● மாதவகுமார், ராணிப்பேட்டை.

துயரடையும் மக்களை நல்வழிக்குக் கொண்டுசெல்லும் ஞான குருவே! தங்கள் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்! தங்களுடைய வழிகாட்டுதலின்படி பி.எஸ்.பி. அய்யா அவர்களின் ஜோதிட நூல்களை வாங்கிப் படித்து வருகிறேன். என் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்? எப்போது துவங்கலாம்? எதிர்காலம் எப்படி அமையும்?

Advertisment

துலா லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. லக்னத்துக்கு 10-ல் சந்திரன். நீர் சம்பந்தமான எல்லாத் தொழிலும் செய்யலாம். உணவுத்தொழிலும் நன்றாக இருக்கும். அடுத்து பேன்ஸி ஸ்டோர் வைக்கலாம். ஆடை, அலங்காரம் சம்பந்தப்பட்டது செய்யலாம். 2-ல் புதன் இருப்பதால் ஜோதிடத்தையும் உபதொழிலாக (சைடு) செய்யலாம். 2025 வரை சந்திர தசை. திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.

● வி. தேன்மலர், மாத்தூர்.

என் மகள் தர்ஷினிக்கு பூராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னம். 8-ஆம் வகுப்பு படிக்கிறாள். ஓவியம், நடனம், கைவினைப்பொருள் தயாரிப்பு இவற்றில் ஆர்வம் அதிகம். என்ன படிக்க வைக்கலாம்? எதிர்காலம் எப்படி இருக்கும்?

சுக்கிரன் உச்சம். ராகு- கேது சம்பந்தம். இப்போதே, அவள் ஆர்வத்துக்கு ஏற்றபடி நடனப் பயிற்சிக்கு அனுப்பலாம். அடுத்து கலை சம்பந்தப்பட்ட படிப்பில் ஈடுபடுத்தலாம். +2 வரை படிக்கட்டும். அதன்பிறகு ஆர்ட்ஸ் காலேஜில் சேர்க்கலாம். சினிமா நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் ஆர்ட்ஸ் கல்லூரியில் ஓவியராகப் பயின்றவர்தான். பிறகு திரைவானில் பெரிய பெரிய நடிகர்களோடு இணைந்து நடித்துப் பிரபலமானார். 2-ல் சந்திரன் நட்பு. 2013 பிப்ரவரி முதல் சந்திர தசை ஆரம்பம்- பத்து வருடம்- 2023 வரை நடக்கும். இத்துடன் ஏழரைச்சனியும் 2023 வரை. அதனால் குடும்பத்தில் பாதிப்புகள் வரலாம். அதைத் தடுக்கவும் இழப்புகளை தவிர்க்கவும் ஒரு திங்கள்கிழமையன்று சிவன் கோவிலில் ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி- அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவும். இதை முறையாகவும் சிறப்பாகவும் செவலூர் பூமிநாத சுவாமி கோவிலில் செய்வார்கள். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும். 108 சங்கு வைத்து ருத்ரஜெபப் பாராயணம் செய்து ருத்ரஹோமம் செய்வார்கள். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் குழிபிறை அடுத்து செவலூர் பிரிவு ஆர்ச் வரும். மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது. வாஸ்துக் கோவில். தர்ஷினிக்கும் அபிஷேகம் செய்யலாம்.

Advertisment

jothidamanswer

● எஸ். துரை, திண்டுக்கல்.

என் அண்ணன் மகன் கண்ணனுக்கு பல பரிகாரங்கள் செய்தும்- பல கோவில்களில் பிரார்த்தனை செய்தும் இதுவரை திருமணம் நடக்கவில்லை. எப்போது திருமணம் நடக்கும்?

அருள்கூர்ந்து வழிகாட்டவும்.கண்ணன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். 1983-ல் பிறந்தவர். 2018 ஆகஸ்டில் 35 வயது முடியும். 5-ல் சனி நின்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 7-க்குடைய குரு 6-ல் மறைந்து கேது- ராகு சம்பந்தம் பெறுவதும் கடுமையான களஸ்திர தோஷம்- புத்திர தோஷம். 40 வயது வரை திருமணம் தடையாகலாம். வருகிற ஆடி 23 புதன்கிழமை அன்று (8-8-2018) உங்கள் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை வரும். அன்று 35 வயது முடியும். 36 வயது ஆரம்பம். தவறாமல் காரைக்குடி அருகில் வேலங்குடி சென்று சுந்தரம் குருக்களை (செல்: 99942 74067) தொடர்புகொண்டு காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து நீங்கள் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் 18 விதமான ஹோமம் சேர்த்துச் செய்வார்கள். இதைச் செய்ததும் 90 நாளில் பெண் அமையும்.

● வி. ஆனந்தன், புதுச்சேரி.

11-8-2017 "பாலஜோதிடம்' இதழில் என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி! நீங்கள் சொன்னபடி சென்ற மாசி மாதம் என் மனைவியின் வயிற்றிலிருந்து கட்டியை அறுவை சிகிச்சைமூலம் அகற்றிவிட்டோம். நானும் தம்பியும் 1991 முதல் கூட்டாக இரும்பு வியாபாரம் செய்து வந்தோம். 2009 முதல் தனியாகச் செய்தோம். கடந்த மூன்று வருடமாக எனது வியாபாரத்திலும் குடும்பத்திலும் பல கஷ்ட- நஷ்டங்கள். என் மகள் காதல் திருமணம் செய்துகொண்டாள். என் தம்பி அளவுக்குமீறி கடன் வாங்கி அசலை அடைக்க முடியாமல், வட்டியும் கட்டாமல் வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டான். கடன்காரர்கள் என் அப்பாவை நெருக்க- வீட்டை ஒன்றுக்குப் பாதியாக விற்று 90 சதவிகிதம் கடனை அடைத்துவிட்டார். எனக்கும் ஐந்து லட்சம் கடன் உள்ளது. மனைவிக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கிறது. இதனிடையே நான் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர் வாடகையை உயர்த்திவிட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்போது விடிவு காலம் பிறக்கும்?

ஆனந்தன் விருச்சிக லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. உங்களுக்கு ஏழரைச்சனியோ அட்டமச்சனியோ இல்லை. ஆனால் குடும்பத்தில் மனைவி- குழந்தைகளுக்கு சனி பாதிப்பு இருக்கும். 2008 முதல் சந்திர தசை. அக்காலம் ஏழரைச்சனி சந்திப்பு. தொடர்ந்து பத்து வருடம் வீழ்ச்சிதான். தற்போது செவ்வாய் தசை 2025 வரை. ஒரு செவ்வாய்க்கிழமை மயிலம் சென்று (புதுச்சேரி- திண்டிவனம் பாதையில்) அபிஷேக பூஜை செய்யவும். அடுத்து ஒரு ஞாயிறுஅன்று திருவக்கரை சென்று சந்திர மௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, குண்டலினி முனிவர் ஜீவசமாதியில் 18 நெய் விளக்கேற்றி வழிபடவும். 4-10-2018-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக நிவர்த்தியாகும்.

● கே. பெரியசாமி, இராசிபுரம்.

எனது மகன் கந்தசாமி பத்தாம் வகுப்பு முடித்து தனியார்துறையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு எப்போது திருமணம் செய்யலாம்?

கந்தசாமி மேஷ லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. 2018 அக்டோபரில் 36 வயது முடியும். 7-க்குடைய சுக்கிரன் 6-ல் கன்னியில் மறைவு, நீசம். 7-ல் சனி. எனவே திருமணத்தடை. ஏற்கெனவே திருமணம் செய்திருந்தால் இருதார யோகம் ஆகியிருக்கும். இனி நடந்தால் ஒரே தாரம். ஒரே மணம். சந்திர தசையில் சுக்கிர புக்தி. ஒரு திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை சேந்தமங்கலம் (நாமக்கல் பாதை, சாமியார் கரடு ஸ்டாப்) சென்று தத்தாத்ரேயருக்கும் குருநாதர் ஜீவசமாதிக்கும் ஒருமுறை அபிஷேகம், பூஜை செய்யவும். திருமணத்தடை விலகி நல்ல மனைவி அமைவார்.

● ஏ.ஆர். கார்த்திகேயன், கோவை.

திருவோண நட்சத்திரம், மகர ராசி. ஏழரைச்சனியில் மருத்துவச் செலவு லட்சக்கணக்கில் ஆகிவிட்டது. (பைக் ஆக்ஸிடெண்ட்). இனி எப்படி இருக்கும்?

ஏழரைச்சனி 2017-ல்தான் ஆரம்பம். 2025 வரை உள்ளது. தற்காலிகப் பரிகாரமாக (முதல் உதவி சிகிச்சை மாதிரி) 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் ஏழரைச்சனி முடியும்வரை தீபமேற்றவும். அத்துடன் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) வெளிநாட்டு யோகம், பதவி யோகம், வாழ்க்கை முன்னேற்றம், ஆரோக்கியம், சேமிப்பு எல்லாவற்றுக்கும் 18 விதமான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். எல்லா நலமும் வளமும் பெருகும்.

● விஜய் ஸ்ரீதர், சென்னை.

வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யும் யோகம் உண்டா?

உங்கள் ஜாதகம் திருக்கணிதப்படி கணிக்கப்பட்டது. அதை மதுரை கே.எம். சுந்தரம் வசம் சொல்லி (செல்: 92453 28178) வாக்கியப்படி கணித்தால்தான் உங்கள் விருப்பம் நிறைவேறுமா- எப்போது நிறைவேறும் என்று தெளிவாகக் கூறமுடியும். திருக்கணிதப் பஞ்சாங்கத்துக்கும் வாக்கியப் பஞ்சாங்கத்துக்கும் பாதசாரம் (அம்சத்தில்) நிறைய வித்தியாசம் உண்டு. அதேபோல சுக்கிர தசை இருப்பும் வித்தியாசப்படும்.

● செ. பாலமுருகன், மதுரை-6.

எனது மகள் தீபலட்சுமி பி.ஈ. இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். பட்டம் பெற்று அரசு வேலைக்குப் போவாளா? ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு அனுப்பலாமா? சனி, செவ்வாய் பார்வை உள்ளதால் திருமணம் தாமதமாகுமா? பரிகாரம் தேவையா?

தீபலட்சுமி மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம், சிம்ம லக்னம். ராசியில் சனி- அதற்கு ஏழில் செவ்வாய். இருவரும் பார்த்துக்கொள்வது தோஷம்தான். திருமணத்தில் குழப்பம் ஏற்படலாம். படிப்பு தடையில்லாமல் முடியவும், தீபலட்சுமி விரும்பும் மேற்படிப்பு நிறைவேறவும், திருமணத்தடை விலகவும், குழப்பம், பிரச்சினை இல்லாமல் நடக்கவும் எல்லாவற்றுக்கும் சேர்த்து 18 விதமான ஹோமம் செய்து மகளுக்கு புதுஆடை உடுத்தி கலச அபிஷேகம் செய்யவேண்டும். இதைச் செய்தால் மேற்படிப்பு கவுன்சிலிங்கில் எளிதாக பாஸ் செய்யலாம். 10-க்குடைய சுக்கிரனும் லக்னாதிபதி சூரியனும் 5-ல் சேர்ந்திருப்பதால் ஐ.ஏ.எஸ். ஆகலாம். சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். முடிந்தால் மதுரையில் என்னை நேரில் சந்தித்தால் என்னென்ன ஹோமம் என்ற விவரம் எழுதித் தருவேன்.

● சசிகலா, மகுடஞ்சாவடி.

எனது மகள் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளாள். மேற்படிப்பு, எதிர்காலம் பற்றிக் கூறவும்.

சிநேகாவுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மகர லக்னம். 9 வயது முதல் சுக்கிர தசை. ஏழரைச்சனி 2020 வரை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது டெக்னிக்கல் படிக்கலாம். அல்லது அழகுக்கலை பற்றி படிக்கலாம். 28 வரை சுக்கிர தசை. குட்டிச் சுக்கிரன் கட்டித்தங்கமும் கரையும். கொட்டிக் கவிழ்த்துவிடும். மாதம் ஒரு முறை சேந்தமங்கலம் (சாமியார் கரடு ஸ்டாப்) சென்று தத்தாத்ரேயரையும் குருநாதர் ஜீவசமாதியையும் வழிபட்டு வந்தால் தடையில்லாமல் படிப்பு தொடரும். அத்துடன் தம்பி மிதுன்ராஜ் மிதுன லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. அவனுக்கும் இரண்டு வயது முதல் 20 வருடம் குட்டிச்சுக்கிர தசை. தற்போது 15 வயது முடிந்து 16 ஆரம்பம். உள்ளூரில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு வெள்ளிக்கிழமையன்று இரண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரவும். இருவரின் கல்வி, ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை திருநாவலூர் சென்று திருநாவலேஸ்வரரையும் சுந்தரநாயகியம்மனையும் சுக்கிரலிங்கத்தையும் குடும்பத்துடன் வழிபடவும். நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிரில் சுக்கிர லிங்கம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது. குட்டிச்சுக்கிர தோஷம் விலகி சுபிட்சம் உண்டாகும்.