ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

/idhalgal/balajothidam/jothidam-answers-130

ப் கே. வீரகுமார், வாலாஜாபேட்டை.

என் மகனுக்கு 35 வயது. திருமணம் தடைப்பட்டு வருகிறது. காரணம் தெரியவில்லை. பரிகாரமாக காளஹஸ்தி- ராமேஸ்வரம்- திருச்செந்தூர் போய் வந்தோம். திருமணம் எப்போது கைகூடும்?

குரு தசை, சனி புக்தி. தற்போது அட்ட மச்சனி ஆரம்பம். ஜாதகத்தில் சுக்கிரன் (களஸ்திரகாரகன்) நீசம். 7-க்குடைய சூரியன் (களஸ்திர ஸ்தானாதிபதி) 8-ல் மறைவு. இவர்களுடன் சனி சம்பந்தம். எனவே 37 வயதுக்குமேல் 40 வயதுகூட ஆகலாம்.

y

ப் பி. சரஸ்வதி, சிவகங்கை.

எனக்கும் என் தம்பிக்கும் பார்வைக் கோளாறு இருக்கிறது. இருவரும் கண்ணாடி அணிந்துள்ளோம். நாங்கள் பல கோவில்களுக்கும் வேண்டியுள்ளோம். ஆனால் எந்த இறைவனும் எங்கள்மீது கண் திறக்கவில்லை. எங்கள் பார்வைக் குறைபாடு நீங்குமா?

உங்கள் இருவர் ஜாதகத்திலும் கடுமை யான பூர்வபுண்ணிய தோஷம் உள்ளது. அதனால் முழுமையான நிவர்த்திக்கு இடமில்லை. கண்ணாடி தொடர்ந்து அணியவேண்டும். தம்பிக்கு ஏழரைச்சனி. உங்களுக்கு அட்டமச்சனி முடிந்துவிட்டது. கண்பார்வைக்குறை நீங்க இரண்டு பரிகார ஸ்தலம் எழுதுகிறேன். போய் வரவும். காஞ்சிபுரத்தி-ருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூரம் என்ற ஊரில் கூரத்தாழ் வார் வழிபட்ட பங்கஜவல்- சமேத ஆதிகேச வப் பெருமாளையும் கூரத்தாழ்வாரையும் வழிபடவும். ஞாயிறு, வெள்ளிக்கிழமை விசேஷம். அதேபோல சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர்- மதுரமங்கலம் சென்று ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமான ஸ்ரீஎம்பார் பெருமானையும் சேவிக்கவும். ராமானுஜ

ப் கே. வீரகுமார், வாலாஜாபேட்டை.

என் மகனுக்கு 35 வயது. திருமணம் தடைப்பட்டு வருகிறது. காரணம் தெரியவில்லை. பரிகாரமாக காளஹஸ்தி- ராமேஸ்வரம்- திருச்செந்தூர் போய் வந்தோம். திருமணம் எப்போது கைகூடும்?

குரு தசை, சனி புக்தி. தற்போது அட்ட மச்சனி ஆரம்பம். ஜாதகத்தில் சுக்கிரன் (களஸ்திரகாரகன்) நீசம். 7-க்குடைய சூரியன் (களஸ்திர ஸ்தானாதிபதி) 8-ல் மறைவு. இவர்களுடன் சனி சம்பந்தம். எனவே 37 வயதுக்குமேல் 40 வயதுகூட ஆகலாம்.

y

ப் பி. சரஸ்வதி, சிவகங்கை.

எனக்கும் என் தம்பிக்கும் பார்வைக் கோளாறு இருக்கிறது. இருவரும் கண்ணாடி அணிந்துள்ளோம். நாங்கள் பல கோவில்களுக்கும் வேண்டியுள்ளோம். ஆனால் எந்த இறைவனும் எங்கள்மீது கண் திறக்கவில்லை. எங்கள் பார்வைக் குறைபாடு நீங்குமா?

உங்கள் இருவர் ஜாதகத்திலும் கடுமை யான பூர்வபுண்ணிய தோஷம் உள்ளது. அதனால் முழுமையான நிவர்த்திக்கு இடமில்லை. கண்ணாடி தொடர்ந்து அணியவேண்டும். தம்பிக்கு ஏழரைச்சனி. உங்களுக்கு அட்டமச்சனி முடிந்துவிட்டது. கண்பார்வைக்குறை நீங்க இரண்டு பரிகார ஸ்தலம் எழுதுகிறேன். போய் வரவும். காஞ்சிபுரத்தி-ருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூரம் என்ற ஊரில் கூரத்தாழ் வார் வழிபட்ட பங்கஜவல்- சமேத ஆதிகேச வப் பெருமாளையும் கூரத்தாழ்வாரையும் வழிபடவும். ஞாயிறு, வெள்ளிக்கிழமை விசேஷம். அதேபோல சென்னையிலிருந்து 64 கிலோமீட்டர்- மதுரமங்கலம் சென்று ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமான ஸ்ரீஎம்பார் பெருமானையும் சேவிக்கவும். ராமானுஜருடன் குருகுல வாசத்தில் உடனிருந்தவர் கோவிந்தன். இவரே பிற்காலத்தில் எம்பார் என்று பெயர்பெற்றார். அங்குசென்று புனர் பூச நட்சத்திரத்தன்று நெய்தீபமேற்றி வழிபடவும். மூன்றாவதாக சிவகங்கை அருகில் நாட்டரசங்கோட்டை கண்ணாத்தாள் கோவில் (கண்ணுடைய நாயகியம்மன்) சென்று வழிபடவும். அபிஷேக பூஜை செய்வது உத்தமம்.

ப் எம். முருகேசன், சேலம்.

என்னால் இன்னும் வீடு கட்டும் பணியைத் தொடங்க முடியவில்லை. ஏன்?

சேந்தமங்கலம் குருநாதர் ஜீவசமாதிக்கும் தத்தாத்ரேயருக்கும் அபிஷேகம் செய்துவிட்டேன். வேறு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? உங்களுக்கு மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம், தனுசு லக்னம். சுக்கிர தசை, ராகு புக்தி. மகனுக்கு பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். ராகு தசை, புதன் புக்தி. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சமராகு நடந்தால் எல்லா முயற்சிகளிலும் தடை, தாமதம் காணப்படும். அதனால் வீடுகட்ட இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக் கும்ஆரணவல்லியம்மனுக்கும் எளிய முறையில் ஒரு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளவும். வைகாசியில் தச்சு செய்து கட்டட வேலையைத் தொடங்கலாம். வீடுகட்டி கிரகப் பிரவேசம் முடிந்ததும் மீண்டும் அங்கு சென்று சங்காபிஷேக ருத்ர ஹோம பூஜை செய்யலாம். வசதியிருந்தால் இப்போதே மேற்படி சங்காபிஷேக பூஜையைச் செய்துவிட்டு, கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு சாதாரண அபிஷேக பூஜை செய்யலாம். திருச்சி- புதுக்கோட்டை வழி பொன்னமராவதி பஸ்ஸில் ஏறி செவலூர் பிரிவில் இறங்கவும்.

ப் எஸ். மணிகண்டன், ஆதம்பாக்கம்.

கண்கண்ட தெய்வமே! தாங்கள் இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக மூன்றுமுறை வணங்கி நிம்மதி பெற்று விட்டேன். நீங்கள் என் குரு. நான் பாவப் பட்டவன்; பரமஏழை. உங்கள் அருகில் வர தகுதியற்றவன். அருள்மிகு தாணுமால யனையும், கன்னியாகுமரி பகவதியம்ம னையும் வருடம் ஒருமுறை குலதெய்வ மாக வழிபடவேண்டும் என்று வழிகாட்டி யதற்கு நன்றி. நான் அனாதை!

இந்த உலகில் யாரும் அனாதையில்லை. எல்லாருக்கும் இறைவன் பாதுகாப்பாக அருள் பாலிக்கிறான். பணத்தால் பரம ஏழை என்றா லும், தூய மனதால் எல்லாரும் கோடீஸ்வரர் கள்தான். என்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் அபிமானத்துக்கும் நன்றி. அனார் கலி என்ற ஓரங்க நாடகத்தில் கலைஞர் எழுதிய ஒரு வசனம். அனார்கலிலி சலீமை ஒரு சாதாரண போர் வீரனாக நினைத்துக் காதலிப்பாள். உண்மையில் அவன் அக்பர் பாதுஷாவின் மகன் என்ற ரகசியம் தெரிந்த தும், அனார்கலியைப் பார்க்க ஒருமுறை தாமதமாக வந்த சலீமிடம், "கொலுமண்ட பத்து மனிதர்களுக்கு நேரமாவது நினைவாவது'' என்பாள். அதற்கு அவன், "உன் அன்பின் பெருக்கத்தால் என் அந்தஸ்தையே உயர்த்திவிட்டாயே'' என்பான். அது போல சாதாரணமான என்னை தகுதிக்கு மீறி தெய்வமாக்கிவிட்டீர்கள். உங்களைப் போன்று பாலக்காடு அன்பர் ஒருவர் "அதிர்ஷ்டம்' ஜோதிடபானு சூப்ரமணியம் போற்றி என்று 108 போற்றி எழுதியனுப்பியிருந் தார். உங்களைப்போன்ற ஆதரவாளர்கள் இருக்கும்வரை (விவேக் டி.வி.யில் சொன்னது போல) "பாலஜோதிடத்தை யாரும் அசைச் சுக்க முடியாது; அசைச்சுக்க முடியாது.' வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறலாம் என்ற நினைப்பு சிலசமயம் எழுந்தாலும், உங்களைப் போன்ற அபிமானிகளுக்காகத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமென்ற உணர்வும் உற்சாகமும் மேலோங்குகிறது. நன்றி!

ப் வி. விவேகானந்தன், நாமக்கல்.

முன்பு தாங்கள் எனக்கு பதில் கூறிய போது சுக்கிர தசையைவிட சூரிய தசை நன்றாக இருக்காது என்று எழுதியிருந்தீர் கள். அதன்படி எனக்கு தற்போது சூரிய தசை. உடல்நிலை அடிக்கடி பாதிக்கிறது. ஆயுள்பலம் எப்படி உள்ளது? தொழில், வருமானமே சரியில்லை.

மீன லக்னம். அதற்கு சுக்கிரன் 8-க்குடைய வர். சூரியன் 6-க்குடையவர். அத்துடன் ஏழரைச்சனி! நல்லவேளையாக சந்திர தசை 69 வயதில் வருவதற்கு முன்பு ஏழரைச்சனி முடிந்துவிடும். ஆயுள்காரகன் சனி 8-ல் உச்சம் என்பதால் ஆயுள் குற்றமில்லை. ஞாயிறுதோறும் நவகிரகத்தில் அல்லது சிவன் கோவிலில் உள்ள சூரியனுக்கு வெள்ளைத்தாமரை சாற்றி வழிபடவும். உடல்நிலையிலும் தொழில்துறையிலும் முன்னேற்றம் தெரியும்.

ப் ஜி. விஸ்வநாதன், குடியாத்தம்.

பலகோடி மக்கள் மனதில் நிறைந்துள்ள அய்யா குருநாதருக்கு கோடானுகோடி வணக்கம்! சாப்பாடு, துணிமணிக்குப் பஞ்சம் இல்லை. இரு சக்கர வாகனங்கள் மூன்று உண்டு. சொந்தவீடு மட்டும் அமைய வில்லை. வேலையில் எனக்குப் பிடித்த பணம் இன்னும் வந்துசேரவில்லை. எப்போது கிடைக்கும்? மகன் திருமணம்- மகள் திருமணம் எப்போது நடைபெறும்? மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? தனியார் துறையில் வேலைக்குப் போகலாமா?

உங்களுக்கு மகர ராசி, திருவோண நட்சத் திரம். சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம். இதில் தனது புக்தி முடியவேண்டும். அதன்பிறகு சொந்த வீடு அமையும். உங்க ளுக்கு வேலை சம்பந்தமாக வரவேண்டிய பணம் வந்துசேர கும்பகோணம்- குடவாசல் வழி- சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேய ருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து கார்த்த வீர்யார்ஜுன மந்திர ஸ்லோகத்தை தினசரி ஜெபம் செய்யவும். மகன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னம். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதால் 29 அல்லது 30 வயதில்தான் திருமண யோகம். மகள் மிதுன ராசி, விருச்சிக லக்னம். சனி தசை, ராகு புக்தி முடிந்ததும் குரு புக்தியில் திருப்தியான வேலை அமையும்.

ப் எஸ். ராமச்சந்திரன், கும்பகோணம்.

என் மகன் கல்வியில் சுமாராக இருக்கிறான். அவன் எதிர்காலம் எப்படி அமையும்? நியூமராலஜிப்படி 37லில் பெயர் அமைத்துள்ளேன்.

பெயர் எண் 37. நல்ல எண். பிறந்த தேதி 2, கூட்டு எண் 7 என்பதால் 37 பொருத்தமானதே. தற்போது ஏழரைச்சனி என்பதால் கல்வியில் மந்தம், மறதி. இருந்தாலும் ஐந்து வயதுதானே ஆகிறது. போகப்போக சரியாகிவிடும். 12 வயதுக்குமேல் தெளிவாக இருப்பான். உயர்கல்வி படிப்பான். ஏழரைச்சனி தாக்கம் குறைய 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும். ஏழரைச்சனி முடியும் வரை.

bala070521
இதையும் படியுங்கள்
Subscribe