வி. சுகுமாரன், மேலக்கடையநல்லூர்.

நான் தையல் தொழிலாளி. எனக்கு 37 வயது. பாடுபட்டும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிறந்த வீடு, திருமணம் செய்த வீடு, உறவு முறை அனைவருமே சத்ருவாக உள்ளார்கள். மனக்குழப்பத்துடன் வாழ்கிறேன். பரிகாரம் உண்டா?

40 வயதுவரை ராகு தசை. இது முடியும் வரை எந்த நன்மையும் நடக்காது. அதன் பிறகு ராசியாதிபதி குரு தசை மனநிறைவைத் தரும். யாருக்கும் எந்த அறிவுரையும் கூறவேண்டாம். உங்களுக்கு நல்லதாகத் தெரிவது மற்றவர்களுக்கு கெடுதலாகப்படும். அதுவே எல்லாரிடமும் வெறுப்பைத் தேடுகிறது. வடக்குப் பார்த்த அம்மனை நெய் விளக்கேற்றி தொடர்ந்து வழிபடுவது நல்லது. முடிந்தால் சீவலப்பேரி அருகில் வல்லநாடு (பாளையங்கோட்டை வழி) சென்று, கணபதி சுவாமி ஜீவசமாதியை வழிபடவும். அடிக்கடி சென்று தியானம் செய்யலாம்.

எம். நடேசன், வேலூர்.

Advertisment

ராகு தசையில் சுயபுக்திக்குப் பிறகாவது ராகு யோகத்தைக் கொடுக்குமா? ராகு மாரகம் செய்யுமா?

தனுசு லக்னம். 10-ல் சனி. அதற்கு செவ்வாய் பார்வை. வாழ்க்கையே போராட்டம்தான். தொழில், வாழ்க்கை 10-ஆம் இடம். 7 மனைவி ஸ்தானம். 7-ல் செவ்வாய்; 10-ல் சனி. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால் அந்திமக் காலம் வரை போராட்டம் இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

answers

Advertisment

பி. பெருமாள், கரூர்.

என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

கடக ராசி, கடக லக்னம். விருச்சிகச் சனியும் ரிஷபச் செவ்வாயும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது தோஷம். 26 வயது முடிந்தபிறகு முயற்சி எடுக்கலாம். 27 முடிவதற்குள் திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

எஸ். ரங்கநாதன், திண்டுக்கல்.

எனது சகோதரி மகள் கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொண்டாள். அனைவரும் வருத்தத்துடன் இருக்கிறோம். மேற்கொண்டு அவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

துலா லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 2-ல் சனி. 7-க்குடையவர் செவ்வாய். 8-ஆம் இடத்தை செவ்வாயும் சனியும் பார்க்கிறார்கள். அதனால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதுதான் ஜாதக அமைப்பு. 2-ஆம் இடம், 7-ஆம் இடம், 8-ஆம் இடம், ஜென்மம் இதற்கு செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் என்பது எனது ஆராய்ச்சியின் தெளிவு. ராசி, லக்னத்தை குரு பார்ப்பதால் விரும்பியவரோடு அவள் வாழ்க்கை விரும்பிய வண்ணம் அமையும். "எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தி மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு திரும்ப வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். விரும்பாவிட்டால் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுங்கள். நடந்ததை நினைத்து வருந்தி நோயை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.

ஆர். முனுசாமி, சென்னை- 6.

வேலையின்மை, எதிரிகள் தொல்லை போன்றவற்றுக்காக சத்ரு சம்ஹார ஹோமம் செய்தேன். இன்னும் வேலை அமையவில்லையே?

விருச்சிக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். நீங்கள் செய்த சத்ரு சம்ஹார ஹோமம் மிகச் சிறந்த ஹோமம். சிலருக்கு உடனடியாகப் பலன் தந்திருக்கிறது. சிலருக்கு தாமதமாகத் தந்திருக்கிறது. குரு தசையில் சுக்கிர புக்தி. சுக்கிரன் கன்னியில் நீசம். அதன்பிறகு சூரிய புக்தி பத்து மாதம். நீசம். அடுத்து வரும் சந்திர புக்திதான் உங்களுக்கு வேலை, வருமானம் ஏற்படுத்தும் காலம். அதுவரை நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருங்கள். எந்தப் பூஜையும் பரிகாரமும் நியாயமான கோரிக்கையாக இருந்தால் தான் பலன் தரும். அதற்கு அவரவர் ஜாதகத்திலும் அந்த அமைப்பு வேண்டும். அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப்பார்த்தால் கரு உருவாகாது. நேரம் காலம் வேண்டும். அதேசமயம் எந்தப் பரிகார பூஜையும் விதியை மாற்றிவிடாது. அப்படியிருந்தால் எல்லாரும் பரிகாரம் செய்துகொண்டு விதியை மாற்றிவிடலாமே!

கே. விநாயகம், திருவண்ணாமலை.

எனக்கு இடது பக்கம் தோள்பட்டைக்குக் கீழே வாயுத் தொல்லை அதிகமாக உள்ளது. டாக்டரிடம் காட்டியும் தீரவில்லை. வருமானம் இல்லை. பிள்ளைகள் தயவில் வாழ்கிறேன். எனது இரு நண்பர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டனர். அதுமுதல் எனக்கும் பயமாக இருக்கிறது.

64 வயது நடக்கிறது. ஏழரைச் சனியும் நடக்கிறது. 53 வயது முதல் 73 வயதுவரை சுக்கிர தசை. கும்ப லக்னம். குரு 12-ல் நீசம். அதனால் உடல்நிலையில் ஏதாவது தொந்தரவு இருக்கத்தான் செய்யும். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். இந்தக் காலத்தில் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் வீட்டில் இருக்கவைத்து ஆதரிப்பது பெரிய சமாச்சாரம்தான். நண்பர்கள் இறந்தது அவர்கள் ஜாதகப் பலன். அதற்காக நீங்களும் மரணமடைந்துவிடுவீர்கள் என்று பயப்பட வேண்டாம். ஆயுள் நீடிக்கும். தன்வந்திரி மந்திரத்தை தினசரி பாராயணம் செய்யவும். நோய்த் தொல்லை விலகும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரை லோக்ய நாதாய ஆரோக்ய லட்சுமி சமேத தன்வந்த்ரயே மகாவிஷ்ணுவே நமஹா.'

எஸ். லட்சுமி, சேலம்-4.

என் மகன் பத்து வருடமாக சம்பாதித்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்துவிட்டு, தற்சமயம் வேலையில் லாமல் இருக்கிறான். வேலை கிடைத்தாலும் சேரும் மனநிலையில் இல்லை. என்ன காரணம்?

அவருக்கு செவ்வாய் தசை- 6-ல் மறைகிறார். எனவே சுகவாசியாக- சோம்பேறித்தனமாக நாள் ஓடும். லக்னரீதியாக அட்டமச் சனி. ராகு தசையில்தான் தொழில், சம்பாத்தியம் எதிர்பார்க்கலாம். செவ்வாய்க்கிழமை தோறும் சிவன் கோவிலில் நந்தி முன்னால் நெய்விளக்கேற்றி மகனுக்கு நல்லது நடக்க வேண்டுமென்று பிரார்த்திக்கவும். 19 வாரம் விளக்கேற்றவும்.