கே. மாதவன், சென்னை.
எனது மகன் சரத்குமார் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. அவருக்கு வாரிசு எப்போது கிடைக்கும்?
சரத்குமார் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதால் வாரிசு அமைவதில் தாமதம், தடை ஏற்படலாம். 38 வயது முடிந்து 39 ஆரம்பம். நடப்பு சனி தசை, ராகு புக்தி 25-6-2020 வரை. இது முடியவேண்டும். இதன்பிறகு வரும் குரு புக்தியில் வாரிசு கிடைக்கும். ஒரு வியாழக்கிழமை கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜை செய்யவும். அதன்பிறகு வாரிசு யோகம் அமையும். அத்துடன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வழி திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிகையம்மன் சந்நிதியில் (கருகாத்த அம்மன்) படி பூஜையும் செய்யவேண்டும். அங்கு தேன் விற்பனையாகும். அதைவாங்கி குருக்கள் சொல்கிறபடி பூஜைசெய்து கணவரும் மனைவியும் தொடர்ந்து ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும்.
பன்னீர்செல்வன், மதுரை.
நாட்டில் எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றன. மக்களுக்கும் எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. இதை யெல்லாம் விட்டுவிட்டு ஜோதிடத்துக் கென்று நேரம் ஒதுக்கி காலத்தை வீணடிக்கலாமா?
மனிதக்கடமைகள் எவ்வளவோ இருக்கும்போது டி.வி.யில் சீரியல் பார்த்து காலத்தை "வேஸ்ட்'
கே. மாதவன், சென்னை.
எனது மகன் சரத்குமார் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. அவருக்கு வாரிசு எப்போது கிடைக்கும்?
சரத்குமார் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதால் வாரிசு அமைவதில் தாமதம், தடை ஏற்படலாம். 38 வயது முடிந்து 39 ஆரம்பம். நடப்பு சனி தசை, ராகு புக்தி 25-6-2020 வரை. இது முடியவேண்டும். இதன்பிறகு வரும் குரு புக்தியில் வாரிசு கிடைக்கும். ஒரு வியாழக்கிழமை கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜை செய்யவும். அதன்பிறகு வாரிசு யோகம் அமையும். அத்துடன் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வழி திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிகையம்மன் சந்நிதியில் (கருகாத்த அம்மன்) படி பூஜையும் செய்யவேண்டும். அங்கு தேன் விற்பனையாகும். அதைவாங்கி குருக்கள் சொல்கிறபடி பூஜைசெய்து கணவரும் மனைவியும் தொடர்ந்து ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும்.
பன்னீர்செல்வன், மதுரை.
நாட்டில் எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றன. மக்களுக்கும் எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. இதை யெல்லாம் விட்டுவிட்டு ஜோதிடத்துக் கென்று நேரம் ஒதுக்கி காலத்தை வீணடிக்கலாமா?
மனிதக்கடமைகள் எவ்வளவோ இருக்கும்போது டி.வி.யில் சீரியல் பார்த்து காலத்தை "வேஸ்ட்' ஆக்கலாமா? கேட்டால் பொழுதுபோக்கு என்றும், மனசுக்கு "ரிலாக்ஸ்' என்றும் சொல்வார்கள். டி.வி. அல்லது சினிமா எல்லாம் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள். காசையும் செலவழித்து கண்ணுக்கும் கெடுதலைத் தேடிக்கொள்கிறார்கள். மிக அதிகமாக சினிமா பார்க்கிறவர்களுக்கும், அதிலும் குறைந்த கட்டணத்தில் திரைக்கு அருகில் அமர்ந்து திரைப்படம் பார்க்கிறவர்களுக்கும் வெகுவிரைவில் கண்ணாடிபோட வேண்டிய நிலை உண்டாகும். டி.வி அல்லது சினிமா வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே! அதனால் வாழ்க்கைக்கு எந்த நன்மையும் இல்லை; பயனுமில்லை. ஆனால் ஜோதிடம் அப்படியில்லை. ஜோ-திடம் என்பது மனதுக்கு திடம்- ஜோதி உள்ள இடம்- அதாவது ஜோதி விளங்கும் இடம்.
சி. சிவரஞ்சனி, மயிலாடுதுறை.
எனது தங்கை தீபிகாவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? 8-ல் சனி இருப்பது தோஷமா? லக்னத்தில் செவ்வாய் நின்று 7-ஆமிடத்தைப் பார்ப்பது தோஷமா?
தீபிகா பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னம். அதில் செவ்வாய் நீசம் பெற்று மாங்கல்ய ஸ்தானத்தையும், அங்குள்ள சனியையும் பார்ப்பது தோஷம்தான். காதல் திருமணம் அல்லது கலப்புத்திருமணம் நடக்க அமைப்புண்டு. அதை குரு பார்ப்ப தால் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் நடத்தி அவருக்கு கலச அபிஷேகம் செய்தால், அந்த அமைப்பு மாறுவதற்கு இடமுண்டு. மேற்படி ஹோமம் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு செய்யலாம். (செல்: 99942 74067).
பொன்னையா, ராஜேந்திரன், கோவை- 18.
எனக்கு சனி தசை, புதன் புக்தி யில் மாரகம் என்பது சரியா? எனக்கு வரவேண்டிய சம்பள பாக்கிக்காக கேஸ் நடக்கிறது. வழக்கு எப்போது முடியும்? பணம் எப்போது கிடைக்கும்? சனி தசை. சனி லக்னாதிபதி, விரயாதிபதி என்று இரண்டு ஆதிபத்தியம் பெறுவதால் எப்படியிருக்கும்? குரு தசை செப்டம்பரில் முடிவதற்குள் ஏதேனும் யோகம் செய்யுமா?
1951 டிசம்பரில் ஜனனம். 2020 டிசம்பரில் 69 வயது முடியும். இந்த வயதில் என்ன யோகம் எதிர் பார்க்கிறீர்கள்? அமிர்தயோகம், சித்த யோகம் என்பதுபோல மரணயோகமும் ஒரு யோகம்தான். மரணத்தை ஏன் ஒரு யோகமென்று குறிப்பிட்டார்கள் தெரியுமா? மரணத்தின் பலன்- அல்லது பயன் எந்தக் கவலையும் இல்லாத நிலை. பிரச்சினைகளின் முடிவுக்கட்டம். அதனால்தான் அதையும் ஒரு யோகம் என்றார்கள். (சனி தசையே அந்திம தசை). 7-ஆவது தசை.
ந. காந்திமதி, இராசிபுரம்.
கடந்த ஏழு வருடங்களாக "பால ஜோதிடம்' வாசகியாக உள்ளேன். எங்கள் குடும்பமே உங்களுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். எனது மகள் சுவேதா 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டாள். அடுத்து மேற்படிப்பு டிப்ளமோ அக்ரிகல்சர் அல்லது டிப்ளமோ சித்தா- இதில் எது படிக்கலாம்? எது கிடைக்கும்? சூரியன் பகை என்பதால் மேற்படிப்புக்குத் தடையா? 12-ல் ராகு, சனி இருப்பது தோஷமா?
சுவேதா அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. அட்டமச்சனி முடிந்துவிட்டதால் தடையைக் கடந்துவிட்டார். இனி பாதிப்பில்லை. மிதுன லக்னம். 10-க்குடைய குரு 2-ல் உச்சம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதாலும், குருவையும் 10-ஆம் இடத்தையும் தனுசு செவ்வாய் பார்ப்பதாலும்' டிப்ளமோ சித்தா படிக்க வாய்ப்புண்டு. சூரியன் பகை வீட்டில் (சனி வீட்டில்) இருந்தாலும் லக்னாதிபதி புதனோடு சம்பந்தம். மேலும் சனியின் பார்வையையும் பெறுகிறார். அதனால் பகைத் தன்மை விதி விலக்காகிறது!
க. ராஜேந்திரன், மதுரை.
என் மாமனாருக்கு 89 வயது. கடந்த பத்து நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட்டமில்லை. பாதகாதிபதி தசை, பாத காதிபதி புக்தி என்பதால் பாதிப்பா? அல்லது கன்னி ராசிக்கு கண்டச்சனி என்பது காரணமா?
மாமனார் குருசாமிக்கு கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம், கடக லக்னம். சுக்கிர தசை சுக்கிரபுத்தி 2-9-2021 வரை, இது பாதிப்பான காலம்தான். பாதகாதிபதி 10-ல் பலம்பெற்று சுக ஸ்தானத்தைப் பார்க்கிறார். மேலும் அட்டமாதிபதி சனியும் 7-ல் ஆட்சி பலம் பெற்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதும் தோஷம்.
ஆர். விஜய், திருவண்ணாமலை.
எனக்கு தற்பொழுது பாதகாதிபதி தசை நடக்கிறது. இது நன்மையா? தீமையா? இரவில் தூங்கும்பொழுது கெட்ட கெட்ட கனவுகள் வருகின்றன. சிலசமயம் அமானுஷ்ய கனவுகளும் வருகின்றன. இதற்கு என்ன பரிகாரம்? புதனும் சுக்கிரனும் வக்ரமாக இருப்பது நன்மையா?
கெட்ட கனவுகள் வந்தவுடன் விழிப்பு வரும். எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு முகத்தை அலம்பிவிட்டு விபூதியை பூசிக்கொண்டு "குருவடி சரணம் திருவடி சரணம்' என்று 11 முறை சொல்லிவிட்டுப் படுக்கவும். புதனும் சுக்கிரனும் 10-ல் வக்ரம் பெறுவது நல்லதுதான். வக்ர கிரகங்கள் கெட்ட இடத்தில் இருந்தால் கெடுதல் அதிகம்; நல்ல இடத்தில் இருந்தால் நன்மைகள் அதிகம்! பாதகாதிபதி சந்திரன் 10-ல் இருப்பது- அதாவது 9-க்குடையவர் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம்- கெடுதல் இல்லை. மேலும் 9-ல் லக்னாதிபதி செவ்வாய் நிற்க, அவரை குரு பார்ப்பது தோஷ நிவர்த்தி. சந்திர தசை முடியும்வரை திங்கட்கிழமை தோறும் உள்ளூர் சிவன் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய 200 அல்லது 300 அல்லது 500 மி.லிட்டர் பால் வாங்கித் தரவும்.