கே. ராமமூர்த்தி, பல்லடம்.

எனக்கு ஜோதிடம் கற்றுக்கொடுத்த குருமார்களின் கூற்றுப்படி, 5-ஆம் வீட்டின் அதிபதி, 7-ஆம் வீட்டின் அதிபதியுடன் தொடர்பு பெற்றோ அல்லது அவர் சாரம் பெற்றிருந்தாலோ காதல் திருமணம் என்பது பலன். "பாலஜோதிடம்' இதழில் ஒரு வாசகி ஜாதகத்தில், கும்ப லக்னத் துக்கு 5-ஆமிடத்து அதிபதி புதனும் 7-ஆமிடத்து அதிபதி சூரியனும் ஒன்றுசேர்ந்து 5-ஆம் வீட்டு அதிபதி புதன் வீட்டி லேயே அமர்ந்திருந்தன. அதனால் காதல் திருமணம் ஏற்படுமே. தாங்கள் "கேள்வி- பதில்' பகுதியில் காதல் திருமணம் இல்லையென்று சொல்லியிருந்தீர்களே!

5, 7-ஆம் அதிபதி சம்பந்தம் இருந்தால் களஸ்திர தோஷம் அல்லது தாமதத் திருமணம் என்று தான் எனது குருநாதர் சொல்லிக் கொடுத்த பாடம். காதல் திருமணத் துக்கு எந்த லக்னமாக இருந்தாலும் செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தாக வேண்டும் என்பது அனுபவ விதி! இரண்டையும் உதாரண ஜாதகத்துடன் ஆராய்ந்து பாருங்கள். எனக் கும் எழுதுங்கள். உங்கள் விதியையும் ஏற்றுக்கொள்வோம்.

dd

Advertisment

ப் எஸ். சந்திரன், ஓசூர்.

Advertisment

எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? குடும்ப வாழ்க்கை எப்படி அமையும்?

உங்களுக்கு 29 வயது நடக்கிறது. மிதுன லக்னம். 8-ல் செவ்வாய் உச்சம். விருச்சிகத்தில் சனி பரிவர்த்தனை. அத்துடன் செவ்வாயை சனி பார்க்கிறார். அதனால் 30 வயது முடிந்தபிறகு திருமணம் நடக்கும். பெரும்பாலும் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க லாம்.

ப் எம். விஜயகுமார், சென்னை-23.

என் மகளுக்கு இரண்டு வருடங்களாக வரன் பார்க்கிறோம்; எதுவும் அமையவில்லை. கடந்த பிப்ரவரியில் வெளிநாட்டு வரன் வந்தது. பார்த்துப் போனார்கள். அதுவும் அமையவில்லை. அடுத்து மார்ச்சில் ஒரு வரன் வந்தது. பெண்ணைவிட வரன் உயரம் குறைவென்பதால் அதுவும் தள்ளிப் போனது. கடந்த ஏப்ரலில் ஒரு வரன் வந்தது. ஜாதகம் எல்லாம் பொருந்தி- மாப்பிள்ளையும் பெண்ணும் தொலைபேசி யில் பேசிக்கொண்டார்கள். மண்டபத்துக்கு முன்பணம் கட்டிவிட்டோம். மே மாதம் மாப்பிள்ளையின் அம்மா தொலை பேசியில் கூப்பிட்டு, "இந்த சம்பந்தம் வேண்டாம்; வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். காரணம் கேட்டதற்கு, "உங்கள் மகளைப் பார்த்துவிட்டு வந்தபிறகு சகுனத் தடை களாக இருக்கிறது' என்றார். எங்கள் மகளும் மனமொடிந்த நிலையில் இடிந்துபோயிருக் கிறாள். இது ஏன்? அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

மகளுக்கு விருச்சிக லக்னம். லக்னத்தில் சனி. சிம்மத்தில் செவ்வாய். இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அத் துடன் 7-க்குடைய சுக்கிரன் நீசம். 5-ல் ராகு; குரு 6-ல் மறைவு. அதனால் மாங்கல்ய தோஷமும், புத்திர தோஷமும் கடுமையாக உள்ளது. குரு பார்வை இல்லை. 25 வயது முடிகிறது. 29 வயதுவரை சனி தசை. இது முடிந்தபிறகுதான் புதன் தசையில் திருமண யோகம். நீங்கள் 24 வயதிலிருந்தே திருமண முயற்சிகளை மேற்கொள்வது தவறு. 30-ல்தான் நடக்கும். அந்த சம்பந்தம் முடியாதது ஒரு வகையில் மிகமிக நல்லது. திருமணம் நடந்திருந்தால் உங்கள் பெண்ணின் வாழ்க்கை கண்ணீர் வாழ்க்கையாக முடிந்திருக்கும். சனி தசையில் ராகு புக்தி. இது முடியட்டும். அதன்பிறகு குரு புக்தியில் பார்வதி சுயம்வர கலா ஹோமம் செய்து, உங்கள் மகளுக்கு கலச அபிஷேகம் செய்துவிட்டு ஈர உடைகளை தானம் செய்து விட வேண்டும். அதன்பிறகு இதைவிட அற்புத வரன் வரும். அதைப் பேசி முடிக்கலாம். பிற்கால வாழ்க்கையும் ஆனந்தமாகவும் மனநிறைவாகவும் அமையும். ஹோமம் செய்தால் 27 வயது முடிந்து 28-ல் திருமணம் செய்யலாம். அதுவரை நடந்த சம்பவங்களை நினைத்துக் கவலைப்படாமல் தைரியமாக இருக்கவும். மீண்டும் இதே மாப்பிள்ளை வீட்டார் வந்தாலும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பிவிடுங்கள். மகளுக்கு சூப்பர் மாப்பிள்ளை அமையும். தயவுசெய்து பொறுமையாக (இரண்டு வருடம்) காத்திருங்கள்.

ப் ஏ. முருகேசன், வேலூர்.

ஆவணி மாதம் இரண்டு அமாவாசை வந்தால் மல மாதம்- திருமணம் செய்யக் கூடாது என்று பஞ்சாங்கங்களில் போட்டிருப்பது உண்மையா?

இதற்கு தெளிவான விளக்கம் முன்னரே "பாலஜோதிட'த்தில் எழுதியிருக்கிறேன். சில இடங்களில் கோவில் கும்பாபிஷேகமே நடக்கிறது. பல சிவாச்சாரியார் (குருக்கள்) குடும்பங்களிலும் திருமணம் வைத்திருக்கி றார்கள். எந்தக் குற்றமும் இல்லை.

ப் ஆர். வேங்கடகிருஷ்ணன், காஞ்சிபுரம்.

"பாலஜோதிட'த்தில், குருவும் சனியும் சேர்ந்திருந்தாலும் பார்த்துக்கொண் டாலும் "சண்டாள யோகம்' என குறிப் பிட்டிருந்தீர்கள். சண்டாள யோகத்தின் பலன் என்ன?

பெயரிலேயே சண்டாள யோகம் என்றிருக்கிறது. இதற்குத் தனியே என்ன விளக்கம் தேவை? சண்டாளன் என்று யாரைச் சொல்லுவோம்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தர்மநெறிகளைப் புறக்கணிப்பவன், நன்றியைக் கொன்றவன், அடுத்துக் கெடுப்பவன், துரோகி- இப்படி எல்லாமே சண்டாளத்தனம்தான்.

ப் பி. மாதவன், தாம்பரம்.

சொந்த வீடு, வாகன யோகம் எப்பொழுது கிட்டும்? வெளிநாட்டில் செட்டிலாக முடியுமா?

துலா லக்னம். லக்னத்தில் ராகு; 10-ல் சனி, செவ்வாய் சேர்க்கை. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. சுக்கிர தசை. ராகு புக்திவரை போராட்டம்தான். பிறகு வெளிநாட்டு வேலை அமையும். சுக்கிர தசை பிற்பகுதியில் நீங்கள் விரும்பும் யோகங் களை அடையலாம்.

ப் ஸ்ரீபெருமாள், திருப்பூர்.

எனது பூமியை எப்போது விற்றால் நல்ல விலை கிடைக்கும்? வீடு எப்போது அமையும்?

ராகு தசையில் சனிபுக்தி நடக்கிறது. அடுத்து புதன் புக்தியில்- புதன் விருச்சிக லக்னத்துக்கு 11-ல் இருப்பதால், பூமி லாபத்தோடு விற்கும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதை யில் செவலூர் சென்று பூமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யவும்.

ப் எஸ். மோகன்ராஜ், புதுக்கோட்டை.

வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை. பஞ்சு மில்லில் மாஸ்டராக வேலை செய்கிறேன். சொந்தத் தொழில் செய்ய லாமா?

கடந்த காலத்தில் 28 வயதுமுதல் 38 வயதுவரை சந்திர தசை நடந்தது. ஏழரைச் சனியும் நடந்தது. இனி ஏழரை முடிந்துவிடும். சந்திர தசையும் முடியும். அடுத்து செவ்வாய் தசை. லக்னாதிபதி தசை என்பதால் 5-ஆவது தசையானாலும் பரவாயில்லை. சின்ன மகனுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். அதனால் சொந்தத் தொழிலை யோசனை செய்து செய்யவும்.

ப் ஆர். ராஜா, ஈரோடு.

எனக்கு சந்திர தசை நடக்கிறது? எப்படியிருக்கும்?

உங்களுக்கு ஏழரைச் சனியோ அட்டமச் சனியோ இல்லை. அதனால் சந்திர தசையில் உயிர்ச்சேதம் பற்றி பயப்படவேண்டாம். தனுசு லக்னம். அட்டமாதிபதி தசை என்பதால் தொழில் மந்தம், பொருளாதார நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அருகிலுள்ள சிவன் கோவிலில் திங்கட்கிழமைதோறும் பாலாபிஷேகம் செய்யவும். அட்டமச் சனி வரும்போது சந்திர தசை நடந்தால் ஹோமம் செய்யவேண்டும்.