பிரசன்னா, மதுரை.
எனக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக உள்ளது. பெருமாள்மீது பக்தி அதிகம். கோவில் கைங்கர்யப் பணி கிடைக்குமா? துறவியாகிவிட மனம் விரும்புகிறது. அல்லது திருமணம் நடக்குமா?
ஆற்றிலே ஒரு கால்- சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும். திருமண ஆசையிருந்தால் ஜாதகப் பொருத்த மெல்லாம் பார்க்காமல், மனதுக்குப் பிடித்தமான குடும்பத்தில் பேசி திருமணம் செய்துகொள்ளுங்கள். 27 வயதுதான் நடக்கிறது. இதில் 60 வயதுக் காரரைப்போல் வேதாந்தம் பேசி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றவேண்டாம். என்னிடம் ஒரு தக்காளி வியாபாரி ஜாதகம் பார்க்க வந்தார். அவர் உடம்பெல்லாம் வெள்ளை படர்ந்தி ருந்தது. மனைவி இறந்து நான்கு வருடங்களாகி விட்டன. மகனுக்குத் திருமணம் பேசும் நிலையில், அவருக்கே பெண் சபலம் இருக்கிற தென்று அவர் பேச்சு, நடவடிக்கைகளில் தெரிந்தது. பொதுவாக, இப்படிப்பட்ட நோயுள்ளவர்களுக்கு மற்றவர்களுக்கும் இந்நோய் பரவ வேண்டும் என்னும் குண மிருக்கும். அதுமாதிரி உங்களிடம் உங்களை அறியாமல் வளரும் சபல புத்தியைக் களை யெடு
பிரசன்னா, மதுரை.
எனக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக உள்ளது. பெருமாள்மீது பக்தி அதிகம். கோவில் கைங்கர்யப் பணி கிடைக்குமா? துறவியாகிவிட மனம் விரும்புகிறது. அல்லது திருமணம் நடக்குமா?
ஆற்றிலே ஒரு கால்- சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வைராக்கியமாக இருக்கவேண்டும். திருமண ஆசையிருந்தால் ஜாதகப் பொருத்த மெல்லாம் பார்க்காமல், மனதுக்குப் பிடித்தமான குடும்பத்தில் பேசி திருமணம் செய்துகொள்ளுங்கள். 27 வயதுதான் நடக்கிறது. இதில் 60 வயதுக் காரரைப்போல் வேதாந்தம் பேசி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றவேண்டாம். என்னிடம் ஒரு தக்காளி வியாபாரி ஜாதகம் பார்க்க வந்தார். அவர் உடம்பெல்லாம் வெள்ளை படர்ந்தி ருந்தது. மனைவி இறந்து நான்கு வருடங்களாகி விட்டன. மகனுக்குத் திருமணம் பேசும் நிலையில், அவருக்கே பெண் சபலம் இருக்கிற தென்று அவர் பேச்சு, நடவடிக்கைகளில் தெரிந்தது. பொதுவாக, இப்படிப்பட்ட நோயுள்ளவர்களுக்கு மற்றவர்களுக்கும் இந்நோய் பரவ வேண்டும் என்னும் குண மிருக்கும். அதுமாதிரி உங்களிடம் உங்களை அறியாமல் வளரும் சபல புத்தியைக் களை யெடுத்துவிட்டு, கிரகஸ்தமா? பிரமச்சரியமா என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுங்கள். உங்கள் ஜாதகப்படி துறவியாக முடியாது. 30 வயதுக்குமேல் திருமணம் நடந்தால் ஒரே மனைவி- அதற்குமுன் திருமணம் நடந்தால் இரண்டு மனைவிகள்.
மகேஷ், கோவை.
எனக்கு கேது தசை நடக்கிறது. அடுத்து வரும் சுக்கிர தசையும், மிதுன ராசிக்கு அடுத்து வரும் அட்டமச்சனியும் எப்படியிருக்கும்?
நடப்பு வயது 69 ஆரம்பம். (செப்டம்பர் முதல்). 2020, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. 2023 வரை. அப்போது உடல்நலக் குறைவு அல்லது மாரகத்துக்குரிய வைத்தியச் செலவு வரலாம். பொதுவாக, 60, 70, 80 வயதுகளில் ஏதாவதொரு கண்டம் வரலாம். ஆயுள் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவகிரக ஹோமம் செய்துகொண்டால் பத்தாண்டுகள் ஆயுள் நீடிக்கலாம். குடும்பத்தினருடன் கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம்.
டி. பாலஜோதி, சென்னை.
தங்களை வாழ்த்த வயதில்லை- வணங்குகிறேன். எனது மூத்த மகன் 2019-2020-ஆம் கல்வியாண்டில் எம். டெக் முதல் ரேங்க் பெற்றுப் பட்டம் பெற்றுள்ளான். மேற்கொண்டு என்ன செய்யலாம்- வேலைக்குப் போகலாமா? ஆராய்ச்சிப் படிப்பு படிக்கலாமா? சிறந்த ஆராய்ச்சிக் கூடத்தில் இடம் கிடைக்குமா? அல்லது அவனது லட்சியக் கனவான ஐ.ஏ.எஸ் பணித் தேர்வுக்கு முயற்சி செய்யலாமா? தற்போது குடியுரிமைத் தேர்வு எழுதிவருகிறான்.
அவிட்ட நட்சத்திரம் 4-ஆம் பாதம். கும்ப ராசி, துலா லக்னம். கும்ப ராசிக்கு 2020, டிசம்பரில் ஏழரைச்சனி ஆரம்பம். எனினும், அது பொங்குசனியாகும். 11-க்குரிய சூரியனும், 10-க்குரிய சந்திரனும் ஒன்றுசேர்ந்து 5-ல் லக்னாதிபதி சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் உயர்கல்வி யோகமுண்டு. குடியுரிமைத் தேர்வு எழுத லாம். முன்னதாக இரண்டு பரிகாரம் செய்யவேண்டும். தஞ்சை அருகில் பரிதியப் பர் கோவில் எனும் ஊரி லுள்ள பாஸ்கரேஸ்வர சுவாமிக்கு அபிஷேக பூஜை செய்யவும். அடுத்து, ஹோமம் செய்பவர்களைத் தொடர்புகொண்டு ஹயக்ரீவர் ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், வித்யா கணபதி ஹோமம் உள்பட 11 அல்லது 13 வகை யான ஹோமம் செய்து, ஜாத கருக்கு கலக அபிஷேகம் செய்யவேண்டும்.
எம். ஜெயலட்சுமி, திருச்சி.
என் மகள் அருணா தேவி பி. ஈ., முடித்து தகவல் தொழில்நுட்ப நிறுவனத் தில் பணிபுரிகிறாள். அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? தகவல் தொழில் நுட்பப் பணியிலுள்ள வரனைத் தவிர்த்து வேறு வரனைத் தேடி வருகிறோம்.
அருணாதேவி உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னம். நடப்பு வயது 26. 2020, டிசம்பரில் 27 வயது ஆரம்பம். 19 வயதுமுதல் ராகு தசை ஆரம்பம். ராகு தசையில் புதன் புக்தி 2021, மார்ச் வரை நடப்பு. இதன்பிறகு கேது புக்தி அல்லது சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும்.
ஆர். பெருமாள், திருக்கோவிலூர்.
என் இளைய மகன் கோபால் ஜாதகத்துக்குப் பலன் கேட்டபோது (இரண்டு வருடங்களுக்குமுன்பு) சனி, செவ்வாய் பார்வை உள்ளது. காதல், கலப்புத் திருமணம் நடக்கும் என்றீர்கள். அதன்படியே, சென்னையில் வேலை செய்யுமிடத்தில் ஒரு கிறிஸ்துவப் பெண் தொடர்பு ஏற்பட்டு, அந்தப் பெண் போலீசில் புகார் செய்து, நான்கு மாதம் அவகாசம் கேட்டுள்ளோம். ஒரு வழக்கறிஞர்மூலமாகப் பேசினால் அந்தப் பெண் ஒதுங்கிப்போக வாய்ப்புண்டா? அப் பெண் எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நரக வாழ்க்கைதான்.
கோபால் ஜாதகப்படி துலா லக்னம். அதில் செவ்வாய். அவரை மகரச் சனி பார்க்க- செவ்வாயும் பார்க்கிறார். எனவே, கலப்புத் திருமணம் என்பதுதான் விதி. பெண் வீட்டில் வழக்கறிஞர் மூலம் பேசிப் பார்க்கலாம். அவர்கள் சமாதானமடைந்துவிட்டால் நஷ்டஈடு கொடுத்து சரிக்கட்டலாம். அதன் பிறகு, பின்தொடர்ச்சி வராமலிருக்கவும், வேறுபெண்ணைத் திருமணம் செய்யவும் காரைக்குடியில் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். கோபாலுக்கு பருவக் கோளாறு. மனதைக் கட்டுப்படுத்த முடி யாமல் சிக்கிக்கொண்டார். முள்ளில் விழுந்த ஆடையைக் கிழியாமல் எடுக்கவேண்டும்.
ஏ. ராமச்சந்திரன், ரெட்டைவாய்க்கால். (திருச்சி).
6-12-1961-ல் பிறந்தேன். பத்துப் பதினைந்து வருடங்களாகத் தங்களின் அறிவுரைப்படியே காலம் ஓடுகிறது. தற்போது சிறுநீரகம் சம்பந்தமான தொந்த ரவு மூன்று வருடங்களாக இருக்கிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்துவருகிறேன். உப்பில்லாத பத்தியம் தான். ஏதாவது பெட்டிக்கடை வைத்து எஞ்சிய காலத்தைக் கழிக்கலாமென நினைக்கிறேன்.
மேஷ லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். 59 வயது முடிந்து 60 ஆரம்பம். பொதுவாக, 60, 70, 80 வயதுக் காலம் ஒரு மனிதனுக்கு கஷ்டம் ஏற்படும் காலம். ஆயுள் பலமாக இருந்தால் நோய்நொடி- வைத்தியச் செலவு ஏற்பட்டு விலகும். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தன்வந்திரி பகவானுக்கு தனிச்சந்நிதி உண்டு. வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அவரை தரிசனம் செய்து வேண்டிக்கொள்ளவும். அவர்தான் ஆரோக் கியத்தைத் தரும் கடவுள்.