என். மணி, திருப்பூர்.
என் மகள் சத்தியப்பிரியா 7-10-1995-ல் பிறந்தவள். மேஷ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். எப்போது திருமணம் நடக்கும்?
லக்னத்தில் கேது, 7-ல் ராகு. நாகதோஷம் உடைய ஜாதகம். 25 வயது முதல் 27-க்குள் திருமணம் நடக்கும். அதுவரை வேலை பார்க்கட்டும்.
என். மணி, திருப்பூர்.
என் மகன் கார்த்திகேயன் பி.காம். முடித்து தற்போது தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இதே வேலையில் நீடிப்பானா? வேறு வேலைக்குப் போவானா? எப்போது திருமணம் நடக்கும்?
கார்த்திகேயனுக்கு 25 வயது முடிந்து 26 ஆரம்பம். கடக லக்னம். லக்னத்தில் செவ்வாய் நீசம். கும்ப ராசி. அதில் சனி. அவரை செவ்வாய் பார்ப்பதால் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. 30 வயது வரும்போது திருமண ஏற்பாடுகள் செய்யலாம். 2020 கடைசியில் சனிப்பெயர்ச்சி. அப்போது ஏழரைச்சனி ஆரம்பம். அதில் வேலை மாற்றம் எதிர்பார்க்கலாம். அக்காலம் வேலை, திருமணம், வாரிசு யோகத்துக்கு காரைக்குடி அருகில் போய் ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அந்த நேரம் தொடர்புகொண்டு கேட்கவும்.
முருகதாஸ், பண்ருட்டி
என் அண்ணாரின் திருமணத்தடையால் குடும்பமே வருத்தமாக- சோகமாக உள்ளது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். 2018 ஏப்ரலில் 38 வயது முடிந்து 39 ஆரம்பம். 7-க்குடைய குரு- செவ்வாய், சனி, ராகுவுடன் சம்பந்தம். களஸ்திரகாரகன் சுக்கிரனும் மறைவு. 5-ஆம் இடத்தை சூரியன் பார்க்க, லக்னாதிபதியும் ராசியாதிபதியுமான புதன் நீசம். எனவே திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம் அல்லது கேள்விக்குறிதான். இருந்தாலும் 7-க்குடைய குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஒரு வாய்ப்பு எதிர்பாôக்கலாம். 9-ல் கேது இருப்பதும் அதை செவ்வாய், சனி, ராகு பார்ப்பதும் குடும்பத்தில் முன்னோர்கள் வகை தோஷம் உண்டு. அதனால் அண்ணனுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் தோஷம் உண்டு. அதனால் தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரிகளைச் சந்தித்து முன்னோர் சாப தோஷ நிவர்த்திப் பரிகாரமும், நாகதோஷப் பரிகாரமும், காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், அத்துடன் நவகிரக தோஷப் பரிகாரமும், ஆயுஷ் ஹோமமும் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செல்: 99435 46667-ல் தொடர்புகொள்ளலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amman_2.jpg)
ஜி. ராமநாதன், தென்னமநாடு.
எனக்கும் மனைவிக்கும் அரசுப்பணி கிடைக்குமா? என் மகள் தயாநிதி பெயரில் தொழில் தொடங்கலாமா?
கார்த்திகேயன் மேஷ ராசி. அட்டமச்சனி முடிந்துவிட்டது. குரு தசை நடப்பு. கும்ப லக்னத்துக்கு 2, 11-க்குடையவர் என்றாலும் 3-ல் மறைவு. மனைவி கனகாவுக்கு தனுசு லக்னம். அதில் சனி 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் இடத்தை செவ்வாயும் பார்க்கிறார். 2018 மே மாதம் 28 வயது முடிந்து 29 ஆரம்பம். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. மகள் தயாநிதிக்கு மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம், மேஷ லக்னம். சனி தசை நடப்பு. மூவரின் ஜாதகப்படியும் கோட்சாரப்படியும் 2020 வரை அரசுப்பணி உங்களுக்கோ மனைவிக்கோ அமைவது கடினம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியலாம். குறைந்த சம்பளம்- நிறைந்த வேலை! தன்னம்பிக்கையோடு காத்திருக்கவும். காலம் மாறும்; அரசு வேலை அமையும். உங்களைவிட உங்கள் மனைவிக்கு வாய்ப்பு அதிகம். சொந்தத் தொழில் திட்டத்தை சிறிது காலம் தள்ளிப்போடவும்.
வி. நிர்மலா ராகவன், சேலம்.
என் மகன் உங்கள் ஆலோசனைப்படி இஞ்சினீயரிங் முடித்து நல்ல வேலையில் இருந்தான். தற்போது ஒரு வருடமாக பணி நீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாமல் இருக்கிறான். மீண்டும் வேலை அமையுமா? 25-10-2019 வரை புதன் தசை. அதன்பிறகு வரும் கேது தசை நன்றாக இருக்குமா?
கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். ஏழரைச்சனிதான் அவருடைய வேலையிழப்புக்கும் வருமானத்தடைக்கும் காரணம். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று (சாமியார் கரடு ஸ்டாப்) குரு தத்தாத்ரேயருக்கும், குருநாதர் ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதிக்கும் ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். அங்கு ஏழரை அடி உயரத்தில் சனி பகவானும், அவரைப் பார்த்த மாதிரி ஒன்பதடி உயரத்தில் ஆஞ்சனேயரும் இருப்பார்கள். அவர்களையும் வழிபடவும். புதிய வேலை வெளியூரில் அமையும்.
எஸ். இராமநாதன், ஏமப்பேர்.
என் மகன் சுதாகருக்கு 17-11-2014-ல் திருமணம் நடந்தது. அவன் மனைவி நீதிமன்றம்மூலமாக விவாகரத்து வாங்கிப் பிரிந்து போய்விட்டார். மகனின் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும்?
திருமணத் தேதி 4, 5, 7, 8 வரக்கூடாது. இதில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் முற்றுப் பெறாது. முழுமையடையாது. இந்த தேதி எண்ணும் 8; கூட்டு எண்ணும் 8. எப்படி சேர்ந்து வாழமுடியும்? மேலும் சுதாகர் ஜாதகத்தில் மேஷ லக்னம். அதில் ராகு; 7-ல் கேது. 8-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 30 வயது முடிந்து 31-க்குமேல் திருமணம் செய்திருக்கவேண்டும். 1986 பிப்ரவரியில் பிறந்தவர். 28 வயதிலேயே திருமணம் நடந்ததும் தவறு. தற்போது 32 வயது முடிந்துவிட்டதால், இனி மறுமணம் செய்யலாம். அதற்குமுன்னால் களஸ்திர தோஷ நிவர்த்திக்கு காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைச் சந்தித்து காமோகர்ஷண ஹோமமும், புனர்விவாக கந்தர்வராஜ ஹோமமும் செய்து சுதாகருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். நல்ல மணவாழ்க்கையும் வாரிசு யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.
எஸ். காமராசு, கீழப்பட்டு.
பதவி உயர்வு எப்போது கிடைக்கும்? குழந்தை பாக்கியம் எப்போது கிட்டும்? வேறு தொழில் என்ன செய்யலாம்?
மிதுன லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. 2019 எப்ரல்வரை குருமகா தசையில் கேது புக்தி. இது முடிந்தவுடன் சுக்கிர புக்தியில் பதவி உயர்வு பெறலாம். லக்னத்துக்கு 5-ல் கேது இருப்பது தோஷம் என்றாலும், 9-ல் உள்ள குரு 5-ஆம் இடத்தையும் கேதுவையும் பார்ப்பதால் பரிகார முறையாலும் பிரார்த்தனை பலத்தாலும் வாரிசு கிடைக்கும். திருமணத் தேதி 1-2-2017. தேதி எண் 1, கூட்டு எண் 4. அதனால் தாமத வாரிசு என்பது பலன். சங்கராபுரம் வட்டம், ஆதிதிருவரங்கம் என்ற ஊரில் ஆதிரெங்கநாதர் பள்ளி கொண்ட பெருமாள் கோவில் உள்ளது. (திருவண்ணாமலை- மணலூர்பேட்டை பாதை). அங்கு ரங்கநாத பட்டர் சுவாமிகளைச் சந்தித்து பதவி உயர்வுக்கு பூஜை செய்யவும். வாரிசு யோகத்துக்கு கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயர் கோவிலில் அபிஷேகம் செய்யவும். தம்பதி சகிதம் போகவும். டிரஸ்டி நாகசுப்ரமணியன் செல்: 94872 92481-ல் தொடர்புகொள்ளவும். அங்கு தத்தாத்ரேயர் மூலமந்திர அட்டை வாங்கிவந்து தினசரி பாராயணம் செய்யவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/amman-t_0.jpg)