Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-21

● பி. வெயிலம்மாள், விருதுநகர்.

எனக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். கணவர் குடும்பத்துடன் இல்லை. பிரிந் திருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது. உயிர்ச் சேதமோ அல்லது பெரும் பாதிப்போ ஏற்படுமா? எனது மூன்றாவது மகன் திருமணத்தை என்னால் நடத்திவைக்க முடியுமா? இரண்டு மகன்கள், ஒரு மகள் திருமணத்தை நானே நடத்திவைத்தேன். இரண்டு மருமகள்களுக்கும் ராகு தசை நடக்கிறது. 2-ஆவது மகன் கருப்ப சாமியும் பவித்ராவும் 8-ஆம் தேதி வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் 24-8-2018 , ஆவணி 8-ல் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பரிகாரம் உண்டா?

Advertisment

உங்களுக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி என்பது தெரியவில்லை. அழகர் சாமிக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி. ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் 2016 டிசம்பர்முதல் சந்திர தசை. இது பத்து வருடம். ஏழரைச் சனியும் சந்திர தசையும் சந்திப்பதால் உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படலாம் என்பது பொதுவிதி. கணவர் (அவருக்குத் தகப்பனார்) பிரிந்திருப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. என்றாலும் உடல்நலக்குறைவு இருக்கும். சனிக் கிழமைதோறும் 72 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் நெய் விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவேண்டும். இதை நீங்களே செய்யலாம். பாதிப்புகள் விலகும். தமிழ்த் தேதி ஆவணி 8 என்பது குற்றமில்ல

● பி. வெயிலம்மாள், விருதுநகர்.

எனக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். கணவர் குடும்பத்துடன் இல்லை. பிரிந் திருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது. உயிர்ச் சேதமோ அல்லது பெரும் பாதிப்போ ஏற்படுமா? எனது மூன்றாவது மகன் திருமணத்தை என்னால் நடத்திவைக்க முடியுமா? இரண்டு மகன்கள், ஒரு மகள் திருமணத்தை நானே நடத்திவைத்தேன். இரண்டு மருமகள்களுக்கும் ராகு தசை நடக்கிறது. 2-ஆவது மகன் கருப்ப சாமியும் பவித்ராவும் 8-ஆம் தேதி வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் 24-8-2018 , ஆவணி 8-ல் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பரிகாரம் உண்டா?

Advertisment

உங்களுக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி என்பது தெரியவில்லை. அழகர் சாமிக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி. ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் 2016 டிசம்பர்முதல் சந்திர தசை. இது பத்து வருடம். ஏழரைச் சனியும் சந்திர தசையும் சந்திப்பதால் உயிர்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படலாம் என்பது பொதுவிதி. கணவர் (அவருக்குத் தகப்பனார்) பிரிந்திருப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. என்றாலும் உடல்நலக்குறைவு இருக்கும். சனிக் கிழமைதோறும் 72 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் நெய் விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவேண்டும். இதை நீங்களே செய்யலாம். பாதிப்புகள் விலகும். தமிழ்த் தேதி ஆவணி 8 என்பது குற்றமில்லை. ஆங்கிலத் தேதிக்குதான் 4, 5, 7, 8 கூடாது. 24-8-2018 என்பது 6+7 என்பதால் பெரும் பாதிப்பு வராது. பொருளாதாரப் போராட்டம் இருக்கும். 108 நாள் தொடர்ந்து விநாயகருக்கு நெய்தீபமேற்றி அறுகம்புல் மாலை சாற்றவேண்டும். அதன்பிறகு ஞாயிறுதோறும் வாராவாரம் விநாயகரை வழிபடவும்.

jothidamanswers

● ஆ. ஈஸ்வரன், வத்ராப்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்றேன். பொழுது போகவில்லையென்று "பாலஜோதிடம்' வாங்கிப் படித்தேன். தங்களின் ஜோதிடக் கணிப்பு என்னை ஈர்த்தது. "ஜோதிடம் உண்மை; ஜோதிடர்கள் பொய்' என்று எண்ணியிருந்ததற்கு மத்தியில், தங்களைப் போன்ற தெளிவான, உண்மையான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதை "பாலஜோதிடம்' படித்தபிறகு தெரிந்து கொண்டேன். எத்தனையோ ஜோதிடப் புத்தகங்களை வாங்கிப் படித்தும் திருப்தி யில்லை. நீங்கள் விதிவிலக்கு. உங்களை என் கண்ணுக்குக் காட்டிய மீனாட்சிக்கு நன்றி. எனக்கு ஜோதிடம் வருமா? தங்கைக்கு திருமண முயற்சி தடைப் படுகிறது. எப்போது நடக்கும்? தம்பியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஈஸ்வரன் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னம். 2-ஆம் இடத்தை குரு பார்க்க, 4-ல் சூரியன், புதன் சேர்க்கை என்பதால் ஜோதிட ஞானம் சித்திக்கும். வாக்குப்பலிலிதமும் வரும். மேலும் புதன் தசை நடப்பதும் ஜோதிடம் பயில நல்வாய்ப்பு. சென்னையில் பி.எஸ்.பி. விஜய்பாலாவின் தகப்பனார் எழுதிய ஜோதிட நூலை வாங்கிப் படியுங்கள். தொடர்புக்கு, செல்: 73586 26538. தங்கை மகேஸ்வரி ரேவதி நட்சத்திரம். மீன ராசி. 37 வயதுவரை சுக்கிர தசை. மீன ராசி, மீன லக்னத்துக்கு சுக்கிரன் நல்லது செய்யாது. தற்போது சுக்கிர தசை, ராகு புக்தி. 27 வயது நடக்கிறது. அதன்பிறகு தான் திருமண யோகம். தங்கையின் ஜென்ம நட்சத்திரத்தை அனுசரித்து தீபாவளிக்குப்பிறகு காரைக்குடி, சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யவும். திருமணத் தடையும் விலகும். நல்ல கணவரும் அமைவார். திருப்தியான மணவாழ்க்கையும் வாரிசு யோகமும் உண்டாகும். தொடர்புக்கு, செல்: 99942 74067. தம்பி தங்கேஸ்வரனுக்கு 16 வயதுமுதல் சனி தசை. 3-ஆவது தசை பாதிப்பு வராது. கல்வி மந்தம் அல்லது ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு சரியாகும்.

● பி. பத்மநாபன், சென்னை-81.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு 586 ரூபாய் மட்டும் பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு ஒரே மகள். அவள் திருமணத்தை எனது சகோதரி எல்லா செலவும் செய்து நடத்தி வைப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது தன்னால் இயலாது என்கிறாள். மகள் எதிர்காலம் என்னவாகும்?

மகள் யாமினி கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம். சுக்கிர தசை நடக்கிறது. 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. அதன்பிறகுதான் அவருக்குத் திருமண யோகம் வருகிறது. அந்த சமயம் உங்கள் சகோதரியோ அல்லது அதற்கு பதிலாக வேறு யாரோ ஒருவரோ வந்து மகள் திருமணத்தை நடத்தி வைக்க ஆண்டவன் அருள்புரிவார். நம்பிக்கையோடு பொறுமையாக இருங்கள்.

● ஏ.எஸ். மணி, புதுச்சேரி.

என் தந்தை சிறந்த முருகபக்தர். 78 வயது நடக்கிறது. 35 வருடமாக நிலம் சம்பந்தமான வழக்கு நடக்கிறது. உயர்நீதிமன்றம் வரை அவருக்கு சாதக மான தீர்ப்பு கிடைத்தும் அந்த நிலத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. வழக்கு எப்போது சாதகமாகும்? பொசஷன் எப்போது கிடைக்கும்?

2020 டிசம்பர் வரை அட்டமச்சனி. அது முடிந்ததும் பொசஷன் அனுபவிக்கலாம். அதற்கு முன்னதாக கார்த்திகை மாதம் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (23-11-2018-ல்) அவருக்கு 78 வயது முடிந்து 79 ஆரம்பம் அன்று, பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று (திருச்சி- பொன்னமராவதி பாதை) பூமிநாதேஸ்வரருக்கு 108 சங்கு வைத்து ருத்ர ஹோமம் வளர்த்து, பூமிநாதருக்கும் ஆரணவல்லியம்பாளுக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்து, தகப்பனார்- தாயாருக்கு கலசஅபிஷேகம் செய்துகொள்ளவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75865. இதைச் செய்தால் பூமியும் கைவசம் கிடைக்கும். அனுபவிக்க ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியமும் உண்டாகும்.

● செ. முருகன், மதுரை-9.

கடன் தொல்லை காரணமாக அரசுப் பணியிலிருந்து வி.ஆர்.எஸ். கொடுத்து கடன்களை அடைத்தும் இன்னும் கொஞ்சம் கடன் பாக்கி இருக்கிறது. எப்போது அடைபடும்?

கும்பகோணத்திலிருந்து குடவாசல் பாதையில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759. திங்கட்கிழமை 11 வாரம் அர்ச்சனைக்குப் பணம் கட்டலாம். ஏதாவது வழிபிறக்கும்.

● மகேஸ், கோவை.

2019 ஜனவரியில் கேது தசையில் சனி புக்தி ஆரம்பம். அதனால் பாதிப்பு ஏற்படுமா? கோவையில் சுகேஷ் வசம் செப்டம்பரில் சனி சாந்தி ஹோமம் செய்தேன்.

முன்னதாகவே ஹோமம் செய்து விட்டதால் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல பாதிப்பு ஏற்படாது. 77 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் சனி புக்தி முடியும்வரை சனிக்கிழமைதோறும் நெய்யில் மிளகுப்பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவும். இது தற்காப்பு.

● விஜய் ஸ்ரீதர், சென்னை.

நான் எப்போது சொந்தமாக கார் வாங்கித் தொழில் செய்யலாம்?

தனுசு லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 7-3-2019-ல் ராகு தசை முடிந்ததும் குருதசையில் உங்கள் திட்டம் செயல்படும்.

● எம். மனோன்மணி, ஆர். புதுப்பாளையம்.

என் மகனுக்கு 31 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?

ஜாதகத்தில் தோஷமிருப்பதால் திருமணம் தாமதமாகும். முன்னதாக வெளிநாட்டு வேலை யோகம் வந்தால் யோசிக்காமல் அனுப் பிவைக்கலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமண முயற்சிகளை மேற் கொள்ளலாம்.

bala161118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe