எ. முனுசாமி, கோவைப் புலியகுளம்.

தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன். பதவி உயர்வு எப்போது கிட்டும்? பதவி உயர்வு இல்லையென்றால் வேறிடம் மாறலாமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? மனைவியின் உடல்நிலை எப்போது சரியாகும்? இரண்டு மகன்களின் படிப்பு, ஆரோக்கியம் எப்படியிருக்கும்?

மேஷ லக்னம், மக நட்சத்திரம், சிம்ம ராசி. 2013 முதல் 5-ஆவது செவ்வாய் தசை 7 வருடம்- 2020 வரை. இது போராட்டமான தசை. எதிர்நீச்சல் போட வேண்டிய காலம். இந்த இடம்விட்டு வேறெந்த இடம் போனாலும் அங்கும் உங்கள் நிழல் தொடரத்தான் செய்யும். மூத்த மகனுக்கு மேஷ ராசி. அஷ்டமச்சனி. 2011 முதல் சந்திர தசை. உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படும் காலம். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும். இளைய மகனுக்கு விருச்சிக ராசி. ஜென்மச்சனி. சனிக்கிழமை தோறும் 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடவும்- 2021 வரை.

hh

Advertisment

எம். ரமேஷ், காரப்பாக்கம்.

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? சுக்கிர தசை ராகு புக்தி. திருமணம் எப்போது நடக்கும்? 5-ல் மாந்தி இருப்பதால் பூர்வ புண்ணியம் பாதிக்குமா?

மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், மகர லக்னம். ராசியில் கேது; 7-ல் ராகு. லக்னத்துக்கு 7-ல் சனி. களஸ்திர தோஷம், புத்திர தோஷம் உண்டு. சூரியன் 6-ல் மறைவு. அரசு வேலைக்கு இடமில்லை. 5-ஆமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானமல்ல; 9-ஆமிடம்தான் பூர்வ புண்ணிய ஸ்தானம். அதில் ராகு நிற்பது தோஷம்தான். ராமநாதபுரம் அருகில் தேவிபட்டினம் சென்று பிதுர்தோஷ நிவர்த்தி, நாகதோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்துகொள்ளவும்.

எல். ராதாகிருஷ்ணன், மன்னை.

தங்கள் ஆலோசனையின்படி தொழில் ஆரம்பித்துவிட்டேன். எனது மகன் ஒரு வருடம் கல்லூரிக்குப்போய், பிறகு படிப்ப தற்கு இஷ்டமில்லை என்று நின்றுவிட்டான். அதனால் அவனைப் பார்ட்னராக சேர்த்து தொழில்செய்யலாமா?

உங்களுக்கு மிதுன ராசி. புதன் தசை முடிந்து கேது ஆரம்பம். உங்கள் பேரில் தொடர்ந்து தொழில் செய்யலாம். மகன் அஸ்வின் கார்த்திக் விசாக நட்சத்திரம், துலா ராசி. ரிக்கார்டுபடி பார்ட்னர்ஷிப் எழுதாமல், நிர்வாகப் பொறுப்பில் வேலை செய்யும்படி வைத்துக்கொள்ளுங்கள். காலபைரவருக்கு, 19 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றி மகனை வழிபடச் சொல்லுங்கள்.

ஆர். கோமதி, சங்கரன்கோவில்.

எனக்கு 70 வயது. 46 வயதில் கணவர் காலமானபிறகு, தனியாக குடும்பத்தில் எல்லாப் பொறுப்புகளையும் முடித்து விட்டேன். புதன் தசையில் படுக்கையில் கிடக்காமல் என் வேலையை நானே கடைசிவரை செய்துகொள்ள முடியுமா? என் பெண் சிம்ம ராசி. 5-ஆவது செவ்வாய் தசை- பாதகாதிபதி தசை எப்படியிருக்கும்? எங்களுக்கு சேவை செய்ய நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மகள் கன்னி லக்னம், சிம்ம ராசி. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி என்பதால், 5-ஆவது தசை தோஷம் அல்லது பாதகாதிபதி தோஷம் நீங்கிவிடு கிறது; விதிவிலக்கு. மேலும் செவ்வாய் மேஷத்தில் (ராசி- அம்சத்தில்) வர்க் கோத்தமம் என்பதால், கங்கையில் கலக்கும் எல்லா நீரும் (அசுத்த நீரும்) புனிதமாகி விடுவது போல, வர்க்கம் + உத்தமம். என்பதால் தோஷம் எல்லாம் நீங்கிவிடுகிறது. உத்தமம் என்ற சொல்லே வர்க்கோத்தமம் என்ற ஒன்றுக்கே உண்டு. எல்லா ஜாதகங்களுக்கும் யோகாதிபதியே பாதகாதிபதியாக வருவதுண்டு. சர ராசிக்கு 11-க்குரிய லாபாதிபதியும், ஸ்திர ராசிக்கு 9-க்குரிய பாக்கியாதிபதியும், உபய ராசிக்கு 7-க்குரிய சப்தமாதிபதியும் பாதகாதி பதியாகத்தான் வருவார்கள். ஆனால், அவர் கள் ஆட்சி, உச்சம் பெற்றால் பாதகாதிபதி தோஷம் விலகிவிடும். பாதகாதிபதி ஆட்சி, உச்சம், திரிகோணம் பெற்றால் எல்லா தோஷங்களும் அடிபட்டுப்போகும். அந்த பாதகாதிபத்திய தோஷம் அவரின் தசாபுக்தியில் செய்யாது என்றாலும், அவர் யார் சாரத்தில் இருக்கிறாரோ அல்லது யாரைப் பார்க்கி றாரோ அவரது காலத்தில் நடக்க வாய்ப்புண்டு. அப்போது அதற்குரிய பரிகாரம் செய்துகொள்வது அவசியமாகும்.

சி. அரசகுமார், வேப்ப லோடை.

நண்பர் மகனுக்கு ஏழு வருடங் களாகப் பெண் பார்த்தும் அமைய வில்லை. எப்போது திருமணம் நடக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

ஆறுமுகம் சித்திரை நட்சத்திரம், துலா ராசி, மேஷ லக்னம். 1982 ஆகஸ்டில் பிறந்த வர். ராசிக்கு 12-ல் கன்னியிலுள்ள சனி லக்னத்துக்கு 8-ஆமிடத் தையும் ராசிக்கு 2-ஆமிடத்தையும் பார்ப்பது களஸ்திர தோஷம். லக்னத் துக்கு 5-ல் சூரியன் ஆட்சி என்றாலும் புத்திர தோஷம். அதனால் திருமணம் தடையாகிறது. எனவே ராமநாதபுரம் அருகில் தேவிபட்டினம் சென்று நாகதோஷ நிவர்த்தியும், வாஞ்சாகல்ப கணபதி ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும்- அத்துடன் நவகிரகம், சனி சாந்தி, தன்வந்திரி ஆயுஷ் ஹோமமும் செய்து கலச அபிஷேகமும் செய்தால், பெண் அமைந்து திருமணம் கூடுவதற்கு வாய்ப்புண்டு.

கே. ஈஸ்வரமூர்த்தி, திருச்செங்கோடு.

எனது சகோதரியின் திருமணம் எப்போது நடக்கும்? மூத்தவள் கலப்பு மணம் செய்த அதிர்ச்சியால் அப்பா இறந்து விட்டார்.

அஸ்வினிக்கு உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னம். 8-க்குரிய மாங்கல்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் கன்னியில் நீசம். ராசிக்கு 6-ல் சனி ஆட்சி பெற்று ராசிக்கு 8-ஆமிடத்தைப் பார்க்க, ராசிக்கு 7-ஆமிடத்தை செவ்வாயும் பார்ப்பது தோஷம். ஜாதகப்படி 27 வயதில்தான் திருமண யோகம். இதன் மத்தியில் வைகாசிக்குமேல்- காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகில் நாகநாதசுவாமி கோவிலில், நாகநாதருக்கும் பெரிய நாயகியம்மனுக்கும் நாக லிங்க விநாயகருக்கும் அபிஷேகம் செய்து- அத் துடன் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், பார்வதிகலா சுயம்வர ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்தால், 25 வயதில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஹோமம் செய்ய வசதி இல்லாவிட்டால், சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

பி. ரமணி, மடிப்பாக்கம்.

மனை வாங்கியுள்ளேன். வடக்குப் பார்த்த மனை. எப்போது வீடுகட்டலாம்? பிள்ளைகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அதற்குமுன் வீடுகட்ட முடியுமா? பி.எச்.டி. செய்கிறேன். தலைமையாசிரியர் பதவி எப்போது கிட்டும்? மகன் எதிர்காலம் எப்படியிருக்கும்? பூச நட்சத்திரத்துக்கு என்ன ரத்தினம்?

உங்கள் விருச்சிக ராசிக்கு 2021 வரை ஏழரைச்சனி நடக்கிறது. 2021- அக்டோபர் வரை சந்திர தசையும் நடக்கிறது. தொடர்ந்து சிவலிங்கத்துக்குப் பாலபிஷேகம் கண்டிப்பாக செய்யவேண்டும். அத்துடன் வருடாவருடம் தை மாதம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று ருத்ராபிஷேக பூஜையும் செய்வது அவசியம். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே எல்லாக் கடமைகளையும் செய்துமுடிக்க சிவனருள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாக பிள்ளைகளுடன் கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடவும். சனி புக்தியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, மதிப்பு, செல்வாக்கு உண்டாகும். மகனுக்கு சனி தசையில் சுயபுக்தியில் வேலை எதிர்பார்க்கலாம். (தனியார்துறைதான்). உங்களுடைய ஏழரைச் சனியின் வேகம் குறைய 54 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, மண்விளக்கில் நெய்நிரப்பி, மிளகுப் பொட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் தொடர்ந்து தீபமேற்றவும். பிள்ளைகள் திருமணத்துக்கு முன்பு சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். கிழக்கு பிரதான வாசல், அடுத்து வடக்கு வாசல் ராசியாக அமையும்.