ப் கே. கணேசன், திருச்சி.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?
8-ல் உள்ள குரு 9-ல் மாறியபிறகு (2021- நவம்பர்) திருமண முயற்சி கைகூடும்.
ப் ஆர். பத்மநாபன், தூத்துக்குடி.
எனது மகன் திருமணம் எப்போது நடக்கும்?
துலா லக்னம். 12-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 32 வயது முடிந்தபிறகு திருமண யோகம். அதற்கு முன்பே திருமணம் நடந் தால் அது காதல் திருமண மாக அமையும்.
ப் எம். கௌரி, சென்னை- 58.
எனது மகள் திருமணம் எப்போது நடக்கும்?
மேஷ லக்னம். 2-ல் செவ்வாய், 8-ல் சனி. இருவரும் பார்த்துக் கொள்வதால் காதல் திருமணமாக நடக்கும். அதை பெற்றோர் அங்கீ கரிக்கவேண்டும்.
ப் பி. லட்சுமிப்பிரியா, திருப்பத்தூர்.
"பாலஜோதிட'ப் பலன்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. எனது உடல்நிலை, எதிர்காலம் எப்படியிருக்கும்? மூத்த மகன் திருமணம் எப்போது நடக்கும்? இரண்டாவது மகன் சொந்தமாக கம்ப்யூட்டர் தொழில் செய்யலாமா? திருமணம் எப்போது நடக்கும்? கணவருக்கு வடநாட்டில் வங்கி வேலை. இடமாற்றம் உண்டா? அல்லது வி.ஆர்.எஸ். வாங்கி வெளியில் வந்து தொழில் செய்யலாமா?
ப் கே. கணேசன், திருச்சி.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?
8-ல் உள்ள குரு 9-ல் மாறியபிறகு (2021- நவம்பர்) திருமண முயற்சி கைகூடும்.
ப் ஆர். பத்மநாபன், தூத்துக்குடி.
எனது மகன் திருமணம் எப்போது நடக்கும்?
துலா லக்னம். 12-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 32 வயது முடிந்தபிறகு திருமண யோகம். அதற்கு முன்பே திருமணம் நடந் தால் அது காதல் திருமண மாக அமையும்.
ப் எம். கௌரி, சென்னை- 58.
எனது மகள் திருமணம் எப்போது நடக்கும்?
மேஷ லக்னம். 2-ல் செவ்வாய், 8-ல் சனி. இருவரும் பார்த்துக் கொள்வதால் காதல் திருமணமாக நடக்கும். அதை பெற்றோர் அங்கீ கரிக்கவேண்டும்.
ப் பி. லட்சுமிப்பிரியா, திருப்பத்தூர்.
"பாலஜோதிட'ப் பலன்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. எனது உடல்நிலை, எதிர்காலம் எப்படியிருக்கும்? மூத்த மகன் திருமணம் எப்போது நடக்கும்? இரண்டாவது மகன் சொந்தமாக கம்ப்யூட்டர் தொழில் செய்யலாமா? திருமணம் எப்போது நடக்கும்? கணவருக்கு வடநாட்டில் வங்கி வேலை. இடமாற்றம் உண்டா? அல்லது வி.ஆர்.எஸ். வாங்கி வெளியில் வந்து தொழில் செய்யலாமா?
உங்களுக்கு துலா ராசி, மகர லக்னம், சுவாதி நட்சத்திரம். ஆயுள் தீர்க்கம். மாங்கல்யம் தீர்க்கம். அடிக்கடி உடல்நலக் குறைவு இருக்கத்தான் செய்யும். கணவர் வி.ஆர்.எஸ். வாங்கி வெளியேறி சொந்தத் தொழில் செய்யலாம். மகனுக்கு 28 வயது முடிகிறது. இன்னும் இரண்டு வருடம் கழித்து 30 வயதுக்குமேல் திருமண யோகம் வரும். செவ்வாய், சனி சேர்க்கை. இளைய மகனுக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது. சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம்.
ப் வி. தமிழ்ச்செல்வி, கரூர்.
எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அரசுவேலை கிடைக்குமா? எங்கள் மாமா வெளிநாடு போகமுடியுமா?
உங்களுக்கு அட்டமச்சனி நடக்கிறது. அது முடிய வேண்டும். (பிறந்த தேதி எழுதவில்லை; வயது தெரியவில்லை.) அதன்பிறகுதான் வேலை, திருமணம்! அரசு வேலைக்கு இடமில்லை. சூரியன் மறைவு. உங்கள் மாமாவுக்கு ஏழரைச் சனி. ஏமாற்றம்தான்.
ப் என். தேவராஜன், கும்மிடிப்பூண்டி.
என் மகள்- மகன் இருவரும் படித்து வேலையில் இருந்தும் திருமணம் தடையாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?
மகன் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். 8-ல் சனி, 7-ல் சுக்கிரன் நீசம். தற்போது 28 வயதுதான் நடக்கிறது. 30 வயது முடிந்தபிறகு திருமணம் செயல்படும். அதுவரை பொறுமை யாக இருக்கவும். அதன்பிறகே நல்ல வேலை, நிரந்தர வருமானம் எதிர்பார்க்க முடியும். பெற்றோரை விட்டுப் பிரிந்துதான் இருக்க வேண்டும். மகளுக்கு கடக ராசி, சிம்ம லக்னம், ஆயில்ய நட்சத்திரம். டிசம்பரில் 35 வயது முடிகிறது. லக்னத்தில் சனி. கடகத்தில் செவ்வாய். இருவரும் 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை. குரு பார்ப்பதால் திருமணம் தாமதமானா லும் நல்ல மணவாழ்க்கை அமையும். சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யவும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடும். 36 வயது வரை சுக்கிர தசை போராட்டம் தான். அடுத்துவரும் சூரிய தசை திருப்தியாக இருக்கும்.
ப் ஸ்ரீதரன், வேலூர்.
நல்ல வேலையாட்கள் அமைய என்ன பிரார்த்தனை சுலோகம் சொல்லவேண்டும்?
"ஓம் கார்த்தவீர்யார்ஜுனோ நாமராஜா
பாஹு ஸஹஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண
மாத்ரேனே கதம் சிப்பந்திகள்
ச லப்யதே ஓம்'
என்ற சுலோகத்தையும்;
"ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேய நமஹா'
என்ற சுலோகத்தையும் 108 முறை தொடர்ந்து சொல்லவேண்டும். கும்பகோணம் அடுத்து குடவாசல் அருகில் சேங்கா-புரம் தத்த குடீரத்தில் தத்தாத்ரேயர் விக்ரக மும் கார்த்தவீர்யார்ஜுன யந்திர மும் உள்ளது. நேரில் சென்று பூஜை செய்யலாம். வாலாஜாபேட்டை அருகில் தன்வந்திரி பீடத்தில் தத்தாத்ரேயர்- கார்த்தவீர்யார் ஜுனர் சந்நிதிகள் இருக்கின்றன. அங்குசென்றும் பூஜிக்கலாம். இழந்த பொருட்களையும் காணாமல் போன பொருட்களையும் கண்டுபிடிக்க "கதம் நஷ்டம் ச லப்யதே' என்று சொல்லவேண்டும்.
ப் ஆர். சிதம்பரம், சேரன்மாதேவி.
ராகு தசையில் சுயபுக்தி நடக்கிறது. தனுசு லக்னம். 3-ல் ராகு. சுயபுக்திக்குப்பிறகு எப்படி யிருக்கும்? அடுத்துவரும் குரு தசை 4-ல் இருக்கி றார். எப்படியிருக்கும்?
டாக்டரைப் பார்க்கும் நோயாளி, "எனக்கு இந்தந்த நோய் உள்ளது. இந்தந்த மருந்தை சாப்பிடலாமா?' என்று கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி. லக்னத்தையும், ராகு, குரு நிற்கும் இடத்தையும் சொன்னால் போதுமா? முழு ஜாதகக் குறிப்பை அனுப் பாமல் கேட்டால் எப்படி பலன் சொல்லுவது?
ப் எம். குமரவேல், தஞ்சாவூர்.
எங்களுக்கு பரம்பரைக் கோவில் உள்ளது. அந்தக் கோவில் பூசாரியாக இருந் தவர் சிவலோகப் பதவி அடைந்துவிட்டார். அதன்பிறகு நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு பூசாரியாக இருக்கிறேன். கோவில் வருமானம் பற்றாக்குறை. அதனால் எனக்குப் பெண் தர யோசிக்கி றார்கள். எனது வாழ்வில் ஒளியேற்ற வழிமுறைகளைச் சொல்லவும்.
33 வயதாகிறது. தனுசு லக்னம், அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி. செவ்வாய் கும்பத்தி லும் சனி சிம்மத்திலும் இருந்து ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். செவ்வாய் கேதுவோடும், சனி ராகுவோடும் சேர்ந்திருக்கிறார்கள். எனவே 35 வயதிற்கு மேல் திருமணமாகும். ஜாதகத்தில் தசாபுக்தி குறிக்கவில்லை. கோவில் வேலை பார்ப்பதால் ஜோதிடத்தை பழகிக் கொள்ளுங்கள். கே.எம். சுந்தரத்திடம் ஜாதகத்தை எழுதவும். செல்: 92453 28178-ல் தொடர்புகொள்ளவும்.
ப் வி. செல்லப்பா, சேலம்.
எதிர்காலத்தில் புகழ்பெற என்ன வழி?
நடப்பு வயது 77. 66 வயதுமுதல் குரு தசை. பொதுநலத் தொண்டு செய்து புகழ்பெறலாம். ஊனமுற்றோர் அல்லது மனநலம் குன்றிய மாணவர் விடுதி, பள்ளி நடத்தலாம். அதற்கு அரசு உதவிபெறலாம்.