந்தால் அந்த ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. அதேபோல திருமணத் தேதி 4, 5, 7, 8 வரக்கூடாது. இது தேதி எண் அல்லது கூட்டு எண் (தேதி, மாதம், வருடம்) இவற்றில் அமையக் கூடாது.

Advertisment

● பி. ராஜேந்திரன், வேலூர்.

நாங்கள் வசிக்கும் பழைய வீட்டை இடித்துவிட்டு புதுப்பித்துக்கட்ட முடியுமா? மகன் சுந்தரத்துக்கு 27 வயதில் திருமணம் செய்ய விரும்புகிறேன். நடக்குமா?

ராஜேந்திரனுக்கு ஏழரைச் சனி. ராகு தசை. கடன் வாங்கி வீடு சீர்திருத்த வேலையைச் செய்யலாம். இடையூறு இல்லாமல் கனவு இல்லம் கைகூட, பொன்னமராவதி அருகில் (புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதை) செவலூர் சென்று பூமிநாத சுவாமி, ஆரணவல்லியம்மனை வழிபடவும். சுந்தரம் திருமணம் 27 வயது முடிந்தபிறகு நடக்கும்.

jothidamanswer

● ஆர். வரலட்சுமி, கோவில்பட்டி.

என் மகள் கார்த்திகாவுக்கு 20 வயது. பி.ஈ. 3-ஆவது வருடம் படிக்கிறாள். அவள் எதிர்காலம், வேலை, திருமணம் பற்றிக் கூறவும்.

மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். 18 வயது முதல் குரு தசை. 3, 10-க்குடையவர் 6-ல் மறைவு. படிப்பு, பட்டம், வேலையெல்லாம் படிப்படியாக முன்னேற்றம் காணும். ஆனாலும், கும்பச் சனியை கடகச் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்பதால் திருமணத்தில் மட்டும் பிரச்சினைகள் வரலாம். 27 வயது முடிந்தபிறகு திருமணம் செய்வதுதான் நல்லது. அக்காலம் தேவைப்பட்டால் பரிகாரம் செய்துகொள்ளலாம்.

● வெ. மனோகரி, ஆம்பூர்.

இந்துமதிக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் எப்பொழுது நடக்கும்? இந்துமதி டிப்ளமோ முடித்துள்ளார். தகுதித் தேர்வில் வெற்றி பெற என்ன பரிகாரம்? மறுமண வாழ்வாகிலும் மனநிறைவாக இருக்குமா?

2-ல் சனி. அதற்கு செவ்வாய் பார்வை. ராசியில் சனி. 7-ல் செவ்வாய். நியாயமாக 30 வயதில் திருமணம் நடக்க வேண்டும். 26-க்கு முன்னதாக நடந்ததால் மணவாழ்வில் முறிவு வந்துவிட்டது. அத்துடன் ராகு தசை வேறு. தற்போது ஏழரைச் சனி ஆரம்பம். ராகு தசை, குரு புக்தி. புனர்விவாக மந்திர ஜெபம் செய்து, பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து இந்துமதிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் சூலினிதுர்க்கா ஹோமமும் சேர்த்து செய்ய வேண்டும். காரைக்குடியில் செய்யலாம். விவாகரத்தான மாப்பிள்ளை அமைவார். கல்வி அல்லது கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிகிறவர். இந்துமதி தகுதித் தேர்வில் வெற்றி பெறவும், நல்ல வேலை அமையவும் நங்கவள்ளி சென்று (சேலம் மேட்டூர் பாதை) லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

● ஆர். ராஜ்குமார், திருவண்ணாமலை.

திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. சொந்தமாக புதுவீடு உள்ளது. புதுவீட்டுக்குக் குடிபெயர்ந்து இரண்டு வருடமாகிறது. அதுமுதல் மனைவிக்கும் எனக்கும் சச்சரவு, நோய், வைத்தியச் செலவு. மேலும் என் வலது கால் மூட்டெலும்பு தேய்மானம். டாக்டர் அறுவை சிகிச்சை ஆலோசனை கூறுகிறார்.

புதுவீடு வாஸ்துக் குற்றமாகத் தெரிகிறது. உங்களுக்கு சிம்ம ராசி, ரிஷப லக்னம். மனைவிக்கு ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. நீங்கள் ரிஷப லக்னம். மனைவி ரிஷப ராசி. நல்ல பொருத்தம் உண்டு. ஆனால் சொந்த வீடு போனது முதல்தான் (கடந்த இரண்டு வருடமாக) பிரச்சினை. எனவே உடனே வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் இருக்கலாம். அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கலாம். இதில் எதை உடனடியாகச் செய்ய முடியுமோ அதைச் செய்யவும். ஆபரேஷன் தேவை இல்லை.

● எஸ். அய்யப்பன், காரைக்குடி.

எனக்கு 35 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. வியாபாரத்தில் லாபமில்லை. கொடுத்த கடனும் வசூலாக வில்லை. கடையில் உள்ள வழக்கு நீங்கி முழுமையாக எப்போது சொந்தமாகும்?

சிம்ம லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். 2-ல் சனி இருப்பதால் திருமணத் தடை. 31 வயது முதல் சந்திர தசை. இது ராசி, லக்னத்துக்கு விரயாதிபதி தசை. திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவும். ராஜபாளையம் வாசுதேவநல்லூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தாருகாபுரம் என்ற ஊரில் மத்தியஸ்தநாதர் கோவில் இருக்கிறது. அங்கு சென்று சிவன், அகிலாண்டேஸ்வரி, நவகிரக தட்சிணாமூர்த்தி மூவருக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்யவும். அதன்பிறகு உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறக்கும். ருத்ரஹோமம் வளர்க்கவேண்டும்.

● எம். கந்தசாமி, அரூர்.

என் தம்பி மனோகரனுக்குத் திருமண மாகி இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தையில்லை. எப்போது குழந்தை பாக்கியம்?

மனோகரன் சதய நட்சத்திரம், கும்ப ராசி. கவிதா அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. இருவர் ஜாதகத்திலும் புத்திர தோஷம் கடுமையாக இருக்கிறது. அதனால் வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து, அவர்கள் இருவருக்கும் கலச தீர்த்த அபிஷேகம் செய்யவேண்டும்.

bala071218
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe