எஸ். ராமலிங்கம், கரூர்.

மனிதனுக்கு ஒரு வியாதி இருந்தால் சமாளிக்கலாம். பல வியாதிகள் உள்ளதால் மனதில் பயம் ஏற்படுகிறது. சனி தசை, மாரக தசை என்று எழுதுகிறீர்கள். என் உயிருக்குப் பாதகம் வருமா?

செவ்வாய் தசையில் பிறந்த உங்களுக்கு சனி தசை நான்காவது தசை மாரக தசைதான். கும்ப ராசி, மகர லக்னம். ராசியாதிபதியும் லக்னாதிபதியும் சனி என்பதால், அவருடைய தசையில் மாரகம் செய்யமாட்டார் என்று ஒரு விதிவிலக்கு உண்டு. கும்பகோணம்- அணைக்கரை வழி- எய்யலூர் சென்று சொர்ணபுரீஸ்வரரை வழிபடுங்கள். அத்துடன் திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரரையும், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதி அருகில் தன்வந்திரியையும் வழிபடவும். மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 என்று ஆயுளைக் கொடுத்த சிவன் உங்களையும் காப்பாற்றலாம்.

கே. சுந்தரம், புதுக்கோட்டை.

Advertisment

என் மகன் திருமணம் 20-4-2016-ல் நடந்தது. கணவனும் மனைவியும் தற்சமயம் பிரிந்துள்ளார்கள். முறையான விவாகரத்து கிடைக்கவில்லை. சில ஜோதிடர்கள் அவ னுக்கு இல்லற வாழ்வே கிடையாது என்கிறார்கள். உண்மையா? விவாகரத்து கிடைக்குமா? மறுமணமாகுமா?

கன்னியா லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். 34 வயது வரை ராகு தசை. இதன்பிறகு குரு தசையில் தான் திருமண யோகம். லக்னத்தில் சனி இருப்பதால் தாமதமாகத் திருமணம் செய்திருக்கவேண்டும். 28 வயதில் திருமணம் நடந்ததால் மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிட்டது. குரு தசை தனது புக்தியில் மறுமணம் நடக்கும். அதற்குமுன்னர் முறையான விவாகரத்து கிடைத்துவிடும். அந்தசமயம் புனர்விவாக கந்தர்வராஜ ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவும்.

வி. கணேசன், தஞ்சாவூர்.

Advertisment

நான் சிறுவயதிலேயே ஜோதிடம் கற்றேன். குரு யாருமின்றி நானே படித்துத் தெரிந்துகொண்டேன். எனினும் "சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது' என்பதற்கிணங்க, பல விஷயங்களில் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களை தங்கள் ராசிபலனும் கேள்வி- பதில் பகுதிகளும் குரு உபதேசமாய் இருந்து எனக்கு நல்லதொரு தெளிவை ஏற்படுத்தியது. தங்கள் அறிவுரைப்டி என் இதயத்தில் வைத்து பலன் சொல்லியதில் எதுவும் தவறவில்லை. ஆனால் என் ஜாதக எதிர் காலத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கடனும் கஷ்டமும் இணைபிரியா துணை யாகத் தொடர்ந்து வருகிறது. என் மகள் தெய்வானைக்கு ஒரு மகன். மருமகன் குடி காரன். அவன் குடி கெடுத்த கோடாரிக் காம்பாக மாறியதால் விவாகரத்து வழக்குப் போட்டுள்ளேன். விவாகரத்து கிடைக் குமா? மகளுக்கு மறுமண வாழ்வுண்டா?

உங்களுக்கு தனுசு லக்னம், அஸ்த நட்சத் திரம், கன்னி ராசி. 66 வயது நடக்கிறது. 67 வயதுவரை சனி தசை- 8-ல் நிற்பவர் தசை. நீச செவ்வாயோடு சேர்ந்தவர். அடுத்துவரும் புதன் தசை 7-ல் ஆட்சி; 10-க்குடையவர். தொழில்- சம்பாத்தியத்தில் நிறைவு தரும். 5-க்குடைய செவ்வாய் நீசம். அந்த வீட்டுக்கு (மேஷத்துக்கு) பாதகாதிபதி சனியுடன் சம்பந்தம். அதனால் மகள் வாழ்வில் பிரச்சினை, மனநிம்மதிக் குறைவு. மகளுக்கு மகர ராசி, மகர லக்னம். பேரனுக்கு கும்ப ராசி, மீன லக்னம். தாய்க்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் ராகு தசை- சம ராகு. அதனால் பிரிவு! விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும். பேரனுக்கு குரு தசை வரும்போது தெய்வானையின் மறுமணம் பற்றி சிந்திப்போம். பரிகாரம், ஹோமம் செய்யவேண்டும். உங்கள் சனி தசையின் கவலை விலக கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும். கடயநல்லூர் அருகிலுள்ளது.

ஆர். மணிகண்டன், சேலம்.

என் மகன் திக்கித்திக்கிப் பேசுவான். மேலும் பள்ளியில் எழுதவோ படிக் கவோ மாட்டான். இவன் பள்ளி முதல்வர், "தொடர்ந்து இப்பள்ளியில் படிக்கவைக்க முடியாது. வேறு எங்காவது சேர்த்து விடுங்கள்' என்கிறார். வேறு எந்தப் பள்ளியிலும் சேர்க்க மறுக்கிறார்கள். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில்லை. அவன் எதிர்காலம் என்னவாகும்?

மகன் மேஷ லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். ஒன்பது வயது முடிந்து பத்து வயது ஆரம்பம். நான்கு வயதுமுதல் சுக்கிரதசை ஆரம்பம். சுக்கிரனும் லக்னாதி பதி செவ்வாயும் 8-ல் மறைவு; கேது சம்பந்தம். அவர்களை 2-ஆம் இடத்திலுள்ள சனியும் ராகுவும் பார்க்கிறார்கள். எனவே சுக்கிர தசை ராகு புக்திவரை அவனுக்கு கல்வித் தடை, கல்வி மந்தம், முயற்சிக் குறைவு ஆகிய பலன் நடக்கும். 4-ல் குரு உச்சம்பெறுவதால் குரு புக்திமுதல் படிப்பில் ஆர்வம், அக்கறை, முன்னேற்றம் உண்டாகும். 14 வயதுவரை அவன் படிக்காமல் இருந்தால் என்னாவது? மனோதத்துவ மருத்துவரிடம் காண்பித்தால், "அவனுக்கு ஒன்றுமில்லை; முயற்சி செய்யாமல் இருக்கிறான்' என்று தூக்க மாத்திரைதான் தருவார். அது நரம்புக் கெடுதி. இருக்கிற அறிவாற்றலையும் கெடுத்துவிடும். தியானம், யோகாமூலம் அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். அத்துடன் கல்விக் கண் திறந்து படிக்க வாஞ்சா கல்பகணபதி, வாக்கணபதி ஹோமம், நீலு சரசுவதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் முதலியன செய்து அவனுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். தற்போது சுக்கிர தசையில் சந்திரபுக்தி நடக்கிறது. பள்ளியில் சேர்க்க முடியவில்லையென்றால் தனியாக ட்யூஷன் வைத்து அவனைப் படிக்க வையுங் கள். முதலாவதாக அவனை கடலூர் அருகில் திருவந்திபுரம் அழைத்துச்சென்று ஹயக்ரீவர் கோவிலில் அர்ச்சனை, பிரார்த் தனை செய்யவும். "ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே' என்னும் மந்திரத்தை தினசரி 108 முறை பாராயணம் செய்யும்படி எழுதிக் கொடுக்கவும். முடிந்தவரை ஹயக்ரீவரை வணங்கிவரவும்.

எஸ். சண்முகம், அரியலூர்.

பனியன் சம்பந்தப்பட்ட பிரின்டிங் பேப்பர் விற்பனை செய்ய தொழில் வாய்ப்பு வருகிறது. இந்தத் தொழில் நல்ல முறையில் அமைந்தால் எனது கடன் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விடுவேன். தொழில் சரிவருமா?

உங்களுக்கு ஏழரைச்சனி முழுமையாக விலகிவிட்டது. ஏழரைச்சனியில் நீங்கள் சம்பளத்துக்குப் போனது நல்லது. இனி நீங்கள் விரும்பும் சொந்தத் தொழில் செய்யலாம். ராகு தசை சுயபுக்தி சுமாராக இருக்கும்; பிறகு திருப்திகரமாக இருக்கும்.

ஆர். ரங்கநாதன், திருவாரூர்.

முப்பது வருடங்களாக அடிமைத் தொழில் செய்கிறேன். எனது மகன் ஜாத கப்படி பேன்ஸி, கண்ணாடி, பிளாஸ் டிக் பொருட்கள் ஏஜென்ஸி எடுத்துச் செய்யலாமா? அல்லது வெளிநாட்டு வேலைக்குப் போகலாமா?

திருவோண நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னம். குரு தசை. அடுத்து வரும் சனி தசை சுயபுக்தி வரை சம்பளத்துக்கு வேலை பார்ப்பது நல்லது. மனைவியின் மீன ராசிக்கு அட்டமச்சனி. மகன் கும்ப ராசி. இவர்கள் ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை கிடைத்தால் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோவது மிகவும் நல்லது. பிறகு கடனை அடைத்துவிடலாம். விரைவில் வெளிநாட்டு வேலை அமையும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சாமியார்கரடு முருகன் கோவில் சென்று, தத்தாத்ரேயரையும் குருநாதர் ஜீவசமாதியையும் வழிபட்டு பிரார்த்தனை செய்யவும்.

சாந்தி ஜெயக்குமார், திருச்சி.

என் மகள் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. வரன் நட்சத்திரம் உத்திரட்டாதி, மீன ராசி. இதை சிலர் பொருந்தும் என்கிறார்கள்; சிலர் பொருந்தாது என்கி றார்கள். எங்கள் மனக்குழப்பத்தைத் தீர்க்கவேண்டும்.

நீங்கள் அனுப்பிய இரண்டு ஜாதகங்களும் திருக்கணிதப்படி கணிக்கப்பட்டதுதான். அஸ்வினி- குதிரை; உத்திரட்டாதி பசு. இதற்கு யோனிப் பகையில்லையே- சேர்க்கலாமே! மேஷ ராசி, மீன ராசி. ராசிப் பொருத்தமும் உண்டு; எட்டு பொருத்தம் உண்டு. திருக்கணிதம் பார்ப்பவர்கள் பொருந்தாது என்றும்; வாக்கியம் பார்ப்பவர்கள் பொருந்தும் என்றும் சொல்லுவதாக எழுதியிருப்பதுதான் குழப்பமாக இருக்கிறது. வாக்கியப்படி நட்சத்திரம் மாறியிருந்தால்தான் பொருந்தாது; பரணி, ரேவதி- யானை. அதுவும் பொருந்தும். யானையும் சிங்கமும் பகை; பொருந்தாது.