● ஏ.ஆர். கார்த்திகேயன், போடி.
அக்டோபரில் (2017) தலையில் அடிபட்டு கால், கை விளங்காமல் போய்விட்டது. தலையில் பெரிய ஆபரேஷன் செய்து மறுஜென்மம் எடுத்துள்ளேன். இது ஏழரைச்சனியின் வேலையா? இதற்கு என்ன பரிகாரம்? எப்போது இந்த விளைவுகள் தீரும்?
தம்பி! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி அருகில் பள்ளத்தூரில் ஹோமம் செய்தால் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், வெளிநாட்டு வேலை, வருமானம் போன்ற நன்மைகளைச் சந்திக்கலாம் என்று கூறியிருந்தேன். அதைச் செய்யவில்லை. நம்பிக்கையோடு இருங்கள்.
● கிரிதரன், ஆத்தூர்.
18-12-1994 அன்று காலை 6.02 மணிக்குப் பிறந்தேன். பி.ஈ., முடித்து அப்பா நகைக்கடையில் இருக்கிறேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகம். வேலைக்குப் போக விருப்பமில்லை. என்னசெய்யலாம்?
இது இலவச கேள்வி- பதில் பகுதி. இதற்கு உங்களின் ஜாத குறிப்பு, இருப்பு தசாபுக்தியுடன் எழுதினால்தான் பதில் எழுதமுடியும். மதுரையில் கே.எம். சுந்தரம்வசம் உங்கள் ஜாதகத்தை எழுதி அதன் ஜெராக்ஸ் அனுப்பி கேள்வி கேளுங்கள்; சொல்லுகிறேன். அவர் செல் எண்: 92453 28178.
● விஜயலட்சுமி, திருச்சுழி.
என் மகன் போதைக்கு அடிமையாகி எல்லாவற்றையும் இழந்துவிட்டான். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு நான் ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். எப்போது செய்யலாம்?
குடிகாரனை நம்பி யார் பெண் கொடுக்க முன்வருவார்கள்? அக்கம் பக்கம் விசாரிக்க மாட்டார்களா? இப்போதே ஒதுங்கிப்போய் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள்.
● சரண்யா தேவி, கோவை.
5-5-2017 "பாலஜோதிட'த்தில் எனக்கு ஆண் வாரிசு உண்டு என்று பதில் தந்தீர்கள். அதன்படியே சிசேரியன் மூல
● ஏ.ஆர். கார்த்திகேயன், போடி.
அக்டோபரில் (2017) தலையில் அடிபட்டு கால், கை விளங்காமல் போய்விட்டது. தலையில் பெரிய ஆபரேஷன் செய்து மறுஜென்மம் எடுத்துள்ளேன். இது ஏழரைச்சனியின் வேலையா? இதற்கு என்ன பரிகாரம்? எப்போது இந்த விளைவுகள் தீரும்?
தம்பி! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி அருகில் பள்ளத்தூரில் ஹோமம் செய்தால் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், வெளிநாட்டு வேலை, வருமானம் போன்ற நன்மைகளைச் சந்திக்கலாம் என்று கூறியிருந்தேன். அதைச் செய்யவில்லை. நம்பிக்கையோடு இருங்கள்.
● கிரிதரன், ஆத்தூர்.
18-12-1994 அன்று காலை 6.02 மணிக்குப் பிறந்தேன். பி.ஈ., முடித்து அப்பா நகைக்கடையில் இருக்கிறேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகம். வேலைக்குப் போக விருப்பமில்லை. என்னசெய்யலாம்?
இது இலவச கேள்வி- பதில் பகுதி. இதற்கு உங்களின் ஜாத குறிப்பு, இருப்பு தசாபுக்தியுடன் எழுதினால்தான் பதில் எழுதமுடியும். மதுரையில் கே.எம். சுந்தரம்வசம் உங்கள் ஜாதகத்தை எழுதி அதன் ஜெராக்ஸ் அனுப்பி கேள்வி கேளுங்கள்; சொல்லுகிறேன். அவர் செல் எண்: 92453 28178.
● விஜயலட்சுமி, திருச்சுழி.
என் மகன் போதைக்கு அடிமையாகி எல்லாவற்றையும் இழந்துவிட்டான். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு நான் ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். எப்போது செய்யலாம்?
குடிகாரனை நம்பி யார் பெண் கொடுக்க முன்வருவார்கள்? அக்கம் பக்கம் விசாரிக்க மாட்டார்களா? இப்போதே ஒதுங்கிப்போய் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள்.
● சரண்யா தேவி, கோவை.
5-5-2017 "பாலஜோதிட'த்தில் எனக்கு ஆண் வாரிசு உண்டு என்று பதில் தந்தீர்கள். அதன்படியே சிசேரியன் மூலமாக எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குருஜி! தங்களின் தேவஜோதிட வாக்கு பலிலித்தது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! என் மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவன் ஆயுள், படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்?
விட்டால் ஒன்றேகால் வயதுப் பையனுக்கு இப்போதே பெண் பார்த்து, பொருத்தம் கேட்பீர்கள் போலிலிருக்கிறது! உங்கள் ஆர்வத்திற்கு அளவே இல்லையே அம்மணி! விசாகம் 4-ஆம் பாதம், விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கும். அதுவரை பாலாரிஷ்ட பீடையும், பிரச்சினைகளும் இருக்கும். ஆண் வாரிசு உண்டா என்று கேட்ட உங்களுக்கு, அவனுக்கு ஒரு வயது முடிவில் ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும் என்று தோன்றவில்லையா? ஒரு குழந்தை பிறந்து ஒரு வயது முடியும்போது ஆயுள் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம் செய்து அந்தக் குழந்தைக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் 12 வயதுவரை அந்தக் குழந்தைக்கு எந்த பாதிப்பும் சங்கடமும் வராது. இப்போதும் கெட்டுப்போகவில்லை. கோவையில் சேரன்மாநகரில் மீனாட்சி சுந்தரர் கோவிலில் சுகேஷ் ஹெப்பர் என்ற அர்ச்சகரை சந்தித்து உங்கள் பையனுக்கு ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலு சரஸ்வதி ஹோமம் செய்யவும். அவருடைய செல்: 94430 64265-ல் தொடர்பு கொண்டு போகவும். மகனுடைய ஜென்ம நட்சத்திரம் விசாகத்தன்று ஹோமம் செய்யவேண்டும்.
● எம். அருணாசலம், திருவள்ளூர்.
வாழைப்பழ வியாபாரம் செய்கிறேன். பழைய கடையை இடித்து புதிதாகக் கட்டிவிட்டேன். அதில் எப்போது குடிபோகலாம்? என் ஜாதகத்தில் நாகதோஷம் உண்டா? சர்ப்பதோஷம் உண்டா? களஸ்திர தோஷம் உண்டா? புத்திரதோஷம் உண்டா? எப்போது திருமணமாகும்?
உங்கள் ஜாதகத்தில் ஒரு தோஷம் அல்ல; இரண்டு தோஷமல்ல. பல தோஷம் உள்ளது. இதற்கு 21 விதமான ஹோமம் செய்து உங்களுக்குக் கலச அபிஷேகம் செய்யவேண்டும். வயது 52 முடியப்போகிறது. கடன் உடன் வாங்கி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்யுங்கள். தொடர்புக்கு: சுந்தரம், செல்: 99942 74067.
● எம். விஸ்வநாதன், சேலம்- 16.
என் மகன் விக்னேஷின் திருமணம் பற்றி முன்பு கேட்டபோது (2015 ஜுன் மாத "பாலஜோதிட'த்தில்) 30 வயது முடிந்தபிறகு திருமணமாகும் என்றீர்கள். இப்போது 30 வயது முடிந்து 31 ஆரம்பம். தற்போது திருமண முயற்சிகளைத் தொடங்கலாமா? ஷரவந்தி என்று ஒரு பெண் ஜாதகம் வந்துள்ளது. அது பொருந்துமா?
விக்னேஷ்வர் விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம். மாசி 1-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு (2019 மார்ச்) திருமணயோகம் வரும். நீங்கள் அனுப்பியுள்ள பெண் ஜாதகம் பொருத்தமில்லை. அக்டோபருக்குப் பிறகு வேறு ஜாதகம் வரும். 2019 மாசிக்குமேல் திருமணம் செய்யலாம்.
● ஆர். பாபு.
என் மகனுக்கு 35 வயது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? தற்போது மருந்து, மாத்திரை சாப்பிடும் நோயாளியாகக் கஷ்டப்படுகிறான். எப்போது குணமாகும்? பெயர் ராசிக்குப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்துவிடலாமா?
மகன் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசிக்கு 2020 வரை அஷ்டமச் சனி நடக்கிறது. அதனால் வைத்தியச் செலவு வருகிறது. அட்டமச்சனியில் திருமணம் செய்யலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. செலவைப் பார்க்காமல் கடன் உடன் வாங்கியாவது காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) பேசி ஹோமம் செய்து, மகனுக்குக் கலச அபிஷேகம் செய்யவும். அப்படியே அவர் தாயும், தந்தையும் அபிஷேகம் செய்துகொள்ளலாம். ஹோமம் செய்த ஆறு மாதத்திற்குள் நல்ல மருமகள் வீடுவந்து சேருவாள்.
● பகவதி சோமசுந்தரம்.
மகன் விஜய் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். தற்போது செய்துவரும் பணியிலிலிருந்து வேறு வேலைக்குப் போகமுடியுமா? அல்லது வெளிநாடு போகலாமா? திருமணம் எப்போது நடைபெறும்?
அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப்பிறகு வேறு வேலைக்கு மாறலாம். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு வெளிநாடு போகலாம். திருமணம் 30 வயதில் (2021-ல்) நடக்கும். வேலை மாறுதலுக்கும், நல்ல வேலைக்கும் சேலம்- மேட்டூர் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம், பூஜை (ஒருமுறை) செய்து வேண்டிக்கொள்ளவும். தொடர்புக்கு: பாலாஜி, செல்: 94435 15904; சீனிவாசன், செல்: 94439 41014.
● வி. புவனேஸ்வரி, எடப்பாடி.
என் மகன் +2 படிக்கிறான். மேற்படிப்பு எந்தத் துறையில் படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?
சுதர்சன் மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். 10-க்குடைய சனி லக்னத்தில் சூரியனோடு சம்பந்தம். எதிர்காலத்தில் அரசு வேலைக்கு இடமுண்டு. 2023 வரை ராகு தசை. அவரும் லக்னத்தில் இருக்கிறார். காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) 20 வகையான ஹோமம் செய்து, அவருக்குக் கலச அபிஷேகம் செய்தால் +2-வில் நல்ல மார்க் எடுத்து மருத்துவத்துறை அல்லது இஞ்சினீயரிங் துறையில் அட்மிஷன் கிடைக்கும். நீட் தேர்வும் பாஸாகும். இந்த இருதுறையும் அவருக்குப் பிரியமில்லையென்றால் எம்.பி.ஏ. அல்லது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட கல்வி படிக்கலாம்.
● கே. மணி, எடப்பாடி.
என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? உடல் ஆரோக்கியம், ஆயுள், மனைவி, மக்கள் யோகம் பற்றியும் விளக்கவும்!
கும்ப லக்னம், உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. சனி தசை நடக்கிறது. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. சனி 12-க்குடைய விரயாதிபதி. சனி தசை முற்பகுதிவரை விரயம். பிறகு நிம்மதி. ஒழுக்கமாக வாழ்ந்தால் ஆயுள், ஆரோக்கியம் பற்றிக் கவலையில்லை. இல்லையென்றால் வைத்தியச்செலவு ஏற்படும். மனைவி, மக்கள் யோகம் குறைவில்லை.
● ஜி சண்முகம், எடப்பாடி.
என் மகள் தற்சமயம் மேல்நிலைக்கல்வி படிக்கிறாள். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக விரும்புகிறாள். முடியுமா? அல்லது வேறு எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம்?
ஸ்ரீதேவி ரிஷப லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 2023 வரை புதன் தசை. 10-க்குடைய சனி 2-ல். ராசிநாதன் குரு 3-ல் உச்சம். லக்னத்தில் சூரியன். அவர் விரும்பியபடி ஐ.ஏ.எஸ் ஆகவும், நீட்தேர்வு பாஸாகவும் (லக்னத்தில் சூரியனோடு ராகு சேர்ந்திருப்பதால்) சூலினிதுர்க்கா ஹோமம் உள்பட 20 வகையான ஹோமம் செய்து ஸ்ரீதேவிக்குக் கலச அபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு பேசவும். மாற்றுத்துறையாக இஞ்சினீயரிங் தேர்ந்தெடுக்கலாம்.
● பி. மணிகண்டன், மதுரை.
நீங்கள் கூறியபடி குபேர பத்ரகாளியம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறேன். எப்போது திருமணம் நடக்கும்?
அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பெண் அமையும். கன்னியா லக்னம். விருச்சிக குரு 7-ஆம் இடத்தைப் பார்க்கப் போகிறார்.