ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-128

டாக்டர். ஆர்.எஸ். ராகவன், சென்னை-92.

நானும் எனது மனைவியும் தங்களுடைய நெடுநாள் வாசகர்கள். திருமணத் தேதி பற்றி தாங்கள் கூறிய கருத்தைப் பின்பற்றி, எனது தம்பி மகளின் திருமணத் தேதி எண் மூன்றாக வருமாறு (3-2-2021) அமைத்து இனிது நிறைவேறியது. பங்குனி மாதம், மூல நட்சத்திரத்தில் எனது எண்பதாவது வயது நிறைவேறுவதால், எனது சதாபிஷேக விழாவினைத் தனது மகன் உபநயன நிகழ்ச்சியோடு இணைத்து நிகழ்த்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்நாளில் மனைவிக்கு மங்களநாண் அணிவிக்க ஏற்பாடு நடக்கிறது. அன்று (25-4-2021) தங்கள் கருத்துப்படி 7-ஆம் தேதி என்பதால் ஏற்புடையதா?

விதி என்பது ஒரு புறம் இருந்தாலும், விதிவிலக்கு என்றும் ஒன்று உண்டு! உதாரணமாக "நோ என்டரி' ஒருவழிப்பாதை சட்டம்- விதி என்றாலும், இரவு 10.00 மணிக்கு மேல் விதிவிலக்கு. அத்துடன் தீயணைக்கும் வண்டி, காவல்துறை வாகனம் அவசர நிமித்தம் விதிவிலக்காக அமையும். அதுபோல தங்களின் சதாபிஷேக விழாவை முன்பின் செய்து கொள்வது தவறல்ல. மேலும் 7 என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவுக்கு அதி தேவதை விநாயகர் என்பதால் விக்ன விநாயகர் பூஜைசெய்து சதாபிஷேக விழாவை செயல்படுத்தலாம். எல்லாம் நல்லதாக இனிதே நிறைவேறும்.

JA

மகேஷ், கோவை.

என் மகள்

என் மகள் பாமினி லண்டனில் இருக்கிறாள். அவள் கணவரும் மகளும் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார் கள். 2023 வரை விசா கிடைக்குமென்று ஏற்கெனவே கூறியிருக்கிறீர்கள். இன்னும் கிடைக்கவில்லை. எப்போதும் கிடைக்கும்?

பாமினிக்கு ராகுதசை நடக்கிறது. மகன் பிரவீனுக்கு சந்திரதசை நடக்கிறது. (கன்னி ராசி). நிச்சயம் விசா கிடைத்துவிடும். பத்து திங்கள்கிழமை சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்யவும். ஒரு ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜையாக, வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் சென்று வழிபடவும்.

பி. பார்த்தசாரதி, புட்லூர்.

"அதிர்ஷ்டம்' பத்திரிகையில் நீங்கள் ராசிபலன் எழுதிய காலம் முதல் உங்கள் ரசிகன்! முதல்முறை தங்களை சந்தித்தபிறகு எனது பெரிய மகள் திருமணம் முடிந்தது. இரண்டாவது முறை சந்தித்தபிறகு எனது இரண்டாவது மகள் திருமணம் முடிந்தது. மூன்றாவதுமுறை தங்களை சந்திக்கும்பொழுது என் கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்று நம்புகிறேன். அதன்பிறகு தங்களுக்கு குரு மரியாதை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். "ஏழரைச்சனி முடியும்வரை வட்டி கட்டியாகவேண்டும்' என்று நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை! ஏழரைச்சனி இப்போது முழுமையாக முடிந்துவிட்டது. ராகு தசை தொடங்கி மூன்று வருடம் முடிந்து விட்டது. கடன்தீரும் விடிவுகாலம் எப்போது? சொந்தவீடு அமையாது என்று கூறிவிட்டீர்கள். நன்றி. கோவில் கட்டி அருள்வாக்கு கூறலாம் என்று கூறினீர்கள். அந்த நன்னாளை எதிர்பார்க்கிறேன்.

கன்னி லக்னம். 2-ல் சனி உச்சம். வாக்குப் பலிதம் உண்டு. விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது. ராகு தசையில் சனி புக்தி நடக்கிறது. இதுவே அனுகூலமான காலம்தான். ராகு தசை உங்களுக்கு நன்மையாகத் திகழ வடக்குப்பார்த்த அம்மனைத் தொடர்ந்து வழிபாடு செய்யவும். வாய்ப்புக் கிடைக்கும்போது மேச்சேரி பத்ரகாளியை (சேலம் பக்கம்) வழிபடலாம்.

ஏ. ராமர், திருச்சி-102.

"என்னிடம் "பாலஜோதிடம்' புத்தகம் நிறைய சேர்ந்துவிட்டது. கடையில் போட மனமில்லை' என்று திருச்சி பாலசுப்பிரமணியம் கூறி இருந்தார். என்னிடமும் நிறைய "பாலஜோதிடம்' புத்தகம் இருக்கிறது. இதையும் யாராவது வாங்கிப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விரும்பினால் தர சித்தமாக உள்ளேன். எனது செல்: 81226 86199.

உங்கள் விருப்பத்தை இதைப் பார்த்தவர்கள் அல்லது படித்தவர்கள் பயன் படுத்திக் கொள்ளட்டும். உங்கள் செல் நம்பரைப் பயன்படுத்தி விசாரிக்கட்டும். உங்கள் மனைவியின் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டுக் கேட்டிருந்தீர்கள். சரசுவதிக்கு கடக லக்னம். அதில் குரு உச்சம். 8-ல் சனி ஆயுள்காரகன் ஆட்சி. நடப்பு வயது 54. இன்னும் ஆறு வருடங்கள் எமபயம் இல்லை. தன்வந்திரி பகவான்தான் ஆரோக் கியம் தரும் கடவுள். தொடர்ந்து அவரை வழிபடவும்.

ஆர். ஜெயந்தி, வேலூர்.

எனது மகன் நவீன் ஜாதகத்தையும், மருமகள் காயத்ரி ஜாதகத்தையும் அனுப்பியுள்ளேன். இருவரும் படித்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் வேலை தேடுகிறார்கள். எப்போது அமையும்? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? நவீன் கேட்டரிங் தொழில் செய்ய நினைக் கிறார். யார் பெயரில் செய்யலாம்?

காயத்ரி மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னம். 10-க்குடைய சுக்கிரன் 10-ல் ஆட்சி. ராகு சாரம். சுவாதி- செவ்வாயும் 11-ல் ஆட்சி. அக்னி சம்பந்தமான தொழில் (ஹோட்டல்) செய்யலாம். வசதிக்கேற்ற மாதிரி மெஸ் ஆரம்பிக்கலாம். தற்போது குருதசை புதன்புக்தி ஆரம்பம். போகப்போக வளர்ச்சி அடையும். பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், ஆபிஸ் அலுவலகங்கள் உள்ள பகுதியில், ஜனப்போக்குவரத்துள்ள இடமாகப் பார்த்து ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் லாபத்தைப் பெரிதாக நினைக்காமல் ருசியாகத் தயாரிக்கவும்.

டி. தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி.

நான் பத்தர் சமூகத்தைச் சேர்ந்த வன். என் மகள் சுபஸ்ரீ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பையனை விரும்புகிறாள். இரு குடும்பத்தாரும் இருவருக்கும் திருமணம் செய்ய விரும்புகிறோம். இவர்களுக்குத் திருமணம் செய்ய லாமா? ஒற்றுமை யாக- மகிழ்ச்சியாக வாரிசு யோகத்தோடு வாழ்வார்களா?

மகள் சுபஸ்ரீ (ஜாதகத்தில் தீபிகா என்றுள்ளது) விசாக நட்சத்திரம், துலா ராசி, தனுசு லக்னம். சரவணன் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னம். ராசிப் பொருத்தம் இல்லை. 6, 8 சஷ்டாஷ்டக தோஷம் உண்டு. என்றாலும் கந்தர்வத் திருமணத்துக்கு (காதல் திருமணத்துக்கு) விதிவிலக்கு உண்டு. மேலும் பெண்ணின் ராசி துலாம். அதன் அதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம்! அந்த மீன ராசியே ஆணின் (சரவணனின்) ராசியாக அமைவதால் சுபசஷ்டாஷ்டகம். பொருத்தம் உண்டு. சேர்க்கலாம். இருவரும் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, வாரிசு யோகம் பெற்று வாழ்வார்கள். திருமணமும் நிச்சயமும் 1, 3, 6 வரும் தேதியில் அமைக்கவேண்டும். கண்டிப்பாக 4, 7, 8 வேண்டாம். ஞாயிறு அல்லது விடுமுறை நாள் என்று 4, 7, 8-ஆம் தேதிகளில் கண்டிப்பாக செயல்படக்கூடாது. திருமணம் முடிந்து தம்பதி சகிதம் மணக்குள விநாயகர் சந்நிதியில் அபிஷேக பூஜை (ஒருமுறை) செய்யவும். அத்துடன் திருவக்கரை வக்ர காளியம்மளை அபிஷேக பூஜை செய்து வழிபடவும்.

bala230421
இதையும் படியுங்கள்
Subscribe