Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

/idhalgal/balajothidam/jothidam-answers-133

ப் சுகவனம், பென்னாகரம்.

ஐயா, என் பேரனுக்கு வயது 28 ஆகிறது. எப்போது திருமணம் நடக்கும்? எதனால் தடைப்படுகிறது? எனது எதிர்காலமும் ஆயுளும் எப்படி இருக்கும் ?

Advertisment

பேரன் மஞ்சுநாத்துக்கு 2021 டிசம்பரில் 28 வயது முடியும். சிம்ம லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. ஏழரைச்சனியும் குருதசையில் சந்திர புக்தியும் நடப்பது ஆகாது. 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகுதான் திருமணயோகம். அதுவரை திங்கட்கிழமைதோறும் சிவலி-ங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவும். உங்களுக்கு சித்திரை நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்கனம். ஆயுள்காரகன் சனி ஆட்சி. ஆயுள் ஸ்தானாதிபதி புதன் தன் ஸ்தானத்துக்கு ஒன்பதில் திரிகோணம்- லக்னாதிபதி செவ்வாயோடு சம்பந்தம். ஒன்பதில் குரு உச்சம்பெற்று லக்னத் தைப் பார்க்கிறார். 93 வயது வரை ஆயுள் தீர்க்கம். இடையில் பிள்ளைகள், பேரன்- பேத்திகள் ஜாதகரீதியாக தாத்தாவுக்கு கண்டம் தெரிந்தால் பரிகாரம் செய்துகொள்ளவும். சந்தர்ப்பம் கிடைத்தால் திருக்கடையூர் சென்று ஆயுள்

ப் சுகவனம், பென்னாகரம்.

ஐயா, என் பேரனுக்கு வயது 28 ஆகிறது. எப்போது திருமணம் நடக்கும்? எதனால் தடைப்படுகிறது? எனது எதிர்காலமும் ஆயுளும் எப்படி இருக்கும் ?

Advertisment

பேரன் மஞ்சுநாத்துக்கு 2021 டிசம்பரில் 28 வயது முடியும். சிம்ம லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. ஏழரைச்சனியும் குருதசையில் சந்திர புக்தியும் நடப்பது ஆகாது. 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகுதான் திருமணயோகம். அதுவரை திங்கட்கிழமைதோறும் சிவலி-ங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்யவும். உங்களுக்கு சித்திரை நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்கனம். ஆயுள்காரகன் சனி ஆட்சி. ஆயுள் ஸ்தானாதிபதி புதன் தன் ஸ்தானத்துக்கு ஒன்பதில் திரிகோணம்- லக்னாதிபதி செவ்வாயோடு சம்பந்தம். ஒன்பதில் குரு உச்சம்பெற்று லக்னத் தைப் பார்க்கிறார். 93 வயது வரை ஆயுள் தீர்க்கம். இடையில் பிள்ளைகள், பேரன்- பேத்திகள் ஜாதகரீதியாக தாத்தாவுக்கு கண்டம் தெரிந்தால் பரிகாரம் செய்துகொள்ளவும். சந்தர்ப்பம் கிடைத்தால் திருக்கடையூர் சென்று ஆயுள் ஹோமம் செய்துகொள்ளவும்.

t

ப் ஜெயா, செங்கல்பட்டு.

வணக்கம் ஐயா! பேரன் ஜெகதீஷ் ஜாதகம் அனுப்பியுள்ளேன். ஜாதகத்தில் தோஷம் ஏதேனும் உள்ளதா? குரு வக்ரமாகி எட்டில் உள்ளதால் ஏதாவது கெடுதல் உண்டா?

9-க்குடையவர் குரு எட்டில் மறைவது குற்றம்தான். சூரியன் உச்சம் என்பதால் ஆயுள் குற்றமில்லை. அதேசமயம் குருவை லக்னாதிபதி செவ்வாய் பார்க்கிறார். எதிர்கால வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இடிபோலதான் தெரியும். ஒன்பதில் சனி, கேது; அவர்களை செவ்வாய் பார்ப்பது குற்றம். 2023 ஜனவரி வரை சூரியதசை கவனமாக இருக்கவும். கும்பகோணம் அருகில் சூரியனார் கோவில் சென்று நவகிரகத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை செய்யவும்.

ப் ராம்குமார், தாராபுரம்.

என் மகள்களின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் அரசுவேலை வாய்ப்புள்ளதா? பெரிய மகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்யலாமா? சின்ன மகள் மேற்படிப்பு எந்தத் துறையில் படிக்கவைக்கலாம்?

வைசாலி- திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னம். 10-ல் 9-க்குடைய செவ்வாய் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்குடைய குருவை சூரியன் நீசபங்க ராஜயோகம் பெற்றுப் பார்ப்பதால் அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. 2021 நவம்பர்வரை ராகுதசை சுக்கிரபுக்தி முடிந்தபிறகு, சூரியபுக்தியில் அரசுவேலை எதிர்பார்க்கலாம். இரண்டில் சனி நீசம். மகர ராசியில் கேதுவும், ராசிக்கு ஏழில் ராகுவும் இருப்பதால் நாகதோஷம். 25 வயதுமுதல் 27 வயதிற்குள் திருமண யோகம் அமையும். பூஜாவுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். பத்தில் செவ்வாய் உச்சம். பத்தாமிடத்தை 9-க்குடைய குரு பார்க்கிறார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் அல்லது எம்.எஸ்.சி படிக்கலாம். உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். அதில் லக்னாதிபதி செவ்வாய் வர்க்கோத்தமம் பெற்று உச்சமாக இருப்பதால் பூஜாவுக்கும் அரசுவேலை அமையும்.

ப் கணேசன், அரிசிபாளையம்.

எனது வழிகாட்டி ஜோதிடர் ஐயா அவர்களே, வணக்கம்! எனது அண்ணன் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எந்த வயதில் திருமணம் நடைபெறும்? எந்த பெண் ஜாதகமும் அமையவில்லை. பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.

பொன் காமேஸ்வரனுக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னம். ராசிக்கு 2-ல் சனியும் ராகுவும்; அதற்கு 7-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், கேதுவும் இருப்பது களஸ்திர தோஷம். காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் செய்து பொன் காமேஷ்வரனுக்கு கலச அபிஷேகம் செய்தால் நடப்பு 33 வயதில் திருமணம் கைகூடும். இல்லாவிட்டால் 40 வயதில் திருமணம் நடக்கும்.

ப் மணிவாசகம், மதுரை.

ஜாதகப் பலனைத் தெளிவாகக் கூற எந்த நூல் உதவும்? ராசியை வைத்து பலன் கூறுகிறோம். அம்சம் எதற்கு பயன்படும்? பதில் கூறுங்கள் ஐயா.

ஒரு ராசிக்கட்டத்தில் இரண்டேகால் நட்சத்திரம், 9 பாதங்கள் உள்ளன. அதில் எந்த நட்சத்திரப் பாதம் என்பதை அம்சம்தான் நிர்ணயிக்கும். அம்சத்தில் நீசம், பகையாக இருந்தால் அந்த கிரகத்தின் நன்மைகள் பாதிக்கப்படும். அந்த கிரகத்தின் ஆதிபத்தியம், காரகத்துவம் பாதிக்கப்படும். ஜாதக நூலைப் படிக்க பி.எஸ். பரமசிவம் அவர்கள் எழுதிய ஜோதிடம் ஓர் அறிமுகம் என்ற நூலைப் படிக்கவும். தொடர்புக்கு: டாக்டர் பி.எஸ்.பி. விஜய்பாலா, அலைபேசி: 73586 26538.

ப் எஸ். ஆறுமுகம், பொன்னேரி.

மனைவியின் பேரில் வீடு வாங்க முயற்சிக்கிறேன். என் மனைவியின் சகோதரியும் அவர் கணவரும் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். 19 வருடங்களாக அவர்கள் வீட்டில் வசித்து வீட்டைப் பராமரிக்கிறோம். தற்போது அவர்களுடன் மனவருத்தம் ஏற்பட, எங்களை வெளியேற்ற விரும்புகிறார்கள்.

மகர லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். மேஷ ராசிக்கு எட்டில் சனி வந்ததுமே வீடு மாறியிருக்க வேண்டும். குரு 4-ஆம் இடத்தைப் பார்த்ததால் தள்ளிப்போய்விட்டது. பரவாயில்லை. இப்போது குரு தசை சந்திர புக்தி நடக்கிறது. இதில் வீடு மாறும் சூழ்நிலை வந்துவிடும். அடுத்து வாடகை வீடா, ஒத்தியா, சொந்தமா என்பது உங்கள் பொருளாதாரத்தைப் பொருத்தது. உங்கள் எல்லா கோரிக்கைகளும் விருப்பப்படி நிறைவேற, ஒரு திங்கட்கிழமை திருச்சி- பொன்னமராவதி பாதையில் செவலூர் சென்று பூமிநாதர்கோவி-ல் (வாஸ்து கோவி-ல்) 108 சங்காபிஷேக- ருத்ரஹோமம் செய்து அபிஷேகம் செய்யவும்.

bala280521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe