Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-101

ப் ஆர். பாபு, செங்கல்பட்டு.

என் மகன் பிரதீப்புக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பரிகாரம் செய்யவேண்டுமா?

Advertisment

பிரதீப் மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் சனி. (சந்திரன்). 7-ல் சுக்கிரன். 7- களஸ்திர ஸ்தானம். அதில்- களஸ்திர ஸ்தானத்தில் களஸ்திர காரகன் இருப்பது தோஷம். அதனால் 30 வயது முடிந்தபிறகு திருமணம் நடக்கும். (2020, ஆகஸ்டில் 30 வயது முடிந்தது). பத்து திங்கள்கிழமை சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும். ரிஷப ராசி- கடக ராசி பொருந்தாது. அதேபோல, அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்கள் பொருந்தாது. பூரட்டாதி வதைதாரை- சேராது. அனுஷம் பகையோனி- சேராது. இதுதவிர, மற்ற ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கவும்.

ப் மூர்த்தி, மதுரை.

ஒரு ஜாதகத்தில், சனி இருக்குமிடத்தைக் கெடுப்பாரா- பார்க்கும் இடத்தைக் கெடுப்பாரா?

எல்லா ஜாதகத்திலும் சனி கெடுப்பார் எனக் கூறமுடியாது. ரிஷப லக்னம், ரிஷப ராசி, துலா லக்னம், துலா ராசிகளுக்கு சனி ராஜயோகாதிபதி. அதாவது, ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தி யமும் கிடைத்தால், அந்த ஜாதகத்துக்கு அந்த கிரகம் ராஜயோகாதிபதியாகும். ரிஷபம், துலாம் ஆகிய இரண்டுக்கும் மேற்கூறிய இரண்டு ஆதிபத்தி

ப் ஆர். பாபு, செங்கல்பட்டு.

என் மகன் பிரதீப்புக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பரிகாரம் செய்யவேண்டுமா?

Advertisment

பிரதீப் மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் சனி. (சந்திரன்). 7-ல் சுக்கிரன். 7- களஸ்திர ஸ்தானம். அதில்- களஸ்திர ஸ்தானத்தில் களஸ்திர காரகன் இருப்பது தோஷம். அதனால் 30 வயது முடிந்தபிறகு திருமணம் நடக்கும். (2020, ஆகஸ்டில் 30 வயது முடிந்தது). பத்து திங்கள்கிழமை சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும். ரிஷப ராசி- கடக ராசி பொருந்தாது. அதேபோல, அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்கள் பொருந்தாது. பூரட்டாதி வதைதாரை- சேராது. அனுஷம் பகையோனி- சேராது. இதுதவிர, மற்ற ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கவும்.

ப் மூர்த்தி, மதுரை.

ஒரு ஜாதகத்தில், சனி இருக்குமிடத்தைக் கெடுப்பாரா- பார்க்கும் இடத்தைக் கெடுப்பாரா?

எல்லா ஜாதகத்திலும் சனி கெடுப்பார் எனக் கூறமுடியாது. ரிஷப லக்னம், ரிஷப ராசி, துலா லக்னம், துலா ராசிகளுக்கு சனி ராஜயோகாதிபதி. அதாவது, ஒரு கிரகத்துக்கு கேந்திராதிபத்தியமும் திரிகோணாதிபத்தி யமும் கிடைத்தால், அந்த ஜாதகத்துக்கு அந்த கிரகம் ராஜயோகாதிபதியாகும். ரிஷபம், துலாம் ஆகிய இரண்டுக்கும் மேற்கூறிய இரண்டு ஆதிபத்தியமும் கிடைப்பதால் சனி ராஜயோகாதிபதியாவார். ரிஷபத்துக்கு 9, 10-க்குரியவர் துலாத்துக்கு 4, 5-க்குரியவர். 9-ம், 5-ம் திரிகோணம். 10-ம், 4-ம் கேந்திரம். திரிகோணம்- தெய்வானுகூலம். கேந்திரம்- மனித முயற்சி.

Advertisment

hj

ப் ரகு, மதுரை.

பரிட்சையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கித் தேர்வாக மந்திரம் ஏதுமுண்டா?

உண்டு. ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல வேண்டும். படித்த படிப்பு மறக்காமல் பரிட்சையில் எழுதி வெற்றிபெறலாம். சரசுவதியின் குருநாதர் ஹயக்ரீவர். ஹயம் என்றால் குதிரை. குதிரைமுகப் பெருமாள். கடலூர் அருகில் திருவந்திபுரம் (திருவஹிந்திரபுரம்) எனும் ஊரில் சிறு குன்றின்மேல் ஹயக்ரீவர் மூலஸ்தானம் உள்ளது. குன்றின்கீழே சாரநாதப் பெருமாள் சந்நிதி உள்ளது. "ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே'- இது ஹயக்ரீவர் துதி- வடமொழி. (சமஸ்கிருதம்). குமரகுருபர ஸ்வாமிகள் சரஸ்வதியைக் குறித்துத் தமிழில் பாடிய பாடல்- "வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாய்' என்பதாகும். இவற்றைச் சொல்லலாம். சரஸ்வதி கடாட்சம் உண்டாகும்.

ப் பி. ஆர். தங்கவேலு, பரமக்குடி.

என் மகள் சரண்யாவுக்கு (கணவர் வேலாயுதம்) 21-11-2019 இரவு 9.28 மணிக்கு, முதல் ஆண் குழந்தை ஜனனம்.

உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். அறிவு, ஆயுள், கல்வி வளர்ச்சிக்கு எண்கணிதப்படி என்ன பெயர் வைக்க லாம்? PRITHIV SARAN அல்லது PRANAV VIJAYAN எது சிறப்பு? தங்களின் ஆலோசனைப்படி 3-7-2018 செவலூர் பூமிநாத சுவாமி கோவிலில் திருமணத் துக்காக ஹோமம், பூஜை நடந்தது. V. PRITHIV 6 8 2 1 4 5 1 6 = என்பது 33 வரும். இது சிறந்தது. ப் கே. மாதவன், மணலி (சென்னை).

தாங்கள் "பாலஜோதிட'த்தில் குறிப் பிட்டபடி, என் மகன் சரத்குமாருக்கு 36 வயதில் காதல்- கலப்புத் திருமணம் 8-7-2018-ல் (ஜெர்மனிப் பெண்ணுடன்) நடந்தது. இன்னும் வாரிசு கிடைக்க வில்லை. எப்போது அமையும்?

சரத்குமார் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி. தற்போது குரு கடக ராசிக்கு 6-ல் சனியோடு சம்பந்தம். 15-11-2020-ல் குரு மகரத்துக்கு மாறுவார். அப்போது சனி- குரு பரிவர்த்தனை ஏற்படும். அதன்பிறகு வாரிசு யோகம் அமையும்.

ப் எஸ். பாண்டியன், திருச்சி-9.

"பாலஜோதிடம்' மூலமாக பலருக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். என் மகள் செல்வ ஸ்ரீநிதி, பி. ஈ. நான்காமாண்டு பயின்று வருகிறாள். (20-7-1999-ல் பிறந்தவள்). மேற்கொண்டு படிப்பு தொடருமா? அல்லது திருமணம் செய்யலாமா? வேலைக்குச் செல்லும் வாய்ப்புண்டா?

ஸ்ரீநிதி சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னம். 2020, ஆடி மாதத்துடன் 21 வயது முடிந்தது. 29-1-2021 வரை ராகு தசை நடக்கும். அதன்பிறகு குரு தசை ஆரம்பம். லக்னம், ராசிக்கு 8-ல்- மேஷத்தில் குரு, சனி நிற்க, அவர்களை துலாச் செவ்வாய் பார்க்கிறார். 25 வயதில்தான் திருமண யோகம். அதுவரை படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்ற பலன் நடக்கும். திருமண முயற்சிகள் எடுக்கும்போது காமோஹர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். இதன் பலன் நல்ல கணவன், நல்ல மணவாழ்க்கை, நல்ல வாரிசு அமையும்.

ப் எஸ். லோகநாதன், திருவண்ணாமலை.

என் தம்பி பாபுவுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

பாபு சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது, சூரியன், சுக்கிரன். அதனால் நாகதோஷம் உண்டு. 15-11-2020-ல் குருப்பெயர்ச்சி. மகரத்துக்கு குரு மாறுவார். அப்போது தனுசு ராசியில் சனி இருப்பார். குருவும் சனியும் பரிவர்த்தனை. 2020, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. இடைப்பட்ட காலத்தில் திருமணம் கூடும்.

ப் எஸ். பி. கே. ஜெயராஜன், கோடாங்கிப்பட்டி.

எனக்கு கடன் பிரச்சினை அதிகம். கடன் கொடுத்தவன் மோசமாக என் சொத்தை அபகரித்தான். வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று தீர்ப்பு கிடைத்தது. கடன் பிரச்சினை தீரவும், வீடுகட்டவும், இரண்டு பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யவும் எனக்கு ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக இருக்கிறதா?

பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 7-ல் அமர்ந்து லக்னத்தைப் பார்க்கிறார். உங்கள் கடமைகளை நிறைவேற்ற உங்களுக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளன. உங்கள் கனவுகளும் திட்டங்களும் நிச்சயம் நிறைவேறும். 12-6-2021 வரை செவ்வாய் தசை; இது முடியவேண்டும். குரு தசையில் எல்லாம் நிறைவேறும். அகிலனுக்கு 2020, டிசம்பரில் அட்டமச்சனி முடியவேண்டும்.

ஆர். பாஸ்கர்.

ப் என் கடன் எப்போது தீரும்? மகன்கள் இருவருக்கும் திருமணம் நடத்தவேண்டும். எப்போது நடக்கும்? ராகு- கேதுப் பெயர்ச்சிப் பலன் எனக்கு எப்படியுள்ளது?

மீன ராசிக்கு ராகு- கேதுப் பெயர்ச்சி நற்பலனைத் தரும். 2023-ல் ஏழரைச்சனி ஆரம்பிக்கும்- அதில் கடன் நிவர்த்தி யாகும். மூத்த மகனுக்கு 2020, டிசம்பர் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகும், அடுத்த மகனுக்கு ஓராண்டிற்குப் பிறகும் திருமணம் கூடிவரும். தற்போது ராகு தசை நடப்பதால் வடக்குப் பார்த்த அம்மனை வழிபட வேண்டும். (துர்க்கை, காளி). குடியிருப்பு, வீடு மாறலாம். தீபாவளிக்குப் பிறகு வைகாசி விசாகத்துக்குள் அமையும்.

bala091020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe