● சி.கே. மாரியப்பன், பேரையூர்.
ஒரே மகன் தினேஷ்குமார். +2 படிக்கிறான். மார்க் எப்படி வரும் என்று புலம்புகிறான். அடுத்து பி.ஏ.. படிக்கலாமா? வேலை கிடைக்குமா?
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி. இதில் அரியர்ஸ் வரும். மறுபடி எழுதி பாஸ் செய்யட்டும். அதன்பிறகு மேற்படிப்பைப் பற்றி யோசிக்கலாம்.
● சு. பால்முருகானந்தம், பாலக்காடு.
பொருளாதார சிக்கலிருந்து விடுபட வழிபடும் முறை, பரிகாரம் கூறவும்.
பாலக்காடு அருகிலுள்ள மீன்குளத்தி அம்மனை தொடர்ந்து வழிபடவும். இது எளிய பரிகாரம்! அடுத்து கையில் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காரைக்குடி சுந்தரம் குருக்களைத் (செல்: 99942 74067) தொடர்புகொண்டு சொர்ணாகர்ஷண பைரவர், விஜயலட்சுமி, அஷ்டலட்சுமி, குபேர லட்சுமி முதலிய 23 வகையான ஹோமம் செய்யலாம். பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு, கடன் நிவர்த்தி, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் ஆகிய எல்லா நலன்களும் உண்டாகும்.
● எஸ். சுப்பையா, கீழப்புலியூர்.
என் மகள் பொற்பேச்சி எம்.டெக் (ஐ.டி.) முடித்து தென்காசியில் கோச்சிங் சென்டரில் வேலை செய்கிறாள். அவளுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்?
சித்திரை நட்சத்திரம் 2-ஆம் பாதம், கன்னி ராசி, தனுசு லக்னம். 24 வயது முடிந்து 25 ஆரம்பம். ஜாதகக் குறிப்பும் தசாபுக்தி இருப்பும் எழுதவில்லை. எப்படிப் பதில் சொல்வது?
● சாந்தி, கோவை.
என் மகள் ஞானசூரியா +2 படிக்கிறாள். மேற்படிப்பு குறித்து பெரும் கவலையாக உள்ளது. மருத்துவத்துறையில் சேர விரும்புகிறாள். வாய்ப்பு கிடைக்குமா?
அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னம். 2023 வரை ராகு தசை. 10-க்குடைய செவ்வாய், கேது- ராகு, குரு சம்பந்தம். மருத்துவப் படிப்புக்கு இடமுண்டு. +2 தேர்வு எழுதுவதற்கு முன்னால் பேராவூரணி அருகில் மருந்துப்பள்ளம் என்ற ஊருக்குச் சென்று மருந்தீஸ்வரருக்கு ஒரு அபிஷேகம், பூஜை செய்யவும். +2-ல் நல்ல மார்க்கும், நீட் தேர்வில் வெற்றியும் கிடைக்கும். மெடிக்கல் சீட்டும் கிடைக்கும்.
● பி. கோடிசுந்தரம், குச்சிக்காடு.
பி.கே. ராஜா- அஞ்சலி இருவருக்கும் எப்போது அரசுப்பணி கிடைக்கும்?
2020-ல் அமையலாம்.
● பாபு (எ) வீரபத்திரன், சேத்துப்பட்டு.
என் மகன் சந்துருவுக்கு 36 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் ஜாதகத்தை வாங்கிப் பார்க்கும் பெண் வீட்டார் பிறகு பார்க்கலாம் என்று கொடுத்துவிடுகிறார்கள். அப்படி அவன் ஜாதகத்தில் என்னதான் குறை இருக்கிறது? ஜாதகத்தை பொருத்தம் பார்க்காமல் பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து முடிக்கலாமா?
எப்போது திருமணம் நடந்தாலும் பொருத்தம் பார்த்து முடிப்பதுதான் நல்லது. காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணத்துக்குத்தான் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஜாதகத்தில் களஸ்திர தோஷம், புத்திர தோஷம் இருப்பதால் பெண் வீட்டார் பயப்படுகிறார்கள். எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டு. அதனால் காரைக்குடி சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு கந்தர்வராஜ ஹோமம், காமோகர்ஷண ஹோமம், நாகதோஷ- களஸ்திர தோஷ- புத்திர தோஷ நிவர்த்தி ஹோமம் உள்பட 20 ஹோமங்கள் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 90 நாட்களுக்குள் திருமணம் "செட்' ஆகும்.
● ஆர். ராஜ்குமார், வீரவநல்லூர்.
எந்த தொழில் செய்தாலும் நஷ்டம்தான் வருகிறது. தற்பொழுது அடிமை வேலைக்குக்கூட போகமுடியவில்லை. கடன்மேல் கடனாகிறது. என்ன பரிகாரம் செய்யலாம்? மனைவி ஜாதகப்படி சொந்த வீடு அமையுமா? குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் நல்லபடி அமையுமா?
மனைவிக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி. 2014 முதல் அட்டமச்சனி. 2017 டிசம்பரில் அட்டமச்சனி விலகியும் மழை விட்டும் தூறல் நிற்கவில்லை. பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால முன்னேற்றம், சொந்த வீடு, கடன் நிவர்த்தி போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் 20 வகையான ஹோமம் செய்து நான்குபேரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செல்: 99942 74067.
● மணிமாறன், வலையபட்டி.
என் தாயாரின் பெயரில் இருந்த வீட்டுடன் இருந்த இடம் எனக்கு செட்டில்மென்டுமூலம் பாத்தியமாகிவிட்டது. வீட்டை முற்றிலும் இடித்துவிட்டு புதியதாகக் கட்டும் எண்ணம் இருந்தாலும் போதிய பணவசதியில்லை. சொந்தமாக வீடு கட்டும் முயற்சி கைகூடுமா?
இடத்து சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கும் ஆரணவல்லியம்மனுக்கும் அபிஷேகம், அர்ச்சனை, பூஜை செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863.
● பா. மாணிக்கம், கோவை.
எங்கள் பேரன் பி.ஈ., இறுதியாண்டு படிக்கிறான். படிப்பு, வேலை, முன்னேற்றம் எப்படி அமையும்?
ரிஷப ராசிக்கு அட்டமச்சனி 2020 வரை நடக்கிறது. அதன்பிறகு வேலை மற்றும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனிக்கிழமைதோறும் 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய் தீபத்தில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து 2020 சனிப்பெயர்ச்சிவரை ஏற்றவும்.
● ஜனார்த்தனம்பிள்ளை, திருவேற்காடு.
மகன் முரளி கிருஷ்ணனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? வேலை நிரந்தரம் எப்போது?
கடக லக்னம், கடக ராசி. வேலை நிரந்தரமும் திருமணமும் 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.
● விசுவநாதன், துரிஞ்சிபட்டு.
சுபாஷ் சந்திரபோஸ்- பிரியா இருவருக்கும் 14-7-2011-ல் திருமணம் முடிந்தது. இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் சேர வழி என்ன?
தேதி எண் 5, கூட்டு எண் 7 என்பது ஆகாத தேதி. அதனால் அன்று கட்டிய மாங்கல்யத்தை உண்டியலில் சேர்த்துவிட்டு 1 அல்லது 3 வரும் தேதியில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். அத்துடன் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு ஒரு ஹோமம் செய்யவும்.
● த. பொன்முடி, கள்ளக்குறிச்சி.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? 29 வயது நடக்கிறது.
மகர லக்னம். நாகதோஷம் உள்ளது. அதனால் 30 வயது முடிந்து திருமணம் செய்யலாம்.
● எம். முருகன், நாமக்கல்.
தாயிடமிருந்து பிரிந்திருக்கிறேன். மீண்டும் தாய்- மகன் உறவு கூடுமா? மனைவிக்கு ஆயுள் பலம் எப்படி?
உங்கள் மனைவிக்கு 2020-க்குள் கண்டம் வரலாம். அதையொட்டி தாயார் வந்து சேரலாம். அப்படியே வராவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். நம் எல்லாருக்கும் இறைவன் ஒருவனே தாயும் தந்தையும் உறவும் ஆவான். அவனையே நம்பலாம்.