● கு. மாரிமுத்து, சென்னை-93.

2015 பிப்ரவரி முதல் இடது கையும் காலும் வாதநோயால் செயலிழந்துவிட்டது. பலரிடம் வைத்தியம் பார்த்தும், சித்த மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்த நோய் சரியாகுமா? பெயர் மாற்றம் தேவையா?

G. M A A R I M U T H U

3 4 1 1 2 1 4 6 4 5 6

Advertisment

என்று 37-ல் பெயர் மாற்றம் செய்து (ஒரு ஆ சேர்த்து) 1-ஆம் தேதி வரும் நாளில் (முதன்முதலாக) சூரிய ஹோரையில் ஆரம்பித்து, பிறகு தொடர்ந்து 108 நாள் 108 முறை எழுதவும். சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். 2006 டிசம்பர் முதல் சனி தசை ஆரம்பம். இது 4-ஆவது தசை; மாரக தசையாகும்- 2025 வரை நடக்கும். இதில் 12-6-2019 வரை சனி தசை, சந்திர புக்தி. 2013-ல் சனி தசை, சுக்கிர புக்தி மூன்று வருடம், இரண்டு மாதம். இதில்தான் உங்களுக்கு பாதிப்பு ஆரம்பம். குடும்பம், மகிழ்ச்சி, மனைவி, மக்கள், ஆரோக்கியம் எல்லாவற்றையும் பாதித்தது. குரு மறைவு என்பதால் முழுமை யான குணம் ஏற்படுமென்று கூறமுடியாது. 30 அல்லது 40 சதவிகிதம் குணம் கிடைக்கலாம். சென்னையில் பம்மல்- பொழிச்சலூரில் வடதிருநள்ளாறு எனப்படும் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சனிக்கிழமைதோறும் சென்று வழிபடவும். சனீஸ்வரர் கருணை உங்களைக் குணப்படுத்தலாம்.

jothidamanswer

● பண்ருட்டி வாசகி.

"பாலஜோதிடம்' மூலம் தங்களின் சேவை பலருக்குப் பயனாகிறது. வாழ்க நீவிர்! வளர்க உங்களின் தொண்டு! எங்கள் ஜாதகப்படி சொந்த வீடு எப்போது அமையும்? எனக்குப் பல நாட்களாக கால்வலி, மூட்டுவலி, தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறேன். எப்போது தீர்வு கிடைக்கும்?

உங்களுடைய ஜாதகமும், கணவரின் ஜாதகமும் திருக்கணிதப்படி கணிக்கப் பட்டுள்ளது. வாக்கியப்படி உங்கள் ஜாத கத்தைக் கணித்து ஜெராக்ஸ் எடுத்து அனுப் பினால் பதில் சொல்வேன். தசாபுக்தியில் வித்தியாசம் வரும். மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கிய ஜாதகம் கணிக்கலாம். தொடர்புக்கு: செல்: 92453 28178. உங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்காததுக்கு கணவருக்கு நடக்கும் அட்டமச்சனியும் (ரிஷப ராசி) ஒரு காரணம்.

● மணி, சோழவந்தான்.

நடிகர் ரஜினி இந்தியாவிலுள்ள நதிகளை எல்லாம் இணைக்கவேண்டும் என்கிறாரே- அது சாத்தியமா?

பிரதமர் மோடியும் இந்த முயற்சியை எடுத்து நிறைவேற்றினால் அடுத்த தேர்தலிலும் அவர் வெற்றிபெறுவார் என்பது பி.ஜே.பி.யின் பிரசாரக் கொள்கை. உண்மையில் இது சாத்தியமா? பல கோடி செலவாகுமே என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அது சரியா- முறையா என்பது ஆய்வுக்குரிய கேள்வி! வடநாட்டில் கங்கை ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி ஓடுகிறது. தமிழ்நாட்டில் காவேரி, வைகை, தாமிரபரணி என்று பல ஆறுகள் ஓடுகின்றன. இவற்றை மனிதர்கள் யாரும் உருவாக்கவில்லை. இறைவன் (இயற்கை) வகுத்தது. அதன் ரகசியம் இறைவனுக்கே புரியும். எந்தெந்த நதி நீரில் என்னென்ன சாகுபடி ஆகவேண்டும் என்பதும் இறைவன் வகுத்த கணக்கு. இதை நாம் மாற்றியமைப்பது எந்தவகையில் நியாயம்? விஞ்ஞானிகள் செயற்கை மழையைக் கண்டுபிடித்தாலும் அது எந்த அளவில் வெற்றிபெற்றது என்பது கேள்விக்குறிதான். இந்த உலகில் நான்கில் ஒரு பாகம்தான் பூமி. மற்ற மூன்று பாகமும் கடல். (நீர்). அந்த ஒரு பாகம் பூமியிலும் காடு, மலை, பாலைவனம், வனாந்திரப் பகுதி என்பதுதான் அதிகம். மிகக்குறுகிய பகுதியில் தான் மக்கள் வசிப்பு! கடல் பகுதி சத்தியத்துக் குக் கட்டுப்பட்டு செயல்படுகிறது. மிகமிக சிறுஅளவு கடல் பொங்கினால்- கடல் கோபப் பட்டால் சுனாமி ஏற்படுகிறது; எவ்வளவு சேதம் ஏற்படுகிறது! ஆக, இயற்கையை இயற்கையாகவே அனுபவிப்பதே மனித சமுதாயத்தின் கடமை. மாற்று முயற்சிகள் சாதகமாகுமா? பாதகமாகுமா? கடவுளுக்கே வெளிச்சம்! பட்டுக்கோட்டையார் எழுதி யபடி தனித்தனி மிருகங்களுக்கு தனித்தனி குணங்கள். ஆனால் மனிதனிடத்தில் எல்லா மிருகங்களின் மொத்தக் குணங்களும் அடங்கி யுள்ளது. ஈவு இரக்கத்துடன், நன்றி மறக் காமல், நயவஞ்சகச் செயல் புரியாமல் மனிதன் மனிதனாக- மனித நேயமாக வாழ்ந் தாலே போதும்- இயற்கை அவனைக் காப் பாற்றும். எல்லா வசதிகளையும் வாரி வழங்கும்.

● ராஜகோபால், மானாமதுரை.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது- எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது- எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்பது கீதா உபதேசம். நடப்பது நடக்கத்தானே செய்யும்? "வருவதுதானே வரும்- வருவது- தானே வரும்' என்றார் வாரியார் சுவாமிகள். அப்படியிருக்க ஜாதகம் பார்த்து நேரம், காலத்தை வீணாக்குவது சரியா?

ஒரு குருடன் கையில் விளக்கேந்திச் சென்றான். அவன் எதிரில் வந்தவன், ""உனக்கே பார்வை தெரியாது. பிறகு ஏன் கைவிளக்கு ஏந்திப் போகிறாய்?'' என்று கேட்க, ""எனக்காக இல்லை. என் எதிரில் வருபவர்கள் என்மீது மோதி விடாமலும், விழச்செய்யாமலும் இருக்க'' என்று பதில் கூறினான். வெளியூர் செல்கிறவன், எந்தப் பக்கம் போனால் தான் போகவிரும்பும் ஊரை அடையலாம் என்று கைகாட்டியைப் பார்த்துச் செல்வான். ரோட்டில் பள்ளம் இருக்கிறது. அதில் விழாமல் ஒதுங்கிப் போகும்படி ஒரு குச்சியில் சிவப்புத் துணியைக் கட்டி பள்ளத்தில் ஊன்றி வைத்திருப்பார்கள். அதுபோல ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. நமது எதிர்காலத்தை எப்படி செயல்படுத்துவது என்பதற்கு ஒரு ஆலோசனை; அவ்வளவுதான். விதியை மாற்றுவதோ புறக்கணிப்பதோ ஆகாது! "பலனை எதிர்பாராமல் உன் கடமையைச் செய்' என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் உபதேசம் செய்தார். அந்தக் கடமை என்னவென்று அவரவருக்குத் தெரியுமா? தெரியவேண்டாமா? அதை உணர்த்துவதே ஜோதிடம்!அதற்காகப் பையில் ஒரு பேப்பரில் ஜாதகத்தை எழுதி வைத்துக்கொண்டு, அந்தப் பேப்பர் கிழிந்துபோகும்வரை எல்லா ஜோதிடர்களிடமும் காட்டிக் காட்டிப் பலன் கேட்பது பைத்தியக்காரத் தனம். என்னிடம் ஒருவர் வந்தார். ஒரு ஜாதகத்தைக் காட்டி, ""இவன் எப்போது வீழ்ச்சியடைவான் அல்லது மரணம் அடைவான்'' என்று கேட்டார். ""இது யார் ஜாதகம்'' என்றேன். ""என் எதிரி ஜாதகம்'' என்றார். இப்படி எண்ணம் படைத்தவர்கள் உருப்படுவார்களா? "நீ நீயாக இரு' என்பது ஒரு தத்துவம். ஒரு சித்த வைத்தியர் ஒரு நோயாளியிடம் மருந்தைக்கொடுத்து விட்டு ""இதற்கு பத்தியம் இருக்கவேண்டும்'' என்றார். ""என்ன பத்தியம்?'' என்று கேட்டதற்கு ""குரங்கை நினைக்கக்கூடாது'' என்றார். அவன் மருந்து சாப்பிடும்போதெல்லாம் வைத்தியர் சொன்ன பத்தியம்தான் (குரங்கு) நினைவுக்கு வந்ததாம். தன் கடமை என்னவென்று உணர்ந்து அதன்படி செயல்படுகிறவனுக்கு ஜோதிடம் தேவையில்லை. அதைத்தான் ஞானசம்பந்தப் பெருமான் "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்றார். அப்படிப்பட்டவர்களுக்கு நவகோளும் நலம்தரும் கோளாகும்.

● கந்தவேலன், மதுரை.

திருமணப்பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் எது? ஆணும் பெண்ணும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்றால் சேர்க்கலாமா?

பத்து பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் ஐந்து. ரஜ்ஜு, வேதை, ராசி, தினம் (நட்சத்திரம்), யோனி ஆகியவை முக்கியம். மற்ற கணம், மாகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், வசியம், ராசியாதிபதி என்ற ஐந்தும் முக்கியமல்ல. இதில் தினம் (நட்சத்திரம்) சில சேரும்; சில சேராது. ஏக ராசியாதிபதி சேரும். இதைவிட முக்கியமானது ஆண்- பெண் ஜாதகத்தில் இருவருக்கும் சம ராகு தசையோ சம ராகு புக்தியோ நடக்கக்கூடாது. பத்து பொருத்தம் இருந்தாலும் சம ராகு தசாபுக்தி நடந்தால் அந்த ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. அதேபோல திருமணத் தேதி 4, 5, 7, 8 வரக்கூடாது. இது தேதி எண் அல்லது கூட்டு எண் (தேதி, மாதம், வருடம்) இவற்றில் அமையக்கூடாது.