● என். முருகன், சூளைமேடு.

என் மகன் சியாம்சுந்தர் மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் மூன்று ஆண்டுகளாகத் தள்ளிப்போகிறது. மாமனார் இல்லாத ஜாதகம் பார்க்கச் சொல்கிறார்கள். குலதெய்வ வழிபாடு, திருப்பதி வழிபாடு முறையாகச் செய்கிறோம். வேறு பரிகாரம் தேவையா?

Advertisment

சியாம்சுந்தருக்கு மூல நட்சத்திரம், 2-ஆம் பாதம், தனுசு ராசி. 2018 ஜூலையில் 30 வயது முடிந்து 31 ஆரம்பம். மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் தடைப்படவில்லை. 7-ல் சுக்கிரன் இருப்பது தோஷம். 7-க்குடைய புதன் 8-ல் மறைவது தோஷம். ராசியாதிபதியும் லக்னாதிபதியுமான குரு 6-ல் ரிஷபத்தில் மறைவது தோஷம். எனவே திருமணம் தாமதமாகிறது. 2019 ஏப்ரல் வரை சூரிய தசை. பிறகு சந்திர தசை. இதில் ஏழரைச்சனி 2023 வரை. இதன்பிறகுதான் திருமண யோகம் அமையும். அதனால் காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு கந்தர்வ ராஜஹோமம் செய்து சியாம் சுந்தருக்கு கலச அபிஷேகம் செய்தால் 2019 ஏப்ரலுக்குள் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சந்திர தசையும் ஏழரைச்சனியும் சந்திப்பது ஆகாது. அதனால் அக்காலம் சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்வதோடு, திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரவேண்டும். மேலும் ஏழரைச்சனி முடியும்வரை 36 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை அதில் நனைத்து தீபமேற்றி வழிபடவேண்டும். பெண்ணுக்கு தாயும் தந்தையும் இருக்கலாம். ஆனால் அண்ணன்- தம்பி இருக்கக்கூடாது. சகோதரன் இருந்தால் தாய் அல்லது தந்தை ஒருவர் மட்டும் இருக்கும் இடமாகப் பார்க்கலாம். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

Advertisment

● ஆ. ராமசாமி, பாண்டியன்குப்பம்.

எனது மகன் சுகுமாரும் மருமகள் சுஜாதாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கடைசிவரை ஒற்றுமையாக இருப்பார்களா? பெற்றோரை அன்புடன் கவனிப்பார்களா? அரசு வேலை கிடைக்குமா?

சுகுமார் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. சுஜாதா அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. சுகுமாரின் மிதுன ராசிநாதன் புதன். சுஜாதா கன்னி லக்னம். இதன் அதிபதி புதன். ஒருவரின் ராசிநாதன் மற்றவருக்கு லக்னாதிபதியாக அமைவதால் இருவரும் அன்போடும் ஒற்றுமையாகவும் இணைந்து வாழ்வார்கள். மகனுக்கு சனி தசையும் மருமகளுக்கு சந்திர தசையும் நடப்பதால் சமதசைக் குற்றமும் இல்லை. அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு.

Advertisment

● எஸ். பாலசண்முகநாதன், கிழக்கு தாம்பரம்.

என் மகன் செல்வபாபு எம்.டெக் முடித்து ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப்பேராசியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறான். மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டபடியால் வேலை போய்விடுமோ என்ற கவலை உள்ளது. இதே கல்லூரியில் வேலை தொடருமா? வேறு நல்ல வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?

செல்வபாபு தனுசு லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். ஜென்மச்சனி நடக்கிறது. லக்னத்திலும் ராசியிலும் சனி இருக்கிறார். அதனால் உத்தியோகம், திருமணம் இரண்டிலும் முன்னேற்றம் தடையாகும்; தாமதமாகும். 2021 மார்ச் முதல் சந்திர தசை ஆரம்பம். அக்காலம் ஏழரைச்சனி 2023 வரை நடக்கும். இந்த சந்திப்பு (ஏழரைச்சனியில் சந்திர தசை) மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் அக்காலம் ஒரு சிவன் கோவிலில் ருத்ர ஹோமம் வளர்த்து, ருத்ர ஜெபப் பாராயணம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்ய வேண்டும். 2019-ல் உத்தியோக ரீதியாக இடமாற்றமும் வேறு வேலையும் கிடைக்கலாம். 33 வயதுக்குமேல் திருமணம் கூடும். அக்காலம் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோம செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்வது அவசியம்.

bhrama● டி. கண்ணன், குச்சிக்காடு.

என் மகன் மகேந்திரனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? நிரந்தரமான தொழில், வருமானம் எப்போது கிட்டும்?

மகேந்திரன் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னியா லக்னம். 29 வயது நடக்கிறது. 4-ல் சனி லக்னத்தைப் பார்ப்பதால். (ராகு தசை நடக்கிறது) 33 வயது முதல் 35-க்குள் திருமணம் நடக்கலாம். 2019 மார்ச்சில் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகே நிரந்தரமான தொழில் அமையும்.

● எம். மலையரசு, சிங்கம்புணரி.

என் திருமணம் எப்போது நடக்கும்? நிரந்தர வேலை எப்போது கிட்டும்?

தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 2023 வரை ஏழரைச்சனி. இது முடிய வேண்டும். பிறகுதான் நல்ல வேலை, சம்பாத்தியம், திருமணம் எல்லாம் அமையும்.

● மு. பத்மஸ்ரீ, விருதுநகர்.

நான் எம்.ஏ., பி.எட்., முடித்துள்ளேன். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணமாகும்?

சதய நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். லக்னத்துக்கு 2-ல் சனி. சந்திரனுக்கு 12-ல் ராகு. 33 வயதில் திருமண யோகம் வரும். சனி தசை தனது புக்தி 2019 செப்டம்பர் வரை நடைபெறும். அதனால் அரசு வேலை தாமதப்படலாம். அரசு வேலைக்கும், நல்ல கணவன் அமையவும் காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு ஹோமம் செய்தால் உடனே இருவகையிலும் நல்ல பலன் கிடைக்கும். செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.

● சாவித்திரி, நாகப்பட்டினம்.

உங்களை வணங்கும் பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருத்தி. உங்களைப்போல ஒரு ஜோதிடர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். என் கணவர் கணேஷ், இரண்டு பெண் பிள்ளைகள் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. கணவரின் குடிப்பழக்கம் எப்போது மாறும்?

சாவித்திரி பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். புதன் தசை தனது புக்தி. கணேஷ் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னம். சாந்தி அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். ஜெயந்தி அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னம். நீங்களும் கணவரும் ஒரே லக்னம். பிள்ளைகள் இருவரும் ஒரே லக்னம். அதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் பிரிவுக்கு இடமில்லை. கணவருக்கு ஏழரைச்சனி மாறியதும் குடிப்பழக்கமும் மாறிவிடும். கணவர் திருந்துவதற்கு நாகப்பட்டினம் அருகில் உள்ள வடக்குப் பொய்கைநல்லூர் சித்தர் ஜீவசமாதியில் பௌர்ணமி- அமாவாசைதோறும் நெய்தீபமேற்றி மனமுருகப் பிரார்த்தனை செய்யவும். பிள்ளைகள் எதிர்காலம் பிரகாசமாக அமையும். சித்தர் பெருமானே (கோரக்கர் ஜீவசமாதி) உங்களுக்கு அரசு வேலைக்கும் அருள்புரிவார்.

● சு. பால்முருகானந்தம், பாலக்காடு.

பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட வழிபடும் முறை, பரிகாரம் கூறவும்.

பாலக்காடு அருகிலுள்ள மீன்குளத்தி அம்மனை தொடர்ந்து வழிபடவும். இது எளிய பரிகாரம்! அடுத்து கையில் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காரைக்குடி சுந்தரம் குருக்களைத் (செல்: 99942 74067) தொடர்புகொண்டு சொர்ணாகர்ஷண பைரவர், விஜயலட்சுமி, அஷ்டலட்சுமி, குபேர லட்சுமி முதலிய 23 வகையான ஹோமம் செய்யலாம். பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு, கடன் நிவர்த்தி, ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் ஆகிய எல்லா நலன்களும் உண்டாகும்.

● எஸ். சுப்பையா, கீழப்புலியூர்.

என் மகள் பொற்பேச்சி எம்.டெக் (ஐ.டி.) முடித்து தென்காசியில் கோச்சிங் சென்டரில் வேலை செய்கிறாள். அவளுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும்?

சித்திரை நட்சத்திரம் 2-ஆம் பாதம், கன்னி ராசி, தனுசு லக்னம். 24 வயது முடிந்து 25 ஆரம்பம். ஜாதகக் குறிப்பும் தசாபுக்தி இருப்பும் எழுதவில்லை. எப்படிப் பதில் சொல்வது?

● சி.கே. மாரியப்பன், பேரையூர்.

ஒரே மகன் தினேஷ்குமார். +2 படிக்கிறான். மார்க் எப்படி வரும் என்று புலம்புகிறான். அடுத்து பி.ஏ.. படிக்கலாமா? வேலை கிடைக்குமா?

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி. இதில் அரியர்ஸ் வரும். மறுபடி எழுதி பாஸ் செய்யட்டும். அதன்பிறகு மேற்படிப்பைப் பற்றி யோசிக்கலாம்.

● சாந்தி, கோவை.

என் மகள் ஞானசூரியா +2 படிக்கிறாள். மேற்படிப்பு குறித்து பெரும் கவலையாக உள்ளது. மருத்துவத்துறையில் சேர விரும்புகிறாள். வாய்ப்பு கிடைக்குமா?

அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னம். 2023 வரை ராகு தசை. 10-க்குடைய செவ்வாய், கேது- ராகு, குரு சம்பந்தம். மருத்துவப் படிப்புக்கு இடமுண்டு. +2 தேர்வு எழுதுவதற்கு முன்னால் பேராவூரணி அருகில் மருந்துப்பள்ளம் என்ற ஊருக்குச் சென்று மருந்தீஸ்வரருக்கு ஒரு அபிஷேகம், பூஜை செய்யவும். +2-ல் நல்ல மார்க்கும், நீட் தேர்வில் வெற்றியும் கிடைக்கும். மெடிக்கல் சீட்டும் கிடைக்கும்.

● பி. கோடிசுந்தரம், குச்சிக்காடு.

பி.கே. ராஜா- அஞ்சலி இருவருக்கும் எப்போது அரசுப்பணி கிடைக்கும்?

2020-ல் அமையலாம்.