● மா. விக்னேஷ், மேலக்கடையநல்லுர்.
அரசு வேலை கிடைக்குமா? அரசுத் தேர்வு எழுதியுள்ளேன். பிஸிகலில் செலக்ட் ஆவதற்குப் பரிகாரம் உண்டா?
பிஸிச்கல் டெஸ்டில் செலக்ட்டாகப் பரிகாரம் உடம்பை வளர்க்க வேண்டியதே! (எடை- பாடி டெவலப்மென்ட்). தனுசு லக்னத்தில் 10-ல் செவ்வாய், ராகு இருப்பது அரசு வேலைக்குத் தடை. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி செய்யவேண்டும்.
● பார்த்தசாரதி, புதுச்சேரி.
எனக்கு தாய்- தந்தைஇல்லை; வேலையும் இல்லை; வருமானமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?
அப்படியென்றால் எப்படி சாப்பாடு செலவு செய்கிறீர்கள்? ரூம் வாடகை எப்படிக் கொடுக்கிறீர்கள்? 46 வயதுவரை எப்படி நாள் ஓடியது?
● மா. விக்னேஷ், மேலக்கடையநல்லுர்.
அரசு வேலை கிடைக்குமா? அரசுத் தேர்வு எழுதியுள்ளேன். பிஸிகலில் செலக்ட் ஆவதற்குப் பரிகாரம் உண்டா?
பிஸிச்கல் டெஸ்டில் செலக்ட்டாகப் பரிகாரம் உடம்பை வளர்க்க வேண்டியதே! (எடை- பாடி டெவலப்மென்ட்). தனுசு லக்னத்தில் 10-ல் செவ்வாய், ராகு இருப்பது அரசு வேலைக்குத் தடை. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி செய்யவேண்டும்.
● பார்த்தசாரதி, புதுச்சேரி.
எனக்கு தாய்- தந்தைஇல்லை; வேலையும் இல்லை; வருமானமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?
அப்படியென்றால் எப்படி சாப்பாடு செலவு செய்கிறீர்கள்? ரூம் வாடகை எப்படிக் கொடுக்கிறீர்கள்? 46 வயதுவரை எப்படி நாள் ஓடியது?
● எஸ். கருப்பசாமி, மேலக் கடையநல்லூர்.
எனக்கு 36 வயது நடக்கிறது. நான் பூக்கட்டும் தொழில் செய்கிறேன். உடல் ஊனமுற்றவன். திருமணம் ஆகவில்லை. திருமணம் நடக்குமா? இதுவரை எந்த யோகப்பலனும் இல்லை. பரிகாரம் உண்டா?
கன்னியா லக்னம். அதில் சுக்கிரன் நீசம். 2-ல் சனி. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 9-ல் கேது, செவ்வாய். பூர்வ புண்ணிய தோஷம் உண்டு. கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை சனிக்கிழமைதோறும் வழிபடுங்கள். (19 சனிக்கிழமை). அத்துடன் அமாவாசையிலும் வழிபடவும். உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
● பி. துரைசாமி, வீராச்சிபாளையம்.
நான் என்ன தொழில் செய்தால் விருத்தியடையும்? நிலம், வீடு எப்போது வாங்குவேன்? வீட்டில் சுபகாரியம் எப்போது நடக்கும்? மனைவிக்கு உடல்நிலை எப்போது சரியாகும்? கொடுத்த பணம் (கடன்) எப்போது திரும்பக் கிடைக்கும்?
ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 58 வயது முடிந்து 59 ஆரம்பம். குரு தசை, புதன் புக்தி நடக்கிறது. உங்களுக்கு எந்தத் தொழில்துறையில் அனுபவமும் ஆர்வமும் இருக்கிறதோ அதைச் செய்யலாம். செய்த தொழிலை விட்டவனும் கெட்டான். செய்யாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் என்பது பழமொழி. உதாரணமாக நான் உங்களை சலூன் அல்லது லாண்டரிக்கடை வைக்கச் சொன்னால் செய்வீர்களா?
கையில் லட்சக்கணக்கில் இருப்பு வைத்திருந்தால் நாளைக்கே வீடு, நிலம் வாங்கலாம். அதேபோல ஏற்பாடுகள் செய்தால் வீட்டில் சுபகாரியம் செய்யலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு மனைவிக்கு உடல் ஆரோக்கியம் தெளிவாகும். மாதம் ஒருமுறை, வசதியிருந்தால் வாரம் ஒருமுறை நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும் குருநாதர் ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியையும் வழிபடவும். ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நல்ல விடையும் தீர்வும் உண்டாகும்.
● வெ. உமா, பண்ருட்டி.
தங்கள் கேள்வி- பதில் பகுதி மிகவும் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. எங்கள் ஜாதகப்படி சொந்த வீடு எப்போது அமையும்? கடந்த மூன்று வருடமாக காலில் மூட்டு வலி கடுமையாக உள்ளது. வைத்திய சிகிச்சை பலனில்லை. ஏதேனும் பரிகாரம் உண்டா?
உமா விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். 55 வயது முடியும். சனி தசை நடப்பு. விஸ்வநாதராஜுக்கு 64 வயது நடப்பு. புதன் தசை நடப்பு. மேஷ லக்னம், மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி. கணவருக்கு அட்டமச்சனி, உங்களுக்கு ஏழரைச்சனி- விரயச்சனி. 2020-க்குமேல் மீண்டும் தொடர்புகொண்டால் சொந்த வீட்டு யோகம் பற்றி தெளிவுபடுத்துகிறேன். முழங்கால் வலிக்கு எலும்புத் தேய்மான மாத்திரை தினசரி எடுத்துக்கொள்ளவும். முடிந்தால் ஆரோக்கியம், சொந்த வீடு அமைப்புக்கு ஹோமம் செய்து இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். தொடர்புக்கு: சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067