ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

/idhalgal/balajothidam/jothidam-answers-144

ப் கே. ராம்குமார், திண்டிவனம்.

எனக்கு கடக லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. கடந்த செவ்வாய் தசையில் மிகவும் கஷ்டம். தற்பொழுது ராகு தசை. முன்னேற்றம் இருக்குமா?

கேது தசையில் பிறந்தவருக்கு 5-ஆவது தசையாக செவ்வாய் தசை வரும்; அது ஆகாது. ராகு 12-ல் இருந்தாலும் வர்க்கோத்தமம். புனர்பூசம் 3-ல் ராகு. 6, 9-க்குடையவர் சாரம். ராகு தசையில் முதல் பகுதி ஒன்பது வருடம் 6-ஆம் இடத்துப் பலனையும்; பிறகு 9-க்குடைய பாக்கியாதிபதி பலனையும் செய்யும். வடக்குப் பார்த்த காளி அல்லது துர்க்கையை வழிபடலாம். மாதம் ஒரு வெள்ளிக்கிழமை மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அருகில்- தெற்கு வீதியில் உள்ள குபேர பத்ரகாளியம்மன் கோவில் சென்று நெய் விளக்கேற்றி வழிபட்டால் பொருளாதாரச் சிக்கல் நீங்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்து தேனி வழி- உத்தமபாளையம் சென்று தென்காளஹஸ்தீஸ்வரரை பூஜை செய்யவும்.

ப் எம். முருகேசன், சென்னை.

மாதவன், லதா இருவருக்கும் திருமணம் செய்ய பொருத்தம் பார்த்தோம். ஒருசிலர் பொருத்தம் உண்டு என்கிறார்கள்; ஒருசிலர் பொருத்தம் இல்லை என்கிறார்கள். தங்கள் முடிவென்ன?

திருணப் பொருத்தம் பார்க்கவும் தேதி குறிக்கவும் கேள்வி- பதில் பகுதிக்கு எழுதாதீர்கள். மாதக்கணக்கில் ஆகிவிடும். உள்ளூர் ஜோதிடரிடம் கேட்டுக்கொள்வதுதான் நல்லது. அப்படி என்னிடம்தான் கேட்டு முடிவுசெய்ய வேண்டுமென்றால் செலவைப் பாôக்கா

ப் கே. ராம்குமார், திண்டிவனம்.

எனக்கு கடக லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. கடந்த செவ்வாய் தசையில் மிகவும் கஷ்டம். தற்பொழுது ராகு தசை. முன்னேற்றம் இருக்குமா?

கேது தசையில் பிறந்தவருக்கு 5-ஆவது தசையாக செவ்வாய் தசை வரும்; அது ஆகாது. ராகு 12-ல் இருந்தாலும் வர்க்கோத்தமம். புனர்பூசம் 3-ல் ராகு. 6, 9-க்குடையவர் சாரம். ராகு தசையில் முதல் பகுதி ஒன்பது வருடம் 6-ஆம் இடத்துப் பலனையும்; பிறகு 9-க்குடைய பாக்கியாதிபதி பலனையும் செய்யும். வடக்குப் பார்த்த காளி அல்லது துர்க்கையை வழிபடலாம். மாதம் ஒரு வெள்ளிக்கிழமை மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அருகில்- தெற்கு வீதியில் உள்ள குபேர பத்ரகாளியம்மன் கோவில் சென்று நெய் விளக்கேற்றி வழிபட்டால் பொருளாதாரச் சிக்கல் நீங்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்து தேனி வழி- உத்தமபாளையம் சென்று தென்காளஹஸ்தீஸ்வரரை பூஜை செய்யவும்.

ப் எம். முருகேசன், சென்னை.

மாதவன், லதா இருவருக்கும் திருமணம் செய்ய பொருத்தம் பார்த்தோம். ஒருசிலர் பொருத்தம் உண்டு என்கிறார்கள்; ஒருசிலர் பொருத்தம் இல்லை என்கிறார்கள். தங்கள் முடிவென்ன?

திருணப் பொருத்தம் பார்க்கவும் தேதி குறிக்கவும் கேள்வி- பதில் பகுதிக்கு எழுதாதீர்கள். மாதக்கணக்கில் ஆகிவிடும். உள்ளூர் ஜோதிடரிடம் கேட்டுக்கொள்வதுதான் நல்லது. அப்படி என்னிடம்தான் கேட்டு முடிவுசெய்ய வேண்டுமென்றால் செலவைப் பாôக்காமல் நேரில் புறப்பட்டு வந்து தெளிவு பெறலாம். மாதவனுக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னம். லதா அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். ஆணின் லக்னாதி பதி சனி- பெண்ணுக்கு ராசிநாதனாக வருவதால் சிறப்பு விதியின்படி சேர்க்கலாம். தனுசு ராசியும் மகர ராசியும் துவிதுவாதச தோஷம் என்பதால், ராசிப்பொருத்தம் இல்லையென்பது சிலரது கருத்தாக இருந்தாலும், ராசியாதிபதி அல்லது லக்னாதி பதி ஒருவராக அமைந்தால் இதற்கு விதிவிலக்கு உண்டு.

ப் ஜெ. சித்ரா, திருச்சி.

9-ஆம் அதிபதி 8-ல் மறைந்திருப்பதும், 8-க்குடைய செவ்வாயும் 5-க்குடைய சனியும் பரிவர்த்தனையாக இருப்பதும் என்ன பலன்? 9-ல் நிற்கும் ராகு தசை எப்படியிருக்கும்?

செவ்வாய்- சனி பரிவர்த்தனை. ஆயுள் தீர்க்கம் உண்டு. 9-க்குடைய குரு 8-ல் மறைவதாலும், 9-ல் ராகு இருப்பதாலும் தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்துக்கு பலமில்லை. செவ்வாய்- சனி பரிவர்த்தனை- மாங்கல்ய தோஷம், வாரிசு தோஷம் இல்லையென்றா லும் இரு வகையிலும் நிம்மதி இருக்காது. பிரச்சினைகளோடு போராட நேரும்.

ப் வி. ஜெகந்நாதன், புதுச்சேரி.

நான் வாடகை வீட்டில் நகைக்கடை வைத்து இருபது ஆண்டுகளாக தொழில் செய்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?

கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. 7-க்குடைய சூரியன் 8-ல் மறைவு. 2, 11-க்குடைய குரு 12-ல் மறைவு, நீசம். பொதுவாகவே கும்ப ராசி அல்லது கும்ப லக்னக்காரர்களே வாழ்க்கையில் போராடிப் போராடித்தான் எதையும் சாதிக்கவேண்டும். அத்துடன் கிரக நிலைகளும் உங்களுக்கு அனுகூலமாக அமையவில்லை. நடப்பு ராகு தசை பாதிக்கு மேல் அனுகூலமாக இருக்கும். முத-ல் ஒருமுறை காட்டுமன்னார்குடி அருகில் எய்யலூர் சென்று சொர்ணபுரீஸ்வரரை வழிபடுங்கள்.

ப் ஆர். செல்வி, அரூர்.

எனது இரு மகள்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றி தங்களது அருள் வாக்கினை எதிர்பார்க்கிறேன்

. முதல் மகள் சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னம். 15 வயது. குரு தசை தனது புக்தி. படிப்பில் தடையில்லாத முன்னேற் றம் எதிர்பார்க்கலாம். குரு தசை கேது புக்திவரை தொடர் கல்வியோகம் உண்டு. வேலைபார்க்கும் அமைப்பும் உண்டு. 7-ல் சூரியன், புதன் இருப்பதால் திருமணம் தாமதமாகும். இரண்டாவது மகள் கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், மிதுன லக்னம். ஒன்பது வயதுவரை குரு தசை. பிறகு சனி தசை. ஆயுள், கல்வி, எதிர்காலம் திருப்திகரமாக அமையும். இருவருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் பல தடைகளைக் கடந்து தான் முன்னேறவேண்டும். ஒருமுறை காட்டுமன்னார்குடி அருகில் எய்யலூர் சென்று சொர்ணபுரீஸ்வரை வழிபடவும். பிள்ளைகளை அழைத்துப் போகவும்.

ப் என். ராஜசேகர், காட்பாடி.

எனது எதிர்காலம், தொழில், திருமணம் பற்றிக் கூறவும்.

துலா லக்னம், சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி. 35 வயதுவரை குரு தசை. 3, 6-க்குடைய தசை. தொழில் சிக்கல், பொருளாதாரப் பிரச்சினை, கடன் தொல்லை, எதிரிகளின் பலம் அதிகம். எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போடவேண்டும். சனி, செவ்வாய் தோஷம், நாகதோஷம் இருப்பதால் 35 வயதில்தான் திருமணம் நடக்கும். மனைவி வந்தபிறகு தொழில் மாற்றம், முன்னேற்றம் எதிர்பார்க்கலாம்.

ப் வி. அருள்குமார், ஈரோடு.

எனக்கும் என் மகனுக்கும் எந்த வொரு விஷயத்திலும் ஒத்துப் போவதில்லை. என்னை எதிரியாகவே நினைக்கி றான். என்னையும் என் மனைவியையும் அடிக்கிறான்; ஏசுகிறான். கொன்று விடுவதாக மிரட்டுகிறான். எந்த வேலைக்கும் போவதில்லை. அவனுடைய தாயார் ஒரு கை விளங்காமல் இருக்கிறாள். இதற் கெல்லாம் என்ன காரணம்? கிரகக் கோளாறா? செய்வினைக் கோளாறா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

உங்களுக்கு விருச்சிக ராசி, விருச்சிக லக்னம், அனுஷ நட்சத்திரம். மகனுக்கு சிம்ம ராசி, உத்திர நட்சத்திரம், கும்ப லக்னம். ராகு தசை. உங்கள் இருவருக்கும் காலப்பகை தசை. சூரிய தசை- ராகு தசை கிரகண தோஷ தசை. 27 வயதுக்குப்பிறகு மகனுக்கு நல்ல வேலை, சம்பாத்தியம் அமையும். அதன்பிறகு அவரது நிலையில் மாற்றம் தெரியும். சனியை செவ்வாய் பார்ப்பதால் 30 வயதில் திருமணம். அதுவும் அவர் விரும்பியபடி திருமணம் நடக்கும். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவன் கோவி-ல் உள்ள நந்தி முன்னால் நெய்விளக்கேற்றி மகனுக்கு நல்ல புத்தி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள். சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் 19 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி- நெய் தீபத்தில் நனைத்து ஏற்றி வழிபடவும்.

ப் கே. அழகேசன், கோவை.

எனது வீட்டை விற்க அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். பணம் கொடுத்தவர் ஆறு மாதமாகியும் கிரயம் முடிக்காமல் இழுத்தடிக்கிறார். எப்போது கிரய மாகும்? எனது மகள் ஜாதகப்படி சனி தோஷம், நாகதோஷம் இருப்பதால் 27 வயதில் திருமணம் செய்யும்படி கூறியிருந்தீர்கள். வயதாகிவிட்டது என்று எங்கள் சமூகத்தில் ஒதுக்கிவிடுவார்கள். அதனால் 23 வயதில் திருமணம் செய்ய விரும்புகிறோம். பரிகாரம் உண்டா?

வீடு கிரயம் முடிய- நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேகம், பூஜை செய்யவும். மகளுக்கு 27 வயதில் திருமணம் செய்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். அதற்கு முன்னால் திருமணம் செய்தால் பின்வரும் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். தற்கா-க சாந்தியாக பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து மகளுக்கு அபிஷேகம் செய்தால் நல்ல கணவன் அமைவார்.

ப் ஆர். பார்வதி, சோளிங்கர்.

எனது தந்தை படிக்காதவர்; 63 வயதாகிறது. சிறுவயது முதல் இரும்புப் பட்டறையில் வேலை பார்த்தவர். இப்போது முதுமை காரணமாக வேலை பார்க்க முடியவில்லை. பெட்டிக்கடை வைத்து நடத்தலாமா?

தந்தைக்கு அட்டமச்சனி. அது முடிந்த பிறகு சொந்தத் தொழில்- பெட்டிக்கடை வியாபாரம் செய்யலாம்.

bala130821
இதையும் படியுங்கள்
Subscribe