ப் த. குமார், வேலூர்.
நான் தற்பொழுது "இராணி கேட்டரிங் சர்வீஸ்' என்று என் மகளின் பெயரில் தொழில் நடத்திவருகிறேன். அத்துடன் குடிதண்ணீர் தயாரித்து விநியோகம் செய்ய லாமா? அட்டமாதிபதி தசை நடத்துவதால் யோசித்து செய்ய வேண்டும் என்கிறார்கள். என்பெயரில் செய்யலாமா? ஒரு வருடம் கழித்து என் மகள் பேரில் செய்யலாமா? அட்டமாதிபதி தசை, ஆறுக்குடைய தசை என்று சாப்பிடாமல் தூங்காமல் எதையும் செய்யாமல் இருக்கிறோமா?
அதையதை அந்தந்த காலகட்டத்தில் செய்வதுதான் கடமை. கடமையை நிறைவேற்றுவதில் கண்ணியம், கட்டுப்பாடு இருக்கவேண்டும். அதுதான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! சூரியனும் சந்திரனும் பாரபட்சம் பார்த்து உதிக்காமல் இருக்கிறார் களா? தங்கள் கடமையைச் செய்யாமல் இருக்கிறார்களா? காலமறிந்து கடமையைச் செய்கிறவர்களுக்கு காலமே கடவுளாக இருந்து காத்து ரட்சித்துப் பலன்தரும்! சோம்பேறிகளுக்கும் நம்பிக்கைத் துரோகிகளுக்கும் காலம் எப்போதும் கடைசிவரை துணை நிற்காது. விவசாயி மழைக்காகக் காத்திருக்காமல், மழை வருமென்று நம்பிக்கையோடு கட்டாந்தரையை உழுது பண்படுத்துவதுபோல, உங்கள் கடமைகளை கால
ப் த. குமார், வேலூர்.
நான் தற்பொழுது "இராணி கேட்டரிங் சர்வீஸ்' என்று என் மகளின் பெயரில் தொழில் நடத்திவருகிறேன். அத்துடன் குடிதண்ணீர் தயாரித்து விநியோகம் செய்ய லாமா? அட்டமாதிபதி தசை நடத்துவதால் யோசித்து செய்ய வேண்டும் என்கிறார்கள். என்பெயரில் செய்யலாமா? ஒரு வருடம் கழித்து என் மகள் பேரில் செய்யலாமா? அட்டமாதிபதி தசை, ஆறுக்குடைய தசை என்று சாப்பிடாமல் தூங்காமல் எதையும் செய்யாமல் இருக்கிறோமா?
அதையதை அந்தந்த காலகட்டத்தில் செய்வதுதான் கடமை. கடமையை நிறைவேற்றுவதில் கண்ணியம், கட்டுப்பாடு இருக்கவேண்டும். அதுதான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! சூரியனும் சந்திரனும் பாரபட்சம் பார்த்து உதிக்காமல் இருக்கிறார் களா? தங்கள் கடமையைச் செய்யாமல் இருக்கிறார்களா? காலமறிந்து கடமையைச் செய்கிறவர்களுக்கு காலமே கடவுளாக இருந்து காத்து ரட்சித்துப் பலன்தரும்! சோம்பேறிகளுக்கும் நம்பிக்கைத் துரோகிகளுக்கும் காலம் எப்போதும் கடைசிவரை துணை நிற்காது. விவசாயி மழைக்காகக் காத்திருக்காமல், மழை வருமென்று நம்பிக்கையோடு கட்டாந்தரையை உழுது பண்படுத்துவதுபோல, உங்கள் கடமைகளை காலத்துக்காகக் காத்திருக்காமல் செயல்படுத்துங்கள். உடனடியாகப் பலன்தராவிட்டாலும் காலப்போக்கில் அது பயன்படும்; பலன்தரும். வீண்போகாது! அதை விளக்குவதுதான் ஜாதகமும் கிரகங்களும் தசாபுக்திகளும்! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வெளி) என்ற பஞ்சபூதங்கள்தான் நம்மையும் இந்த உலகத்தையும் வழிநடத்துகிறது. இந்த சரீரமும் பஞ்சபூதங்களால் உருவானதுதான். சரீரத்தை இயக்குவதும் பஞ்சபூதங்கள்தான்! அதற்கு ஜாதி, சமயம், மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது! உங்கள்பேரில் தொழில்செய்தாலும் சரி; மகள்பேரில் தொழில் செய்தாலும் சரிலி நீங்கள்தான் உரிமையாளர். அதிர்ஷ்டமான எண்ணில் தொழில் பெயர் வைக்கவேண்டும் என்பதே முக்கியமானது. குறிப்பாக 1, 3, 5, 6 ஆகிய எண்களில் அமையும்படி தொழில் ஸ்தாபனம் அல்லது "பிராண்ட்' பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும். 4, 7, 8-ல் வைக்கக்கூடாது. 4-ம், 7-ம் கடுமையான உழைப்பு- அற்ப ஊதியமுமாக அமையும். 8- ஏமாற்றம், நஷ்டம் தரும். பாலைவனத்தில் பெய்யும் மழைக்குச் சமமாக அமையும்!
ப் ஆர். கிருஷ்ணன், கோவை.
பல வருடங்களாக மனைவியின் பிரிவு. பலவிதமான சோதனைகள், வேதனைகள், பொருள் இழப்பு. இவை அனைத்தும் ஏன்? எப்போது வாழ்க்கையில் சந்தோஷம் வரும்?
பூர நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னம். நடப்பு வயது 47. ராகு தசை நடக்கும். ஏழரைச்சனியில் ராகு தசை சந்திப்பு. உங்களிடம் ஏதோ ஒரு பலவீ னம். அது உங்கள் வாழ்க்கை யைப் புரட்டிப் போட்டு விட்டது. ஒரு நாள் எர்ணா குளம் அருகில் சோட்டானிக் கரை பகவதியம்மன் கோவிலில் தங்கி பிரார்த் தனை செய்யுங்கள். அத்துடன் உங்கள் பழக்க வழக்கத்தில் உள்ள பலவீனமான செயலை அறவே விட்டொழியுங்கள். பிரிந்த மனைவி திருந்தி வந்தா லும் வராவிட்டாலும் வேறொரு குடும்பம் அமையும். அதைக் காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
ப் கே. வனிதா, சேலம்.
என் ஜாதகத்தில் அம்ச யோகம் உள்ளதா? குரு, சந்திரன் கஜகேசரி யோகத் தால் ஜாதகத்தில் உள்ள மற்ற அவயோகங்கள் பலமிழந்து தோஷத்தை மட்டுப் படுத்துமா? சனி தசை எப்படியிருக்கும்?
அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. பிறக்கும்போது செவ்வாய் தசை. நாலாவது தசை சனி தசை நல்லது செய்யாது! சனி ராசிநாதன் என்பதால் ஆயுள் குற்றமில்லை. ஆனால் யோகம் செய்யாது. லக்னத்தில் குரு உச்சம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்ப்பது யோகம். கஜகேசரி யோகத்தால் எந்த அவயோகமும் மட்டுப்படாது. 2-ல் சனி, ராகு இருப்பதும், 8-ல் கேது இருப்பதும் கடுமையான தோஷம்! ஆனால் 9-க்குடைய வர் 9-ஆம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால், மழைநீர் தலையில் படாதபடி குடைபிடித்துப் போவதுபோல பாதுகாப்பு; அவ்வளவுதான்.
ப் மகேஷ், கோவை.
எனக்கு கேது தசையில் ராகு புக்தி. என் மகள் பாமினிக்கு ராகு தசை. பேரன் பிரவீனுக்கு சந்திர தசை, குரு புக்தி. சம ராகு. கெடுதல் நடக்குமா?
பேரனுக்கு கன்னி ராசி, ஏழரைச்சனி முடிந்துவிட்டது. பிரச்சினை இல்லை. உங்களுக்கும் பாமினிக்கும் சம ராகு தோஷம்தான். அதற்காக கோவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுகேஷ் வசம் ஹோமம் செய்துகொண்ட தால் பாதிக்காது. வேறு எந்த பரிகாரமும் வேண்டாம். கற்பனை செய்துகொண்டு கவலைப்பட வேண்டாம்.
ப் ஏ. ருக்மணிதேவி, கோவை-24.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பேரன் ஹரிஹரனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
மகன் சோமசுந்தரம் கும்ப ராசி சதய நட்சத்திரம், சிம்ம லக்னம். சனி தசை, ராகு புக்தி முடிந்து குரு புக்தி ஆரம்பம். தை மாதம் திருமணம் ஆகும். முன்னதாக அவர் ஜென்ம நட்சத்திரமாகிய சதய நட்சத் திரத்தன்று அன்று கோவை சேரன் மாநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்தர்வராஜ ஹோமம் செய்து சோமசுந்தரத்துக்கு கலச அபிஷேகம் செய்யவும். அதன்பிறகு தை மாதத்தில் திருமணம் கூடும். பேரன் ஹரிஹரன் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னம். அக்டோபரில் 13 வயது முடிந்து 14 ஆரம்பம். நாலரை வயது முதல் சனி தசை. ஆயுள், ஆரோக்கியம், படிப்பு, எதிர்காலம் சிறப்பாக அமையும். எதிர்காலத்தில் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படிக்கலாம்.
ப் வினோத்குமார், வேளச்சேரி.
கடந்த ஓராண்டு காலமாக அலர்ஜி யால் அவதிப்படுகிறேன். எப்போது குணமாகும்? ஆயுள் எப்படி உள்ளது?
ராகு தசை நடப்பதால் தொந்தரவு இருக்கும். விருச்சிக லக்னம். 9-ல் குரு உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதால் எம பயமில்லை. ஆயுள் குற்றம் வராது. ஒருமுறை திருவக்கரை சென்று வக்ர காளியம்மனுக்கு அபிஷேகம் செய்ய வும். திண்டுக்கல்- கரூர் பாதையில் தாடிக்கொம்பு சென்ற சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் தன்வந்திரி பகவானுக் கும் ஒரு அபிஷேக பூஜை செய்யவும்.