வி. ராதா, திருநெல்வேலி.
என் மகன் மைசூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான். வெளிநாட்டு வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?
மகன் விக்னேஷ் உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னம். ராகு தசை குரு புக்தி. 27 வயது நடப்பு. தற்போதைய குருப்பெயர்ச்சிக்குப்பிறகு வெளிநாட்டு வேலை அமையும். திருமணம் 31 வயதுக்குமேல் நடக்கும். பாளையங்கோட்டை வழி வல்லநாடு சென்று சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் நெய் தீபமேற்றி மகனுக்காக 16 சுற்று வலம்வந்து வேண்டுங்கள். 16 வியாழக்கிழமைகள் செல்வது நல்லது. அன்னதானத்துக்கு காணிக்கை கொடுங்கள். ஒவ்வொரு பூச நட்சத்திரத்திரத்தன்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.
ஏ.எஸ். செல்வம், ஈத்தன்காடு.
உங்கள் அறிவுரைப்படி தேவிபட்டினம் சென்று ஹோமம், அபிஷேகம் செய்தேன். திருமணத் தடை நீங்கி எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமா- அன்னியமா? குடல் இறக்கம் காரணமாக சிறிய ஆபரேஷன் செய்துகொண்டேன். பழைய வீடு மழையில் இடிந்துபோனதால், வேறொரு வாடகை வீட்டில் குடிபுகுந்துள்ளேன். எப்போது மீண்டும் வீடு கட்டலாம்?
மகர லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். ஆகஸ்டில் 37 வயது முடிந்தது. தற்போது குருப்பெயர்ச்சி. குரு லக்னத்தில் வந்தமர்ந்து 7-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம் திருமணம் கூடும். திருமணத்துக்கு முன்பு வீட்டைக் கட்டி முடியுங்கள். திருமணம் முதலில் நடந்தால் ஆறு மாதம் கழித்துதான் வீடு கட்டவேண்டும். வேறு பரிகாரம் எதுவும் தேவையில்லை.
பி. பிரபா, சேலம்-7.
எனது உடல்நிலை, ஆரோக்கியம், உத்தியோகம் எப்படியிருக்கும்? சொந்த வீடு வாங்கும் யோகம் எப்போது கிட்டும்? கட்டிய வீடா அல்லது மனையா?
அவிட்ட நட்சத்திரம் 2-ஆம் பாதம், மகர ராசி. குரு தசை நடக்கிறது. இதில் ராகு புக்தி. ஆயுள் தீர்க்கம்; மாங்கல்யம் தீர்க்கம். ஆனால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். பயப்படத் தேவையில்லை. அடுத்துவரும் சனி தசையில் கணவரோடு இணைந்து தொழில் செய்யலாம். அதுவரை தனித்தனியே தொழில், வேலை பார்க்கலாம். ராகு புக்தி வரப்போவதால் விபத்து, அறுவை சிகிச்சை, மாதவிடாய்க் கோளாறு போன்றவை வரலாம். அதைத் தடுக்க- நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயருக்கும் குருநாதர் ஜீவசமாதிக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யவும். (ஒருமுறை). ஸ்ரீராம், செல்: 93454 38950-ல் தொடர்புகொள்ளலாம்.
எஸ். குமார், சேலம்-7.
நான்கு வருடங்களுக்கு முன்பு சுக்கிர தசையில் பிற்பகுதி நன்றாக இருக்குமென்று கூறியிருந்தீர்கள். அக்கா விடம் கொடுத்த பணம் மாட்டிக்கொண்டது. எப்போது வரும்? வீடு, வாகனம், சேமிப்பு எப்úôபது அமையும்? வேலை உள்ளூரிலா அல்லது வெளிநாட்டிலா?
மீன ராசிக்கு சுக்கிரன் அட்டமாதிபதி- துலா லக்னத்துக்கும் சுக்கிரன் அட்ட மாதிபதி. அதனால்தான் சுக்கிர தசை பிற்பகுதி யோகமாக இருக்கும் என்றேன். பெரும்பாலும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடு யோகம் அமையும். சேலம்- மேட்டூர் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்தால் எல்லாம் சிறப்பாக அமையும். பாலாஜி, செல்: 94435 15904 அல்லது சீனிவாசன், செல்: 94439 41014- இருவரில் யார் முறை என்று அறிந்து தொடர்புகொண்டுபோய் பூஜை செய்யவும்.
திருமதி மகேஷ்வரன், லண்டன்.
எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? வேலை கிடைக்குமா? கிடைக்கும் வேலை நிலைக்குமா?
பூரட்டாதி 4-ஆம் பாதம், மீன ராசி, சிம்ம லக்னம். இது குழப்பமான காலம். பிரச்சினைகள் நிறைந்த காலம். ஆரோக்கியம், மனோ நிலையிலும் பிரச்சினைகள் வரலாம். வேலை கிடைப்பதிலும் தடை, தாமதம். கிடைத்தாலும் திருப்தி இருக்காது. அதாவது வெளியூர் பயணம் போகும்போது நேர்வழி ஒரே பஸ்ஸில் போகமுடியாமல் பஸ் மாறி மாறி பயணம் போவது மாதிரி வேலையும் வாழ்க்கையும் "ஸ்டெடி' இல்லாமல் இருக்கும். விநாயகரை பிரதானமாக வழிபடவும். இந்தியா வரும்போது வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் செய்யலாம்.
ஆர். ராஜா, திருவண்ணாமலை.
எனது ஜாதக அமைப்பின்படி என்ன செய்தால் வியாபாரத்தில் மேன்மை யான நிலைக்கு வர முடியும்? எலக்ட்ரிக் கடை வைத்திருக்கிறேன். அரசியல் யோகம் உண்டா? சிறிய சிவன் கோவில் கட்டிவருகிறேன். கும்பாபிஷேகம் ஆகவில்லை. எப்போது செய்யலாம்?
மிதுன லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசி. ஆவணியில் 30 வயது முடியும். இந்த சிறு வயதில் சிவன் கோவில் கட்டுவதென்பது பெரிய வரப்பிரசாதம். அதேசமயம் ஒரு கோவில் கட்டுவதென்றால் பல சோதனைகளைச் சந்திக்கவேண்டும். உங்களுடைய தொழில்துறையிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பாதிப்பான நிலையைச் சந்தித்து கடக்கவேண்டும். கும்பாபிஷேகத்தை எவ்வளவு சீக்கிரமாக நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நடத்தி முடியுங்கள். அதன்பிறகு பொருளாதார நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அடுத்து மண்டலாபிஷேக பூஜை முடிந்ததும் தொழில், வியாபாரம், பொருளாதாரம் எல்லாமே நிறைவாகிவிடும். அடுத்து ஒரு வருடம் முடிந்து மறுபூஜை நிறைவேறியதும் உச்சக்கட்ட மேன்மை உண்டாகிவிடும். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றமாதிரி சிவனையே சிந்தித்து செயல் படுங்கள். எல்லாம் சீராகிவிடும். தொழில் மாற்றம் தேவையில்லை.