Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-115

எம். உமா, செய்யூர்.

என் மகனின் ஜாதகத் தில் களத்திர தோஷம் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதற்கு என்ன பரிகாரம்? வருகிற கேது தசை எப்படி இருக்கும்? என் தம்பியின் ஜாதகப் படி திருமண யோகம் உண்டா இல்லையா? ரோகிணி நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் யாருக்கு தோஷம்?

Advertisment

மகன் ஜாதகப்படி மேஷ லக்னம்; அதில் ராகு. 7-ல் கேது, சனி. 10-ல் குரு நீசம். எனவே 30 வயது முடியவேண்டும். அதன் பிறகு திருமணம் செய்ய வேண்டும். களஸ்திர தோஷம் நிவர்த்தியாகவும், நல்ல மனைவி அமையவும், திருப்தியான மண வாழ்க்கை அமையவும், நாக தோஷ நிவர்த்தி பூஜையும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண் டும். இந்த ஹோமம் 29 வயது முடிந்து 30 ஆரம்பத்தில் செய்யலாம். ரோகிணி நட்சத்திரத்தில் பையன் பிறந்தால் தாய்மாமனை பாதிக்கும். பெண் பிறந்தால் எந்த பாதிப்பும் யாருக்கும் இருக்காது. பெண் குழந்தை பிறந்தாலும், ஒரு இரு

எம். உமா, செய்யூர்.

என் மகனின் ஜாதகத் தில் களத்திர தோஷம் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். அதற்கு என்ன பரிகாரம்? வருகிற கேது தசை எப்படி இருக்கும்? என் தம்பியின் ஜாதகப் படி திருமண யோகம் உண்டா இல்லையா? ரோகிணி நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் யாருக்கு தோஷம்?

Advertisment

மகன் ஜாதகப்படி மேஷ லக்னம்; அதில் ராகு. 7-ல் கேது, சனி. 10-ல் குரு நீசம். எனவே 30 வயது முடியவேண்டும். அதன் பிறகு திருமணம் செய்ய வேண்டும். களஸ்திர தோஷம் நிவர்த்தியாகவும், நல்ல மனைவி அமையவும், திருப்தியான மண வாழ்க்கை அமையவும், நாக தோஷ நிவர்த்தி பூஜையும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண் டும். இந்த ஹோமம் 29 வயது முடிந்து 30 ஆரம்பத்தில் செய்யலாம். ரோகிணி நட்சத்திரத்தில் பையன் பிறந்தால் தாய்மாமனை பாதிக்கும். பெண் பிறந்தால் எந்த பாதிப்பும் யாருக்கும் இருக்காது. பெண் குழந்தை பிறந்தாலும், ஒரு இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் நிரப்பி, அந்த எண்ணெயில் பிறந்த குழந்தையின் முகத்தைக் காட்டி அந்த நிழலை (எண்ணெயில் தெரியும் உருவத்தை) தாய்மாமன் பார்த்தபிறகுதான் அந்தக் குழந்தையைத் தூக்க வேண்டும். நேராகப் பார்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது- வார்ஷீக ஜென்ம நட்சத்திரத்தன்று ஆயுஷ் ஹோமம் செய்ய வேண்டும்.

jothidamanswer

= சுதா, நாமக்கல்.

எனது பேரன் 7-9-2020 இரவு 7.35மணிக்குப் பிறந்தான். அவனுக்கு மரபணுக் கோளாறு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவன் ஆயுள், ஆரோக்கி யம், எதிர்காலம் எப்படி அமையும்? தந்தைக்கு சொந்தவீடு அமையுமா?

பேரன் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னம். பிறக்கும்போது குட்டிச் சுக்கிர தசை. ஒன்றரை வயதுவரை பாலாரிஷ்ட பீடை உண்டு. ஆயுள்காரகள் சனி ஆட்சிபெற்று 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆனால் குட்டிச் சுக்கிர தசை என்பதால், மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும். 2021 ஆவணி மாதம் அவனுடைய ஜென்ம நட்சத்திரம் பரணி வரும்நாளில், காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் உட்பட 19 வகையான ஹோமம் செய்து, தாய்- தந்தை, குழந்தை மூவரும் கலச அபிஷேகம் செய்துகொள்வது அவசியம். அதுவரை குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ சந்நிதியில் அவன் ஜென்ம நட்சத்திரம் பரணியில் நெய்விளக்கேற்றி வழிபட்டுவரவும். கடவுள் காப்பாற்றுவார்.

என். அசுபதி, சென்னை.

எனக்கு சனி தசை எப்படியிருக்கும்? மனைவிக்கு செவ்வாய் தசை எப்படி இருக்கும்?

அசுபதிக்கு திரு வோண நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னம். நடப்பு சனி தசை- 5-ஆவது தசை என்பதால் கெடுக்காது. 4-ஆவது தசையாக சனி தசை வந்தால் பாதிக்கும். ஆனால் உங்களுக்கு ஏழரைச்சனியில் சனி தசை நடப்பதால், அவர் 12-ல் மறைவதால்- விரயச் செலவுகள் தவிர்க்கமுடியாதபடி அமையும். 6-க்குடையர் 12-ல் மறைந்தா லும் 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் கடன், வைத்தியச்செலவு, சத்ரு, தொல்லைகளை சந்திக்கவேண்டும். சனிக்கிழமைதோறும்' 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் நெய்தீப மாக ஏற்றவும். (2023 ஏழரைச்சனி முடியும் வரை). மனைவி உமாமகேஸ்வரிக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. (42 வயது முடிந்து 43 ஆரம்பம்). செவ்வாய் தசை 5-ஆவது தசையானாலும், ராசிநாதன் தசை என்பதால் ஆயுள் தீர்க்கம். மாங்கல்யம் தீர்க்கம். என்றாலும் குடும்பத்தில் அமைதிக் கும் ஆனந்தத்துக்கும் குறையிருக்கும்! செவ்வாய்க்கிழமைதோறும் துர்க்கை யம்மனுக்கு நெய்தீபமேற்றி வழிபட்டால் விமோசனம் உண்டாகும்!

கே.எம். தியாகராஜன், சென்னை- 600 130.

என் மகள்வழி பேத்தி வி.ஜே. தாரணி (வயது-9) எல்லாக் குழந்தைகளைப்போலத்தான் இருந் தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடுப்பூசி போட்டபோது காய்ச்சல் வந்தது. அதை யொட்டி லேசான வலிப்பும் வந்தது. நாள டைவில் பேச்சு நின்று விட்டது. பல மருத்துவர்களிடம் காட்டி யும் சரிவரவில்லை. பேச்சுவருமா? மற்ற குழந்தைகளைப்போல இயல்பு நிலைக்கு வருவாளா?

சிம்ம லக்னம், பூரட்டாதி நட்சத்தி ரம், மீன ராசி. லக்னத்திற்கு 2-ல் சனி இருப்பது குற்றம். அதனால் பேச்சில் குறை ஏற்படுகிறது. என்றாலும் வாக்குக்காரகன் வியாழன் ஆட்சிபெற்று 2-ஆமிடத்தையும் சனியையும் பார்ப்பதால், பேச்சு வருவதற்கு வாய்ப்புண்டு. வாக் கணபதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம் உட்பட முக்கியமான சில ஹோமங் கள் செய்து குழந்தைக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் சீர்காழியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் திருக் கோலக்கா என்ற சிவக்ஷேத்திரம் உள்ளது. அங்குசென்று பேச்சு வருவதற் குரிய அபிஷேகம் செய்யவேண்டும். ஞானசம்பந்த சிவாச்சாரியார், செல்: 98658 85780, 98430 11264-ல் தொடர்புகொண்டு, விவரமறிந்து பிரார்த்தனை செய்யவும். அதன்பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். பூரண பலன் தரும்.

bala220121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe