எம். ராமசந்திரன், தேனி.
என் மகள் எம்.எஸ்.சி., பி.எட் முடித்துள் ளாள் அரசுப் பணி எப்போது கிடைக்கும்?
கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். சனி தசையில் சூரிய புக்தியில் கிடைக்க வாய்ப்புண்டு. தவறினால் சந்திர புக்தி முடிவிற்குள் கிடைக்கும்.
= வி. சுரேஷ், திட்டக்குடி.
2019-ல் டிப்ளமோ ஈ.ஈ.ஈ. முடித்தேன். தற்போது எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறேன். வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா?
செவ்வாய் தசை நடக்கிறது. 2020-ல் குருப்பெயர்ச்சி முடிந்துவிட்டது. இனி நல்ல வேலை அமையும்.
கே. ராமு, ஆற்காடு.
என் மகன் +2 படித்துள்ளான். அடுத்து எந்தத் துறையில் படிக்கலாம்?
விருச்சிக லக்னம். 7-ல் உள்ள செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் இஞ்ஜினியரிங் படிக்கலாம்.
எஸ். லட்சுமி, காஞ்சிபுரம்.
எனக்கு 65 வயது. சர்க்கரை வியாதி யால் கஷ்டப்படுகிறேன். ஆயுட்காலம் எவ்வளவு?
சர்க்கரை வியாதியை உணவுக்கட்டுப் பாட்டால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதிலும் வேதாத்திரி மகரிஷி யோகத் தாலும் குணப்படுத்த முடியும். கடக லக்னத்தில் சனி இருப்பதால், ஆயுள் குற்றம் வராது. 80 வயது வரைகூறலாம். சந்திரனும் சனியும் பரிவர்த்தனை. மகர ராசி. அட்டமாதிபதி சனி ஜென்மத்தில். குரு பார்வையில்லை. பொருளாதாரப் போராட்டம் வாழ்நாள் முழுவதும் இருக்கத்தான் செய்யும். தியானத் தால் மனநிறைவைப் பெறலாம்.
= பி. மகேஷ், கடலூர்.
என் பெண் நந்தினி மீரா ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருப்பதால், காலம் கடந்து திருமணம் நடக்குமெ
எம். ராமசந்திரன், தேனி.
என் மகள் எம்.எஸ்.சி., பி.எட் முடித்துள் ளாள் அரசுப் பணி எப்போது கிடைக்கும்?
கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். சனி தசையில் சூரிய புக்தியில் கிடைக்க வாய்ப்புண்டு. தவறினால் சந்திர புக்தி முடிவிற்குள் கிடைக்கும்.
= வி. சுரேஷ், திட்டக்குடி.
2019-ல் டிப்ளமோ ஈ.ஈ.ஈ. முடித்தேன். தற்போது எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறேன். வருமானம் பற்றாக்குறையாக உள்ளது. நல்ல வேலை கிடைக்குமா?
செவ்வாய் தசை நடக்கிறது. 2020-ல் குருப்பெயர்ச்சி முடிந்துவிட்டது. இனி நல்ல வேலை அமையும்.
கே. ராமு, ஆற்காடு.
என் மகன் +2 படித்துள்ளான். அடுத்து எந்தத் துறையில் படிக்கலாம்?
விருச்சிக லக்னம். 7-ல் உள்ள செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் இஞ்ஜினியரிங் படிக்கலாம்.
எஸ். லட்சுமி, காஞ்சிபுரம்.
எனக்கு 65 வயது. சர்க்கரை வியாதி யால் கஷ்டப்படுகிறேன். ஆயுட்காலம் எவ்வளவு?
சர்க்கரை வியாதியை உணவுக்கட்டுப் பாட்டால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதிலும் வேதாத்திரி மகரிஷி யோகத் தாலும் குணப்படுத்த முடியும். கடக லக்னத்தில் சனி இருப்பதால், ஆயுள் குற்றம் வராது. 80 வயது வரைகூறலாம். சந்திரனும் சனியும் பரிவர்த்தனை. மகர ராசி. அட்டமாதிபதி சனி ஜென்மத்தில். குரு பார்வையில்லை. பொருளாதாரப் போராட்டம் வாழ்நாள் முழுவதும் இருக்கத்தான் செய்யும். தியானத் தால் மனநிறைவைப் பெறலாம்.
= பி. மகேஷ், கடலூர்.
என் பெண் நந்தினி மீரா ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருப்பதால், காலம் கடந்து திருமணம் நடக்குமென்று இங்குள்ள ஜோதிடர் கூறிவிட்டார். எங்க ளுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள்தான் நல்வழி வேண்டும்.
நந்தினி மீராவுக்கு 21 வயது முடிந்து 22 ஆரம்பம். ரிஷப லக்னம். 2-ல் கேது, 7-ல் சந்திரன் நீசம். 8-ல் ராகு. 9-ல் சனியை 6-ல் உள்ள செவ்வாய் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்ப்பது கடுமையான தோஷம்தான். ஜோதிடர் சொன்னது உண்மைதான். 25 வயது முடிந்தபிறகுதான் திருமணம் செய்யவேண்டும். 25 வயதில் நாகதோஷ நிவர்த்திக்கும் மாங்கல்ய தோஷ நிவர்த்திக்கும் ஹோமம் செய்து அபிஷேகம் செய்யவேண்டும். ஈரஉடைகளை தானம் செய்யவேண்டும். காமோகர்ஷண ஹோமமும், சுயம்வரகலா பார்வதி ஹோமமும் செய்ய வேண்டும்.
= ஆர். ராஜசேகர், திருவள்ளூர்.
நான் இருபது வருடங்களாக மளிகைக் கடை நடத்துகிறேன். தொழிலில் பெரிய முன்னேற்றமில்லை. மாற்றுத் தொழிலாக சித்த வைத்திய மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று நினைக்கிறேன். அது வெற்றியைத் தருமா?
சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். ராகு 2-ல் இருப்பதால் சேமிப்பு இல்லை. ராகுவுக்கு சித்த வைத்தியம், மருந்து வியாபாரம் பொருத்தமானதுதான்; செய்யலாம்.
எஸ். செல்வராணி, வேலூர்.
என் ஆயுள் எவ்வளவு? சுமங்கலியாகப் போவேனா? எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள்மூலமாக வீடு வாங்குவேனா?
கடக லக்னத்தில் குரு உச்சம். தீர்க்க சுமங்கலி! 45 வயதுதான் ஆகிறது. அதற்குள் ஆயுளைப் பற்றி சந்தேகம் ஏன்? பிள்ளைகள் முயற்சியால் சொந்த வீட்டு யோகம் அமையும்!
வி. ராஜ்குமார், உத்திரமேரூர்.
நான் ஜாதகம் கற்று இலவசமாக சேவை செய்யலாமா? மனைவி பேரில் ஏதாவது தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம்?
ரிஷப லக்னம். 2-ல் ராகு இருப்பதால் ஜோதிடம் கற்கலாம். துலா ராசி. தற்சமயம் சொந்தத் தொழில் செய்வதால் பயனில்லை. முதலீடு செய்யாமல் எந்தத் தொழிலும் செய்யலாம்.
டி. ஆதிகேசவன், நாகப்பட்டினம்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? 14 வருடமாக சொந்தத் தொழில் செய்கி றேன்; விருத்தியில்லை. எங்களுடைய வீட்டின் பக்கத்தில் அம்மன் இருக்கிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைக்குமா?
கன்னியா லக்னம், லக்னத்தில் ராகு. கும்ப ராசி, அதில் செவ்வாய். தோஷ ஜாதகம் என்பதால் திருமணம் தடை. 36 வயதாகிறது. இது முடியவேண்டும். 37 வயதில் திருமண நடக்கும். மனைவி வந்தபிறகு தொழில் சிறக் கும். அம்மன் இருக்கும் இடத்தை வாங்க நினைக்காதீர்கள்.
ஆர். ரமேஷ் பாபு, நரியூர்.
எனது சகோதரி ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், கேது இருப்பதால் இரு திருமணம் என்கிறார் கள். உண்மையா?
சரண்யா ஜாதகத்தில் 2-ஆமிடம், 8-ஆமிடத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பதும், 8-ஆமிடத்தை சனி பார்ப்பதும் தோஷம்தான். குரு 12-ல் மறைவு. இப்படிப் பட்ட ஜாதகிக்கு 25 வயதுக்குமேல் திருமணம் நடந்தால் தோஷமில்லை. முன்னதாக நடந்தால் தோஷம்; பாதிக்கும்.
ஜி. கோவிந்தராஜ், முத்தியால்பேட்டை.
எனக்கு 48 வயது. பயன்படாத பூர்வீகச் சொத்து- கண்டுகொள்ளாத சகோதர சகோதரிகள்- பிடிக்காத வேலையில் 30 வருட அனுபவம்- சேமிக்க முடியாத சம்பளம். 30 வருட அனுபவத் தொழிலை சுயமாகத் தொடங்க முதலீடு இல்லை; கடன்வாங்க பயம். ஜோதிட நம்பிக்கை யில்லாத நான் ஜோதிடம் படித்து வருகிறேன். திண்டுக்கல்லில் நடந்த பி.எஸ்.பி. முப்பெரும் விழாவில் தங்கள் பேச்சைக் கேட்கும் பாக்கியம் ஒருமுறை கிடைத்தது. அப்போது முதல் "பாலஜோதிடம்' படிக்கிறேன். என் மகள் +2 படிக்கிறாள். அவள் மேற் படிப்பு, என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத் திரம். 9-க்குடைய குரு 10-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம். கடைசிவரை வறுமை, தரித்திரத்துக்கு இடமில்லை. ஆனால் குரு பார்வை ராசி, லக்னத்துக்கு இல்லை என்பதால், போராட்டமான வாழ்க்கை. குரு தசை, சந்திர புக்திமுதல் முன்னேற்றம், சுயதொழில் யோகம் எதிர்பார்க்கலாம். மகள் கனிமொழிக்கு கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், கன்னியா லக்னம். படிப்பு யோகம் நன்றாகவே உள்ளது. தொழிற்கல்வி (டெக்னிக்கல்) படிக்கலாம். மேற்படிப்புக்கு வங்கிக்கடன் உதவி கிடைக்கும். 25 வயதுக்குமேல் திருமணம் நடக்கும். செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பதால் காதல் திருமணம்- கலப்புத் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.
பி. மோகன், கோவில்பட்டி.
நான் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல் இருந்தது. இனி குடி போகலாமா? அந்த வீட்டில் இருந்தபோது என் மனை விக்கு உடல்நலத் தொந்தரவு ஏற்பட்டது.
நீங்கள் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 9-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். மனைவிக்கு கடக லக்னம். அதில் குரு (9-க்குடையவர்) உச்சம். குரு பலம் இருப்பதால் எந்த செய்வினையும் உங்களை அணுகாது. யார் எந்த செய்வினை செய்தாலும் அது உங்களை பாதிக்காது. அடுத்து வரும் குரு புக்தியில் சொந்த வீட்டுக்குப் போகலாம். சொந்த வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்துவிட்டுக் குடியேறலாம்.
_________________
சந்திராஷ்டம தினங்கள்
மேஷம்: 9-1-2021 காலை 6.00 மணிமுதல் 11-1-2021 காலை 8.55 மணிவரை சந்திராஷ்டமம். திடீர்ப்பயணம்- அதன்மூலம் அலைச்சல் ஏற்படலாம். தாய் உடல்நலம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். சகோதர- சகோதரி வழியில் மனவருத்தம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற போராட வேண்டியதிருக்கும். புதிய வேலைவாய்ப்பு ஏற்படும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபடவேண்டாம். விநாயகரை வழிபடவும்.
ரிஷபம்: 11-1-2021 காலை 8.55 மணிமுதல் 13-1-2021 பகல் 1.00 மணிவரை சந்திராஷ்டமம். வாகனங்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வாழ்க்கைத் துணை வழியே சில சங்கடங்கள் உண்டாகலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் தோன்றலாம். அலுவலக அதிகாரிகளுடன் நெருக்கமான சூழல் உருவாகலாம். நினைத்த காரியத்தை முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும். விநாயகர் வழிபாடும் நல்லது.
மிதுனம்: 13-1-2021 பகல் 1.00 மணிமுதல் 15-1-2021 இரவு 7.15 மணிவரை சந்திராஷ்டமம். பிறருக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உடன்பிறந்தோராலும் பிரச்சினைகள் உருவாகலாம். விட்டுக்கொடுத்துப் போவதன்மூலம் வழிவகை பிறக்கும். தொழில்துறையில் நல்ல முன்னேற்றகரமான சூழல் தென்படும். தகப்பனார் வழி சொத்துகளினால் ஆதாயம் ஏற்படலாம். சதுர்த்தி விரதம் இருக்கலாம்.