ப் ஆர். யமுனேஸ்வரி, சைதாப்பேட்டை (சென்னை).

23-10-2020 வெள்ளிக்கிழமை காலை 7.44 மணியளவில் பிறந்த பெண் குழந்தை ஐஸ்வந்திக்கு என் தந்தை குறித்த ஜாதகம் உத்திராடம் 1-ஆம் பாதம் தனுசு ராசி என்றும், என் மருமகன் குறித்த ஜாதகம் உத்திராடம் மகர ராசி என்றும் வெவ்வேறாக இருக்கிறது. இதில் எது சரியானாது?

இரண்டு ஜாதகத்திலும் லக்னம் மாறவில்லை. துலா லக்னம்தான். நட்சத்திரமும் மாறவில்லை. உத்திராடம் நட்சத்திரம்தான். ஆனால் ராசி மட்டும் மாறுகிறது. ஒன்று தனுசு ராசி- இன்னொன்று மகர ராசி. உத்திராடம் 1-ஆம் பாதம் தனுசு ராசி. உத்திராடம் 2-ஆம் பாதம் மகர ராசி. ஒன்று வாக்கியப் பஞ்சாகம். இன்னொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம் நடைமுறையில் வாக்கியப் பஞ்சாங்கமே அனுஷ்டிக்கப்படுகிறது, அதுவே சரியானது.

dd

Advertisment

ப் மு. ஈஸ்வரி, சென்னை- 91.

எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லா மல் போகிறது. நிறைய மருந்துகளுக்கும், டாக்டர்களுக்கும் செலவாகிறது. 72 வயதில் மாரகம்- கண்டம் என்கிறார்கள் என் ஜாதகப்படி ஆயுள் எவ்வளவு?

மிதுன லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். தற்போது 69 வயது. ஜோதிடர்கள் சொல்வது சரிதான். ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம். ஒருமுறை திருக்கடையூர் சென்று வழிபடலாம் 70 வயதில் பீமரத சாந்தி செய்யலாம். கணவர் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் ஹோமம் செய்யலாம்.

Advertisment

ப் வேலு, மேச்சேரி.

2017-ல் கேள்வி அனுப்பியிருந்தேன். இனிமேல் நல்லதே நடக்கும் என்று பதில் அளித்தீர்கள் அதுபோல் இது வரை நல்லதே நடக்கிறது நீங்கள். பலநூறு ஆண்டுகாலம் வாழவேண்டும் எனது மகன் கௌதம் ஐ.டிஐ., படித்து முடித்து மறுபடியும் டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்) ஊ.ஊ.ஊ. படிப்பு முடிக்கப் போகிறான். அவன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கௌதம் (வயது 20) பூச நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னம் எதிர்காலம் இனிய காலமாக அமையும். படிப்புக்கேற்ற வேலை, தனியார் துறையில் அமையும். படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். வேலை சம்பாத்தியம், திருமணம், வாரிசு யோகம் எல்லாம் முறையாக அமையும்.

ப் வேலு, வேளச்சேரி.

மகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

மகளுக்கு 11 வயது முடிந்து 12 ஆரம்பம் திருவோண நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். 2013 செப்டம்பர் முதல் ராகு தசை ஆயுள், படிப்பு பற்றி கவலையில்லை உடல்நிலையில் பிரச்சினை வரலாம். வடக்குப் பார்த்த அம்மனுக்கு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட்டு வரவும்.

ப் டி. பாஸ்கரன், திருப்பூர்.

எனது சொந்த ஊரையும் சொந்த வீட்டையும் விட்டு விட்டு வேறிடத்தில் தங்கி வாட்ச்மேன் வேலை பார்த்து காலத்தை ஓட்டுகிறேன் மனைவி, மக்கள் இல்லை வயது 75 ஆகிறது. என் வீட்டை சொந்தக்காரன் சிறு தொகையை கொடுத்து வாங்கிவிட்டான். மேலும் அவனிடம் ஏதாவது வரவு வருமா?

நட்சத்திரம், ராசி, லக்னம் எதுவும் குறிப்பிடவில்லை. எதை வைத்து பதில் கூறுவது? இருந்தாலும் பொன்னமராவதி அருகில் செவலூர் என்ற கிராமத்தில் பூமிநாதர் கோவில் உள்ளது அங்கு சென்று பிரார்த்தனை செய்துகொண்டால் அனுதாபப்பட்டு. உங்களுக்கு மேலும் பணம் தரலாம். அல்லது பூமிநாத சுவாமியை நினைத்து வேண்டிக்கொள்ளவும். தொகை கிடைத்ததும் மேற்படி எல்லைக்குப்போய் காணிக் கையை செலுத்திவிடலாம்.

ப் வி. நிர்மலா ராகவன், சேலம்.

இதுவரை என் குடும்பத்தில் நடக்கும் எல்லா காரியங் களுக்கும் தங்கள் அறிவுரைப் படி தான் செயல்பட்டு, பரிகாரம் செய்து நிம்மதியாக இருக்கிறேன். இப்போது என் கணவரின் நிலை எனக்கு மனக்கஷ்டமாகவும் பயமாகவும் இருக்கிறது. கடந்த சில மாதமாக என் கணவருக்கு வேலை போய்விட்டது. மீண்டும் வேலை, வருமானம் எப்போது கிடைக்கும்? காளியம்மனுக்கு தீ மதிக்கப் போய் அதில் தவறிவீழ்ந்து உடல் முழுவதும் தீக்காயமாகி விட்டது எதிர்காலம் எப்படி?

விஜயராகவன் மகர லக்னம், மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். விரதத்தை முறையாகக் கடைப்பிடிக்காததால் அகினியில் விழுந்து தீக்காயம் ஆகிவிட்டது. சேலம் கோட்டை மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வலம்வந்து வழிபடவும். மாரியம்மனே மனமிரங்கி அருள்புரிந்து நல்ல வழி காட்டுவாள். முன்னதாக குலதெய்வ வழிபாடு முக்கியமானது.

ப் செல்வம், குரோம்பேட்டை.

எனக்கு வயது 76 நல்லது கெட்டது மாறிமாறி நடக்கிறது நடக்கும் திசை எப்படியிருக்கும்?

மீன லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம், ராகு திசை நடக்கிறது. வயது முதிர்வு காரணமாக உடல்தளர்வு சோர்வு இருந்தா லும், 79 வயதுவரை ஆயுள் தீர்க்கம் உண்டு. வடக்குப் பார்த்த அம்மனுக்கு வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.

ப் பி சண்முக சுந்தரம், சங்கரன்கோவில்.

எனக்கு பல வருடங்களாக சுகர் உள்ளது மருத்துவர்கள் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார்கள். கட்டாயம் எடுக்க வேண்டுமா? மேலும் காலில் அடிக்கடி புண் ஏற்படுகிறது. இடுப்பு- மூட்டுவலியும் உள்ளது.

சுகர் இருந்தால் ஒன்றைத் தொட்டு ஒன்று ஏதாவது வந்து படுத்தும். டாக்டர் அறிவுரைப்படி செயல்படுங்கள். இதற்கு ஜாதகம் பார்க்கவேண்டிய அவசிய மில்லை.

ப் தீபா, பண்ருட்டி.

எங்கள் குடும்பத்தில் நான்கு பெண்கள். எல்லாருக்கும் திருமணமாகி விட்டது. எனக்கு மட்டும் திருமணமாகி ஒன்னரை வருடத்தில் விவகாரத்தாகி, ஆண் குழந்தையுடன் பிரிந்துவந்து பெற்றோரு டன் இருக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு என் தகப்பனார் இறந்துவிட்டார். அனாதைகளாக அவதிப்படுகிறோம் ஒரு ஆண்துணை வேண்டும். மறுமணமாகுமா? எப்போதும்?

34 வயது நடக்கிறது. உங்களுக்கும் குழந்தைக்கும் அவசியம் ஒரு பாதுகாப்பு வேண்டும். அந்தப் பாதுகாப்பு கடைசிவரை நல்ல காவலாகவும் துணையாகவும் அமையவேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் காமோகஷ்ண ஹோமமும் புனர்விவாக ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளவும். வரும் கணவருக்கும் அது மறுமணமாக இருக்கும். தந்தை இறப்புக்கும் மறுமணத்துக்கும் கணக்கில்லை.