ப் வி. பரமசிவன், மதுரை.

திருமணத்தடையாக உள்ளது. எப்போது திருமணம் நடக்கும்?

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னம். சனி தசை முடிந்துவிட்டது. அடுத்து வரும் புதன் தசை தனது புக்தியில் திருமணம் கூடும்.

ப் எஸ். ராஜன், திருவள்ளூர்.

Advertisment

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது பேத்தி திருமணம் பற்றிக் கேட்டேன். தங்கள் வாய் முகூர்த்தத்தின் படியே திருமணமாகி- இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மகள் ஜாதகத்தில் ராகு தசை நடப்பதால் கவலையோடிருக்கிறாள். (வசிஷ்டர் வாயால்) ராகு தசை எப்படி இருக்கும் என்று பதில் தர நமஸ்கரிக்கிறேன்.

53 வயது நடக்கிறது. ராகு தசையும் ஏழரைச்சனியும் சேர்வது ஆகாது. ஆபரேஷன், விபத்து, அக்னிபயம் போன்ற பலனைச் சந்திக்கக் கூடும். 4-ல் சுகஸ்தானத் தில் ராகு. ஆகவே சூ-னிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம் முத-ய 18 வகை ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் எந்த ஆபத்தும் அணுகாது. ஆயுள்தீர்க்கமும் ஆரோக்கிய விருத்தியும் உண்டாகும்.

ப் வி. மகாலட்சுமி, தேனி.

Advertisment

தங்கள் பாதங்களுக்கு என் நமஸ்காரங்கள். பல வருடகாலமாக "பாலஜோதிடம்' வாசகியாக இருக்கிறேன். தங்களின் பதில்களும் உதாரணங்களும் ராசிபலனும் பிரம்மிக்க வைக்கின்றன. எல்லாரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் உயர்வாகவும் இருக்கிறது. தங்களின் இந்தத் தொண்டு மேன்மேலும் தொடரவும், தங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கவும் பகவானைப் பிரார்த்திக்கிறேன். தங்களை மூன்றுமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். என் மகன் பி.எச்.டி. செய்கிறான். எப்பொழுது பட்டம் வாங்குவான்? திருமணம், வேலை எப்போது அமையும். செவ்வாய், சனி பார்ப்பதால் காதல் திருமணமா? கலப்புத் திருமணமா? எங்கள் குலத்திலேயே திருமணமாகுமா?

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, மதுரையில் பரவையில் இருந்துகொண்டே தபா-ல் சந்தேகம் கேட்கிறீர்கள். அலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வந்தால் எல்லா விவரமும் விளக்கமும் பரிகாரமும் கூறலாம்.

ப் எம். பெரியசாமி, செங்கல்பட்டு.

எனக்கு ஒரே மகள். அவளை மணம் முடித்துக்கொடுத்தேன். 1999 ஜூலை மாதம் இயற்கை எய்தினாள். 2017 பிப்ரவரியில் மனைவியும் காலமாகிவிட்டாள். மருமகன் மறுமணம் செய்து வெளியூரில் இஞ்சினீயராகப் பணிபுரிகிறார். நானும் பேத்தியும் தனியாக வாழ்ந்து வருகிறோம். என்னுடைய பேத்தி பி.ஈ. முடித்து அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கச் சென்று, அங்கு சில பிரச்சினைகளால் படிப்பை முடிக்கமுடியாமல் திரும்பி வந்து ஆறு மாதமாக என்னுடன் இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் செய்யவேண்டும். எனக்கு 84 வயது. அவள் தாய்க்கு ஏற்பட்ட மரணம் காரணமாக பேத்தி திருமணமே வேண்டாம் என்கிறாள். படிப்பு தொடருமா? என் காலத்துக்குள் திருமணம் செய்துகொடுக்க முடியுமா? என்னுடைய அண்ணன் பத்து ஆண்டுகளாக "பாலஜோதிடம்' படிப்பவர். அவர்தான் தங்களைத் தொடர்புகொள்ளச் சொன்னார்.

பேத்தி கும்ப லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. லக்னத்துக்கு 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது தோஷம். ஆனால் குரு இருப்பது தோஷ நிவர்த்தி. கன்னிச் செவ்வாய் சனியைப் பார்ப்பதும், மீனச் சனி கன்னிச் செவ்வாயைப் பார்ப்பதும் தோஷம். அதனால் தாமதத் திருமணம். நியாயமாக 30 வயதில்தான் திருமணம் செய்யவேண்டும். ஆனால் குரு 7-ல் இருப்பதும், சனி, ராகுவை குரு பார்ப்பதும் நல்லது. அதனால் 27 வயது முடிந்ததும் திருமணம் செய்யலாம். முன்னதாக உடனடியாக பேத்தியின் ஜென்ம நட்சத்திரம் அன்று (ஆயில்யம் அன்று) காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இத்துடன் படிப்பைத் தொடர வாக்கணபதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், மேதாதட்சிணாமூர்த்தி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம், தன்வந்திரி ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும். இதைச் செய்தால் உங்கள் காலத்திலேயே அவருக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

ப் கே. பெருமாள், கும்பகோணம்.

என் மகனுக்கு 36 வயது. திருமணம் எப்போது நடக்கும்? பெரும்பாலும் விவா கரத்தான பெண் அல்லது குழந்தையுள்ள பெண் ஜாதகம்தான் வருகிறது.

மகர லக்னம். 7-ல் சந்திரன் ஆட்சி. சுக்கிரன் 8-ல் மறைவு. 7-ஆம் இடத்துக்கு குரு பார்வையில்லை. பெரும்பாலும் விவாகரத் தான பெண் அல்லது விதவைப் பெண் தான் இவருக்கு முடியும். இதில் மகனது விருப்பத்தையும் தெரிந்துகொண்டு செயல்படவும்.

ப் வி. சாந்தி, ஈரோடு.

எனக்கு எப்போது திருமணம் கூடிவரும்? படிப்பை முடித்துவிட்டேன். வீட்டில் வரன் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளலாமா அல்லது தொடர்ந்து மேலே படிக்கலாமா?

கடக லக்னம், மிதுன ராசி. 21 வயது முடிந்து 22 வயது ஆரம்பம்! செவ்வாய்- சனி பார்வை இருப்பதால் 27 வயதுக்கு மேல்தான் திருமண யோகம். மேற்கொண்டு படிக்கலாம். வேலை பார்க்கலாம்.

ப் ஆர். குமாரி, ஆம்பூர்.

என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனால் குடும்பத்தில் நிம்மதியில்லை. அவன் அப்பாவும் அவன் செயலால் பாதிக்கப்பட்டு வீட்டுக்கே வருவதில்லை. அவனுடன் படிக்கும் பெண்ணைக் காத-ப் பதாகவும், அவளையே மணம் முடிக்கப் போவதாகவும் புண்படுத்துகிறான். அறிவுரை கூறினால் இறந்துவிடுவதாக பயமுறுத்துகிறான். என்ன பரிகாரம்?

கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். 19 வயதுதான் நடக்கிறது. 21 வயதுவரை செவ்வாய் தசை. செவ்வாய் 8-ல் மறைவு. செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை. சனி நீசம்! லக்னத்தில் ராகு. படிப்பும் பாதிக்கும். குணக்கேடான ஜாதகம் மட்டுமல்ல; காவல்துறை நடவடிக்கைக்கும் ஆளாக நேரும். இப்படிப்பட்ட பிள்ளையை வீட்டில் வைத்துப் படிக்கவைப்பதைவிட எங்கேயாவது ஹாஸ்ட-ல் சேர்த்துவிட்டுப் பணம் கட்டலாம். முடிந்தால் ஞாயிற்றுக் கிழமைதோறும் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சிவன் கோவில் நந்தி சந்நிதியில் தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை நெய்விளக்கு ஏற்றலாம்.

ப் ஏ. முருகேசன், சேலம்.

என் மகள் +2 படிக்கிறாள். அவளை இஞ்சினீயரிங் அல்லது ஆசிரியர் அல்லது பேங்க் வேலைக்குப் படிக்கச் சொல்கிறேன். அவள் விஞ்ஞானம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) படிக்கப் போகிறேன் என்கிறாள். என் நிலையோ கஷ்டமான சூழ்நிலை. தினசரி வருமானம் வரவுக்கும் செலவுக்கும் பற்றாக்குறைதான். அவள் விரும்பியபடி படிக்கவைக்க முடியுமா? எனக்கு அரசியல் கட்சியில் சேர வாய்ப்பு வருகிறது. சேரலாமா? என் நண்பர் தான் வாங்கியுள்ள இடத்தில் எனக்கு இரண்டு சென்ட் தருவதாகவும், பணம் மெதுவாகத் தரும்படியும் கூறுகிறார். அந்த இடத்தில் புற்று உருவாகி நாகர் சிலை வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேற்படி இடம் வாங்கலாமா?

உங்களுக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் சூரியனும் புதனும். செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை. நடப்பு கேது தசை! கேது சந்திரன் சாரம் (அஸ்தம்). அதனால் அரசியல் ஈடுபாடு யோகமுண்டு. துணிவாக செயல்பட லாம். கட்சியில் பொறுப்பும் பதவிகளும் கிடைக்கும். உங்கள் நண்பரின் இடத்தில் கோவில்கட்டி வழிபடலாம். ஆனால் குடி யிருக்க முடியாது. மகளுக்கு 24 வயதுவரை சுக்கிர தசை. விரும்பிய படிப்பில் சீட் கிடைத்தால் படிக்கவைக்கலாம். சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.