ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-119

ப. சுந்தரம், கோவனூர்.

என் மகள் அனுசுயா (எ) ராஜமீனாவுக்கு மேற்படிப்பு யோகம் உள்ளதா? அரசு உத்தியோகம் அமையுமா? அல்லது தனியார்துறை வேலையா? திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் தேவையா?

அனுசுயாவுக்கு 26 வயது முடிந்து 27 ஆரம்பம். திருவோண நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். லக்னத்தில் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். அத்துடன் 7-க்குடைய செவ்வாய் கடகத்தில் நீசம்! எனவே 27 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகளைச் செய்தால் 28 அல்லது 29 வயதுக்குள் திருமணம் நிறைவேறும். அந்நிய சம்பந்தம். 7-க்குடைய சனி கும்பத்தில் ஆட்சி. பெரும்பாலும் அரசு சம்பந்தமான வேலைக்கு அமைப்புண்டு. நாகதோஷ நிவர்த்திக்கும் நல்லவரன் அமையவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அனுசுயாவுக்கு கலச அபிஷேகம் செய்வது நல்லது.

answers

செல்லபாண்டியன், கம்பம்.

எனக்கு ஜாதகம் தொலைந்துவிட்டது. 13-6-1974-ல், தை மாதம் 2-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை பிறந் தேன். என் நட்சத் திரம், ராசி என்ன?

இந்த விவ ரத்தை மதுரை கே. சுந்தரத்திடம் (செல் 92453 28178) தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜாதகம் புதிதாக எழுதலாம். அதன்பிறகு அதைவைத்து உங்கள் எதிர்காலப் பலனை அறியலாம். முகவரி: அப்பாஸ் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர் மெயின்ரோடு,

ப. சுந்தரம், கோவனூர்.

என் மகள் அனுசுயா (எ) ராஜமீனாவுக்கு மேற்படிப்பு யோகம் உள்ளதா? அரசு உத்தியோகம் அமையுமா? அல்லது தனியார்துறை வேலையா? திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் தேவையா?

அனுசுயாவுக்கு 26 வயது முடிந்து 27 ஆரம்பம். திருவோண நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். லக்னத்தில் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பது நாகதோஷம். அத்துடன் 7-க்குடைய செவ்வாய் கடகத்தில் நீசம்! எனவே 27 வயது முடிந்தபிறகு திருமண ஏற்பாடுகளைச் செய்தால் 28 அல்லது 29 வயதுக்குள் திருமணம் நிறைவேறும். அந்நிய சம்பந்தம். 7-க்குடைய சனி கும்பத்தில் ஆட்சி. பெரும்பாலும் அரசு சம்பந்தமான வேலைக்கு அமைப்புண்டு. நாகதோஷ நிவர்த்திக்கும் நல்லவரன் அமையவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அனுசுயாவுக்கு கலச அபிஷேகம் செய்வது நல்லது.

answers

செல்லபாண்டியன், கம்பம்.

எனக்கு ஜாதகம் தொலைந்துவிட்டது. 13-6-1974-ல், தை மாதம் 2-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை பிறந் தேன். என் நட்சத் திரம், ராசி என்ன?

இந்த விவ ரத்தை மதுரை கே. சுந்தரத்திடம் (செல் 92453 28178) தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜாதகம் புதிதாக எழுதலாம். அதன்பிறகு அதைவைத்து உங்கள் எதிர்காலப் பலனை அறியலாம். முகவரி: அப்பாஸ் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர் மெயின்ரோடு, மதுரை-20.

வி. சம்பத்குமார், சென்னை- 600 126.

எனக்குத் திருமணமாகி ஆறு வருடமாகி றது. இதுவரை குழந்தை இல்லை. திருமணத் தேதி 1-2-2015.

திருமணத்தேதி 1-ம், கூட்டு எண் 2-ம் வருவதால் திருமணநாளில் குற்றமில்லை. அதனால் மாங்கல்யத்தை மாற்றியணிய வேண்டிய அவசியமில்லை. ஜாதகரீதியாக தோஷமிருக்கிறதா என்று பார்த்து அதற்குப் பரிகாரம் செய்யவேண்டும். மதுரை கே.எம். சுந்தரம் வசம் (செல்: 92453 28178) ஜாதகம் எழுதி நகலை அனுப்பிவைக்கவும்.

நாராயணன், கோவில்பட்டி.

1985 வரை சிறிய பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன். அதை ஆக்கிரமிப்பு என்று இடித்து விட்டார்கள். அடுத்து நான் என்ன தொழில் செய்யலாம்? பிளாஸ்டிக் சம்பந்த தொழில் செய்யலாமா?

2023 வரை தனுசு ராசிக்கு ஏழரைச்சனி நடப்பது சிக்கல். நேரில் குடும்ப ஜாதகத் துடன் வந்து பலன்கேட்டு அறியவும்.

டி. கோவிந்தன், ஜோலார்பேட்டை.

என் மகன் சங்கரன் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை வீட்டுக்கு வருவான். வரும்போதெல்லாம் ஏதாவது வம்புசெய்து சண்டை போடுவான். அதனால் நான் முதியோர் இல்லம் சென்றுவிட முடிவெடுத்துள்ளேன். இருக்கும் சொத்து நான் சம்பாதித்தது. அவனிடம் ஒரு பைசாகூட நான் வாங்கு வதில்லை. என் மகளை பி.ஏ., எம்.பி.ஏ படிக்க வைத்தேன். எந்தக் கடனும் இல்லை.

கோவிந்தன் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசிக்கு சனி இப்போது எட்டில் வந்துள்ளார். 2023 வரை அட்டமச்சனி. இக்காலம் உங்களுக்கு அட்டமச்சனி நடப்பதால் இடப்பெயர்ச்சிக்கு இடமுண்டு. நீங்கள் விரும்பியபடி குடும்பத்தைவிடடு வெளியேறி உங்களுக்கு விருப்பமான இடத்தில் போய் இருக்கலாம். மகளுக்கு மணவாழ்க்கைக்கு வசதிவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் வழியை மேற்கொள்ளலாம். அதில் தவறில்லை. நீங்கள் வெளியேறினால்தான் உங்கள் அருமை உங்கள் பிள்ளைக்குப் புரியும்.

மகேஷ், கோவை.

2021 செப்டம்பரில் எனக்கு 60 வயது முடிந்து 70 வயது ஆரம்பம். அதற்கு சாஸ்திரப்படி என்ன செய்யவேண்டும்?

அப்போது ஆவணிமாதம், திருவாதிரை நட்சத்திரம் அன்று கோவையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுகேஷ் வசம் பீமரதசாந்தி ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். அதற்கடுத்த 75 வயது பூர்த்தியின் போது அதேபோல ஆயுஷ் ஹோமம், அதற்கடுத்து 80 வயது ஆரம்பத்தில் சதாபிஷேக ஹோமம் செய்யவும். மேற்படி ஹோமங்கள் செய்வதால் ஆயுள் தீர்க்கம், ஆரோக்கிய விருந்தி உண்டாகும். வைத்தியச்செலவு விலகும். (ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம்.

மகேஷ், கோவை.

என் மகள் யாமினியும் அவள் கணவரும் லண்டனில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார்கள். வருகிற மார்ச் மாதம் (31-3-2021-ல்) விசா முடியும். அதே கம்பெனியில் இன்னும் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வருமா? மேலும் மூன்று வருடங்கள் இருக்கமுடியுமா?

நீங்கள் ஆசைப்படுமளவு மேலும் விசா கிடைக்கவேண்டுமானால் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் சூலினி துர்க்கா ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்யவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வர வாய்ப்பில்லை என்றால், சங்கல்பம் செய்து ஐந்து லிட்டர் கேன் கலசநீர் எடுத்துச் செல்லலாம். அவர்கள் அணிந்த ஆடைகள்மீது கலசநீர் ஊற்றி ஈர உடைகளை தானம் செய்யலாம்.

ஒரு ஜாதகர், ரெட்டியார்பாளையம். பாண்டி.

என் மகள் மருத்துவப் படிப்பு முடித்துள்ளான். எப்போது கிளினிக் சேவை துவங்கலாம்? திருமணம் எப்போது நடக்கும்? அரசுப் பணி கிடைக்குமா? (தயவுசெய்து பெயர் வெளியிட வேண்டாம்.)

தொழில், திருமணம் போன்ற நல்ல விஷயங்களைத்தானே கேட்கிறீர்கள்? ஏதோ கள்ளக்கடத்தல் செய்யலாமா என்று கேட்பதுபோலவும், சட்ட விரோத நடவடிக்கைகளில் இருக்கலாமா என்பது போலவும், ரகசிய செயல்கள் செய்ய யோசனை கேட்பதுபோல பெயர் வெளியிடவேண்டாம் என்பதன் ரகசியம் எனக்குப் புரியவில்லை. இப்படி ரகசியமான கேள்வி என்றால் செலவைப் பார்க்காமல் நேரில்வந்து ஜாதகப் பலன் கேட்கலாமே! உங்களுக்கும் எனக்கும் தெரிந்த ரகசிய மாகவே இருக்குமே!

பகவதி சோமசுந்தரம், ஈரோடு.

எனது மகன் விஜய்க்கு எப்போது திருமணம் நடக்கும்? காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் 16 வகை ஹோமம் செய்யப்பட்டது.

10-5-2022 வரை புதன் தசை, சுக்கிர புக்தி. இதற்குள் திருமணம் முடிந்துவிடும். விஜய் பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். அதற்கு 2-ல் ராகு, 8-ல் கேது. வரும் பெண் ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியில் அல்லது 2, 7, 8-ல் ராகு அல்லது கேது இருக்கவேண்டும். கடக ராசியும் கன்னி ராசியும் 6ஷ்8- சேராது. பூரட்டாதி சிங்கம். இதற்கு யானை யோனி பகை. பரணி, ரேவதி- யானை; சேராது. ரோகிணி, மூலம் வதை தாரை; சேராது. இவற்றை நீக்கிவிட்டு மற்ற ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கவும்.

புவனேஸ்வரி, சேலம்.

என் மகளுக்கு பல வரன்கள் வந்தாலும், என் கணவர் மாப்பிள்ளை வீட்டாரை பற்றி ஏதாவது குறைகூறி தட்டிக் கழிக்கிறார். எனக்கும் மகளுக்கும் பிடித்திருந்தாலும் நிராகரித்துவிடுகிறார். எப்போது திருமணம் நடக்கும்?

அவர் நிராகரிப்பதைக் குறைகூறமுடியாது. பாட்டு எழுதிப் பேர் வாங்குவதைவிட குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் நக்கீரன் பரம்பரை! உண்மையில் தனலட்சுமிக்கு நாகதோஷம் இருப்பதால் திருமணம் கூடவில்லை. பூராட நட்சத்திரம் வரும்நாளில் சேந்தமங்கலம் சென்று குருநாதர் ஜீவசமாதிக்கு விபூதி அபிஷேகமும், தத்தாத்ரேயருக்கு எல்லா அபிஷேகமும் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கணவர் விரும்பும்படி மாப்பிள்ளை அமைவார்.

bala190221
இதையும் படியுங்கள்
Subscribe