● பாலசுப்ரமணியம், சத்தியமங்கலம்.
எங்கள் குலதெய்வம் எது என்பதே தெரியவில்லை. பண்ணாரி மாரியம்மனையும், பழனி முருகனையும் வழிபடுகிறோம். எனது மகளுக்கு திருமணம் தட்டித் தட்டிப் போகிறது. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரமுடியுமா என்ற மனவேதனையால் வாடுகிறேன்.
சந்தானலட்சுமி சதய நட்சத் திரம், கும்ப ராசி, ரிஷப லக்னம். 31 வயது. சனி தசை நடக்கிறது. லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், சனி சேர்க்கை என்பதால் கடுமை யான தோஷம். 35 வயதுகூட தாண்டலாம். குருப்பெயர்ச் சிக்குப் பிறகு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்தால் ஆறு மாதத்தில் திருமணம் கூடிவிடும். கோவை சேரன் மாநகர் மீனாட்சி சுந்தரர் திருக்கோவிலில், யோகேஷ் அர்ச்ச கரைத் தொடர்பு கொண்டு பேசவும். செல்: 94430 64265.
● ஆர். ஸ்ரீநிவாசன், சென்னை-92.
2012-ல் ஒரு வீடு வாங்கினேன். வாடகையும் இல்லாமல் விற்கவும் முடியாமல் பூட்டிக் கிடக்கிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் பாகப்பிரிவினை விவகாரத்தால் கோர்ட் படி ஏறி இறங்கி வருகிறேன். என்ன பரிகாரம்?
காஞ்சிபுரம் சென்று வழக்கறுத்த ஈஸ்வரருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். அடுத்து திருச்சி- பொன்னமராவதி பாதையில் (புதுக்கோட்டை வழி) செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கு ஒரு அபிஷேக பூஜை செய்து பிரார்த்திக்கவும். வீடு விற்றதும் மறுபடியும் போய் 108 சங்காபிஷேக ஹோம பூஜை செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும்.
● என். சுரேந்திரன், சென்னை-12.
தங்கள் அறிவுரைப்படி கே.எம். சுந்தரம் வசம் ஜாதகம் கணித்து அனுப்பியுள் ளேன். என் மனைவி மனநோயிலிருந்து மீளமுடியுமா? எப்போது யாருக்கு முக்தி?
சுரேந்திரன் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். 2010 ஜூன் முதல் சனி தசை. இதில் 2020 மே வரை சுக்கிர புக்தி. மனைவி கோமதி உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னம். 2004 ஏப்ரல் முதல் சனி தசை. இதில் 2020 செப் டம்பர் வரை ராகு புக்தி. முதலில் இருவருக்கும் ஜாதகப் பொருத்த மேயில்லை. கணவர் மேஷ ராசி- மனைவி கன்னி ராசி. இரண்டும் சஷ்டாஷ்டகம். (ஆறு, எட்டு). வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு, ஒற்றுமைக் குறைவு, ஏட்டிக்குப் போட்டியான வாதம், நிம்மதியில்லாத வாழ்க்கைதான்! மனை வியை அனுசரித்து கணவர் நடந்துகொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையையும் பொறு மையையும் வரவழைத்துக்கொள்ள வேண்டும். திங்கட்கிழமைதோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தரவும். எப்படியோ ஒரு பெண் குழந்தைக்குத் தாய்- தந்தையாகிவிட்டீர்கள். ஒருமுறை காளஹஸ்திக்கு மனைவியை அழைத்துச் சென்று ருத்ராபிஷேக பூஜை செய்யவும். அத்துடன் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு அல்லது துர்க்கைக்கு நெய்விளக்கு ஏற்றவும். அடுத்து பஞ்சேஷ்டி என்ற ஊருக்கு சென்று வழிபாடு செய்யவும். சென்னை கோயம் பேட்டிலிருந்து பேருந்து உண்டு. 2020 செப்டம் பரில் ராகு புக்தி முடிந்ததும் குணம் ஏற்படும்.
● ராஜேஸ்வரி, திண்டுக்கல்.
என் மகன் மதன்குமாருக்கு எப்போது திருமணம் நடக்கும்?
பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். 2020 வரை செவ்வாய் தசை. கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. திண்டுக்கல் கசவனம்பட்டி சென்று மௌனகுரு சுவாமி ஜீவசமாதியிலும், மலையடிவாரம் பின்பகுதியில் ஓத சுவாமிகள் ஜீவசமாதியிலும் பிரார்த்தனை செய்யவும். 2019 மார்ச் மாதம் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடும்.
● விஜய்ஸ்ரீதர், சென்னை.
எனது வயிறு கேஸ் டிரபிள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு என்ன?
நல்ல டாக்டரைப் பார்த்து சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்வதே நல்ல தீர்வு. ஜோதிடத்தில் பரிகாரம் கேட்பது சரியா?
● கௌரிசங்கர், எடப்பாடி.
எனக்கு பதவி உயர்வு எப்போது கிட்டும்? தொழிலில் இடமாற்றம் உண்டா? திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் அன்னியமா? உறவா? வேலை பார்க்கும் பெண்ணா?
அடுத்து எப்போது குழந்தை பிறக்கும்- ஆணா பெண்ணா? பிள்ளையின் படிப்பு, எதிர்காலம் எப்படி என்றெல்லாம் கேட்க மறந்துவிட்டீர்களே? இதற்கெல்லாம் பதில் தெரிய நேரில் வந்து காணிக்கை செலுத்தி பலன் கேட்க வேண்டும். இலவச பதிலில் இவ்வளவு கேள்விகள் கூடாது.
● கார்த்திகேயன், ஆழ்வார்திருநகர்.
நான் கொடுக்கும் பணத்தை- சொந்தக் காரர்களானாலும் சரி; நண்பர்களா னாலும் சரி; மற்றவர்களானாலும் சரி- திரும்பக்கொடுப்பதில்லை. 500 ரூபாய், 200 ரூபாய் வாங்குகிறார்கள். திரும்பக் கொடுப்பதில்லை. எனவே எந்தக்கிழமை, என்ன நட்சத்திரத்தில் கொடுக்கலாம்?
பொதுவாக செவ்வாய்க்கிழமை, சனிக்கிழ மைகளிலும்இரவு தீபம் வைத்த பிறகும் கடன் கொடுக்கக்கூடாது. அதைவிட யாருக்கும் கடன் கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி சமாளிப்பது நல்லது.
● ஹைதராபாத் அன்பர்.
எனது மகளுக்கு மூன்று வருடமாக வரன் பார்க்கிறேன்; அமையவில்லை. கடந்த இரண்டு வருடமாக மாற்றுப்பிரிவு பையனையே மணம் புரியப் போவதாக பிடிவாதமாக இருக்கிறாள். என் மனைவி கிராமத்தில் வளர்ந்தவள். மகள் கருத்தை ஏற்க மறுக்கிறாள். அவள் திருமணம் எப்படி நடக்கும்? மகள் விரும்பும் பையன் மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னம்.
உங்கள் மகள் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னம். பூரம்- எலி; பையன் மிருகசீரிடம்- பாம்பு. பாம்பும் எலியும் யோனிப்பகை; சேராது. மகள் ஜாதகப்படி கலப்புத் திருமணம்தான். காதல் திருமணம்தான் நடக்கும்! உங்கள் மனைவியை சமாதானப்படுத்தவும். 2019 வைகாசியில் (ஜூன்) இருவருக்கும் 27 வயது முடிந்தவுடன் இந்த திருமணம் பெற்றோர் சம்மதப்பட்டோ அல்லது சம்மதமில்லா மலோ நடந்துவிடும். ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதைவிட பெற்றோரே நடத்திவைப்பது கௌரவமாகிவிடும். அப்படியே இந்த திருமணம் நடந்தாலும் யோனிப் பொருத்தம் இல்லாததால் வாரிசு இருக்காது. அதற்காக சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.