ப் கே. கோதைநாயகி, விழுப்புரம்.
எனது மகன் சித்த மருத்துவப் படிப்பு முடித்தும் இதுவரை வேலைக்கும் செல்லவில்லை; வைத்தியமும் பார்க்க வில்லை. 28 வயதாகியும் சொந்த புத்தியும் இல்லை; சொல்புத்தியும் கேட்பதில்லை. அவன் எதிர்காலம் எப்படியிருக்கும்?
மகனுக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நல்ல வேளையாக ஏழரைக்கு முந்தி படிப்பு முடிந்தது. இல்லாவிட்டால் அதிலும் பாக்கி வைத்திருப்பார். 2022-ல் ஏழரைச்சனி முடிந்தபிறகு தொழில், சம்பாத்தியம், திருமணம் எல்லாம் நடக்கும். 7-ல் செவ்வாய், சனியும், களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் கேது- ராகு சம்பந்தமும் இருப்பதால் அவருக் காக நீங்கள் பெண் பார்க்கவேண்டாம். அவராகத் தேடிக்கொள்வார். தற்போது தினசரி ஆடம்பரச் செலவுக்கு "பேட்டா' கேட்பார்; கொடுக்கவும்.
ப் சுமதி மாதவன், தாம்பரம்.
என் கணவருக்கு ராகு தசை நடக்கிறது. எப்படியிருக்கும்? அடுத்து இளைய மகனுக்கு ராகு தசை வரும். அப்பாவுக்கும் மகனுக்கும் ராகு தசை ஒன்றாக வந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா? நான் ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்துள்ளேன். லாபம் கிடைக்குமா?
தகப்பனார்- மகனுக்கு சமதசை ராகு தசை வரும்போது உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் வரும் என்பதால், சூலினி துர்க்கா ஹோமம் செய்து அனைவரும் அபிஷேகம் செய
ப் கே. கோதைநாயகி, விழுப்புரம்.
எனது மகன் சித்த மருத்துவப் படிப்பு முடித்தும் இதுவரை வேலைக்கும் செல்லவில்லை; வைத்தியமும் பார்க்க வில்லை. 28 வயதாகியும் சொந்த புத்தியும் இல்லை; சொல்புத்தியும் கேட்பதில்லை. அவன் எதிர்காலம் எப்படியிருக்கும்?
மகனுக்கு ஏழரைச்சனி நடக்கிறது. நல்ல வேளையாக ஏழரைக்கு முந்தி படிப்பு முடிந்தது. இல்லாவிட்டால் அதிலும் பாக்கி வைத்திருப்பார். 2022-ல் ஏழரைச்சனி முடிந்தபிறகு தொழில், சம்பாத்தியம், திருமணம் எல்லாம் நடக்கும். 7-ல் செவ்வாய், சனியும், களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் கேது- ராகு சம்பந்தமும் இருப்பதால் அவருக் காக நீங்கள் பெண் பார்க்கவேண்டாம். அவராகத் தேடிக்கொள்வார். தற்போது தினசரி ஆடம்பரச் செலவுக்கு "பேட்டா' கேட்பார்; கொடுக்கவும்.
ப் சுமதி மாதவன், தாம்பரம்.
என் கணவருக்கு ராகு தசை நடக்கிறது. எப்படியிருக்கும்? அடுத்து இளைய மகனுக்கு ராகு தசை வரும். அப்பாவுக்கும் மகனுக்கும் ராகு தசை ஒன்றாக வந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா? நான் ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்துள்ளேன். லாபம் கிடைக்குமா?
தகப்பனார்- மகனுக்கு சமதசை ராகு தசை வரும்போது உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் வரும் என்பதால், சூலினி துர்க்கா ஹோமம் செய்து அனைவரும் அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு ஏழரைச்சனி. 2022-க்குமேல் விரயச்சனி விலகியதும் ரியல் எஸ்டேட்டில் லாபம் வரும்; அனுபவிக்கலாம். பிள்ளை களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். படிப்பு, உத்தியோகம், சம்பாத்தியம் நன்றாக இருக்கும். சம ராகுவுக்கு காளஹஸ்தி சென்று ருத்ராபிஷேக பூஜை செய்வது நல்லது.
ப் எம், சூரப்பன், திருப்பூர்.
என் மகனுக்கு 19-2-2019-ல் திருமணம் நடைபெற்றது. மகன் கும்ப ராசி- மருமகள் சிம்ம ராசி. இவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? மகன் வெளிநாடு போவானா?
மகன் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி. மருமகள் பூர நட்சத்திரம், சிம்ம ராசி. தினப்பொருத்தம் இல்லை. மேலும் திருமணத்தேதி 1-ம் 5-ம் பொருத்தமில்லை. 2022 வரை குடும்பத்தில் பிரச்சினைகள் வெடிக்கலாம். அதற்குமுன் அவருக்கு வெளிநாட்டில் வேலைகிடைத்தால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றால் நல்லது. 2022-க்குப்பிறகு ஒன்றுசேரலாம். மேலும் மருமகளுக்கு சந்திர தசை நடப்பது ஆகாது. பாதிப்புகள் உண்டாகலாம்.
ப் வி. ஆதிகேசவன், திருச்சி.
1998-ல் திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி! எப்படியிருக்கும்?
மேஷ லக்னம். 7-ல் சனி. 5-ல் குரு. 2-ல் கேது. 8-ல் ராகு. களஸ்திர தோஷமில்லை. புத்திர தோஷமுண்டு. குரு லக்னம், ராசியைப் பார்ப்பதால் எமபயம் இல்லை. ஆயுள் தீர்க்கம், சனி தசை நன்றாக இருக்கும்.
ப் கே. மோகன், கடலூர்.
என்னுடைய பெயர் எண் 28 வருகிறது. பொருத்தமா? எனக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைக்குத் தீர்வு கிடைக்குமா?
பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னம். பணியில் சில சங்கடம் நேரும். தற்போது சூரிய தசை சனி புக்தி. இதுவும் நல்லதல்ல. அடுத்து புதன் புக்தியில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். தேதி எண் 3, விதி எண் 2. அதனால் உங்கள் பெயர் எண்ணை 37-ல் அல்லது 46-ல் அமைத்துக்கொள்ளவும். 28 சரியல்ல. நிலுவைத் தொகைக்குத் தீர்வு கிடைக்க கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்துக்கும் அபிஷேக பூஜை செய்யவும்.
ப் எஸ். ஆறுமுகம், காட்பாடி.
எனது மகன் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் படிக்கிறான். அதே துறை யில் மேற்படிப்பு படிக்கவைக்கலாமா? ஐ.பி.எஸ். போன்ற படிப்பு படிக்கலாமா?
மகன் கும்ப லக்னம், கன்னி ராசி. சூரியன் உச்சம். 10-க்குடைய செவ்வாய்- ராசிக்கு 10-ல் கேதுவுடன் சம்பந்தம். குரு உச்சம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் ஐ.பி.எஸ். படிக்கவைக்கலாம். அதிகார உத்தியோகம் பார்க்கும் வாய்ப்புண்டு. 2022-க்குமேல் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கலாம். அப்போது ராகு தசை வரும். அக்காலம் திருவக்கரை சென்று சந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யவும்.
ப் வி. குமார், செய்யார்.
நான் டி.ஈ.ஈ.ஈ. படித்துள்ளேன். இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. எப்போது அமையும்?
சிம்ம லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். கேது புக்தியில் வேலை அமையும். அடுத்து சுக்கிர புக்தியில் திருமணம் முடியும். தனியார் நிறுவனத்தில் வேலை அமையும். அல்லது அடுத்த மே மாதம் வெளிநாடு போகலாம். மஞ்சக்குப்பம் லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேகம், பூஜை செய்யவும்.
ப் எம். ராமன், காஞ்சிபுரம்.
எனக்கு அரசாங்க வேலை கிடைக் குமா? சந்திர தசை நல்லதா- கெட்டதா?
சந்திர தசையில் அட்டமச்சனி வரும் காலம் இரண்டரை வருடம் பாதிக்கும். 10-ல் செவ்வாய், ராகு இருப்பதால் அரசு வேலை கிடைக்காது. எந்த வேலையில் இருந்தாலும் மனநிறைவு இருக்காது. நாகதோஷம், சனி தோஷம் இருப்பதால் 33 வயதில் திருமணம் நடக்கும்.
ப் வி. கார்த்திக், திண்டுக்கல்.
திருமணம் எப்பொழுது நடக் கும்? பார்க்கும் ஆசிரியர் பணி நிரந்தர மாகுமா?
பெயர் எண் 38 வருவது சரியல்ல. 46-ல் வைக்கலாம். கன்னி ராசி, கன்னி லக்னம். 2-ல் ராகு; 8-ல் வியாழன், கேது இருப்பது தோஷம். அடுத்த ஆண்டு பணி நிரந்தரம் எதிர்பார்க்கலாம்.
ப் ஆர். சுப்பிரமணி, கருப்பூர்.
எனது அக்காள் மகளின் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதா? இன்னும் திருமணமாகவில்லை. இந்தப் பெண்ணின் அண்ணனுக்கும் திருமணமாகவில்லை.
அக்காள் மகளுக்கு கடக லக்னம். லக்னத்தில் சனி. மகர ராசி- அதற்கு 7-ல் சனி. மேஷத்தில் செவ்வாய். சனியும் செவ்வாயும் பார்த்துக்கொள்வது மாங்கல்ய தோஷம். அதனால் காதல், கலப்புத் திருமணம் நடக்கும். குரு தசை ஆரம்பம். பார்வதி சுயம்வரகலா ஹோமமும், காமோகர்ஷண ஹோமமும் செய்தால் காதல் திருமணத்தைத் தவிர்க்கலாம். 2022-ல் திருமணம் நடக்கும். அதன்பிறகு அண்ணனுக்கும் திருமணம் நடக்கும். 9-ல் கேது. சூரியன் 12-ல் மறைவு. தகப்பனார் வழியில் பூர்வீக தோஷம் இருப்பதால் அண்ணன்- தங்கை மணவாழ்வு தடையாகிறது.
ப் எம். வசந்தி, திருத்தணி.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? வேலை எப்போது கிடைக்கும்?
மகனுக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். 7-ல் சுக்கிரன்- களஸ்திர தோஷம். ராசிக்கு 2-ல் சனி. ராசியில் ராகு, செவ்வாய். எல்லா தோஷமும் இருப்பதே திருமணத் தடைக்குக் காரணம். அண்ணன் திருமணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டு தம்பியின் திருமணத்தை உடனே செயல்படுத்தலாம். கந்தர்வராஜ ஹோமம் செய்யவும். விரைவில் திருமணம் முடியும். அடுத்து வேலை அமையும்.