● வி. புவனேஸ்வரி, எடப்பாடி.

என் மகன் +2 படிக்கிறான். மேற்படிப்பு எந்தத் துறையில் படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

சுதர்சன் மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். 10-க்குடைய சனி லக்னத்தில் சூரியனோடு சம்பந்தம். எதிர்காலத்தில் அரசு வேலைக்கு இடமுண்டு. 2023 வரை ராகு தசை. அவரும் லக்னத்தில் இருக்கிறார். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) 20 வகையான ஹோமம் செய்து, அவருக்குக் கலச அபிஷேகம் செய்தால் +2-வில் நல்ல மார்க் எடுத்து மருத்துவத்துறை அல்லது இஞ்சினீயரிங் துறையில் அட்மிஷன் கிடைக்கும். நீட் தேர்வும் பாஸாகும். இந்த இருதுறையும் அவருக்குப் பிரியமில்லையென்றால் எம்.பி.ஏ. அல்லது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட கல்வி படிக்கலாம்.

● கே. மணி, எடப்பாடி.

Advertisment

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? உடல் ஆரோக்கியம், ஆயுள், மனைவி, மக்கள் யோகம் பற்றியும் விளக்கவும்!

கும்ப லக்னம், உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. சனி தசை நடக்கிறது. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. சனி 12-க்குடைய விரயாதிபதி. சனி தசை முற்பகுதிவரை விரயம். பிறகு நிம்மதி. ஒழுக்கமாக வாழ்ந்தால் ஆயுள், ஆரோக்கியம் பற்றிக் கவலையில்லை. இல்லையென்றால் வைத்தியச்செலவு ஏற்படும். மனைவி, மக்கள் யோகம் குறைவில்லை.

murugan● ஜி சண்முகம், எடப்பாடி.

Advertisment

என் மகள் தற்சமயம் மேல்நிலைக்கல்வி படிக்கிறாள். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக விரும்புகிறாள். முடியுமா? அல்லது வேறு எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம்?

ஸ்ரீதேவி ரிஷப லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 2023 வரை புதன் தசை. 10-க்குடைய சனி 2-ல். ராசிநாதன் குரு 3-ல் உச்சம். லக்னத்தில் சூரியன். அவர் விரும்பியபடி ஐ.ஏ.எஸ் ஆகவும், நீட்தேர்வு பாஸாகவும் (லக்னத்தில் சூரியனோடு ராகு சேர்ந்திருப்பதால்) சூலினிதுர்க்கா ஹோமம் உள்பட 20 வகையான ஹோமம் செய்து ஸ்ரீதேவிக்குக் கலச அபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசவும். மாற்றுத்துறையாக இஞ்சினீயரிங் தேர்ந்தெடுக்கலாம்.

● பி. மணிகண்டன், மதுரை.

நீங்கள் கூறியபடி குபேர பத்ரகாளியம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறேன். எப்போது திருமணம் நடக்கும்?

அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பெண் அமையும். கன்னியா லக்னம். விருச்சிக குரு 7-ஆம் இடத்தைப் பார்க்கப் போகிறார்.

● வி. அருணாசல கனி, வடலூர்.

நான் காவி கட்டி தர்மம் எடுத்து வந்து சாப்பிடுகிறேன். 58 வயதாகிறது. பல மாதங்களாக "பாலஜோதிடம்' வாங்கிப் படித்து வருகிறேன். கேள்வி- பதிலை விரும்பிப் படிப்பேன். உடலில் நோய் உள்ளது. 6-ஆம் இடம் எப்படியுள்ளது? நோய் நிவர்த்திக்கு எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?

பூரட்டாதி 1-ஆம் பாதம், கும்ப ராசி, கன்னி லக்னம். இருப்பு தசை எழுதவில்லை. என்றாலும் நவாம்சத்தை வைத்துக் கணக்கிடும்போது கேது தசை ஏழு வருடம் முடியும் தருணம். கடந்த ஏழு வருடம்- கும்ப ராசிக்கு 8-ல் சனி வந்ததும் (2009-2010) குடும்பத்தைவிட்டுப் பிரிந்து துறவியாகிவிட்டீர்கள் என்று தெரிகிறது. தோல் சம்பந்தப்படட நோய் அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஆரோக்கியத்துக்கு தன்வந்ரயே பகவானை வழிபடவும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தரயே அமிருத கலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி ஸமேத தன்வந்த்ரயே நமஹா' என்ற தன்வந்திரி மந்திரத்தை தினசரி முடிந்தவரை ஜெபிக்கவும். எதிர்காலத்தை காசி அல்லது திருவண்ணாமலையில் கழிக்கலாம். 6-க்குடைய சனி 5-ல் ஆட்சி என்றாலும் நீச குருவுடன் சம்பந்தம். சூரியன் சாரம். கபம்- சளி- சுவாசத்தொல்லையும் இருக்கலாம். சிவபெருமானை இஷ்டதெய்வமாக வழிபடலாம்.

● எஸ். பத்மாவதி, தி.நகர்.

கடந்த ஏழெட்டு வருடங்களாக "பாலஜோதிடம்' படிக்கிறேன். கேள்வி- பதில் பகுதி அருமை! தாங்கள் ஆரோக்கியமாக நீடூழி வாழவும், இந்த மகத்தான சேவை பல வருடங்கள் தொடரவும் பிரார்த்திக்கிறேன். என் பெயரில் கோவையில் ஒரு இடம் இருக்கிறது. தற்பொழுது எனக்கு 64 வயதாகிவிட்டதால் அதை விற்க முயற்சிக்கிறேன்; முடியவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் அதை விற்க முடியுமா? என் மகள் எப்போதும் என்னிடம் கோபப்பட்டு வெறுப்பாகப் பேசுகிறாள். ஒரு மகன். சில மாதங்கள் நோய் வாய்ப்பட்டு, தற்போது குணமாகி வருகிறான். புத்திர காரகன் குரு 6-ல் இருந்து தசை நடத்துவதால் பிள்ளைகளால் பிரச்சினை வருமோ என்று பயமாக உள்ளது. நாடிஜோதிடத்தில் எனக்கு 69 வயது என்று குறித்துள்ளனர்.

மகர லக்னம். ஆயுள் காரகன் சனி லக்னாதிபதியாகி 10-ல் உச்சம். அவருக்கு மிதுன குருவின் பார்வை கிடைக்கிறது. மேஷ ராசிநாதன் செவ்வாய் கன்னியில் இருந்து ராசியைப் பார்க்கிறார். எனவே 69 வயதையும் தாண்டி 80 வயதுவரை வாழலாம். இடம் நல்லபடி கிரயம் முடிய செவலூர் பூமிநாத சுவாமிக்கு ஒரு வேண்டுதல் செய்து, ராஜப்பா குருக்களைத் தொடர்புகொண்டு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பச் சொல்லுங்கள். அத்துடன் ஆயிரம் ரூபாய் ஒரு கவரில் பூமிநாதர் பேரில் வைத்து பூஜையறையில் வைக்கவும். இடம் கிரயம் முடிந்ததும் செவலூர் சென்று 108 சங்கு வைத்து ருத்ரஹோமம் வளர்த்து பூமிநாதருக்கும் ஆரணிவல்லி அம்மனுக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்யவும். இருபதாயிரம் ரூபாய் செலவாகும். முடிந்துவைத்த காணிக்கையோடு மீதிப் பணத்தையும் குருக்களிடம் கொண்டுபோய்க் கொடுத்து சம்பாவனை செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863. அர்ச்சனைக்கு எந்த விலாசத்துக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்கலாம். நேரில் போக முடிந்தாலும் போகலாம். திருச்சிவரை ரயில். பிறகு பொன்னமராவதி பஸ்ஸில் ஏறி செவலூர் பிரிவில் இறங்கி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவிலுக்கு ஆட்டோவில் போகலாம்.

● ப. சுந்தரம், கொத்தாக்குடி.

குருவே! சுமார் 30 ஆண்டு காலமாக உங்கள் அறிவுரைப்படி வாழ்ந்து வருகிறேன். ஏதோ கிரகங்களின் சூழ்நிலையில் நான் மாட்டிக்கொண்டேன். என் மகள் அனுசுயா என்ற ராஜமீனாவின் திருமணம் சம்பந்தமாக நான் கேட்டதற்கு, "தற்போது வேண்டாம்' என்று கூறியிருந்தீர்கள். ஆனால் "தங்கள் பதில் வெறும் பேப்பர்' என்று அனைவரும் கூறி, திருமணம் முடிந்துவிட்டது. நான் மட்டும் தடுத்தாலும் வெற்றிபெற முடியவில்லை. இதுதான் முடிவா? என் மகளைக் காப்பாற்ற என்னாலும் முடியவில்லை; இறைவனாலும் முடியவில்லை.

உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இறைவனாலும் முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. 27-4-2018-ல் "பாலஜோதிட'த்தில் (31-ஆம் பக்கம்) கோவனூர் என்ற ஊரிலிருந்து கேள்வி கேட்டீர்கள். திருமணம் நிச்சயித்த தேதி 26-3-2018. தேதி எண் 8; கூட்டு எண் 4. திருமணம் நடந்ததேதி 25-6-2018. தேதி எண் 7-ம் நல்லதல்ல என்று பதில் சொன்னேன். ராஜமீனாவுக்கு திருவோண நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். லக்னத்தில் ராகு நிற்க, 2025 மேவரை ராகு தசை என்பதால் திருமணத்தை கேன்சல் செய்யும்படி எழுதினேன். செய்தீர்களா? ஆக, அதில் திருமணம் நடக்க வேண்டும்; அதன் விளைவுகளை உங்கள் மகள் அனுபவிக்க வேண்டும் என்பது இறைவன் கணக்கு. அவரால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறலாமா? எது நடக்கவேண்டுமோ அது நன்றாக நடந்துவிட்டது என்று ஆறுதல் அடையவும். 2020-ல் 25 வயது முடியும்வரை குடும்ப நலனுக்கு ஹோமம் செய்யுங்கள். வரும்முன் காக்கத் தவறிவிட்டீர்கள்; வந்த பிறகாவது காப்பாற்றலாம். வந்தபின்னும் காக்கத்தவறினால் அதுதான் தலையெழுத்து. இறைவன் தீர்ப்பு. உங்கள் ஜாதகத்திலும் குரு நீசம். 5-ஆம் இடத்தை செவ்வாய், சனி பார்ப்பது புத்திர ஸ்தானத்துக்கு கெடுதல் பலன்தானே.

● டி.கே. குமார், கோவை.

ஆட்டோமொபைல் டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். உயர்ந்த நிலைக்கு வரமுடியவில்லை. திருமணமும் தோல்வியில் முடிவடைந்துவிட்டது. பிரச்சினைகளுக்குத் தீர்வென்ன?

45 வயது முடிந்து 46 வயது ஆரம்பம். பூர நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் ராகுவும் செவ்வாயும் சேர்ந்திருக்க, லக்னாதிபதி குரு 2-ல் நீசம். ராசிநாதன் சூரியன் ராசிக்கு 8-ல் மறைவு. அதனால் வாழ்க்கையில் மேன்மை இல்லை. மறுமணம் அல்லது தொழில் உயர்வுக்கும்- பொருளாதார வளர்ச்சிக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு சூலினிதுர்க்கா ஹோமம் உட்பட சுமார் இருபது ஹோமம் செய்யவும். செல்: 99942 74067. இதுதான் பரிகாரம்.

● பி. தேவேந்திரன், சென்னை.

தங்களை நேரில் பார்த்தாலே என் பாவம் தீர்ந்துவிடும் என்று தங்களை சந்திக்கத் துடிக்கிறேன். ஊழ்வினை தடுக்கிறது. "பாலஜோதிடம்' புத்தகம் கையில் காசு இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது முதலில் படிப்பது கேள்வி- பதிலும், ராசிபலனும்தான். அதைப்படித்தே பாதி ஜோதிடம் கற்றுக்கொண்டேன். எனக்கு அட்டமச்சனியுடன் குரு தசையில் ராகு புக்தி. அவதிப்படுகிறேன். மகனால் நிம்மதி இல்லை. கவலை, கடன், கஷ்டம். அடுத்துவரும் சனிதசை லாப விரயாதிபதி 2-ல் நீசம். கோடீஸ்வரன் ஆகணும்- குபேரன் ஆகணும் என்று எண்ணவில்லை. இந்த சமுதாயத்திலே நல்லவனாக வாழ்ந்து மற்றவர்களுக்கு என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்தால் போதும். மகனுக்கு மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். ராகு தசை நடப்பு. கல்லூரியில் பி.ஈ., 3-ஆவது ஆண்டு படிக்கிறான். ஒன்பது பாடத்தில் அரியர்ஸ். தாய் இல்லை. நீங்களே தாயும் தந்தையுமாக இருந்து வழிநடத்த வேண்டும்.

உங்கள் பிரச்சினைகள் தீரவும், மகனின் படிப்பு மேன்மைக்கும், கடன் நிவர்த்திக்கும், வருமானம் பெருகவும், தொழில் வளமைக்கும் அக்னி காரியம்தான் பரிகாரம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் இருபது வகையான ஹோமம் செய்து நீங்களும் மகனும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செலவு ஆகும். கடனோடு கடனாக செய்யத்தான் வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டு மேஜர் ஆபரேஷன், உடனே செய்ய வேண்டிய கட்டம் என்றால் என்ன செய்வீர்கள்? அதுபோல குடும்ப சாபதோஷம் விலகி சந்தோஷம் ஏற்பட நம்பிக்கையோடு ஹோமம் செய்யுங்கள். செல்: 99942 74067-ல் பேசவும். கிரக தோஷமும் விலகும்.