ராம்குமார், ஆவடி.
என் மகன் மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் மூன்று ஆண்டுகளாகத் தள்ளிப்போகிறது. குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முறையாகச் செய்கிறோம். வேறு பரிகாரம் தேவையா?
மகனுக்கு மூல நட்சத்திரம் 2-ஆம் பாதம், தனுசு ராசி. மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் தடைப்படவில்லை. 7-ல் சுக்கிரன் இருப்பது தோஷம். 7-க்குடைய புதன் 8-ல் மறைவது தோஷம். ராசியாதிபதியும் லக்னாதிபதியுமான குரு 6-ல் ரிஷபத்தில் மறைவது தோஷம். எனவே திருமணம் தாமதமாகிறது. அதனால் கந்தர்வ ராஜஹோமம் செய்து மகனுக்கு கலச அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சந்திர தசையும் ஏழரைச்சனியும் சந்திப்பது ஆகாது. அதனால் சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்வதோடு, திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரவேண்டும். மேலும் ஏழரைச்சனி முடியும்வரை 33 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை அதில் நனைத்து தீபமேற்றி வழிபடவேண்டும்.
க. சிதம்பரம், ஈரோடு.
எனது மகனும் மருமகளும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கடைசிவரை ஒற்றுமை யாக இருப்பார்களா? பெற்றோரை அன்புடன் கவனிப்பார்களா? அரசு வேலை கிடைக்குமா?
மகன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி.மருமகள் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. மகனின் மிதுன ராசிநாதன் புதன். மருமகள் கன்னி லக்னம். இதன் அதிபதி புதன். ஒருவரின் ராசிநாதன் மற்றவருக்கு லக்னாதிபதியாக அமைவதால் இருவரும் அன்போடும் ஒற்றுமையாகவும் இணைந்து வாழ்வார்கள். மகனுக்கு சனி தசையும் மருமகளுக்கு சந்திர தசையும் நடப்பதால் சமதசைக் குற்றமும் இல்லை. அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு.
வி. ராஜு, திருவண்ணாமலை.
என் மகன் எம்.டெக் முடித்து ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறான். மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டபடியால் வேலை போய்விடுமோ என்ற கவலை உள்ளது. இதே கல்லூரியில் வேலை தொடருமா? வேறு நல்ல வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?
மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். ஏழரைச்சனி நடக்கிறது. லக்னத் திலும் ராசியிலும் சனி இருக்கிறார். அதனால் உத்தியோகம், திருமணம் இரண்டிலும் முன்னேற்றம் தடையாகும்; தாமதமாகும். 2021 மார்ச் முதல் சந்திர தசை ஆரம்பம். ஏழரைச்சனி 2023 வரை நடக்கும். இந்த சந்திப்பு (ஏழரைச்சனி யில் சந்திர தசை) மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் ஒரு சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து, ருத்ர ஜெபப் பாராயணம் செய்து, சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவேண்டும். இவ்வாண்டு உத்தியோக ரீதியாக இடமாற்றமும் வேறு வேலையும் கிடைக்கலாம். 33 வயதுக்குமேல் திருமணம் கூடும். அக்காலம் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்வது அவசியம்.
எஸ். பாலு, திருநெல்வேலி.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? நிரந்தரமான தொழில், வருமானம் எப்போது கிட்டும்?
மகன் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னம். 29 வயது நடக்கிறது. 4-ல் உள்ள சனி லக்னத்தைப் பார்ப்பதால் (ராகு தசை நடக்கிறது) 33 வயது முதல் 35-க்குள் திருமணம் நடக்கலாம்.
கே. செல்வி, சேலம்.
திருமணம் எப்போது நடக்கும்? நிரந்தர வேலை எப்போது கிட்டும்?
ஏழரைச்சனி முடியவேண்டும். பிறகுதான் நல்ல வேலை, சம்பாத்தியம், திருமணம் எல்லாம் அமையும்.
கல்யாணி, ஆம்பூர்.
நான் எம்.ஏ., பி.எட்., முடித்துள்ளேன். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணமாகும்?
சதய நட்சத் திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். லக்னத் துக்கு 2-ல் சனி. சந்திரனுக்கு 12-ல் ராகு. 33 வயதில் திருமண யோகம் வரும். சனி தசை தனது புக்தி 2021 செப்டம்பர்வரை நடைபெறும். அதனால் அரசு வேலை தாமதப்படலாம். அரசு வேலைக்கும், நல்ல கணவன் அமையவும் பார்வதி சுயம்வர ஹோமம் உட்பட சில ஹோமங்கள் செய்தால் உடனே இருவகையிலும் நல்ல பலன் கிடைக்கும்.
எம். சந்திரிகா, கும்பகோணம்.
உங்களை வணங்கும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி. உங்களைப்போல ஒரு ஜோதிடர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். என் இரண்டு பெண் பிள்ளைகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. கணவரின் குடிப்பழக்கம் எப்போது மாறும்?
உங்களுக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். புதன் தசை தனது புக்தி. கணவர் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னம். மகள் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். இன்னொரு மகள் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னம். நீங்களும் கணவரும் ஒரே லக்னம். பிள்ளை கள் இருவரும் ஒரே லக்னம். அதனால் குடும்பத் தில் பிரச்சினைகள் இருந்தாலும் பிரிவுக்கு இடமில்லை. கணவருக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டதால் இனிமேல் படிப்படி யாக குடிப்பழக்கமும் மாறிவிடும். கணவர் திருந்துவதற்கு நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கைநல்லூர் சித்தர் ஜீவ சமாதியில் பௌர்ணமி, அமாவாசைதோறும் நெய்தீபமேற்றி மனமுருகப் பிரார்த்தனை செய்யவும். பிள்ளைகள் எதிர்காலம் பிரகாசமாக அமையும்.
கே. ராஜசேகரன், வாலாஜா.
என் மகள்கள் ஜாதகப்படி இருவருக்கும் எப்போது அரசுப்பணி கிடைக்கும்?
2022-ல் அமையலாம். ப் கே. பாலமுருகன், பாலக்கோடு. பொருளாதாரச் சிக்கலி-ருந்து விடுபட வழிபடும் முறை, பரிகாரம் கூறவும். பாலக்காடு அருகிலுள்ள மீன்குளத்தி அம்மனை தொடர்ந்து வழிபடவும். இது எளிய பரிகாரம்! அடுத்து கையில் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு சொர்ணாகர்ஷண பைரவர், விஜயலட்சுமி, அஷ்டலட்சுமி, குபேர லட்சுமி முதலிய 23 வகையான ஹோமம் செய்யலாம். பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு, கடன் நிவர்த்தி, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் ஆகிய எல்லா நலன் களும் உண்டாகும்.