ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-103

ஜி. சண்முகம், தஞ்சாவூர்.

ஜோதிடத்தின் மகுடமே! சுமார் 15 வருடங்களாக உங்கள் பரம ரசிகன். உங்கள் எழுத்தும் ஜோதிடப் புலமையும் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. எனக்கு சனி தசையில் ராகு புக்தி. ஆயுள்பலம் எப்படியுள்ளது? ஒன்றரை வருடமாக உடல்நிலை பாதிப்புள்ளது. எப்பொழுது சரியாகும்? டிசம்பரில் ஏழரைச்சனி ஆரம்பிக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. இதுவரை நடந்த செவ்வாய், குரு, சனி தசை சரியில்லை. அடுத்துவரும் புதன் தசையாவது நன்றாக இருக்குமா?

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னமும் ராசியும் சஷ்டாஷ்டகம். (6, 8). லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். இரண்டும் ஆறு, எட்டு சஷ்டாஷ்டகமாக இருந்தால், அந்த ஜாதகர் எல்லாவகையிலும் எதிர்நீச்சல் போடும் நிலையிலுள்ளவர். இதற்குப் பரிகாரம்- திருச்சி அருகில் திருப்பட்டூர் சென்று தலையெழுத்தை மாற்றும் பிரம்மாவை வழிபடவேண்டும்.

ரா. உலகம்மாள் (எ) சுதா, கலிங்கப்பட்டி.

உங்கள் அருள்வாக்கு பலித்துவிட்டது. எனக்குத் திருமணமாகி பத்து மாதங்களாகி விட்டன. அடுத்து குழந்தை பாக்கியம் எப்போது ஏற்படும்? இருவருக்கும் அரசு வேலை அமையுமா? எப்போது அமையும்?

கணவர் சங்கர் (எ) மாணிக்கவாசகம் மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னம். 2024 வரை குரு தசை நடப்பு. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி.

அப்பொழுது சங்கருக்கு (ரிஷப ராசிக்கு) அட்டமச்சனி விலகிவிடும். அதன்பிறகு அரசு வேலை முயற்சி கைகூடும். சுதாவுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ரா

ஜி. சண்முகம், தஞ்சாவூர்.

ஜோதிடத்தின் மகுடமே! சுமார் 15 வருடங்களாக உங்கள் பரம ரசிகன். உங்கள் எழுத்தும் ஜோதிடப் புலமையும் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. எனக்கு சனி தசையில் ராகு புக்தி. ஆயுள்பலம் எப்படியுள்ளது? ஒன்றரை வருடமாக உடல்நிலை பாதிப்புள்ளது. எப்பொழுது சரியாகும்? டிசம்பரில் ஏழரைச்சனி ஆரம்பிக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. இதுவரை நடந்த செவ்வாய், குரு, சனி தசை சரியில்லை. அடுத்துவரும் புதன் தசையாவது நன்றாக இருக்குமா?

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னமும் ராசியும் சஷ்டாஷ்டகம். (6, 8). லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். இரண்டும் ஆறு, எட்டு சஷ்டாஷ்டகமாக இருந்தால், அந்த ஜாதகர் எல்லாவகையிலும் எதிர்நீச்சல் போடும் நிலையிலுள்ளவர். இதற்குப் பரிகாரம்- திருச்சி அருகில் திருப்பட்டூர் சென்று தலையெழுத்தை மாற்றும் பிரம்மாவை வழிபடவேண்டும்.

ரா. உலகம்மாள் (எ) சுதா, கலிங்கப்பட்டி.

உங்கள் அருள்வாக்கு பலித்துவிட்டது. எனக்குத் திருமணமாகி பத்து மாதங்களாகி விட்டன. அடுத்து குழந்தை பாக்கியம் எப்போது ஏற்படும்? இருவருக்கும் அரசு வேலை அமையுமா? எப்போது அமையும்?

கணவர் சங்கர் (எ) மாணிக்கவாசகம் மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னம். 2024 வரை குரு தசை நடப்பு. 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி.

அப்பொழுது சங்கருக்கு (ரிஷப ராசிக்கு) அட்டமச்சனி விலகிவிடும். அதன்பிறகு அரசு வேலை முயற்சி கைகூடும். சுதாவுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம். 41 வயதுவரை சனி தசை. ஆக, 2021 ஜனவரி முதல் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதையடுத்து, 2021 செப்டம்பருக்குமேல் இருவருக்கும் வேலை யோகம் அமையும். 19 சனிக்கிழமை காலபைரவர் சந்நிதியில் 27 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம்கட்டி, நெய்விளக்கில் தீபமேற்றி வழிபட்டால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

ஆர். பாஸ்கர், மதுரை-11.

என் மனைவி இறந்ததை- இழப்பை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன். காலமெல்லாம் கஷ்டப்பட்டவன். விடிவு காலம் எப்பொழுது பிறக்கும்? திரைப்படத் துறைக்கேற்ற கதைகள் எழுதிவைத்திருக்கிறேன். அதைப் பயன்பெறச் செய்யமுடியுமா?

உங்கள் முயற்சிகளுக்கு மதுரையில் இருப்பது பலன் தராது. சென்னை சென்று பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்களை சந்திக்கவேண்டும். சிலசமயம் உங்கள் கதை திருடப்படலாம். அதையும் தாங்கிக்கொள்ளும் மனம் வேண்டும்.

ஏ.பி. கணேசன், சேலம்-9.

எனது அண்ணன் மகன் பொன் காமேஷ்வரன் ஜாதகமும், மூத்த மைத்துனர் மகள் ரேவதி ஜாதகமும் பொருத்தம் பார்த்து எழுதவும். அத்துடன் சிவப்பிரியன் என்னும் ஜாதகமும் அனுப்பியுள்ளேன். எந்த வரனைத் தேர்வு செய்யலாம்? தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு தருமாறு வேண்டுகிறேன்.

பொன் காமேஷ்வரன்- அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னம். ரேவதி- மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி. இருவருக்கும் ராசிப் பொருத்தமில்லை. 6, 8 சஷ்டாஷ்டக ராசி. வேண்டாம். சிவப்பிரியன் உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். பொருத்தம் உண்டு; பார்க்கலாம்.

க. செல்வகுமார், காரைக்குடி.

எனக்கு 22-11-2007-ல் திருமணம் நடந்தது. 25-11-2008-ல் மகன் பிறந்தான். குழந்தை பிறந்த நாள்முதல் சராசரிக் குழந்தையின் அனைத்து செயல்களும் நடவடிக்கைகளும் இருந்தபோதிலும் பேச்சுத்திறன் மட்டும் இல்லாமலிருந்தது. சிறிது நாட்கள் சென்றதும் பேசுவான் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மருத்துவர்களிடமும் காண்பித்தோம். பல்வேறு தெய்வத் தலங்களுக்கும் சென்று வழிபட்டோம். 12 வயதாகியும் மற்ற குழந்தைகள்போல் ஓடியாடி விளையாடி னாலும் பேச்சு மட்டும் வரவில்லை. என்ன காரணம்? இக்குறை எப்பொழுது சரியாகும்?

ஐப்பசி மாதம் பிறந்தவன். சூரியன் நீசம். சூரியன், செவ்வாய், புதன் மூவரும் 8-ல் மறைவு. என்றா லும் லக்னாதிபதி குரு 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். குரு வாக்குக்காரகன்- வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் நிரந்தரக்குறைக்கு இடமில்லை. 15 வயதுவரை செவ்வாய் தசை- 8-ல் இருப்பவர் தசை. அத்துடன் ஏழரைச்சனி. அடுத்துவரும் ராகு தசையில் நற்பலன்- பேச்சுத்திறன் எதிர்பார்க்க லாம். முக்கிய மான இரண்டு பரிகாரம் செய்ய வேண்டும். சீர்காழி அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா எனும் ஊருக்குச் சென்று சப்தபுரீஸ்வரர் திருக்கோவில் என்றும், திருத்தாளமுடையார் என்றும் பெயர்பெற்ற சிவத்தலத்தை வழிபடவேண்டும். இங்குள்ள அம்பாள் ஓசைகொடுத்தநாயகிக்குத் தேனாபிஷேகம் செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவவேண்டும். அர்ச்சகர் ஞானசம்பந்த சிவாச்சாரியார், தொலைபேசி: 04366- 274135, செல்: 98658 85780, 94830 11264-ல் தொடர்புகொண்டு விவரங்கள் பெறலாம். இத்துடன் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு வாக்வாதினி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம் உள்பட 16 வகையான ஹோமங்கள் செய்து, குழந்தைக்கும் பெற்றோருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். தொடர்புக்கு: செல்- 9994274067. ஹோமம் செய்தபிறகு 90 நாட்களில் பலன் தெரியும். இதனை கோவிலூர் சிவன் கோவில் அல்லது அவரது ஆசிரமத்தில் செய்யலாம்.

பூவலிங்கம், தேனி.

நான் சிறிய கடை வைத்துள்ளேன். நிறைய கடன் உள்ளது. அதனால் தீப்பெட்டி மொத்தமாக எடுத்து, சில்லரை வியாபாரம் செய்ய விரும்புகிறேன். வளர்ச்சி எப்படியிருக்கும்? எனக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோக முண்டா?

உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னம். கடன் நிவர்த்தி, வாழ்க்கையில் முன்னேற்றம், தொழில் விருத்தி உண்டாகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தீப்பெட்டி வியாபாரம் தொடங்கலாம். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வரவு- செலவு தாராளமாக இருக்கும். யோகமும் அதிர்ஷ்டமும் உடையதாக அமையும். கும்ப லக்னம்- கும்ப ராசிக்காரர்கள் ஒருமுறை எய்யலூர் சென்று பூஜை செய்ய வேண்டும். கும்பகோணம்- அணைக்கரை வழியாகவும் போகலாம். கடலூர்- காட்டுமன்னார்குடி வழியாகவும் போகலாம். அங்குபோய் வந்தபிறகு தீப்பெட்டித் தொழில் தொடங்கலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

ச. வெங்கட்ராமன், திட்டக்குடி.

நாலைந்து தொழிலில் ஈடுபட்டும் எதுவும் செட்டாகவில்லை. ஒரு ஜோதிடர் "உங்கள் தெய்வம் இங்குவந்து பேசவில்லை. தெய்வ அனுகூலமில்லை. அதனால் இராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்யுங்கள்'என்றார் அங்குபோகவும் பணமில்லாமல் கஷ்டப்படுகிறேன். நான் முருகனையே வணங்குகிறேன். எனக்கு விமோசனம் உண்டா?

ஜாதகத்தில் உங்கள் பெயர் செந்தில்குமார் என்றிருக்கிறது. கேள்வியில் வெங்கட்ராமன் என்று இருக்கிறது. எது உங்கள் உண்மையான பெயர்? சிம்ம லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். 9-ல் லக்னாதிபதி சூரியன் உச்சம். அங்கு செவ்வாய் ஆட்சி. உங்களுடைய தெய்வம் வந்து பேசவில்லை என்று ஜோதிடர் சொன்னது பொய். உங்கள் குலதெய்வம் வந்து பேசவில்லையெனில், நீங்கள் நம்பிக்கை யோடு வழிபடும் முருகன் வந்து பேசலாமே! அந்த ஜோதிடருக்கு ஜோதிடமே தெரியா தென அர்த்தம். முன்னோர்கள் வகையில் தோஷமிருந்தால்தான் ராமேஸ்வரம் சென்று திலஹோமம், பிதுர்தர்ப்பணம் செய்யவேண்டும். குலதெய்வத்துக்கும் திலஹோமத்துக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் கும்ப ராசி. அதற்கு குரு பார்வை இருப்பதால் தோஷமில்லை. கும்ப ராசிக்கு நீங்கள் போகவேண்டிய கோவில் எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர். அடுத்து தொழில் விருத்திக்கு நாமக்கல் அருகில் சேந்தமங்கலம். கடன் நிவர்த்திக்கு திருச்சேறை போதுமானது. நேரம் வரும்போது உங்கள் தெய்வம் நேரில் வந்தருளும். திருச்சேறை போகும்போது அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத் ரேயரை வழிபடவும். (குடவாசல் வழி).

bala231020
இதையும் படியுங்கள்
Subscribe