எஸ். மீனாட்சி, கோடம்பாக்கம்.

எனக்கு 70 வயது. 46 வயதில் கணவர் காலமானபிறகு, தனியாக குடும்பத்தில் எல்லாப் பொறுப்புகளையும் முடித்து விட்டேன். புதன் தசையில் படுக்கையில் கிடக்காமல் என் வேலையை நானே கடைசிவரை செய்துகொள்ள முடியுமா? என் பெண் மகேஷ்ஸ்ரீ சிம்ம ராசி. 5-ஆவது செவ்வாய் தசை- பாதகாதிபதி தசை படுத்துமா? எங்களுக்கு சேவை செய்ய நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மகேஷ்ஸ்ரீ கன்னியா லக்னம், சிம்ம ராசி. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி என்பதால், 5-ஆவது தசை தோஷம் அல்லது பாதகாதிபதி தோஷமென்பது நீங்கிவிடுகிறது; விதிவிலக்கு. மேலும் செவ்வாய் மேஷத்தில் (ராசி- அம்சத்தில்) வர்க்கோத்தமம் என்பதால், கங்கையில் கலக்கும் எல்லா நீரும் (அசுத்த நீரும்) புனிதமாகிவிடுவதுபோல, வர்க்கம் + உத்தமம் என்பதால் தோஷம் எல்லாம் நீங்கிவிடுகிறது. உத்தமம் என்ற சொல்லே வர்க்கோத்தமம் என்ற ஒன்றுக்கே உண்டு. எல்லா ஜாதகங்களுக்கும் யோகாதிபதியே பாதகாதிபதியாக வருவதுண்டு. சர ராசிக்கு 11-க்குடைய லாபாதிபதியும், ஸ்திர ராசிக்கு 9-க்குடைய பாக்கியாதிபதியும், உபய ராசிக்கு 7-க்குடைய சப்தமாதிபதியும் பாதகாதிபதி யாகத்தான் வருவார்கள். ஆனால் அவர்கள் ஆட்சி, உச்சம் பெற்றால் பாதகாதிபதி என்ற தோஷம் விலகிவிடும். நல்லவனோ கெட்டவனோ- ஒழுக்கம் உள்ளவனோ அல்லாதவனோ- அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தாலோ, அமைச்சர் அந்தஸ்தில் இருந்தாலோ போலீஸ் முதல் அனைத்து அதிகாரிகளும் "சல்யூட்' அடிக்கவேண்டும் என்பதுபோல, பாதகாதிபதி ஆட்சி, உச்சம், திரிகோணம் பெற்றால் எல்லா தோஷங்களும் அடிபட்டுப் போகும். ஆனால் அந்த பாதகாதிபத்திய தோஷம் அவருடைய தசாபுக்தியில் செய்யாது என்றாலும், அவர் யார் சாரத்தில் இருக் கிறாரோ அல்லது யாரைப் பார்க்கிறாரோ அவரது காலத்தில் நடக்க வாய்ப்புண்டு. அப்போது அதற் குரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியமாகும்.

q&s

Advertisment

 என் ராமலிங்கம், திருச்சி.

எனது சகோதரியின் திருமணம் எப்போது நடக்கும்? தந்தை இல்லாத பெண். மூத்தவள் கலப்பு மணம் செய்த அதிர்ச்சியால் அப்பா இறந்துவிட்டார். இவள் திருமணமாவது நல்லபடி முடியுமா?

லட்சுமிக்கு உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னம். 8-க்குடைய மாங்கல்ய ஸ்தானா திபதி சுக்கிரன் கன்னியில் நீசம். ராசிக்கு 6-ல் சனி ஆட்சி பெற்று ராசிக்கு 8-ஆம் இடத்தைப் பார்க்க, ராசிக்கு 7-ஆம் இடத்தை செவ்வாயும் பார்ப்பது தோஷம். ஜாதகப்படி 27 வயதில்தான் திருமண யோகம். இதன் மத்தியில் வைகாசிக்கு மேல்- காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகில் நாகநாதசுவாமி கோவிலில், நாகநாதருக்கும் பெரிய நாயகியம்மனுக்கும் நாகலிங்க விநாயகருக்கும் அபிஷேகம் செய்து- அத்துடன் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், பார்வதிகலா சுயம்வர ஹோமம் செய்து லட்சுமிக்கு கலச அபிஷேகம் செய்தால், 25 வயதில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஹோமம் செய்ய வசதி இல்லாவிட்டால், சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

 ஹரிஹரன், மும்பை.

குடும்பத்தில் சமராகு தசை வருவதை முன்னரே கணித்துப் பார்த்து, முன் கூட்டியே ஹோமப் பரிகாரம் செய்ய லாமா? ராகு தசை ஆரம்பத்திலேயே பாதிக்காமல் தவிர்க்கலாமா? அதேபோல் குடும்பத்தில் வெவ்வேறு தசைகள் நடந்து, சமராகு புக்திகள் நடந்தாலும் பாதிக்குமா?

நிச்சயம் முன்னதாகவே ஹோமப் பரிகாரம் செய்துகொண்டால் பாதிப்பு களிலிருந்து தப்பிக்கலாம். என்னோடு பழகியவர்களும் என்னை அணுகியவர்களும் சூலினிதுர்க்கா ஹோமம் முதலியன செய்து சங்கடங்களிலிருந்து காப்பாற்றப் பட்டுள்ளார்கள். உயிர்ச்சேதம், பொருட் சேதத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளது அனுபவப்பூர்வமான உண்மை. ஆனால் அதற்கும் அவர்களுக்கு விதி அமைய வேண்டும். எனது நண்பர் ஒருவர் பலவகையிலும் குடும்பச் சிக்கலோடு, சொத்துகள் இருந்தும் சுகமில்லாமல் அவதிப்பட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்பு என் குருநாதர் பள்ளத்தூரில் இருந்தநேரம், அவரிடம் போய் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் சில ஹோமங்கள் செய்யும்படி கூறினார். அப்போது செலவு மூவாயிரம் ரூபாய்தான். நண்பரும் சரி என்று ஒத்துக்கொண்டு தேதியும் குறித்துவந்தோம். ஆனால் திடீரென்று அவர் மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து இறந்துவிட்டார். மூன்று மாதம் கழித்து பரிகாரம் செய்யலாமென்று விட்டுவிட்டோம். நான்கைந்து மாதங் களான பிறகு மறுபடி ஹோமம் செய்ய தேதி குறித்தோம். தேதி குறித்த பத்தாவது நாளில் அவர் தம்பி இறந்துவிட்டார். பங்காளித்தீட்டு ஆறு மாதங்கள் கழிய வேண்டும். அதுவும் நின்றுவிட்டது. அவர் ஒரு காலண்டர் தயாரிப்பாளர். காலண்டர் சீசன் முடிந்து, ஆறு மாத தீட்டு கழிந்தது. "ஹோமம் செய்வோம்' என்றார். இடையில் ஓரிரவு பிரஸ்ஸில் காலண்டர் வேலை நடந்து கொண்டிருந் தபோது நெஞ்சு வலிக்கிறதென்று ஆட்டோவை வரவழைத்து டாக்டரிடம் போனார். போகும் வழியிலேயே ஆட்டோ வில் இறந்துவிட்டார். ஆகவே பரிகாரம், பூஜை செய்வதற்கும் பிராப்தம் இருந்தால்தான் செய்யமுடியும். அதுமட்டுமல்ல; அதைச் செய்வதற்கு முழு நம்பிக்கையும் அவசியம். மணப்பாறையில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் மகனுக்கு 37 வயதாகியும் திருமணமாகா மல், ஆகுமா ஆகாதா என்றே சந்தேகம் வந்துவிட்டது. கடைசியில் கிருஷ்ணாபுரம் ஆஞ்சனேயரிடம் சென்று படிப்பாயச பூஜை செய்ததும் திருமணமாகிவிட்டது. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ராகு தசை. குடும்பத்தில் இரண்டு ராகு தசை. குழந்தையின் ஒரு வயதில் ஆயுஷ்ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம் செய்யச்சொன்னேன். மகன் சரி என்றார். மருமகளோ பிறந்த நாள் கேக் வெட்டவேண்டும் என்றும், ஹோமத்துக்கு செலவு செய்ய வசதியில்லை என்றும் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தாத்தா கீழே விழுந்து எலும்பு முறிந்து, 25 ஆயிரம் ரூபாய் வைத்தியச் செலவாகிவிட்டது. எதையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும். இப்போது அவர்கள் குடும்பத்தில் மாமியார்- மருமகள் பிரச்சினை, தகப்பனார்- மகன் பிரச்சினை.

 சி. மாயாப்ரியா, தூத்துக்குடி.

என் தாயாருக்கு சிறந்த முறையில் பணிவிடை செய்தும் இறைவனடி சேர்ந்து விட்டார். எனது எதிர்கால வாழ்க்கையும் வேலைவாய்ப்பை யும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். திருமணம் எப்போது நடக்கும்?

பெற்றோருக்கு பணிவிடை செய்தாலும் செய்யாவிட்டாலும் விதி முடிகிறபோது அவர்கள் போகவேண்டியதுதான். அதற்காக கவலைப்பட வேண்டாம். சிம்ம லக்னம். லக்னத்தில் செவ்வாய், மகரத்தில் சனி. இருவரும் 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார்கள். ஆகவே தற்போது திருமணம் தடைப்படும். இப்போது 22 வயதையொட்டி நடக்கிறது. 27 வயதிற்குமேல் 30 வயதிக்குள் திருமணம் நடக்கும். காரணம் செவ்வாய், சனி தோஷம். குரு- 10-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம் நல்ல வேலைவாய்ப்பு அமையும்.