Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-120

ஏ. பகவதிப்பிரியன், சென்னை- 17.

என் மகன் பி.ஈ. பட்டதாரி. நிரந்தர வேலை எப்போது கிட்டும்? திருமணம் எப்போது நடக்கும்?

Advertisment

அட்டமச் சனி நடக்கிறது. இது முடிய வேண்டும். அத்துடன் ராகு தசை வேறு. வேலையும் திருமணமும் தாமதமாகும்.

பி. சுப்பிரமணிய பாலன், திருச்சி- 2.

என் தாயாருக்கு அரசியலில் புகழ், பதவி கிடைக்குமா?

தாயாருக்கு 63 வயது முடிகிறது. அனுஷ நட்சத்திரம், சந்திர தசையில் தனது புக்தி பத்து மாதம் உள்ளது. அதன்பிறகு நீங்கள் விரும்பியபடி அரசியலில் செல்வாக்கு, புகழ், மரியாதை, பதவிக்கு வாய்ப்பு உண்டாகும். சிவன் கோவிலில் ருத்ரஜெப பாராயணம் அல்லது ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் குழிபிறை அருகில் செவலூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் உள்ளது. சுவாமி பூமிநாதர், அம்பாள் ஆரணவல்லி. அங்குசென்று 108 சங்குவைத்து ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம், பூஜை செய்யலாம். ஒவ்வொரு மாதமும் வாஸ்து நாளில் இங்கு வாஸ்து பூஜை நடக்கும். 5,000 பேர் கூடுவார்கள். அதனால் இதை வாஸ்து கோவில் என்பார்கள். மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ள கோவில். சுவாமி 16 பட்டையுடன் காட்சிதருவார். அம்பாள் மகாலட்சுமி சொரூபம். இடத்து சம்பந்தமான பிரச்சினைகளும்

ஏ. பகவதிப்பிரியன், சென்னை- 17.

என் மகன் பி.ஈ. பட்டதாரி. நிரந்தர வேலை எப்போது கிட்டும்? திருமணம் எப்போது நடக்கும்?

Advertisment

அட்டமச் சனி நடக்கிறது. இது முடிய வேண்டும். அத்துடன் ராகு தசை வேறு. வேலையும் திருமணமும் தாமதமாகும்.

பி. சுப்பிரமணிய பாலன், திருச்சி- 2.

என் தாயாருக்கு அரசியலில் புகழ், பதவி கிடைக்குமா?

தாயாருக்கு 63 வயது முடிகிறது. அனுஷ நட்சத்திரம், சந்திர தசையில் தனது புக்தி பத்து மாதம் உள்ளது. அதன்பிறகு நீங்கள் விரும்பியபடி அரசியலில் செல்வாக்கு, புகழ், மரியாதை, பதவிக்கு வாய்ப்பு உண்டாகும். சிவன் கோவிலில் ருத்ரஜெப பாராயணம் அல்லது ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவும். புதுக்கோட்டை- பொன்னமராவதி பாதையில் குழிபிறை அருகில் செவலூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் உள்ளது. சுவாமி பூமிநாதர், அம்பாள் ஆரணவல்லி. அங்குசென்று 108 சங்குவைத்து ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம், பூஜை செய்யலாம். ஒவ்வொரு மாதமும் வாஸ்து நாளில் இங்கு வாஸ்து பூஜை நடக்கும். 5,000 பேர் கூடுவார்கள். அதனால் இதை வாஸ்து கோவில் என்பார்கள். மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ள கோவில். சுவாமி 16 பட்டையுடன் காட்சிதருவார். அம்பாள் மகாலட்சுமி சொரூபம். இடத்து சம்பந்தமான பிரச்சினைகளும் தீரும்; சொந்த வீடும் அமையும்.

jothidamanswer

Advertisment

சி. முருகேசன், சேலம்.

என் மகனுக்கு 34 வயது நடப்பில் உள்ளது. இதுவரை திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்?

மகனது ஜாதகத்தில் துலா லக்னத்தில் குரு இருக்கிறார். அதனால் 12-ல் செவ்வாய், சனி சேர்க்கையால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது விதிவிலக்கு. காதலித்திருந்தால் 30 வயதுக்குமேல் கல்யாணம் நடந்திருக்கும். லக்னத் தில் குரு இருப்பதால், உங்கள் மகன் யாரையும் காதலிக்காத அப்பாவிப் பிள்ளை என்று தெரிகிறது. அதனால் திருமணம் தள்ளிப்போகிறது. ராசிக்கு 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கையும் திருமணத் தடைக்கு ஒரு காரணம். சனி, செவ்வாய் சேர்க்கை யுள்ள ஜாதகர்களுக்கு, பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்களைப் பார்த்திருப்பதாக எழுதியிருக்கிறீர் கள். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஒற்றுமை இருக்கிறதா- வாரிசு இருக்கிறதா என்று பார்த்தீர்களா? துலா லக்னத்துக்கு குரு கொடும்பாவி என்று கூறும் உங்களுக்கு நான் என்ன பதில் சொல்வது? உங்கள் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று விதியிருக்கிறதோ அப்போது நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்கவும்.

ஹரிகிருஷ்ணன், தேனி.

நீங்கள் சொன்னபடி என் மகனை நான்கு ஆண்டு படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி உள்ளேன். என் ஜாதகப்படி ஜென்மச் சனி வந்துள்ளது. தொழிலை விரிவுபடுத்தலாமா?

உங்களுக்கு ஜென்மச் சனி இரண்டாவது சுற்று; பாதிக்காது. நடப்பு சுக்கிர தசை லக்னாதிபதி தசை. கடன் வாங்கி தொழிலை விருத்தி செய்யலாம்.

டி. சொக்கலிங்கம், வேலூர்.

எனது நண்பன் மூன்று வருடமாக விரும்பிய பெண், அவளாக சம்மதப்பட்டால் திருமணம் நடக்கும் என்றும், இல்லையென் றால் வேறு இடத்தில் நடக்கும் என்றும் பதில் எழுதினீர்கள். அதன்படியே அவனுக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்து ஐந்து வயதில் குழந்தையுடன் நன்றாக இருக்கிறான். நன்றி. அதேபோல் நான் கேட்ட கேள்விக்கு டிசம்பரில் தொழில் தொடங்கலாம் என்று சொன்னீர்கள். வீட்டிலேயே சிறிய அளவில் மளிகைத் தொழில் ஆரம்பித்தேன். வியாபாரம் சுமாராக உள்ளது. இதையே தொடர்ந்து நடத்தலாமா? அல்லது ஏற்கெனவே செய்த துணி வியாபாரத்தைத் தொடங்கலாமா? என் மகன் கல்வி தடைப்பட்டது. இந்த வருடம் பள்ளிசெல்ல பரிகாரம் தேவையா?

மகனுக்கு ஏழரைச் சனி முடிந்துவிட்டது. உங்களுக்கும் ஏழரைச்சனி. இரண்டு ஏழரைச் சனி அவன் படிப்பைக் கெடுத்தது. உங்களுக்கு தொழில் மந்தம். அடுத்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு எல்லாம் முன்னேற்றமாக இருக்கும். குச்சனூரில் வடகுரு ஸ்தலம் இருக்கிறது. அங்குசென்று பிரார்த்தனை செய்வதுடன் உத்தமபாளையம்- தென்காளஹஸ்தி சென்று (ராகு- கேது ஸ்தலம்) பூஜை செய்யவும். துணி வியாபாரம் ஆரம்பிக்கலாம். முன்னதாக ராஜபாளையம்- தென்காசி பாதையில் வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரம் சென்று, மத்தியஸ்தநாதர் சிவன் கோவிலிலுள்ள நவகிரக தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

ஜி. சுரேஷ், சென்னை- 23.

எண்ணற்ற மக்களின் விதியை மாற்றியருளும் ஜோதிட பிரம்மாவுக்கு வணக்கம்! பல வருடங்களாக எதிர்மறை எண்ணம், வீண் பயம், குழப்பம். தற்போது நிம்மதியற்ற வேலை, கடன் பிரச்சினை, திருமணத் தடை, மனத்துன்பம். இவை மாற என்ன பரிகாரம்?

ஏழரைச் சனி முடிவுற்ற நிலையில், குரு தசை ஆரம்பம். தனது புக்தி. தொடர்ந்து பெய்த மழை ஓய்ந்தமாதிரி தெரிய, வெளியே புறப்பட்டதும் மீண்டும் அடாத மழை விடாது பெய்ததுபோல சனியின் துன்பங்கள் முடியும் தறுவாயில் குரு தசை, குரு புக்தி ஆரம்பம். அது முடிந்த பிறகு விமோசனம். அதுவரை விபரீதப் பலன்கள் துரத்தி துரத்திவரும். ராமநாதபுரம் அருகில் தேவிபட்டினம் சென்று பிதுர் சாபதோஷ நிவர்த்தி ஹோமம், களஸ்திர தோஷ நிவர்த்தி ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும்.

எஸ். செல்வம், வாணியம்பாடி.

பலமுறை வெளிநாட்டு முயற்சி எடுத்தும் போக முடியவில்லை. சரியான வேலையும் கிடைக்கவில்லை. திருமணமும் ஆகவில்லை. ஜோதிடம் கற்று வருகிறேன். வாக்குப் பலிதம் உண்டா?

அட்டமாதிபதி தசை- குரு தசை நடந்ததால் 16 வருடம் பயனில்லை. அடுத்து வரும் சனி தசையில் உங்கள் நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஒருமுறை பௌர்ணமியன்று குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டு வரவும். ப் ஆர். வடிவேலு, புதுச்சேரி.

சிறு வயதுமுதல் இன்றுவரை வாழ்க்கையே போராட்டமாக இருக்கிறது. என்னுடைய பிரச்சினைகள் எப்போது தீரும்?

கடக லக்னம். 9-க்குடைய குரு 9-க்கு 8-ல் மறைவு. 9-ஆம் இடத்தை கன்னிச்சனி (அட்டமாதிபதி) பார்க்கிறார். பூர்வபுண்ணிய தோஷம் கடுமையாக இருப்பதால் திருச்சி அருகில் (சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உண்டு) திருப்பட்டூர் சென்று தலையெழுத்தை மாற்றிய பிரம்மாவை வழிபடவும். காசி விசுவநாதர், பெருமாள், பிரம்மா ஆகிய மூன்று சந்நிதிகள் உண்டு. உங்கள் வயதுடன் ஒன்றுசேர்த்து- அத்தனை எண்ணிக்கையில் நெய்விளக்கேற்றி வழிபடவும்.

கே. சிவகுரு, மதுரை- 5.

என் மகன் திருமணம் எப்போது நடக்கும்? காதல் திருமணமா? முதலில் ஒரு பெண்ணை விரும்பி தோல்வியானது. முறையான திருமணம் நடக்குமா?

7-ல் 6-க்குடைய சூரியன். மேஷ ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. ராசிக்கு 7-ல் சனி. களஸ்திர தோஷம். ஜனவரிவரை அட்டமச் சனி. அதில் சந்திர தசை சந்திப்பு. தீர்க்கமுடியாத பிரச்சினை- உயிர்ச்தேசம் அல்லது பொருட் சேதம் உண்டாகலாம். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். (அட்டமச்சனி முடியும்வரை). அத்துடன் ஒருமுறை சிவன் கோவிலில் ருத்ரஹோமம் வளர்த்து ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மலைபோல வரும் துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம்.

bala260221
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe