* மாதவன், கடம்பத்தூர்.
"பாலஜோதிடம்' கேள்வி- பதில் இலவச சேவை மூலமாக பலரது வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச் சத்தை ஏற்படுத்துகிறீர்கள். நன்றி! எனக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். ராகு தசை நடக்கிறது. இதுவரை துன்பத்தைத் தவிர வேறெது வும் அனுபவிக்கவில்லை. கந்தர்வராஜ ஹோமம் செய்துகொண்டேன். இன்னும் திருமணமாக வில்லை. சாதாரண தலைவலிக்கு ஆஸ்ப்ரோ அல்லது அனாஸின் சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி போய்விடும். சயனஸ் தலைவலி என்றால் அல்லது ஒற்றைத் தலைவலி என்றால் அல்லது கண்பார்வைக் கோளாறி னால் தலைவலி என்றால் அல்லது ரத்த ஓட்டத் தடையால் தலைவலி என்றால் வெறும் மாத்திரைகள் பலன் தராது. அதற்கு எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் பார்த்து சிறப்பு மருத்துவம் செய்யவேண்டும்.
அதுமாதிரிதான் உங்கள் ஜாதகம். நாக தோஷம், களஸ்திர தோஷம், புத்திர தோஷம் எல்லாம் இருக்கி றது. 7-க்குடைய சனி நீசம். 7-ல் சூரியன், சுக்கிரன், ராகு. ராசியில் சனி. ராசிக்கு 7-ஆம் இடத்துக்கு சனி, செவ்வாய் பார்வை. ராசிக்கு 5-ல் கேது. இப்படி பல தோஷ முள்ள ஜாதகருக்குத் திருமணமாக 45 வயதுகூட ஆகலாம். திருமண மாகி கணவனைப் பிரிந்த மனைவி அல்லது வேற்றினப்பெண்- இந்த மாதிரிதான் உங்களுக்கு வாழ்க்கை அமையும். அல்லது முறையாகத் திருமணம் செய்யாத (தாலிகட்டாமல்) குடும்ப வாழ்க்கையாக
* மாதவன், கடம்பத்தூர்.
"பாலஜோதிடம்' கேள்வி- பதில் இலவச சேவை மூலமாக பலரது வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச் சத்தை ஏற்படுத்துகிறீர்கள். நன்றி! எனக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். ராகு தசை நடக்கிறது. இதுவரை துன்பத்தைத் தவிர வேறெது வும் அனுபவிக்கவில்லை. கந்தர்வராஜ ஹோமம் செய்துகொண்டேன். இன்னும் திருமணமாக வில்லை. சாதாரண தலைவலிக்கு ஆஸ்ப்ரோ அல்லது அனாஸின் சாப்பிட்டால் சிலருக்கு தலைவலி போய்விடும். சயனஸ் தலைவலி என்றால் அல்லது ஒற்றைத் தலைவலி என்றால் அல்லது கண்பார்வைக் கோளாறி னால் தலைவலி என்றால் அல்லது ரத்த ஓட்டத் தடையால் தலைவலி என்றால் வெறும் மாத்திரைகள் பலன் தராது. அதற்கு எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் பார்த்து சிறப்பு மருத்துவம் செய்யவேண்டும்.
அதுமாதிரிதான் உங்கள் ஜாதகம். நாக தோஷம், களஸ்திர தோஷம், புத்திர தோஷம் எல்லாம் இருக்கி றது. 7-க்குடைய சனி நீசம். 7-ல் சூரியன், சுக்கிரன், ராகு. ராசியில் சனி. ராசிக்கு 7-ஆம் இடத்துக்கு சனி, செவ்வாய் பார்வை. ராசிக்கு 5-ல் கேது. இப்படி பல தோஷ முள்ள ஜாதகருக்குத் திருமணமாக 45 வயதுகூட ஆகலாம். திருமண மாகி கணவனைப் பிரிந்த மனைவி அல்லது வேற்றினப்பெண்- இந்த மாதிரிதான் உங்களுக்கு வாழ்க்கை அமையும். அல்லது முறையாகத் திருமணம் செய்யாத (தாலிகட்டாமல்) குடும்ப வாழ்க்கையாக அமையும். ராகு தசை, சுக்கிர புக்தியில் மனைவி வந்தபிறகு வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும். பிதுர்தோஷ நிவர்த்தியும், நவகிரக சாந்தியும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அபிஷேகம் செய்துகொள்ளுங்கள்.
* ஆர். வெங்கடேசன், ஈரோடு.
என் ஒரே மகளை மைத்துனருக்கு மணம் முடித்தேன். ஜாதகம் இல்லை. இரண்டு குழந்தைகள் பிறந்து அன்றே இறந்துவிட்டன. எந்த கிரக பாதிப்பு உள்ளது? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
மகள் சுவாதி நட்சத்திரம், துலா ராசி. லக்னத்தில் சனி. 7-ஆம் இடத்துக்கு சனி, செவ்வாய் பார்வை. இப்படிப்பட்ட ஜாத கிக்கு 27 வயதுக்குமேல்தான் திருமணம் செய்திருக்க வேண்டும். முன்னதாகத் திருமணம் செய்துவைத்ததால் புத்திர தோஷம் ஏற்பட்டது. சனி சாந்தி ஹோமமும், வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் செய்து மகளுக்கும் மருமகனுக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பிறகு வாரிசு கிடைக்கும். இல்லாவிட்டால் 30 வயதுக்குமேல் கிடைக்கும்.
* ஜி. ஹேமா, குடியாத்தம்.
எனது மகளுக்கு எப்போது திருமணம் நடத்தலாம்?
மகளுக்கு நாக தோஷம் இருப்பதால் 26 வயது முடிந்தபிறகு 27 நடப்பில் திருமணம் செய்யலாம். கோட்சாரத்தில் சனி லக்னத்துக்கு 7-ஆம் இடத்தையும், ராசிக்கு 2-ஆம் இடத்தையும் பார்க்கும் காலம் திருமணம் நடக்கும். நாகதோஷ நிவர்த்திக்கு காளஹஸ்தி சென்று ஒருமுறை ருத்ராபிஷேக பூஜை செய்யவும். அன்னிய சம்பந்தம். சயின்ஸ் அல்லது மருத்துவத்துறை வேலை பார்க்கும் மாப்பிள்ளை அமைவார். வரும் வரனுக்கு 30 வயதை அனுசரித்து நடக்கும்.
* வி. முருகப்பன், திருச்சி.
என் மகனுக்கு நீங்கள் சொல்லியபடி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டபிறகு ஆண் குழந்தை பிறந்தது. நீங்கள் சொல்லியபடி மதுரை கே.எம். சுந்தரத்திடம் பேரனுக்கு வாக்கியப்படி ஜாதகமும் கணித்துவிட்டேன். அடிக்கடி அவனுக்கு உடல்நலமில்லாமல் போவ தால், அவன் ஜாதகத்தைப் பார்த்து ஆயுள், ஆரோக்கியம், கல்வி, எதிர்காலம் பற்றிக் கூறவும். பரிகாரம் என்ன?
பேரனுக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னம். லக்னத்தில் ராகுவும், 7-ல் கேது, சனி, சுக்கிரனும் நிற்க, 4-ஆம் இடத்தை சனி பார்க்கவும், 4-க்குடைய சுக்கிரன் சனி, கேது சம்பந்தம் பெறுவதால் பாலாரிஷ்ட பீடை உண்டு. சுக்கிர தசை சுயபுக்தி. எந்தக் குழந்தை பிறந் தாலும் ஒரு வயது நிறைவு பெறும்போது ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும். அதனால் 12 வயதுவரை நடக்கும் பாலாரிஷ்டப் பீடைகளை விலக்கிவிடலாம். நீங்கள் குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்திருக்க மாட்டீர்கள். அதனால்தான் இந்த பாதிப்பு. அஸ்வினி நட்சத்திரம் அன்று தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம், மற்றும் கல்விக்காக ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி ஹோமம், நவகிரக ஹோமம் எல்லாம் செய்து பேரனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் உங்கள் மகனுக்கு ராகு தசை ஆரம்பம். அதனால் சூலினி துர்க்கா ஹோமம் செய்து அவருக்கும் அவர் மனைவிக்கும் (மூன்று பேருக்கும்) கலச அபிஷேகம் செய்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
* கே. ராஜ்குமார், ஈரோடு.
எனக்குத் திருமணம் எப்பொழுது நடக்கும்? டீக்கடை வைத்துள்ளேன். இதே தொழில் ராசியா? வேறு தொழிலா?
எதிர்கால யோகம் எப்படி இருக்கும்?
சிம்ம லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசி. சந்திர தசையில் திருமணம், தொழில் விருத்தி, முன்னேற்றம், வாரிசு உண்டாகும். திரவப்பொருள், பெட்டிக்கடை, அக்னி சம்பந்தம், ஜூஸ் கடை தொழிலே செய்யலாம். சந்திர தசையில் முன்னேற்றம் உண்டு.
* வி. சுந்தரலிங்கம், சென்னை.
எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? குடும்பத்துடன் பிரச்சினைகளின்றி வாழ்வேனா? குழப்பமாக உள்ளது!
விருச்சிக லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. லக்னாதி பதி செவ்வாய் 8-ல் மறைவு. 2, 5-க்குடைய குரு 12-ல் மறைவு. சந்திரனும் குருவும் 6 ஷ் 8 சகட யோகம். 43 வயதுமுதல் சனி தசை 19 வருடமும் போராட்டம். அடுத்து வந்துள்ள புதன் தசை அட்டமாதிபதி தசை. இதுவும் போராட்டம். புதன், சனி பரிவர்த்தனை என்பதால் ஆயுள் குற்றமில்லை. ஆனாலும் ஒரு குடும்பத் தலைவன் மனைவி, மக்களுக்கு, குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வழியில்லை. 2-ல் கேது- பஞ்சபாண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்து வனவாசம் போனமாதிரி! உங்கள் வாக்கே உங்களுக்கு எதிரி, கெடுதல்- யானை தன் தலையில் குப்பைக் கூளங்களை அள்ளிப் போட்டுக்கொண்ட மாதிரி! இதுதான் உங்கள் தலையெழுத்து. இதில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்துகொள்ளவும்.
* எஸ். ராமசாமி, தேனி.
எனது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மகனுக்கு துலா லக்னம். லக்னத்தில் செவ்வாய், சனி. 2-ல் கேது; 8-ல் ராகு. களஸ்திர தோஷமுண்டு. 30 வயதில் திருமணம் செய்ய வேண்டும்.
* கே. ரத்தினம், கரூர்.
என் மகனின் தொழில், வேலைவாய்ப்பு எப்படியிருக்கும்? வெளிநாடு போகலாமா?
ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னம். புதன் தசை இருப்பு எவ்வளவு என்று எழுதவில்லை. உத்தேசமாக புதன் தசை ஆறு வருடம் என்றால், 13 வயதுமுதல் 33 வயதுவரை சுக்கிர தசை. இது குட்டிச் சுக்கிரன்; நலமில்லை. சொந்தத் தொழில் செய்தால் விரயம், நஷ்டம். சம்பள வேலைக் குப் போவது நல்லது. வெளிநாட்டு போவது அதனிலும் நல்லது. செவ்வாய், சனி பார்ப்பதால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்கலாம். மனைவி வந்தபிறகு மனைவி பேரில் சுயதொழில் செய்யும் யோகமுண்டு.