● டி.கே. குமார், கோவை.
ஆட்டோமொபைல் டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். உயர்ந்த நிலைக்கு வரமுடியவில்லை. திருமணமும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன?
45 வயது முடிந்து 46 வயது ஆரம்பம். பூர நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் ராகுவும் செவ்வாயும் சேர்ந்திருக்க, லக்னாதிபதி குரு 2-ல் நீசம். ராசிநாதன் சூரியன் ராசிக்கு 8-ல் மறைவு. அதனால் வாழ்க்கையில் மேன்மை இல்லை. மறுமணம் அல்லது தொழில் உயர்வுக்கும்- பொருளாதார வளர்ச்சிக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு சூலினிதுர்க்கா ஹோமம் உட்பட சுமார் இருபது ஹோமம் செய்யவும். செல்: 99942 74067. இதுதான் பரிகாரம்.
● பி. தேவேந்திரன், சென்னை.
தங்களை நேரில் பார்த்தாலே என் பாவம் தீர்ந்துவிடும் என்று தங்களை சந்திக்கத் துடிக்கிறேன். ஊழ்வினை தடுக்கிறது. "பாலஜோதிடம்' புத்தகம் கையில் காசு இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது முதலில் படிப்பது கேள்வி- பதிலும், ராசிபலனும்தான். அதைப்படித்தே பாதி ஜோதிடம் கற்றுக்கொண்டேன். எனக்கு அட்டமச்சனியுடன் குரு தசையில் ராகு புக்தி. அவதிப்படுகிறேன். மகனால் நிம்மதி இல்லை. கவலை, கடன், கஷ்டம். அடுத்துவரும் சனிதசை லாப விரயாதிபதி 2-ல் நீசம். கோடீஸ்வரன் ஆகணும்- குபேரன் ஆகணும் என்று எண்ணவில்லை. இந்த சமுதாயத்திலே நல்லவனாக வாழ்ந்து மற்றவர்களுக்கு என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்தால் போதும். மகனுக்கு மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். ராகு தசை நடப்பு. கல்லூரியில் பி.ஈ., 3-ஆவது ஆண்டு படிக்கிறான். ஒன்பது பாடத்தில் அரியர்ஸ். தாய் இல்லை. நீங்களே தாயும் தந்தையுமாக இருந்து வழிநடத்த வேண்டும்.
உங்கள் பிரச்சினைகள் தீரவும், மகனின் படிப்பு மேன்மைக்கும், கடன் நிவர்த்திக்கும், வருமானம் பெருகவும், தொழில் வளமைக்கும் அக்னி காரியம்தான் பரிகாரம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் இருபது வகையான ஹோமம் செய்து நீங்களும் மகனும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செலவு ஆகும். கடனோடு கடனாக செய்யத்தான் வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டு மேஜர் ஆபரேஷன், உடனே செய்ய வேண்டிய கட்டம் என்றால் என்ன செய்வீர்கள்?
அதுபோல குடும்ப சாபதோஷம் விலகி சந்தோஷம் ஏற்பட நம்பிக்கையோடு ஹோமம் செய்யுங்கள். செல்: 99942 74067-ல் பேசவும். கிரக தோஷமும் விலகும்.
● ராஜாங்கம், வேலூர்.
எல்லாரின் வினைகளையும் கஷ்டங்களையும் போக்க எல்லாருக்கும் ஹோமம் செய்யும்படி எழுதுகிறீர்களே! அதனால் பயன் உண்டா? செலவு செய்ய வசதியில்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்ததும் சடலத்தை என்ன செய்கிறார்கள்? ஒன்று பூமியில் புதைக்கிறார்கள் அல்லது நெருப்பில் (அக்னியில்) எரிக்கிறார்கள். இந்து மதத்தில் மட்டும்தான் எரிப்பது சம்பிரதாயம். கிறித்துவ- இஸ்லாமிய மதங்களில் புதைப்பது சம்பிரதாயம். சமணர்கள் எரிப்பதுமில்லை; புதைப்பதுமில்லை. ஊர்க்கோடியில் காக்கையும் கழுகும், நாயும் நரியும் உணவாக எடுத்துக்கொள்ளும்படி சடலத்தை வீசிவிடுவார்கள். ஒரு கோவில் கும்பாபிஷேகம் செய்வதென்றாலும், வீட்டுக்கு கிரகப் பிரவேசம் என்றாலும், திருமணம் செய்யவும், அக்னி காரியம் (ஹோமம்) செய்வது இந்து சம்பிரதாயம். பஞ்சபூதத்தில்தான் (நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம்) மனிதப் பிறப்பும் இருக்கிறது; இந்த பூமியும் இயங்குகிறது. மார்கழி கடைசியில் வேண்டாத பொருட்களை எரித்து சாம்பலாக்கி தை மாதப்பிறப்பை வரவேற்பது வழக்கம். (போகிப்பண்டிகை). அதேபோல நமது வினைப்பயன்களும் சாபதோஷங்களும் கடலில் நீராடுவதாலும் (நீர்), ஹோமம் செய்வதாலும் (அக்னி) போய்விடும். ஹோமம் செய்து கலசம் வைத்து அந்த நீரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அபிஷேகம் செய்வதால் தோஷம் விலகும். துணியோடு பிணி போகும் என்ற மாதிரி ஈர உடைகளை தானம் செய்ய வேண்டும். கம்பத்தில் ஒரு எஸ்டேட் அதிபர் குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன்.
படிப்பில் மிகமிக கெட்டிக்காரன்; புத்திசாலி. அடுத்த வருடப் பாடத்தை இந்த வருட லீவில் படிப்பான். ஆசிரியர்களே அவனிடம் சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்வார்கள். அந்தக் குடும்பத்தில் தாய், தந்தை, மகள் மூவருக்கும் சமராகு தசை. திடீரென்று மகன் (+2 படித்தவன்) வாகன விபத்தில் இறந்துவிட்டான். அக்காலம் எனது குருநாதர் பள்ளத்தூர் அய்யாக்குருக்கள் (சிவாச்சாரியார்) இருந்தார். அவரிடம் சூலினி துர்க்கா ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும், சந்தான கணபதி ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்ததும் மறுபடியும் அந்தத் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனும் இப்போது வளர்ந்து டாக்டர் படிப்பு படித்து பணிபுரிகிறான். அதாவது இறந்த மகன் டாக்டராக ஆசைப்பட்டதால், அவன் தம்பியை டாக்டராக்கிவிட்டார்கள். இப்படி ஹோமத்தில் சிறப்புக்கு பல உதாரணங்கள் உண்டு. நம்பிக்கையோடு செய்யவேண்டும். செலவு ஆகுமே என்று சிந்திக்கக்கூடாது. அதேபோல சிங்கப்பூரில் எனக்கு தெரிந்த அய்யர் குடும்பம். அந்த அம்மாளுக்கு கேன்சர். குருநாதர் சந்நிதியில் மிருத்யுஞ்சமாலா மந்திர ஹோமமும், தன்வந்திரி- நவகிரகம்- ஆயுஷ் ஹோமமும் செய்து குடும்பத்தாருக்கு அபிஷேகம் செய்தோம். அவருக்கு நோய் பூரண குணமாகி சௌக்கியமாக இருக்கிறார். இரண்டு பையன்கள். திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
● பானுமதி, சேலம்.
திருமணப்பொருத்தம் பார்ப்பது அவசியமா?
திருமணத்தில் கர்ப்ப நிச்சயம், கந்தர்வத் திருமணம், இரு நியமனம், குரு வீட்டார் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணம், தெய்வ சந்நிதியில் உத்தரவு, சுயம்வரம், முறைப்பெண்ணைத் தூக்கிச்சென்று திருமணம் செய்வது, பலவந்தத் திருமணம் (ராக்ஷஸ திருமணம்) என்று எட்டுவகை உண்டு. இப்போதும் விருதுநகர் பக்கம் குறிப்பிட்ட நாளில் பெண் வீட்டாரும் ஆண் வீட்டாரும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துவந்து சுயம்வரம் நடத்தி திருமணம் நிச்சயம் செய்வார்கள். கந்தர்வத் திருமணம் என்பது தற்காலம் காதல் திருமணம். இவற்றுக்கு ஜாதகப்பொருத்தம் அவசியமில்லை. திருமணத்தடை விலக ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.
● திருமதி பாலகிருஷ்ணன், இராஜபாளையம்.
இதுவரை எந்த யோகமும் இல்லை. கணவருடன் வெளிநாடு சென்றுள்ளேன். கடினமாக உள்ளது. யோகம் உண்டா?
வெளிநாடு போயிருப்பதே ஒரு யோகம் தானே! பிறகு ஏன் எந்த யோகமும் இல்லை என்கிறீர்கள்! நேரம் வரும்போது யோகம் வரும்.
● மா. விக்னேஷ், மேலக்கடையநல்லுர்.
அரசு வேலை கிடைக்குமா? அரசுத் தேர்வு எழுதியுள்ளேன். பிஸிகலில் செலக்ட் ஆவதற்குப் பரிகாரம் உண்டா?
பிஸிகல் டெஸ்டில் செலக்ட்டாகப் பரிகாரம் உடம்பை வளர்க்க வேண்டியதே! (எடை- பாடி டெவலப்மென்ட்). தனுசு லக்னத்தில் 10-ல் செவ்வாய், ராகு இருப்பது அரசு வேலைக்குத் தடை. இருந்தாலும் நம்பிக்கையோடு முயற்சி செய்ய வேண்டும்.
● பார்த்தசாரதி, புதுச்சேரி.
எனக்கு தாய்- தநதையில்லை; வேலையும் இல்லை; வருமானமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?
அப்படியென்றால் எப்படி சாப்பாடு செலவு செய்கிறீர்கள்? ரூம் வாடகை எப்படிக் கொடுக்கிறீர்கள்? 46 வயதுவரை எப்படி நாள் ஓடிது?
● எஸ். கருப்பசாமி, மேலக்கடையநல்லூர்.
எனக்கு 36 வயது நடக்கிறது. நான் பூக்கட்டும் தொழில் செய்கிறேன். உடல் ஊனமுற்றவன். திருமண ஆகவில்லை. திருமணம் நடக்குமா? இதுவரை எந்த யோகப்பலனும் இல்லை. பரிகாரம் உண்டா?
கன்னியா லக்னம். அதில் சுக்கிரன் நீசம். 2-ல் சனி. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 9-ல் கேது, செவ்வாய். பூர்வ புண்ணிய தோஷம் உண்டு. கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை சனிக்கிழமைதோறும் வழிபடுங்கள். (19 சனிக்கிழமை). அத்துடன் அமாவாசையிலும் வழிபடவும். உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.