டி. சீனிவாசன், செஞ்சி.
என் மகள் வினோதினி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள். அவள் எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம்? S. VINOTHINIஎன்னும் பெயர் சரியா?
S. VINOTHINI என்ற பெயர் 38 வருகிறது. இது சரியல்ல. ஐ எழுத்தை நீக்கி
S. V I N O T I N I
3 6 1 5 7 4 1 5 1
என்று 33-ல் வைக்கலாம். அல்லது அம்மா இன்சியல்- தாத்தா இன்சியல் சேர்த்து அதிர்ஷ்டப் பெயர் வைக்கலாம். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னம். 16 வயது முதல் ராகு தசை. (நடப்பு 18 வயது). மருத்துவம் சம்பந்தமான படிப்பு (வசதிக்கேற்றபடி) படிக்கலாம். அல்லது பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் படிக்கலாம். ஒருமுறை திருவக்கரை சென்று (புதுச்சேரி- திண்டிவனம் பாதை- மயிலம் அருகில்) வக்கிரகாளியம்மன் கோவிலிலுள்ள குண்டலினி முனிவர் ஜீவசமாதி முன்பு 18 நெய் விளக்கேற்றி வழிபட்டு, அங்குள்ள வக்ர சனி சந்நிதியில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
என். மணி, திருப்பூர்-7.
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு நன்றிகலந்த வணக்கம்! 3-3-2018 இதழில் எனது மகள் சத்தியப்பிரியா ஜாதகத்தை வெளியிட்டீர்கள். அதற்கான பரிகாரம் எழுதியிருந்தீர்கள். அதை எங்கு சென்று நடத்துவது? எனது மகன் கார்த்திகேயன் பி.காம் (தமிழ்) படித்துள்ளான். 25 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்? தொழில் வளம் எப்படி இருக்கும்? தன்னுடன் படித்த கிறிஸ்துவப் பெண்ணை விரும்புவதாகக் கூறுகிறான். (திருநெல்வேலி கிறிஸ்டியன் நாடார்). என்ன செய்வது?
அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னத்தில் நீசச் செவ்வாய். 8-ல் லக்னாதிபதி சந்திரன், சனி சேர்க்கை. இவர்களுக்கு செவ்வாய் பார்வை. அவர் ஜாதகமே கலப்புத்திருமணம், காதல் திருமணம் என்பதுதான் விதி. மறுப்பு கூறாமல் முடித்துவிடுங்கள். திருமணத்தேதி 4, 5, 7, 8 வராமல் 1, 3, 6-ல் நடத்தவேண்டும். சர்ச்சில் நடந்தாலும் சரி; மண்டபத்தில் நடந்தாலும் சரி- ஏற்றுக்கொள்ளுங்கள். மகள் ஜாதகம் பற்றிய விவரம் பிறகு பார்த்து த
டி. சீனிவாசன், செஞ்சி.
என் மகள் வினோதினி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறாள். அவள் எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம்? S. VINOTHINIஎன்னும் பெயர் சரியா?
S. VINOTHINI என்ற பெயர் 38 வருகிறது. இது சரியல்ல. ஐ எழுத்தை நீக்கி
S. V I N O T I N I
3 6 1 5 7 4 1 5 1
என்று 33-ல் வைக்கலாம். அல்லது அம்மா இன்சியல்- தாத்தா இன்சியல் சேர்த்து அதிர்ஷ்டப் பெயர் வைக்கலாம். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னம். 16 வயது முதல் ராகு தசை. (நடப்பு 18 வயது). மருத்துவம் சம்பந்தமான படிப்பு (வசதிக்கேற்றபடி) படிக்கலாம். அல்லது பி.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் படிக்கலாம். ஒருமுறை திருவக்கரை சென்று (புதுச்சேரி- திண்டிவனம் பாதை- மயிலம் அருகில்) வக்கிரகாளியம்மன் கோவிலிலுள்ள குண்டலினி முனிவர் ஜீவசமாதி முன்பு 18 நெய் விளக்கேற்றி வழிபட்டு, அங்குள்ள வக்ர சனி சந்நிதியில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
என். மணி, திருப்பூர்-7.
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு நன்றிகலந்த வணக்கம்! 3-3-2018 இதழில் எனது மகள் சத்தியப்பிரியா ஜாதகத்தை வெளியிட்டீர்கள். அதற்கான பரிகாரம் எழுதியிருந்தீர்கள். அதை எங்கு சென்று நடத்துவது? எனது மகன் கார்த்திகேயன் பி.காம் (தமிழ்) படித்துள்ளான். 25 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்? தொழில் வளம் எப்படி இருக்கும்? தன்னுடன் படித்த கிறிஸ்துவப் பெண்ணை விரும்புவதாகக் கூறுகிறான். (திருநெல்வேலி கிறிஸ்டியன் நாடார்). என்ன செய்வது?
அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னத்தில் நீசச் செவ்வாய். 8-ல் லக்னாதிபதி சந்திரன், சனி சேர்க்கை. இவர்களுக்கு செவ்வாய் பார்வை. அவர் ஜாதகமே கலப்புத்திருமணம், காதல் திருமணம் என்பதுதான் விதி. மறுப்பு கூறாமல் முடித்துவிடுங்கள். திருமணத்தேதி 4, 5, 7, 8 வராமல் 1, 3, 6-ல் நடத்தவேண்டும். சர்ச்சில் நடந்தாலும் சரி; மண்டபத்தில் நடந்தாலும் சரி- ஏற்றுக்கொள்ளுங்கள். மகள் ஜாதகம் பற்றிய விவரம் பிறகு பார்த்து தெளிவுபடுத்துகிறேன்.
சந்திரா, கோவில்பட்டி.
சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை அக்னி நட்சத்திரம் என்று காலண்டரில் போட்டிருக்கிறது. அதில் திருமண சுபமுகூர்த்தம் செய்யலாமா?
தாராளமாகச் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. சித்திரை மாதமும் வைகாசி மாதமும் வசந்த ருது என்பதால் இதில் நடக்கும் திருமணங்களும் மணவாழ்க்கையும் இனிமையாகத் திகழும். அக்னி நட்சத்திரத்தில் புது வீடு பால்காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. அதேபோல வாடகை வீடு கூட மாறக்கூடாது. கூடியவரை அக்னி நட்சத்திரக் காலங்களில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் கூடாது. சில இடங்களில் அக்னி நட்சத்திரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். அதுவும் தவறு என்றுதான் என் குருநாதர் கூறியுள்ளார்.
டி. கண்ணன், தஞ்சாவூர்.
எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் எங்கள் வாழ்க்கை வழிகாட்டி, ஜோதிடப் பிதாமகருக்கு வணக்கம்! வைகாசி வசந்த மலமாதம் என்பதால் தோஷம் இல்லை எனில் திருமணம் நிச்சயதார்த்தம், திருமணம் செய்யலாமா? வக்ர செவ்வாய்க் காலத்தில் திருமணம் பேசி முடிக்கலாமா? விளம்பி வருடத்தில் தேய்பிறை முகூர்த்தங்கள் அதிகம் உள்ளன. அதில் செய்யலாமா? திருமணத் தேதி 4, 5, 7, 8 கூடாது என்பதுபோல கிழமைகளுக்கு விதிவிலக்கு எதுவும் உண்டா?
எல்லாருக்கும் பயனுள்ள வகையில் பொதுக்கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சித்திரை மாதமும் வைகாசி மாதமும் வசந்த ருது எனப்படும். வருடத்தில் ஆறு ருதுக்கள். வசந்த ருதுவில் திருமணம் போன்ற சுபகாரியங்களை தாராளமாகச் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. அதேபோல சித்திரை 20 முதல் வைகாசி 14 வரை அக்னி நட்சத்திரக் காலத்திலும் திருமணம் நடத்தலாம். ஆனால் கிரகப்பிரவேசமோ தொழில் ஆரம்பமோ செய்யக்கூடாது. தேதி எண்ணும், கூட்டு எண்ணும் 4, 5, 7, 8 தேதிகளில் கூடாது. தவிர்க்க முடியாமல் மேற்படி தேதிகளில் திருமணம் நடந்துவிட்டால் அந்த தேதியில் கட்டிய திருமாங்கல்யத்தைக் கழற்றி கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு 1, 3, 6 வரும் தேதிகளில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். கிழமைகளுக்கு எந்த தோஷமும் இல்லையென்றாலும் பெரும்பாலும் செவ்வாய், சனிக்கிழமைகளில் திருமணம் செய்ய மாட்டார்கள். சௌராஷ்டிர சமூகத்தினர் சனிக்கிழமை ஸ்திரவாரம் என்று கிரகப் பிரவேசம் செய்வது உண்டு. வக்ர செவ்வாய்க்கும் திருமணத்துக்கும் சம்பந்தமில்லை. குரு- சுக்கிரன் அஸ்தமன காலங்களில் சுபமங்கள காரியங்கள் செய்யக்கூடாது. எண்கணித ஜோதிடர் பண்டிட் சேதுராமன் அவர்கள் மரணயோகம் பார்க்க வேண்டாம் என்றும், எந்தக் காரியத்துக்கும் 8-ஆம் தேதி ஆகாது என்றும் கூறுவார். ஆனால் மரணயோகத்தில் எந்த சுபகாரியமும் செய்வது தவறுதான்.
செல்வேந்திரன், மேலக்கடையநல்லூர்.
எனது மானசீக குருவுக்கு வணக்கம்! என் மகள் திருமலைக்குமாரிக்கு 15 வயது நடக்கிறது. இன்னும் ருதுவாகவில்லை. 11-ஆவது வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?
திருமலைக்குமாரி மேஷ ராசி, கன்னியா லக்னம், பரணி நட்சத்திரம். 19 வயதுவரை சந்திர தசை. லக்னத்துக்கு 10-ல் சனி இருப்பதாலும் அதை செவ்வாய் பார்ப்பதாலும் அரசு வேலை கிடைப்பது கடினம். தொழில் கல்வியில் (டெக்னிக்கல்) அவருக்கு எதில் ஆர்வமோ அதில் படிக்க வைக்கலாம். திங்கட்கிழமைதோறும் காலையில் சிவலிங்க அபிஷேகத்துக்கு பால் வாங்கித்தரவும். (10 மாதம்). இது முடிவதற்குள் ருதுவாகலாம். ரத்தக்குறைவு இருப்பதால் நல்ல ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
ரா. முருகையன், கொன்றைக்காடு.
என் திருமணத்தடைக்கு என்ன காரணம்?
கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். செவ்வாய் தசை இருப்பில் பிறந்தவர். தற்போது 44 வயது நடக்கிறது. 7-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. நீசச் செவ்வாயுடன் சம்பந்தம். களஸ்திர காரகன் சுக்கிரன் சனியுடன் சம்பந்தம். திருமணம் என்பது ஒரு கேள்விக்குறிதான். என்றாலும் இஷ்ட திருமணமாக- கலப்புத் திருமணமாக குடும்பம் அமையும்.
ஆர். யமுனேஸ்வரி, சைதாப்பேட்டை.
எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு கடந்த 21-6-2013 அன்று திருமணம் நடந்தது. 2014-ல் விவாகரத்தாகிவிட்டது. இதுவரை வேறு எந்த வரனும் அமையவில்லை. மறுமணம் எப்போது நடக்கும்?
யோகேஸ்வரி கடக லக்னம். லக்னத்தில் சூரியன். மூல நட்சத்திரம், தனுசு ராசி. கேது தசையில் இருப்பு 4- 5- 10. தற்போது 29 வயது. மாங்கல்ய தோஷம், நாக தோஷம் உள்ள இந்த ஜாதகத்துக்கு 30 வயது முடிந்தபிறகு திருமணம் செய்திருந்தால் நல்ல மணவாழ்க்கை அமைந்திருக்கும். 24 வயது, 25 வயதிலேயே திருமணம் நடந்ததால் நிலைக்கவில்லை. காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு புனர்விவாக ஹோமம் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். நல்ல மணவாழ்வும் நல்ல வாரிசு யோகமும் அமையும். செல்: 99942 74067-ல் பேசவும். 18 விதமான ஹோமம் செய்வார்கள்.
● ஜி. பிரகதீஸ்வரி, பண்ணைப்புரம்.
என் கணவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்களுக்கு கருத்துவேறுபாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் நாங்கள் பிரிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இந்த நிலை மாறுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? நான் பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். அரசாங்க வேலை கிடைக்குமா?
மூல நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னம். உங்கள் கணவர் தினேஷ்குமார் ஜாதகம் இது. பிரகதீஸ்வரி புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னம். உங்கள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தமே இல்லை. புனர்பூசம்- பூனை, மூலம்- நாய். நாயும் பூனையும் பகையோனி. அத்துடன் நட்சத்திரப் பொருத்தமும் இல்லை. அதனால் தாம்பத்திய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது. வாரிசும் இருக்காது. இருவருக்கும் பிரிவு ஏற்படவும் இடமுண்டு. பிரகதீஸ்வரிக்கு ரிஷப லக்னத்திற்கு 10-ல் சூரியன், புதன் இருப்பதால் அரசு வேலைக்கு இடமுண்டு. முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதை உங்கள் இருவரின் கருத்துப்படி முடிவெடுத்து செயல்படலாம்.
● அ. வீரக்கண்ணன், கரியணம்பட்டி.
என் மகளின் ஜாதகத்தில் தந்தைக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறியிருந்தீர்கள். மகள் வளர வளர முன்னேற்றம் என்றும் கூறியிருந்தீர்கள். என் மனைவி பி.எஸ்ஸி., பி.எட். முடித்து தனியார் பள்ளியில் வேலை செய்கிறார். அரசு வேலை கிடைக்குமா? நானும் எம்.ஏ., (தமிழ்) பி.எட். முடித்துள்ளேன். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.
ஏற்கெனவே உங்களுக்கு எழுதிய பலன்களை ஞாபகத்தில் கொண்டு நம்பிக்கை யோடு காத்திருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.
● கே. சின்னத்தம்பி, ஆனையூர்.
தங்களின் கருத்துக்கள் என்னுடைய ஜாதக அறிவை மேம்படுத்தி வருகிறது. நன்றி! என்னுடைய மகள்வழிப் பேரனின் ஜாதகத்தில் அம்ச நிலையில் மிகவும் குழப்ப நிலையில் உள்ளேன். அம்சத்தில் நான்கு கிரகங்கள் நீசம். அவனுக்கு தற்போது முன்று வயது. சனி தசை முடிந்து புதன் தசை சுயபுக்தி நடக்கிறது. என் பேரனின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு, புதன் தசை என்ன செய்யும்?
விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ஆயுள்காரகன் சனி ராசியில் உச்சம், அம்சத்தில் நீசம். இருந்தாலும் சனி தசை முடிந்துவிட்டது. நடப்பு புதன் தசை ராசியில் நீசம். அம்சத்தில்- கடகத்தில் நட்பு. எனவே புதன் தசை கெடுக்காது. கல்வி யோகமும் உண்டு. அம்சத்தில் சுக்கிரனும் நீசம். சந்திரனும் நீசம். இருவருக்கும் நீசபங்கம் ஏற்படுவதால் தாயார், தகப்பனார் தோஷமில்லை. சுக்கிரன் நீசம் என்பதால் தாமதத் திருமணம்- 30 வயதுக்குமேல் நல்லது.
● நா. விஸ்வநாதன், பூவாளூர்.
எனது மகள் கார்த்திகா எம்.எஸ்ஸி., பி.எட்., படித்திருக்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்?
துலா லக்னம். 2-ல் சனி. புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி. லக்னத்துக்கு 7-க்கடைய செவ்வாய் 6-ல் மறைவு. ராசிக்கு 7-க்கடைய குரு ராசிக்கு 12-ல் மறைவு. அதனால் 30 வயது முடிந்ததும் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். அன்னிய சம்பந்தம். கார்த்திகாவுக்கு ஆசிரியை வேலை அமையும். வரும் வரனும் ஆசிரியராக வேலை பார்ப்பார்.