ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-123

எம். மணிகண்டன், திருப்பூர்.

என் மகள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத விருக்கிறாள். அவள் எந்தத் துறையில் மேற் படிப்பு படிக்கலாம?

16 வயது முதல் ராகு தசை. (நடப்பு 18 வயது). மருத்துவம் சம்பந்ந்தமான படிப்பு (வசதிக் கேற்றபடி) படிக்கலாம். அல்லது பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் படிக்கலாம். ஒருமுறை திருவக்கரை சென்று (புதுச்சேரி- திண்டிவனம் பாதை- மயிலம் அருகில்) வக்கிரகாளியம்மன் கோவிலிலுள்ள குண்டலினி முனிவர் ஜீவசமாதி முன்பு 18 நெய் விளக்கேற்றி வழிபட்டு, அங்குள்ள வக்ர சனி சந்நிதியில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.

ஆர். சீனிவாசன், செஞ்சி.

ஜோதிடச் சக்கரவர்த்திக்கு நன்றி கலந்த வணக்கம்! எனது மகன் பி.காம் (தமிழ்) படித்துள்ளான். 25 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்? தன்னுடன் படித்த கிறிஸ்துவப் பெண்ணை விரும்பு வதாகக் கூறுகிறான். என்ன செய்வது?

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னத்தில் நீச செவ்வாய். 8-ல் லக்னாதிபதி சந்திரன், சனி சேர்க்கை. இவர்களுக்கு செவ்வாய் பார்வை. அவர் ஜாதகமே கலப்புத்திருமணம், காதல் திருமணம் என்பதுதான் விதி. மறுப்பு கூறாமல் முடித்துவிடுங்கள். திருமணத்தேதி 4, 5, 7, 8 வராமல் 1, 3, 6-ல் நடத்தவேண்டும். சர்ச்சில் நடந்தாலும் சரி; மண்டபத்தில் நடந்தாலும் சரி- ஏற்றுக்கொள்ளுங்கள்.

jj

வி. சரஸ்வதி, சேலம்.

சித்திரை இறுதியில் தொடங்கி வைகாசி பாதிவரை அக்னி நட்சத்திரம் என்று காலண்டரில் போடுகிறார்கள். அதில் திருமண சுபமுகூர்த்தம் செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. சித்திரை மாதமும் வைகாசி மாதமும் வசந்த ருது என்பதால், இதில் நடக்கும் திருமணங்களும் மண வாழ்க்கையும் இனிமையாகத் திகழும். அக்னி நட்சத்திரத்தில் புது வீடு பால்காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. அதேபோல வாடகை வீடுகூட மாறக்கூடாது. கூடியவரை அக்னி நட்சத்திரக் காலங்களில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் கூடாது. சில இடங்களில் அக்னி நட்சத்திரத்தில் கோவில் கும்பாபிஷே கம் நடத்துகிறார்கள். அதுவும் தவறு என்று தான் என் குருநாதர் கூறியுள்ளார்.

ப் கே. முருகப்பன், கரூர்.

எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் எங்கள் வாழ்க்கை வழிகாட்டி, ஜோதிடப் பிதாமகருக்கு வணக்கம்! வைகாசி வசந்த ருதுமாதம் என்பதால் தோஷம் இல்லை எனில் திருமண நிச்சய தார்த்தம், திருமணம் செய்யலாமா? வக்ர செவ்வாய்க் காலத்தில் திருமணம் பேசி முடிக்கலாமா? தேய்பிறை முகூர்த் தங்களில் திருமணம் செய்யலாமா? திருமணத் தேதி 4, 5, 7, 8 கூடாது என்பது போல கிழமைகளுக்கு விதிவிலக்கு உண்டா?

எல்லாருக்கும் பயனுள்ள வகையில் பொதுக்கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. சித்திரை மாதமும் வைகாசி மாதமும் வசந்த ருது எனப்படும். வருடத்தில் ஆறு ருதுக்கள். வசந்த ருதுவில் திருமணம் போன்ற சுபகாரியங்களை தாராளமாகச் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. அதே போல அக்னி நட்சத்திரக் காலத்திலும் திருமணம் நடத்தலாம். தேதி எண்ணும், கூட்டு எண்ணும் 4, 5, 7, 8 தேதிகளில் கூடாது. தவிர்க்க முடியாமல் மேற்படி தேதிகளில் திருமணம் நடந்துவிட்டால், அந்த தேதியில் கட்டிய திருமாங்கல்யத்தைக் கழற்றி கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். கிழமைகளுக்கு எந்த தோஷமும் இல்லை யென்றாலும், பெரும்பாலும் செவ்வாய், சனிக்கிழமைகளில் திருமணம் செய்ய மாட்டார்கள். சௌராஷ்டிர சமூகத்தினர் சனிக்கிழமை ஸ்திரவாரம் என்று கிரகப் பிரவேசம் செய்வதுண்டு. வக்ர செவ்வாய்க்கும் திருமணத்துக்கும் சம்பந்தமில்லை. குரு- சுக்கிரன் அஸ்தமன காலங்களில் சுபமங்கள காரியங்கள் செய்யக்கூடாது. எண்கணித ஜோதிடர் பண்டிட் சேதுராமன் அவர்கள் மரணயோகம் பார்க்க வேண்டாம் என்றும், எந்தக் காரியத்துக்கும் 8-ஆம் தேதி ஆகாது என்றும் கூறுவார். ஆனால் மரணயோகத்தில் எந்த சுபகாரியமும் செய்வது தவறுதான்.

வி. கண்ணன், தஞ்சாவூர்.

எனது மானசீக குருவுக்கு வணக்கம்! என் மகளுக்கு 15 வயது நடக்கிறது. இன்னும் ருதுவாகவில்லை. 11-ஆவது வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

மகள் மேஷ ராசி, கன்னியா லக்னம், பரணி நட்சத்திரம். 19 வயதுவரை சந்திர தசை. லக்னத்துக்கு 10-ல் சனி இருப்பதாலும், அதை செவ்வாய் பார்ப்பதாலும் அரசு வேலை கிடைப்பது கடினம். தொழில் கல்வியில் (டெக்னிக்கல்) அவருக்கு எதில் ஆர்வமோ அதில் படிக்க வைக்கலாம். திங்கட்கிழமைதோறும் காலையில் சிவலிங்க அபிஷேகத்துக்கு பால் வாங்கித்தரவும். (10 மாதம்). இது முடிவதற்குள் ருதுவாக லாம். ரத்தக்குறைவு இருப்பதால் நல்ல ஹோமி யோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஜி. செல்வம், நாமக்கல்.

என் திருமணத்தடைக்கு என்ன காரணம்?

கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். செவ்வாய் தசை இருப்பில் பிறந்தவர். தற்போது 44 வயது நடக்கிறது. 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. நீசச் செவ்வாயுடன் சம்பந்தம். களஸ்திர காரகன் சுக்கிரன், சனியுடன் சம்பந்தம். திருமணம் ஒரு கேள்விக்குறிதான். என்றாலும் இஷ்ட திருமணமாக- கலப்புத் திருமணமாக குடும்பம் அமையும்.

ஆர். சின்னத்தம்பி, சென்னை-9.

என் மகளின் ஜாதகத்தில் தந்தைக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறியிருந்தீர்கள். மகள் வளர வளர முன்னேற்றம் என்றும் கூறி யிருந்தீர்கள். என் மனைவிக்கு அரசு வேலை கிடைக்குமா? நானும் எம்.ஏ., (தமிழ்) பி.எட். முடித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.

ஏற்கெனவே உங்களுக்கு எழுதிய பலன்களை ஞாபகத்தில் கொண்டு நம்பிக்கையோடு காத்திருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.

● எஸ். புவனேஸ்வரி, வேலூர்.

எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்குத் திருமணம் நடந்து, பின் விவகாரத்தாகி விட்டது. இதுவரை வேறு எந்த வரனும் அமையவில்லை. மறுமணம் எப்போது நடக்கும்?

மகள் கடக லக்னம். லக்னத்தில் சூரியன். மூல நட்சத்திரம், தனுசு ராசி. தற்போது 29 வயது. மாங்கல்ய தோஷம், நாக தோஷம் உள்ள இந்த ஜாதகத்துக்கு 30 வயது முடிந்த பிறகு திருமணம் செய்திருந்தால் நல்ல மணவாழ்க்கை அமைந்திருக்கும். 24 வயது, 25 வயதிலேயே திருமணம் நடந்ததால் நிலைக்கவில்லை. புனர்விவாக ஹோமம் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். நல்ல மணவாழ்வும் நல்ல வாரிசு யோகமும் அமையும்.

● விஸ்வநாதன், புதுவை.

எனது மகள் எம்.எஸ்ஸி., பி.எட்., படித் திருக்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்?

துலா லக்னம். 2-ல் சனி. புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. லக்னத்துக்கு 7-க்கடைய செவ்வாய் 6-ல் மறைவு. ராசிக்கு 7-க்கடைய குரு ராசிக்கு 12-ல் மறைவு. அதனால் 30 வயது முடிந்ததும் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். அந்நிய சம்பந்தம். மகளுக்கு ஆசிரியை வேலை அமையும். வரும் வரனும் ஆசிரியராக வேலை பார்ப்பார்.

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe