அ. வீரக்கண்ணன், கரியணம்பட்டி.
என் மகளின் ஜாதகத்தில் தந்தைக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறியிருந்தீர்கள். மகள் வளர வளர முன்னேற்றம் என்றும் கூறியிருந்தீர்கள். என் மனைவி பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். அரசு வேலை கிடைக்குமா? நானும் எம்.ஏ., (தமிழ்) பி.எட். முடித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
ஏற்கெனவே உங்களுக்கு எழுதிய பலன்களை ஞாபகத்தில் கொண்டு நம்பிக்கையோடு காத்திருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.
ஜி. பிரகதீஸ்வரி, பண்ணைப்புரம்.
என் கணவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் நாங்கள் பிரிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த நிலை மாறுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? நான் பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். அரசாங்க வேலை கிடைக்குமா?
மூல நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னம். உங்கள் கணவர் தினேஷ்குமார் ஜாதகம் இது. பிரகதீஸ்வரி புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். உங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தமே இல்லை. புனர்பூசம்- பூனை, மூலம்- நாய். நாயும் பூனையும் பகையோனி. அத்துடன் நட்சத்திரப் பொருத்தமும் இல்லை. அதனால் தாம்பத்திய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது. வாரிசும் இருக்காது. இருவருக்கும் பிரிவு ஏற்படவும் இடமுண்டு. பிரகதீஸ்வரிக்கு ரிஷப லக்னத்திற்கு 10-ல் சூரியன், புதன் இருப்பதால் அரசு வேலைக்கு இடமுண்டு. முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதை உங்கள் இருவரின் கருத்துப்படி முடிவெடுத்து செயல்படலாம்.
கே. சின்னத்தம்பி, ஆனையூர்.
தங்களின் கருத்துக்கள் என்னுடைய ஜாதக அறிவை மேம்படுத்தி வருகிறது. நன்றி! என்னுடைய மகள்வழிப் பேரனின் ஜாதகத்தில் அம்ச நிலையில் மிகவும் குழப்ப நிலையில் உள்ளேன். அம்
அ. வீரக்கண்ணன், கரியணம்பட்டி.
என் மகளின் ஜாதகத்தில் தந்தைக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறியிருந்தீர்கள். மகள் வளர வளர முன்னேற்றம் என்றும் கூறியிருந்தீர்கள். என் மனைவி பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். அரசு வேலை கிடைக்குமா? நானும் எம்.ஏ., (தமிழ்) பி.எட். முடித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
ஏற்கெனவே உங்களுக்கு எழுதிய பலன்களை ஞாபகத்தில் கொண்டு நம்பிக்கையோடு காத்திருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.
ஜி. பிரகதீஸ்வரி, பண்ணைப்புரம்.
என் கணவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் நாங்கள் பிரிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த நிலை மாறுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? நான் பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். அரசாங்க வேலை கிடைக்குமா?
மூல நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னம். உங்கள் கணவர் தினேஷ்குமார் ஜாதகம் இது. பிரகதீஸ்வரி புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். உங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தமே இல்லை. புனர்பூசம்- பூனை, மூலம்- நாய். நாயும் பூனையும் பகையோனி. அத்துடன் நட்சத்திரப் பொருத்தமும் இல்லை. அதனால் தாம்பத்திய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது. வாரிசும் இருக்காது. இருவருக்கும் பிரிவு ஏற்படவும் இடமுண்டு. பிரகதீஸ்வரிக்கு ரிஷப லக்னத்திற்கு 10-ல் சூரியன், புதன் இருப்பதால் அரசு வேலைக்கு இடமுண்டு. முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதை உங்கள் இருவரின் கருத்துப்படி முடிவெடுத்து செயல்படலாம்.
கே. சின்னத்தம்பி, ஆனையூர்.
தங்களின் கருத்துக்கள் என்னுடைய ஜாதக அறிவை மேம்படுத்தி வருகிறது. நன்றி! என்னுடைய மகள்வழிப் பேரனின் ஜாதகத்தில் அம்ச நிலையில் மிகவும் குழப்ப நிலையில் உள்ளேன். அம்சத்தில் நான்கு கிரகங்கள் நீசம். அவனுக்கு தற்போது முன்று வயது. சனி தசை முடிந்து புதன் தசை சுயபுக்தி நடக்கிறது. என் பேரனின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு, புதன் தசை என்ன செய்யும்?
விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ஆயுள்காரகன் சனி ராசியில் உச்சம், அம்சத்தில் நீசம். இருந்தாலும் சனி தசை முடிந்துவிட்டது. நடப்பு புதன் தசை ராசியில் நீசம். அம்சத்தில்- கடகத்தில் நட்பு. எனவே புதன் தசை கெடுக்காது. கல்வி யோகமும் உண்டு. அம்சத்தில் சுக்கிரனும் நீசம். சந்திரனும் நீசம். இருவருக்கும் நீசபங்கம் ஏற்படுவதால் தாயார், தகப்பனார் தோஷமில்லை. சுக்கிரன் நீசம் என்பதால் தாமதத் திருமணம்- 30 வயதுக்குமேல் நல்லது.
நா. விஸ்வநாதன், பூவாளூர்.
எனது மகள் கார்த்திகா எம்.எஸ்ஸி., பி.எட்., படித்திருக்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்?
துலா லக்னம். 2-ல் சனி. புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. லக்னத்துக்கு 7-க்குடைய செவ்வாய் 6-ல் மறைவு. ராசிக்கு 7-க்குடைய குரு ராசிக்கு 12-ல் மறைவு. அதனால் 30 வயது முடிந்ததும் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். அன்னிய சம்பந்தம். கார்த்திகாவுக்கு ஆசிரியை வேலை அமையும். வரும் வரனும் ஆசிரியராக வேலை பார்ப்பார்.
ராஜன், மதுரை.
என் மகள் வெளிநாட்டில் வேலை செய்கிறாள். அவளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருப்பாளா?
விருச்சிக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். 2018 ஜூலையில் 29 வயது முடிந்து 30 ஆரம்பம். 27 வயது முதல் சனி தசை. (29-2-2016 முதல்). தற்போது சுயபுக்தி மூன்று வருடம் நடக்கும். இதில் திருமண யோகமும் வெளிநாட்டில் தொடர்ந்து இருக்கும் யோகமும் அமையும். வெளிநாட்டு மாப்பிள்ளையே அமைவார். அதற்காக நீங்கள் (பெற்றோர்) வாடிப்பட்டி ஹைவேஸ் ரோட்டில் உள்ள நவமாருதி கோவில் சென்று (சனிக்கிழமைதோறும் 19 வாரம்) நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம்.
ஜே. பாலசுப்பிரமணியன், சின்ன ஆத்துக்குறிச்சி.
கடன் அதிகமாக உள்ளது. எப்போது நிவர்த்தி ஆகும்? மகனுக்கு 35 வயதில்தான் திருமணம் என்று மூன்று வருடத்துக்குமுன்பு பதில் சொல்லியிருந்தீர்கள். இப்போது நடக்குமா?
ரிஷப லக்னம். லக்னத்தில் கேது, 7-ல் ராகு. மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். தற்போது ராகு தசை, ராகு புக்தி நடக்கிறது. இது முடிந்தால் கொஞ்சம் கொஞ்சமாக கடன்சுமை குறையும். மகன் சுரேஷ் ரிஷப லக்னம், பூர நட்சத்திரம், சிம்ம ராசி. தற்போது 2018 மே மாதம் 35 வயது முடியும். ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பு. அக்டோபர் மாதம் குரு லக்னத்துக்கு 7-ல் மாறியதும் திருமணம் நிகழும்.
ஜி. புனிதா, ஆரணிபாளையம்.
என் குடும்பம் 2021-ல் ஒன்றுசேரும் என்று 9-3-2018 தேதி "பாலஜோதிட'த்தில் எழுதியிருந்தீர்கள். அப்போது என் பிள்ளைகள் ஜாதகம் அனுப்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது அனுப்பியுள்ளேன். என் பிழைப்புக்கு என்ன தொழில் செய்யலாம்?
புனிதாவுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னம். 2013 முதல் குரு தசை 2021 வரை. குரு தசை முதல் பாகம் அட்டமாதிபத்தியப் பலன். பிறகு பஞ்சமாதிபத்தியப் பலன். அதனால் 2021-க்குமேல் குடும்பம் ஒன்றுசேரும் என்று கூறினேன். மகன் சமேஸ்வர் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், கடக லக்னம். 2006 டிசம்பர் முதல் குரு தசை. 2021-ல் அட்டமச்சனி ஆரம்பம். மகள் யோகராணி கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2021 வரை ஏழரைச்சனி. அதனால் பிள்ளைகள் ஜாதகப்படியும், கணவர் கோவிந்தராஜ் ஜாதகப்படியும் 2021 சனிப்பெயர்ச்சி வரை பொறுமையாக இருக்கவும். சனிக்கிழமைதோறும் 45 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் அகல்விளக்கில் நெய் நிரப்பி, மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றி வழிபட்டுவரவும்.
எம். அருணாசலம், திருவள்ளூர்.
என் மூன்று சகோதரிகளின் திருமணம் முடித்துக்கொடுக்கும் கடமையினால் என் திருமணம் காலதாமதமாகிவிட்டது. எனக்குத் திருமணம் நடக்குமா? நடக்காதா? வாழை வியாபாரம் செய்கிறேன். வேறு தொழில் செய்யலாமா?
அருணாசலம் கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னம். நடப்பு 2018 டிசம்பரில் 52 வயது முடியும். 55 வயது வரை- 2022 ஜனவரி வரை குரு தசை. அதன் பிறகு சனி தசை, பெரும்பாலும் குரு தசையிலேயே திருமணம் முடிய வாய்ப்புண்டு. குரு புரட்டாசி கடைசியில் விருச்சிகத்துக்கு மாறிய பிறகு லக்னம், ராசியைப் பார்க்கும் காலம் திருமணம் கூடும் என்று எதிர்பார்க்கலாம். நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எதற்கும் கும்பகோணம் அருகில் திருவேதிக்குடி சென்று வழிபடவும்.
● என். மணி, திருப்பூர்.
என் மகள் சத்தியப்பிரியா 7-10-1995-ல் பிறந்தவள். மேஷ லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். எப்போது திருமணம் நடக்கும்?
லக்னத்தில் கேது, 7-ல் ராகு. நாகதோஷம் உடைய ஜாதகம். 25 வயது முதல் 27-க்குள் திருமணம் நடக்கும். அதுவரை வேலை பார்க்கட்டும்.
● என். மணி, திருப்பூர்.
என் மகன் கார்த்திகேயன் பி.காம். முடித்து தற்போது தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இதே வேலையில் நீடிப்பானா? வேறு வேலைக்குப் போவானா? எப்போது திருமணம் நடக்கும்?
கார்த்திகேயனுக்கு 25 வயது முடிந்து 26 ஆரம்பம். கடக லக்னம். லக்னத்தில் செவ்வாய் நீசம். கும்ப ராசி. அதில் சனி. அவரை செவ்வாய் பார்ப்பதால் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. 30 வயது வரும்போது திருமண ஏற்பாடுகள் செய்யலாம். 2020 கடைசியில் சனிப்பெயர்ச்சி. அப்போது ஏழரைச்சனி ஆரம்பம். அதில் வேலை மாற்றம் எதிர்பார்க்கலாம். அக்காலம் வேலை, திருமணம், வாரிசு யோகத்துக்கு காரைக்குடி அருகில் போய் ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அந்த நேரம் தொடர்புகொண்டு கேட்கவும்.
● முருகதாஸ், பண்ருட்டி
என் அண்ணாரின் திருமணத்தடையால் குடும்பமே வருத்தமாக- சோகமாக உள்ளது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். 2018 ஏப்ரலில் 38 வயது முடிந்து 39 ஆரம்பம். 7-க்குடைய குரு- செவ்வாய், சனி, ராகுவுடன் சம்பந்தம். களஸ்திரகாரகன் சுக்கிரனும் மறைவு. 5-ஆம் இடத்தை சூரியன் பார்க்க, லக்னாதிபதியும் ராசியாதிபதியுமான புதன் நீசம். எனவே திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம் அல்லது கேள்விக்குறிதான். இருந்தாலும் 7-க்குடைய குரு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஒரு வாய்ப்பு எதிர்பாôக்கலாம். 9-ல் கேது இருப்பதும் அதை செவ்வாய், சனி, ராகு பார்ப்பதும் குடும்பத்தில் முன்னோர்கள் வகை தோஷம் உண்டு. அதனால் அண்ணனுக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் தோஷம் உண்டு. அதனால் தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரிகளைச் சந்தித்து முன்னோர் சாப தோஷ நிவர்த்திப் பரிகாரமும், நாகதோஷப் பரிகாரமும், காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், அத்துடன் நவகிரக தோஷப் பரிகாரமும், ஆயுஷ் ஹோமமும் செய்து, குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செல்: 99435 46667-ல் தொடர்புகொள்ளலாம்.
● ஜி. ராமநாதன், தென்னமநாடு.
எனக்கும் மனைவிக்கும் அரசுப்பணி கிடைக்குமா? என் மகள் தயாநிதி பெயரில் தொழில் தொடங்கலாமா?
கார்த்திகேயன் மேஷ ராசி. அட்டமச்சனி முடிந்துவிட்டது. குரு தசை நடப்பு. கும்ப லக்னத்துக்கு 2, 11-க்குடையவர் என்றாலும் 3-ல் மறைவு. மனைவி கனகாவுக்கு தனுசு லக்னம். அதில் சனி 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10-ஆம் இடத்தை செவ்வாயும் பார்க்கிறார். 2018 மே மாதம் 28 வயது முடிந்து 29 ஆரம்பம். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. மகள் தயாநிதிக்கு மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம், மேஷ லக்னம். சனி தசை நடப்பு. மூவரின் ஜாதகப்படியும் கோட்சாரப்படியும் 2020 வரை அரசுப்பணி உங்களுக்கோ மனைவிக்கோ அமைவது கடினம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியலாம். குறைந்த சம்பளம்- நிறைந்த வேலை! தன்னம்பிக்கையோடு காத்திருக்கவும். காலம் மாறும்; அரசு வேலை அமையும். உங்களைவிட உங்கள் மனைவிக்கு வாய்ப்பு அதிகம். சொந்தத் தொழில் திட்டத்தை சிறிது காலம் தள்ளிப்போடவும்.