ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-102

எஸ். கணேசன், திருச்சி.

என் மகனுக்கு 9-9-2013-ல் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்? மகனும் நானும் ஏற்றுமதி- இறக்கு மதி தொழில் செய்யலாமா?

இருவர் ஜாதகத்திலும் சனி தோஷம் இருப்பதால் ஆணுக்கு 30 வயதுக்குமேல்- பெண்ணுக்கு 27 வயதுக்குமேல் திருமணம் செய்திருக்கவேண்டும். ஆனால் தங்க ராஜுக்கு 31 வயதிலும், பிருந்தாவுக்கு 24 வயதிலும் திருமணம் நடந்ததால் வாரிசு தாமதமாகிறது. தம்பதிகள் இருவரையும் கும்பகோணம்- குடவாசல் வழி- சேங்காலிபுரம் அனுப்பி, தத்தாத்ரேயருக்கு அபிஷேகம்- பூஜை செய்யச் சொல்லவும். ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்யலாம்.

jj

க.ஆனந்தன், கட்டளைக் குடியிருப்பு.

2012 ஜூன் முதல் ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட் டது. 68 வயது. காது கேளாமை; பற்கள் இழப்பு. என் சொத்து களை மனைவிக் கும் நான்கு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்திமக் காலம் எப்படியிருக்கும்?

நடப்பு சனி தசை செவ்வாய் புக்தி. அடுத்து ராகு தசை- குரு புக்தி. இதுவே அந்திம தசை. கண் ஆபரேஷன் தேவை யில்லை. நல்லதோ கெட்டதோ குடும்பத்தி லேயே இருந்து நாளை ஓட்டுங்கள். முடியாத பட்சம் தள்ளியிருங்கள்.

சிவனேசன், கொடிக்குறி

எஸ். கணேசன், திருச்சி.

என் மகனுக்கு 9-9-2013-ல் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்? மகனும் நானும் ஏற்றுமதி- இறக்கு மதி தொழில் செய்யலாமா?

இருவர் ஜாதகத்திலும் சனி தோஷம் இருப்பதால் ஆணுக்கு 30 வயதுக்குமேல்- பெண்ணுக்கு 27 வயதுக்குமேல் திருமணம் செய்திருக்கவேண்டும். ஆனால் தங்க ராஜுக்கு 31 வயதிலும், பிருந்தாவுக்கு 24 வயதிலும் திருமணம் நடந்ததால் வாரிசு தாமதமாகிறது. தம்பதிகள் இருவரையும் கும்பகோணம்- குடவாசல் வழி- சேங்காலிபுரம் அனுப்பி, தத்தாத்ரேயருக்கு அபிஷேகம்- பூஜை செய்யச் சொல்லவும். ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்யலாம்.

jj

க.ஆனந்தன், கட்டளைக் குடியிருப்பு.

2012 ஜூன் முதல் ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட் டது. 68 வயது. காது கேளாமை; பற்கள் இழப்பு. என் சொத்து களை மனைவிக் கும் நான்கு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்திமக் காலம் எப்படியிருக்கும்?

நடப்பு சனி தசை செவ்வாய் புக்தி. அடுத்து ராகு தசை- குரு புக்தி. இதுவே அந்திம தசை. கண் ஆபரேஷன் தேவை யில்லை. நல்லதோ கெட்டதோ குடும்பத்தி லேயே இருந்து நாளை ஓட்டுங்கள். முடியாத பட்சம் தள்ளியிருங்கள்.

சிவனேசன், கொடிக்குறிச்சி.

கல்வித்துறை அலுவலகத்தில் ஊதியம் சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்து, சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டது. பிறகு ரிட் வழக்கு தொடரப்பட்டு மூன்றாண்டுகளாகியும் தள்ளிப்போகிறது. வழக்கு எப்போது முடியும்?

காஞ்சிபுரம் சென்று- காந்தி சாலை மூங்கில் மண்டபம் அருகில் வழக்கறுத்த ஈஸ்வரர் கோவிலில் 16 திங்கட்கிழமை விளக்கேற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆ. பரமேஸ்வரன், நங்கநல்லூர்.

செய்தொழிலை நிறுத்தி நான்கு வருடமாகிறது. குறைந்த சம்பளத்தில் ஒரு கம்பெனியில் வேலை. மீண்டும் சொந்தத் தொழில் செய்யலாமா?

தற்போது சொந்தத் தொழில் விருத்தியிருக்காது. 2021-க்குப் பிறகு எதுவும் செய்யலாம்.

முத்தையா, ஆழ்வார்திருநகர்.

என் மகளுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்குமா? என் மகன் சி.ஏ. படிக்க ஆசைப்படுகிறான். படிக்க முடியுமா?

மகள் வேலைக்காக வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். மகனுக்கு படிப்பில் தடை வரும். விரும்பிய படிப்பு அமைவது கஷ்டம்.

கே. மணியன், விளாங்குடி.

என் தம்பி மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்?

கடக லக்னம். 7-க்குடைய சனி 5-ல் நின்று 7-ஆமிடத்தைப் பார்க்க, மிதுன ராசிக்கு 7-ஆமிடம் தனுசுவை கன்னிச் சனி பார்க்கி றார். திருமணத் தடைக்கு இதுவே காரணம். 30 வயது முடிந்தபிறகு திருமணம் நிகழும். அதுவரை பொறுமை காக்கவும்.

சுவாமிநாதன், கும்பகோணம்.

என் மகளுக்கு 24 வயது. அவளுக்கு உடம்பில் பல இடங்களில் கட்டிகள் இருப்பதாகக் கண்டுபிடித்து, இரண்டு முறை ஆபரேஷன் செய்து கட்டிகளை அகற்றினார்கள். (முதுகிலும் கழுத்திலும் செய்யப்பட்டது). மீண்டும் முதுகில் செய்யவேண்டுமெனக் கூறுகிறார்கள். தலையிலும் கட்டி இருப்பதாகச் சொல்லி, இதற்கு மருந்தே இல்லையெனவும், பரம்பரை வியாதி எனவும் கூறுகிறார் கள். எனது பரம்பரையில் யாருக்கும் இதுபோல இருந்ததாகத் தெரியவில்லை. தீர்வு என்ன?

சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னம். 4-க்குடைய சுக ஸ்தானாதிபதி புதன், சனியின் ராசியில் செவ்வாயுடன் சம்பந்தம். 4-ஆமிடத்திற்கு செவ்வாய் பார்வை. குரு 4-க்கு 12-ல் மறைவு. எனவே, அறுவை சிகிச்சைக்குரிய சூழ்நிலை. 8-ல் சனி ஆட்சி என்பதால் ஆயுள் குற்றமில்லை. அத்துடன் லக்னத்தில் கேது; 7-ல் ராகு. மூலம் 4-ல் கேது சாரத்தில் ராகுவும், திருவாதிரை 2-ல் ராகு சாரத்தில் கேதுவும் இருக்கிறார் கள். பொதுவாக ராகு- கேது சம்பந்தம் இருந்தால்தான் கட்டி, கேன்சர், கிட்னி பிரச்சினைகள் வரும். பாரம்பரிய வியாதி என்பது மூன்று தலைமுறைக்கு முன்பாகவும் இருக்கலாம். பாம்பை அடித்த தோஷம், பாம்புப் புற்றுகளை இடித்த தோஷம் ஏற்பட்டிருக்கலாம். மகளின் திருமண வாழ்க்கை நறுமண வாழ்க்கையாக அமையவும் ஆரோக்கியத்துக்கும் தனவந்திரி ஹோமமும், ஆயுள் தீர்க்கத்துக்கு ஆயுஷ் ஹோமமும், நவகிரக ஹோமமும், சனி சாந்தி ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இவை யெல்லாம் செய்தால் படிப்படியாக குணம் தெரியும்.

மதுமதி, சென்னை-21.

32 ஆண்டுகள் வங்கிப் பணியில் ஒரு பதவியில் இருந்துவிட்டேன். தற்போது பதவி உயர்வுக்கு முயற்சிக்கலாமா? அதனால் சங்கடங்களோ தீமைகளோ ஏற்படுமா?

அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னம். 10-ல் குரு- ராகு சாரம். (சதயம்). 10-க்குரிய சனி 9-ல் இருந்தாலும், 10-ஆமிடத்துக்கு 12-ல் மறைவு என்றாலும் ஆட்சி. ஓய்வுபெறும்வரை உத்தியோகத்தில் பாதிப்புக்கு இடமில்லை. ஆனால், 10-க்குரிய சனிக்கு கேது- ராகு சம்பந்தம். 10-ல் உள்ள குரு ராகு சாரம்! பொதுவாக, ராகு- கேது- சனி சம்பந்தம் எந்த பாவகத்தில் இருந்தாலும் அதில் நிறைவிருக்காது. ஆனால் பதவிக்கு பாதிப்பில்லை. 2022 வரை- 60 வயதுவரை சுக்கிர தசை- 10-ஆமிடத்துக்கு 6-ல் மறைவு. சுக்கிரனும் ராகு- கேது, சனி சம்பந்தம். எனவே, இருக்கும் பதவியிலேயே மீதிக்காலத்தையும் தொடருங்கள். பதவி உயர்வுக்கு முயன்றால் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படலாம். அப்படியே உயர்பதவி கிடைத்தாலும் பொறுப்புகளும் சுமைகளும் அதிகமாகி சுற்றியுள்ளவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரலாம். ஆகவே, நிம்மதியாகவும் நிறைவாகவும் பணி ஓய்வுபெற்று பென்ஷனை வாங்குவது நல்லது என்பது கிரகங்கள் சொல்லும் பலன்.

சண்முகநாதன், தாராமங்கலம்.

இந்த ஜாதகிக்கு எப்போது திருமணம் நடக்கும்?

தனுசு லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். 7-ஆமிடத்தை செவ்வாயும் சனியும் பார்ப்பதால் காதல் திருமணம், கலப்புத் திருமணம்தான் நடைபெறும். 2-ல் ராகு; 8-ல் கேது இருப்பதால் இருமண வாழ்வுக்கு இடமுண்டு. எனவே, ஒரே திருமணம்- முறிவு ஏற்படாமல் மனநிறைவான வாழ்க்கைக்கு காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும் செய்து, நாகதோஷ நிவர்த்திப் பரிகாரமும் செய்து ஜாதகிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். 27 வயதுமுதல் 30-க்குள் திருமணம் நடக்கும்.

bala161020
இதையும் படியுங்கள்
Subscribe