ப் விஜயா, நிலக்கோட்டை.
எனது மகன் பிரபாகரனுக்கு 3-9-2017-ல் திருமணமாகி 2020-ல் விவாகரத்து ஆகிவிட்டது. "அடுத்த திருமணம் இந்து மதத்தில் நடக்காது. மதம் மாறி- கிறிஸ்துவ மதத்தில் செய்தால்தான் நிலைக்கும். இல்லா விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழமுடியாது' என்கிறார்கள். அது உண்மையா? பிரபாகரன் என்ற பெயரை மாற்றும்படி சொல்கிறார்கள். அடுத்த திருமணம் எப்போது? என் மகன் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் (இன்சூரன்ஸ்) வேலை பார்க்கிறான். இதுவே நன்றாக இருக்குமா? வேறு வேலைக்கு மாறலாமா? தகப்பனார் சொத்து இவனுக்குக் கொடுத் தால் அழிக்காமல் வைத்துக் காப் பாற்றுவானா? அப்பாவும் மகனும் ஒரே வீட்டில் இருக்கலாமா? மகனால்- அவன் அப்பா (என் கணவர்) நிறைய அவமானப்பட்டு விட்டார். ஜாதகத்தில் ஏதாவது தோஷமுண்டா? பரிகாரம் செய்ய வேண்டுமா?
பிரபாகரன் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னம். 6-ல் செவ்வாய், 12-ல் சனி. இருவரும் பார்த்துக்கொள்வது களஸ்திர தோஷமாகும்! திருமணத்துக்காக மதம் மாறவேண்டாம். இந்து மதத்திலேயே மறுமணம் நடக்கும். ஆனால் விவாகரத்தான பெண் அல்லது விதவைப் பெண் முடிய வாய்ப்புண்டு. மறுமணம் நடக்கவும்- நல்ல மனைவி அமையவும்- வாரிசு யோகம் உண்டாக வும் காரைக்குடியில் சுந்தம் குருக்களிடம் (செல்: 99942 74067) காமோ கர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், புனர்விவாக ஹோமமும் செய்து பிரபாகரனுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். 16 வகையான ஹோமம் செய்வார்கள். பெற்றவர்களுக்கும் சேர்த்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.
ப் பி. மகபதி, புதுச்சேரி.
"அதிர்ஷ்டம்' பேப்பர் முதல் தற்போது "பால ஜோதிடம்' வரை தங்கள் ராசிபலனைப் படித்து வருகிறேன். கணவர் பிரிந்து வேறு பெண்ணோடு வாழ்கிறார். ஒரே மகன் மகேஷ். வயது 41. இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மகúஷ் என்ற மகபதி மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னம். 7-ல் சுக்கிரன் நிற்க, அவரை கன்னி யிலுள்ள சனி பார்ப்பது தோஷம். அதனால் தாமதத் திருமணம். நடப்பு 41 வயது என்பதும் பெண் வீட்டாரை யோசிக்கச் செய்யும். என்னதான் படிப்பு, வேலை, சம்பாத்தியம், வசதி வாய்ப்பு இருந்தாலும், வயது ஒரு பிரச்சினையை உருவாக்கும். எனவே, காரைக்குடியில் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அடுத்து அவருக்கு நல்ல மனைவி அமைந்துவிடும்.
ப் ஏ. சண்முகம், திருச்செங்கோடு.
என் மகள் சரோஜினிக்கு 39 வயது நடக்கிறது. சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னம். திருமணம் எப்போது நடக்கும்?
மீன ராசிக்கு 8-ல் குரு, சனி இருப்பது மாங்கல்ய தோஷம். திருமணத் தடை! பெரும்பாலும் இரண்டாம் தாரமாகக் கேட்பார்கள். மேற்படி தோஷநிவர்த்திக்கு காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். மொத்தம் 10-க்கு மேற்பட்ட ஹோமம் செய்வர் கள். (தொடர்புக்கு செல்: 99972 74067).
ப் கவிதா சரவணன், கூடுவாஞ்சேரி.
என்னுடைய பெண்ணுக்கு 26 வயது. எப்போது திருமணம் நடக்கும்?
மகள் தேவிக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னம். நடப்பு வயது 26. கார்த்திகை யில் 27 ஆரம்பம். லக்னத்துக்கு 2-ல் சனி இருப்ப தால் 27 முதல் 30 வயதுக்குள் திருமணம் செயல்படும். வசதிவாய்ப்பு இருந்தால் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி கலா சுயம்வர ஹோமமும் செய்து தேவிக்கு கலச அபிஷேகம் செய்யலாம். அல்லது திருமணஞ் சேரி சென்று அபிஷேக பூஜை செய்யலாம்.
கே. லட்சுமி, தர்மபுரி.
என் பேத்தி +2 படிக்கிறாள். எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்க வைக்கலாம்? திருமணம் எப்போது செய்யலாம்? என் கணவர் என்னைக் கண்டாலே விரோதி யைப் பார்ப்பதுபோல இருக்கிறார். குடும்பத்தில் அன்யோன்யம், சந்தோஷம் ஏற்படுமா? யாராவது செய்வினை, பில்-, சூனியம் செய்திருப்பார்களா? முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடலாமா? மற்றொரு பேத்தியின் படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்?
உங்களுக்கு மக நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னம். லக்னத்தில் சந்திரன், ராகு; 7-ல் கேது. 7-க்குடைய சனி 10-ல் நின்று 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். கணவர் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னம். ஜாதகப் பொருத்தம் எல்லாம் நன்றாக உள்ளது. அதனால் வாரிசு யோகம்- இரண்டு ஆண் பிள்ளைகள் தீர்க்கம்; பேத்திகளும் தீர்க்கம். உங்களுக்கு லக்னம், ராசி சிம்மத்தில் ராகு; ஏழில் கேது. அதற்கு சனி பார்வை. கணவருக்கு கடக லக்னத்திற்கு 8-ல் சனி. அதற்கு விருச்சிகச் செவ்வாய் பார்வை. சனியும் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது கெடுதல். அதனால் கணவன்- மனைவி இருவருக்கும் கடைசிவரை கருத்தொற்றுமை இருக்காது. அனுசரிப்புத் தன்மையும் இருக்காது. உங்களுக்கு 70 வயது. கணவருக்கு 76 வயது. வாழ்க்கையின் கடைசிக்கட்டம். பிள்ளைகளையும் பேத்திகளையும் நினைத்து காலத்தை ஓட்டுங்கள். முதியோர் இல்லத்தில் சேரலாம். அதற்கு பதிலாக நீங்கள் கட்டிய கோவிலில் இறுதிக் காலத்தை ஓட்டலாமே! பேத்திகள் இருவரும் நன்றாகப் படிப்பார்கள். இருவரும் கம்ப்யூட்டர் துறையில் படிக்கலாம். நாகதோஷம் இருப்பதால் 27 வயதுக்குமேல் திருமணமாகும். இருவரும் பட்டப்படிப்பு முடித்து வேலைக்குப் போவார்கள். நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். உங்கள் வழிபாடும் பூஜையும் அவர்களுக்குத் துணையாக இருக்கும்.
ஆர். கண்ணன், சென்னை.
நீங்கள் கூறியபடி எனக்கு பிப்ரவரி மாதம் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. உங்கள் கணிப்பு நூறு சதவிகிதம் சரியானது. நன்றி! அடுத்து உங்கள் தலைமையில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். திருமண முயற்சிகளை எப்போது செய்யலாம்?
கேது தசை தனது புக்தி. அடுத்து சுக்கிர புக்தி. சுக்கிரன் 7-க்குடையவர்; தசாநாதனுக்கு 7-ல் ஆட்சி, லக்னத்துக்கு 12-ல் ஆட்சி. 12-ஆம் இடம் அயன சயன போக ஸ்தானம். ஆகவே சுக்கிர புக்திக்குள் திருமணம் செய்யும் அமைப்புண்டு. ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும், சுக்கிரன் விசாக நட்சத்திரத்தில் (குரு சாரம்) இருக்க, சுக்கிரனும் அவருக்கு சாரம் கொடுத்த குருவும் 6 ஷ் 8 -ஆக இருப்பதாலும், 7-க்கு 6-ல் 7-ஆம் அதிபதி மறைவதாலும், சுக்கிரன் திருமணத்தை நடத்த வாய்ப்பில் லாதவராகிவிடுவார். 7-க்கு 4-க்குடைய சூரியன் 7-க்கு 8-ல் மறைந்தாலும், 7-க்கு யோகாதிபதியான புதனுடன் சேர்ந்து 2-ல் குடும்ப ஸ்தானத் தில் இருப்பதால், கேது தசை சூரிய புக்தியில் மனைவி வருவார். திருமணம் நடக்கும்.
எம். தனசேகர், திண்டிவனம்.
எனக்கு ஏழரைச்சனியும் சுக்கிர தசையும் நடக்கிறது. மளிகைத் தொழில் செய்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் முடங்கிவிட்டது. எதிர்காலம் எப்படி இருக்கும்? மாற்றுத் தொழில் செய்யலாமா?
சுக்கிர தசையில் சுயபுக்தி நடக்கிறது. சுக்கிரன் 6, 12-க்குடையவர் என்றாலும் ராசிநாதன் என்பதால் கெடுக்காது. என்றாலும் சுயபுக்திவரை தொழில் மந்தம், கடன், நோய் நொடி, வைத்திச்செலவு இருக்கும். மனைவி, பிள்ளைகள் ஓரிடம், நீங்கள் வேறிடம் என்று தள்ளியிருக்கும் சூழ்நிலை வரலாம். அடிமைத்தொழில் இல்லை. தொடர்ந்து சொந்தத் தொழில் செய்யலாம். ஆனால் இன்னும் இரண்டு வருடம் பொறுமையாகவும் நிதானமாகவும் நம்பிக்கையாகவும் காத்திருக்க வேண்டும். நடப்பு வயது 67. சுக்கிர தசை பாதிவரை (75 வயது) ஆயுள் பலமுண்டு. சுக்கிர தசையில் சந்திர புக்தி வரும்போது, ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடக்கும் காலம் எதிர்பாராத விபத்து, சங்கடம், பொருளாதார இழப்பு, கண்டம் வர வாய்ப்புண்டு. அக்காலம் சிவன் கோவிலில் ஒருமுறை ருத்ரஹோமம் செய்து ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். சிவனுக்கு திங்கட்கிழமைதோறும் காலையில் சந்திர புக்தி முடியும்வரை பாலாபிஷேகம் செய்யவேண்டும். 9-க்குடைய சூரியனும் 10-க்குடைய புதனும் ஒன்று சேர்ந்திருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் வாழ்க்கையில் எப்போதும் வறுமை, தரித்திரத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் 12-ல் இருப்பதால் சாப்பாடு கிடைத்தாலும் அந்தந்த நேரத்துக்கு காலாகாலத்தில் சாப்பிட முடியாதபடி தாமதப்படும். காலை டிபன் 12.00 மணிக்கும் மதிய சாப்பாடு மாலை 4.00 மணிக்கும் சாப்பிடும்படியான பலன். இருபது வெள்ளிக்கிழமை திருவக்கரை வக்ர காளியம்மனையும் சந்திர மௌலீஸ்வரரையும் வழிபட்டால் சுக்கிர தசை சுயபுக்தியின் பாதிப்பு குறையும். 19 சனிக்கிழமை பஞ்சவடி ஆஞ்சனேயரை வழிபடவும். மாற்றுத்தொழில் வேண்டாம்.