Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-18

● இசக்கி செட்டியார், தச்சநல்லூர்.

நான் 15 வயதுமுதல் என் தந்தைக்கு கடன் வாங்கிக் கொடுத்தேன். இன்று 47 வயதாகிறது. கடன் அடைபடவில்லை. அப்பா, அம்மா இறக்கும் வரை ஒன்றாக இருந்தேன். (கூட்டுக்குடும்பம்). உடன்பிறந்தோர் எல்லாம் தனியாகச் சென்றுவிட்டார்கள். எனது தொழில் செக்கு எண்ணெய்க்கடை! மூத்த மகன் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவியல் எம்.ஏ. படிக்கிறான். போலீஸ் அதிகாரியாவானா? இளைய மகன் நாதஸ்வரம் படிக்கிறான். எனது தொழிலுக்கு வருவானா?

Advertisment

விருச்சிக லக்னம், மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி. 10-க்குடைய சூரியன் 9-ல் இருந்தாலும் 10-க்கு 12-ல் மறைவு. ராகு- கேது சம்பந்தம். உங்கள் தொழிலுக்கு இரண்டு பிள்ளைகளும் வரமாட்டார்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் உங்கள் தொழிலை நீங்களே லாபகரமாக செயல்படுத்தலாம். வீழ்ச்சிக்கு இடமில்லை.

● வி. தீபா, ஈரோடு-11.

எனது மகள் சிறிய ஐ.டி. கம்பெனியில் பணியாற்றினாள். தற்போது புராஜக்ட் இல்லை. வேறு கம்பெனிக்கு முயற்சிக்கலாமா? எப்போது அமையும்? அவள் பேரிலுள்ள 1,500 சதுர அடி காலி மனையை எப்போது விற்கலாம்? (அவள் திருமணத்துக்காக). திருமணம் எப்போது நடைபெறும்?

மகள் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லகனம். 28 வயது நடப்பு. லக்னத்தில் சனி, ராகு, சுக்கிரன். 7-ல் குரு, கேது. 7-க்குடைய சந்திரன் 8-ல் மறைவு. 30 வயதில் திருமணம் செய்யலாம். அக்காலம் காலி மனை விலை போகும். வேலை மாறுதலுக்கும், மனை விற்பனைக்கும் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் (எண்.40) சீதாராம் சுவாமி என்ற பெரியவரிடம் ஆசிபெறவும். தொடர்புக்கு: செல்: 98433 11741. சனிக்கிழமை மௌன விரதம் இருப்பதால் அன்று போகவேண்டாம்.

● எம். சுப்பிரமணியன், நாகப்பட்டினம்.

Advertisment

எனது மகள் ஜெயபாரதிக்கு எப்போது திருமணம் நடக்கும்? மகன் ராம்சந்துருவுக்கு களஸ்திர தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் செய்யவேண்டுமா?

ஜெயபாரதிக்கு 26 வயது. ராம்சந்துருவுக்கு 30 வயது. இருவர் ஜாதகத்திலும் சனி தோஷம், நாக தோஷம் இருப்பதால் மகளுக்கு 30 வயதிலும், மகனுக்கு 35 வயதிலும்தான் திருமண யோகம் வருகிறது. உங்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் கடன் சுமையும் இருப்பதால் கடன்உடன் வாங்கியாவது காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (தொடர்புக்கு: செல்: 99942 74067) ஏற்பாடு செய்து பிள்ளைகள் திருமணம், மனைவி, உங்களின் ஆரோக்கியம், கடன் நிவர்த்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஹோமம் செய்து நான்கு பேரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். சுமார் 18 அல்லது 19 வகையான

● இசக்கி செட்டியார், தச்சநல்லூர்.

நான் 15 வயதுமுதல் என் தந்தைக்கு கடன் வாங்கிக் கொடுத்தேன். இன்று 47 வயதாகிறது. கடன் அடைபடவில்லை. அப்பா, அம்மா இறக்கும் வரை ஒன்றாக இருந்தேன். (கூட்டுக்குடும்பம்). உடன்பிறந்தோர் எல்லாம் தனியாகச் சென்றுவிட்டார்கள். எனது தொழில் செக்கு எண்ணெய்க்கடை! மூத்த மகன் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவியல் எம்.ஏ. படிக்கிறான். போலீஸ் அதிகாரியாவானா? இளைய மகன் நாதஸ்வரம் படிக்கிறான். எனது தொழிலுக்கு வருவானா?

Advertisment

விருச்சிக லக்னம், மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி. 10-க்குடைய சூரியன் 9-ல் இருந்தாலும் 10-க்கு 12-ல் மறைவு. ராகு- கேது சம்பந்தம். உங்கள் தொழிலுக்கு இரண்டு பிள்ளைகளும் வரமாட்டார்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் உங்கள் தொழிலை நீங்களே லாபகரமாக செயல்படுத்தலாம். வீழ்ச்சிக்கு இடமில்லை.

● வி. தீபா, ஈரோடு-11.

எனது மகள் சிறிய ஐ.டி. கம்பெனியில் பணியாற்றினாள். தற்போது புராஜக்ட் இல்லை. வேறு கம்பெனிக்கு முயற்சிக்கலாமா? எப்போது அமையும்? அவள் பேரிலுள்ள 1,500 சதுர அடி காலி மனையை எப்போது விற்கலாம்? (அவள் திருமணத்துக்காக). திருமணம் எப்போது நடைபெறும்?

மகள் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லகனம். 28 வயது நடப்பு. லக்னத்தில் சனி, ராகு, சுக்கிரன். 7-ல் குரு, கேது. 7-க்குடைய சந்திரன் 8-ல் மறைவு. 30 வயதில் திருமணம் செய்யலாம். அக்காலம் காலி மனை விலை போகும். வேலை மாறுதலுக்கும், மனை விற்பனைக்கும் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் (எண்.40) சீதாராம் சுவாமி என்ற பெரியவரிடம் ஆசிபெறவும். தொடர்புக்கு: செல்: 98433 11741. சனிக்கிழமை மௌன விரதம் இருப்பதால் அன்று போகவேண்டாம்.

● எம். சுப்பிரமணியன், நாகப்பட்டினம்.

Advertisment

எனது மகள் ஜெயபாரதிக்கு எப்போது திருமணம் நடக்கும்? மகன் ராம்சந்துருவுக்கு களஸ்திர தோஷம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் செய்யவேண்டுமா?

ஜெயபாரதிக்கு 26 வயது. ராம்சந்துருவுக்கு 30 வயது. இருவர் ஜாதகத்திலும் சனி தோஷம், நாக தோஷம் இருப்பதால் மகளுக்கு 30 வயதிலும், மகனுக்கு 35 வயதிலும்தான் திருமண யோகம் வருகிறது. உங்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் கடன் சுமையும் இருப்பதால் கடன்உடன் வாங்கியாவது காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (தொடர்புக்கு: செல்: 99942 74067) ஏற்பாடு செய்து பிள்ளைகள் திருமணம், மனைவி, உங்களின் ஆரோக்கியம், கடன் நிவர்த்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஹோமம் செய்து நான்கு பேரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். சுமார் 18 அல்லது 19 வகையான ஹோமம் செய்யவேண்டும். மூன்று மணி நேரம். ஐந்து சிவாச்சார்யார்கள் செய்வார்கள்.

● தங்கமணி, சென்னிமலை.

என் மகளுக்கு 23 வயது. ராகு தசையில் புதன் புக்தி. திருமணம் எப்போது நடக்கும்? தோஷங்கள் உள்ளதா?

நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா தோஷங்களும் (மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம்) இருக்கின்றனது. 30 வயதுக்குமேல் திருமணம் செய்தால் மேற்படி தோஷங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குமேல் மருந்துகள் (எக்ஸ்பைரி) காலாவதியாவதுபோல தோஷங்கள் காலாவதியாகும். அதுவரை நீங்கள் காத்திருக்கவேண்டாம் என்று விரும்பினால் சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம் உட்பட 18 விதமான ஹோமம் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்தால் 25 வயதிற்குள் திருமணம் நடக்கும்.

● சி. இந்திரா, கிண்டி.

20 வயதில் என் அத்தை மகனை விரும்பித் திருமணம் செய்து கொண்டேன். இருவருக்கும் கருத்துவேறுபாடு (ஈகோ) ஏற்பட்டு விவாகரத்தாகிவிட்டது. (அப்போது 39 வயது). சில காலம் கழித்து எனது எதிர்காலத்துக்காக மறுமணம் செய்ய விரும்பினேன். ஒருவர் தன் முதல் மனைவி பைத்தியம் என்று என்னை விரும்பி வாழ்வு தந்தார். அவர் தொழிலுக்காக பல லட்சம் தந்தேன். இப்போது அவரும் என்னைவிட்டு விலகி முதல் மனைவியிடம் போய்விட்டார். என் குழந்தைகள் இருவரும் (மகன்- மகள்) என்னை ஏசிப் பேசுகிறார்கள். செத்துப் போகலாம் என்று மனம் நொந்து வாழ்கிறேன். பரிகாரம் உண்டா?

கால்போன போக்கில் சென்றால் ஊர் போய்ச் சேரமுடியாது. மனம்போன வழி வாழ்க்கை நடத்தினால் அமைதி இருக்காது. பிள்ளைகளுக்கு இருக்கும் சொத்துப் பணத்தைப் பிரித்துக்கொடுத்துவிட்டு மீதியைவைத்து ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து எஞ்சிய காலத்தை ஓட்டுங்கள். வயது 50 ஆகிறது.

jothidamanswer

● சி. புருஷோத்தமன், அல்லூர்.

ஒன்பது வருடங்களாக "பாலஜோதிடம்' படித்துப் பயன்பெற்று வருகிறோம். அப்பா- அம்மா, அண்ணன்- தங்கை சொந்த வீடுகளில் அருகருகே வசிக்கிறார்கள். எனக்குத் தனி வீடு கேட்டேன். அப்பா தன் காலத்துக்குப்பிறகு பிரித்துக்கொள்ளுமாறு கூறியதால், தனியாக ஒரு கிலோமீட்டரில் வாடகை வீட்டுக்கு குடிவந்துவிட்டேன். குடியிருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு மனை வாங்கியுள்ளேன். அதில் வீடு கட்டவும் பூர்வீக இடம் கிடைக்கவும் தங்கள் ஆசிவேண்டுகிறேன். அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துனராகப் பணிபுரிகிறேன்.

சிம்ம லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். மனைவி கனிமொழிக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னம். பிள்ளைகள் அஸ்வந்த் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம், மீன லக்னம்; பிரணவ் ராம் உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னம். எல்லாரின் ஜாதகப்படி 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சொந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியிருக்கலாம். 2019 பிப்ரவரி ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். வங்கிக்கடன் கிடைக்கும். முன்னதாக புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் செவலூர் சென்று பூமிநாதரையும் ஆரணவல்லியம்மனையும் பிரார்த்தனை செய்துகொள்ளவும். கிரகப் பிரவேசம் முடிந்தபிறகு மறுபடி அங்குசென்று அபிஷேக பூஜை செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளலாம்.

● சு. இளம்பருதி, கிருஷ்ணகிரி.

2013 ஜூலை 23-ல் ஒரு மகன் பிறந்தான். அடுத்த குழந்தை உண்டா? நான் 13-9-1987-ல் பிறந்தேன். மத்திய அரசுப் பணியில் சேலத்தில் இருந்தேன். பதவி உயர்வு கிடைத்தது. குடும்பம் கிருஷ்ணகிரியில் இருந்ததால் பதவி உயர்வை ஏற்காமல் கிருஷ்ணகிரிக்கே வந்துவிட்டேன். மீண்டும் பதவி உயர்வு கிடைக்குமா?

முதலில் உங்கள் இருவர் ஜாதகத்தையும் மதுரை கே.எம். சுந்தரம்வசம் வாக்கியப்படி கணியுங்கள். அதன் ஜெராக்ஸை எனக்கு அனுப்பி கேள்வி கேளுங்கள். பதில் சொல்லுகிறேன். அவர் செல்: 92453 28178.

● பு. விக்னேஷ், பண்ருட்டி.

எனக்கு அரசுப்பணி கிடைக்குமா? தனியார் உத்தியோகமா?

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 வரை அட்டமச்சனி. அது முடியும்வரை எந்த வேலையும் அமையாது. அதன்பிறகு தனியார் வேலைதான். அரசு வேலைக்கு இடமில்லை. அட்டமச்சனியின் கடுமை குறைய திருக்கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய சனீஸ்வரரை சனிக்கிழமையன்று வழிபடவும்.

● பி. பார்த்தசாரதி, புட்லூர்.

"அதிர்ஷ்டம்' பேப்பர் காலத்திலிருந்து தங்கள் ரசிகன். இப்பொழுதும் சனிக்கிழமை எப்போதுவரும் என்று காத்திருந்து "பாலஜோதிடம்' வாங்கிப் படிப்பேன். எனக்கு 63 வயதாகிறது. பெரிய பெண் திருமணம் முடிந்து கடன் சிக்கலில் இருந்தபோது தங்களை முதலில் வந்து சந்தித்தேன். தத்தாத்ரேயர் கோவில் போகச் சொல்லி, அதன் மூலமந்திரத்தைப் படிக்கச் சொன்னீர்கள். உடனே எதிர்பாராமல் பணம் வந்து கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். நன்றி! இரண்டாவது முறை சந்தித்தபோது, என்னுடைய இரண்டாவது மகள் திருமணம் முடிந்துவிடும் என்று கூறினீர்கள். தாங்கள் சொன்னமாதியே ரயில்வே வேலையிலுள்ள மாப்பிள்ளை கிடைத்து திருமணம் முடிந்துவிட்டது. மீண்டும் நன்றி! மறுபடியும் கடன் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ராகு தசையில் கடன் தீரும்; அதுவரை வட்டி கட்டத்தான் வேண்டும் என்றீர்கள். இப்போது ராகு தசை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. என் கடன் தொல்லை எப்போது தீரும்? ஆஞ்சனேயர் வாக்கு சொல்லி மக்களுக்கு நன்மை செய்கிறேன். ஆஞ்சனேயர் கோவில் கட்டமுடியுமா? எனக்கு சொந்த வீடு பாக்கியம் உண்டா? இரண்டு வீடுகள் வாங்கி விற்றுவிட்டேன்.

கன்னியா லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி. ஆஞ்சனேயர் கோவில் கட்டினால் சொந்த வீடு கட்டமுடியாது. சொந்த வீடு கட்டினால் ஆஞ்சனேயர் கோவில் கட்டமுடியாது. எது வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் பொறுப்பு. ஆஞ்சனேயர் கோவில் கட்டி பூஜை செய்து அருள்வாக்கு சொல்வது நல்லது. கடன் நிவர்த்திக்கும் கோவில் கட்டுவதற்கும் ஒருமுறை குடும்பத்துடன் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம்மன் கோவிலில் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

● எஸ். துரை, திண்டுக்கல்.

ஜி.எஸ்.டி. வரியால் மருமகனின் தொழில் மந்தமாக உள்ளது. உபதொழில் செய்யலாமா? மகள்- மருமகன் கருத்து வேறுபாடு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. மருமகனுக்கு கணுக்கால் வலி பல வருடங்களாக இருக்கிறது. வைத்தியம் செய்தும் குணமேற்படவில்லை.

ரமேஷ் பாபு கன்னியா லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். கேது தசை நடப்பு. மகள் விஜயஸ்ரீக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம், மீன லக்னம். ராகு தசை நடப்பு. கேதுவும் ராகுவும் ஒரு குடும்பத்தில் இருந்தால் எல்லாவித சங்கடங்களும் பிரச்சினைகளும் தொழில் மந்தமும் நஷ்டமும் ஆரோக்கியக் குறைவும் ஏற்படத்தான் செய்யும். இதற்குப் பரிகாரம் சூலினி துர்க்கா ஹோமம் செய்து குடும்பத்தார் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அல்லது காளஹஸ்தி சென்று காளஹஸ்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். அல்லது தேனி வழி உத்தமபாளையம் சென்று ராகுவுக்கும் கேதுவுக்கும் அபிஷேக பூஜை செய்யலாம்.

● எஸ். குமார், பண்ருட்டி.

அதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டம் அவர்களுக்கு வணக்கம். 2009-ல் நீங்கள் சொன்னபடி, 2010-ல் நர்சரி பள்ளி ஆரம்பித்தோம். போட்டிகளுக்கிடையே சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி கற்பிக்கிறோம். மேலும் வேறு பகுதியில் இடம் வாங்கி நர்சரி பள்ளி ஆரம்பிக்கலாமா? எங்களின் ஆரோக்கியம், ஆயுள், எதிர்காலம் எப்படியிருக்கும்? எங்கள் மகள் ஸ்ரீகாயத்ரி +2 பயாலஜி குரூப் படிக்கிறாள். நீட்- ஜிப்மர் கோச்சில் தனியே படிக்கிறாள். அவளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு மெரிட்டில் கிடைக்குமா? அல்லது வேறு எந்தத் துறையில் படிக்கலாம்?

காயத்ரிக்கு கும்ப ராசி, கும்ப லக்னம், அவிட்ட நட்சத்திரம். 2020 ஏப்ரல்வரை ராகு தசை. 2-க்குடைய குரு, ராகுவோடு சேர்க்கை- 4-க்குடைய சுக்கிரன், புதன் சாரம்- செவ்வாய் வீட்டில். (கேட்டையில்). எனவே மருத்துவப் படிப்புக்கு யோகமுண்டு. டொனேஷன் கொடுப்பதற்கு பதில்- காரைக்குடியில் படிப்புக்கான ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும் செய்ய வேண்டும். (சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067). அப்படியே அறந்தாங்கி வழி பேராவூரணி அருகே பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருந்துப் பள்ளம் சென்று மருந்தீஸ்வரருக்கு அர்ச்சனை, வேண்டுதல் செய்யவேண்டும். மெடிக்கல் சீட் கிடைத்ததும் மீண்டும் போய் அபிஷேக பூஜை செய்ய வேண்டும். சிவமணி குருக்கள், செல்: 94451 52242. அத்துடன் கடலுர் அருகில் திருவந்திபுரம் பெருமாள் கோவிலுக்கு உங்களுக்கு தோதான நாளில் காயத்ரியையும் அழைத்துச்சென்று வழிபடவும்.

● நலம்வெங்கடாசலம், உலிபுரம்.

ஜோதிட சக்கரவர்த்திக்கு பல கோடி வணக்கங்கள்! எனது பேத்தி நிவேதா தஞ்சை கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிகிறார். மேலே என்ன படிக்கலாம்? மேலும் திருமணம் எப்போது நடக்கும்? எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைவார். அப்பா கல்லூரி வாகன டிரைவர். அம்மா விவசாயி. சகோதரி திருமணம் முடிந்துவிட்டது. தம்பி பத்தாம் வகுப்பு படிக்கிறான். வருமானப் பற்றாக்குறை. லட்சக்கணக்கில் கடன் உள்ளது. தீர்வு என்ன?

நிவேதாவுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். புதன் தசை நடப்பு. எம்.டி படிக்கலாம். அல்லது எம்.எஸ். படிக்கலாம். டி.ஜி.ஓ படிக்கலாம். திருமணம் 25 வயதில் செய்யலாம். டாக்டர் வரன்; அன்னிய சம்பந்தம். ஏழரைச்சனி 2020 வரை இருப்பதால் பரிகாரம் செய்துகொள்ளவும்.

● ஜி. சேகர், தொரப்பாடி.

9-2-2018 "பாலஜோதிடம்' இதழில் எனக்கும் மனைவிக்கும் சில குறிப்பிட்ட ஹோமங்களைச் செய்யும்படி எழுதியிருந்தீர்கள். மனைவியின் நிலைமை சரியில்லாததால் மேற்படி ஹோமம் செய்ய முடியவில்லை. கடலில் துடுப்பை இழந்த படகில் பயணம் செய்கிறவன் நிலைக்குச் சமமாக- காற்றடிக்கும் போக்கில் படகு போவதுபோல் தவிக்கிறேன். மீண்டும் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. தங்களை தாய்- தந்தையாக வணங்கிக் கேட்கிறேன்.

ஏற்கெனவே சொன்ன பதிலைத்தான் மீண்டும் சொல்லுகிறேன். "பைத்தியம் தெளிந்தால்தான் திருமணம் ஆகும்; திருமணம் ஆனால்தான் பைத்தியம் தெளியும்' என்ற நிலைதான். மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். மருந்து கசக்கிறது என்று சாப்பிடாமல் இருந்தால் நோய் எப்படித் தீரும்? அதற்குமேல் விதிவிட்ட வழிதான்.

bala191018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe