● பி. பார்த்தசாரதி, புட்லூர்.
"அதிர்ஷ்டம்' பேப்பர் காலத்திலிருந்து தங்கள் ரசிகன். இப்பொழுதும் சனிக் கிழமை எப்போதுவரும் என்று காத் திருந்து "பாலஜோதிடம்' வாங்கிப் படிப் பேன். எனக்கு 63 வயதாகிறது. பெரிய பெண் திருமணம் முடிந்து கடன் சிக்கலில் இருந்தபோது தங்களை முதலில் வந்து சந்தித்தேன். தத்தாத்ரேயர் கோவில் போகச் சொல்லி, அதன் மூலமந்திரத்தைப் படிக்கச் சொன்னீர்கள். உடனே எதிர் பாராமல் பணம் வந்து கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். நன்றி! இரண்டா வது முறை சந்தித்தபோது, என்னுடைய இரண்டாவது மகள் திருமணம் முடிந்து விடும் என்று கூறினீர்கள். தாங்கள் சொன்னமாதியே ரயில்வே வேலை யிலுள்ள மாப்பிள்ளை கிடைத்து திருமணம் முடிந்துவிட்டது. மீண்டும் நன்றி! மறுபடியும் கடன் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ராகு தசையில் கடன் தீரும்; அதுவரை வட்டி கட்டத் தான் வேண்டும் என்றீர்கள். இப்போது ராகு தசை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. என் கடன் தொல்லை எப்போது தீரும்? ஆஞ்சனேயர் வாக்கு சொல்லி மக்களுக்கு நன்மை செய்கிறேன். ஆஞ்சனேயர் கோவில் கட்டமுடியுமா? எனக்கு சொந்த வீடு பாக்கியம் உண்டா? இரண்டு வீடுகள் வாங்கி விற்றுவிட்டேன்.
கன்னியா லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி. ஆஞ்சனேயர் கோவில் கட்டினால் சொந்த வீடு கட்டமுடியாது. சொந்த வீடு கட்டினால் ஆஞ்சனேயர் கோவில் கட்டமுடியாது. எது வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் பொறுப்பு. ஆஞ்சனேயர் கோவில் கட்டி பூஜை செய்து அருள்வாக்கு சொல்வது நல்லது. கடன் நிவர்த்திக்கும் கோவில் கட்டுவதற்கும் ஒருமுறை குடும்பத்துடன் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம்மன் கோவிலில் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும்.
● எஸ். துரை, திண்டுக்கல்.
ஜி.எஸ்.டி. வரியால் மருமகனின் தொழில் மந்தமாக உள்ளது. உபதொழில் செய்யலாமா? மகள்- மருமகன் கருத்து வேறுபாடு மனஉளைச்சலை ஏற்படுத்து கிறது. மருமகனுக்கு கணுக்கால் வலி பல வருடங்களாக இருக்கிறது. வைத்தியம் செய்தும் குணமேற்படவில்லை.
ரமேஷ் பாபு கன்னியா லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். கேது தசை நடப்பு. மகள் விஜயஸ்ரீக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம், மீன லக்னம். ராகு தசை நடப்பு. கேதுவும் ராகுவும் ஒரு குடும்பத்தில் இருந்தால் எல்லாவித சங்கடங்களும் பிரச்சினைகளும் தொழில் மந்தமும் நஷ்டமும் ஆரோக்கியக் குறைவும் ஏற்படத்தான் செய்யும். இதற்குப் பரிகாரம் சூலினி துர்க்கா ஹோமம் செய்து குடும்பத்தார் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அல்லது காளஹஸ்தி சென்று காளஹஸ்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். அல்லது தேனி வழி உத்தம பாளையம் சென்று ராகுவுக்கும் கேதுவுக்கும் அபிஷேக பூஜை செய்யலாம்.
● எஸ். குமார், பண்ருட்டி.
அதிர்ஷ்டத்தின் அதிர்ஷ்டம் அவர் களுக்கு வணக்கம். 2009-ல் நீங்கள் சொன்ன படி, 2010-ல் நர்சரி பள்ளி ஆரம்பித்தோம். போட்டிகளுக்கிடையே சிறந்த ஆசிரியர் களைக் கொண்டு தரமான கல்வி கற்பிக் கிறோம். மேலும் வேறு பகுதியில் இடம் வாங்கி நர்சரி பள்ளி ஆரம்பிக்கலாமா? எங்களின் ஆரோக்கியம், ஆயுள், எதிர் காலம் எப்படியிருக்கும்? எங்கள் மகள் ஸ்ரீகாயத்ரி +2 பயாலஜி குரூப் படிக்கிறாள். நீட்- ஜிப்மர் கோச்சில் தனியே படிக்கிறாள். அவளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கும் வாய்ப்பு மெரிட்டில் கிடைக்குமா? அல்லது வேறு எந்தத் துறையில் படிக்கலாம்?
காயத்ரிக்கு கும்ப ராசி, கும்ப லக்னம், அவிட்ட நட்சத்திரம். 2020 ஏப்ரல்வரை ராகு தசை. 2-க்குடைய குரு, ராகுவோடு சேர்க்கை- 4-க்குடைய சுக்கிரன், புதன் சாரம்- செவ்வாய் வீட்டில். (கேட்டையில்). எனவே மருத்துவப் படிப்புக்கு யோகமுண்டு. டொனேஷன் கொடுப்பதற்கு பதில்- காரைக்குடியில் படிப் புக்கான ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோம மும் செய்ய வேண்டும். (சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067). அப்படியே அறந் தாங்கி வழி பேராவூரணி அருகே பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருந்துப் பள்ளம் சென்று மருந்தீஸ்வரருக்கு அர்ச்சனை, வேண்டுதல் செய்யவேண்டும். மெடிக்கல் சீட் கிடைத்ததும் மீண்டும் போய் அபிஷேக பூஜை செய்ய வேண்டும். சிவமணி குருக்கள், செல்: 94451 52242. அத்துடன் கடலுர் அருகில் திருவந்திபுரம் பெருமாள் கோவிலுக்கு உங்களுக்கு தோதான நாளில் காயத்ரியையும் அழைத்துச்சென்று வழிபடவும்.
● நலம்வெங்கடாசலம், உலிபுரம்.
ஜோதிட சக்கரவர்த்திக்கு பல கோடி வணக்கங்கள்! எனது பேத்தி நிவேதா தஞ்சை கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்து வராகப் பணிபுரிகிறார். மேலே என்ன படிக்கலாம்? மேலும் திருமணம் எப்போது நடக்கும்? எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைவார்? அப்பா கல்லூரி வாகன டிரைவர். அம்மா விவசாயி. சகோதரி திருமணம் முடிந்துவிட்டது. தம்பி பத்தாம் வகுப்பு படிக்கிறான். வருமானப் பற்றாக்குறை. லட்சக்கணக்கில் கடன் உள்ளது. தீர்வு என்ன?
நிவேதாவுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். புதன் தசை நடப்பு. எம்.டி படிக்கலாம். அல்லது எம்.எஸ் படிக்கலாம். டி.ஜி.ஓ படிக்கலாம். திருமணம் 25 வயதில் செய்யலாம். டாக்டர் வரன்; அன்னிய சம்பந்தம். ஏழரைச்சனி 2020 வரை இருப்பதால் பரிகாரம் செய்துகொள்ளவும்.
● ஜி. சேகர், தொரப்பாடி.
9-2-2018 "பாலஜோதிடம்' இதழில் எனக்கும் மனைவிக்கும் சில குறிப்பிட்ட ஹோமங்களைச் செய்யும்படி எழுதியிருந் தீர்கள். மனைவியின் நிலைமை சரியில்லா ததால் மேற்படி ஹோமம் செய்ய முடியவில்லை. கடலில் துடுப்பை இழந்த படகில் பயணம் செய்கிறவன் நிலைக்குச் சமமாக- காற்றடிக்கும் போக்கில் படகு போவதுபோல் தவிக்கிறேன். மீண்டும் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. தங்களை தாய்- தந்தையாக வணங்கிக் கேட்கிறேன்.
ஏற்கெனவே சொன்ன பதிலைத்தான் மீண்டும் சொல்லுகிறேன். "பைத்தியம் தெளிந் தால்தான் திருமணம் ஆகும்; திருமணம் ஆனால்தான் பைத்தியம் தெளியும்' என்ற நிலைதான். மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். மருந்து கசக்கிறது என்று சாப்பிடாமல் இருந்தால் நோய் எப்படித் தீரும்? அதற்குமேல் விதிவிட்ட வழிதான்.
● செல்வராஜ், பெருந்துறை.
என் இளைய மகன் ஸ்ரீராம் சிதம்பரம் +2 படிக்கிறான். எந்தத்துறை மேற்படிப்பு சிறந்ததாக இருக்கும்?
ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக் னம். 10-க்குடைய குரு லக்னத்தில். (மிதுனத்தில்). 2-க்குடைய சந்திரன் 2-ல் ஆட்சி. வாக்கு, பேச்சு சம்பந்தமான படிப்பு நல்லது. வக்கீல், ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர் போன்ற படிப்பு படிக்க லாம். கணிதம், வங்கி வேலைக்கான படிப்பும் படிக்கலாம். ஜாதகப்பலன் ஒருபறம் இருந் தாலும் மகனுக்கு எதில் ஆர்வம் அதிகமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
● பாலசுப்ரமணியம், சத்தியமங்கலம்.
எங்கள் குலதெய்வம் எது என்பதே தெரியவில்லை. பண்ணாரி மாரியம்மனையும், பழனி முருகனையும் வழிபடுகிறோம். எனது மகளுக்கு திருமணம் தட்டித் தட்டிப் போகிறது. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரமுடியுமா என்ற மனவேதனையால் வாடுகிறேன்.
சந்தானலட்சுமி சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னம். 31 வயது. சனி தசை நடக்கிறது. லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், சனி சேர்க்கை என்பதால் கடுமையான தோஷம். 35 வயதுகூட தாண்டலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வர கலா ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்தால் ஆறு மாதத்தில் திருமணம் கூடிவிடும். கோவை சேரன் மாநகர் மீனாட்சி சுந்தரர் திருக்கோவிலில், யோகேஷ் அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு பேசவும். செல்: 94430 64265.
● ஆர். ஸ்ரீநிவாசன், சென்னை-92.
2012-ல் ஒரு வீடு வாங்கினேன். வாடகையும் இல்லாமல் விற்கவும் முடியாமல் பூட்டிக்கிடக்கிறது. வாழ்ந்துகொண்டிருக்கும் வீட்டில் பாகப்பிரிவினை விவகாரத்தால் கோர்ட் படி ஏறி இறங்கி வருகிறேன். என்ன பரிகாரம்?
காஞ்சிபுரம் சென்று வழக்கறுத்த ஈஸ்வரருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். அடுத்து திருச்சி- பொன்னமராவதி பாதையில் (புதுக்கோட்டை வழி) செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கு ஒரு அபிஷேக பூஜை செய்து பிரார்த்திக்கவும். வீடு விற்றதும் மறுபடியும் போய் 108 சங்காபிஷேக ஹோம பூஜை செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும்.
● என். சுரேந்திரன், சென்னை-12.
தங்கள் அறிவுரைப்படி கே.எம். சுந்தரம் வசம் ஜாதகம் கணித்து அனுப்பியுள்ளேன். என் மனைவி மனநோயிலிருந்து மீள முடியுமா? எப்போது யாருக்கு முக்தி?
சுரேந்திரன் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னம். 2010 ஜூன் முதல் சனி தசை. இதில் 2020 மே வரை சுக்கிர புக்தி. மனைவி கோமதி உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னம். 2004 ஏப்ரல் முதல் சனி தசை. இதில் 2020 செப்டம்பர் வரை ராகு புக்தி. முதலில் இருவருக்கும் ஜாதகப் பொருத்தமேயில்லை. கணவர் மேஷ ராசி- மனைவி கன்னி ராசி. இரண்டும் சஷ்டாஷ்டகம். (ஆறு, எட்டு). வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவு, ஒற்றுமைக்குறைவு, ஏட்டிக்குப் போட்டியான வாதம், நிம்மதியில்லாத வாழ்க்கைதான்! மனைவியை அனுசரித்து கணவர் நடந்துகொள்ள வேண்டும். சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் வரவழைத்துக்கொள்ள வேண்டும். திங்கட்கிழமைதோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்துக்கு பால் வாங்கித் தரவும். எப்படியோ ஒரு பெண் குழந்தைக்குத் தாய்- தந்தையாகிவிட்டீர்கள். ஒருமுறை காளஹஸ்திக்கு மனைவியை அழைத்துச் சென்று ருத்ராபிஷேக பூஜை செய்யவும். அத்துடன் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு அல்லது துர்க்கைக்கு நெய்விளக்கு ஏற்றவும். அடுத்து பஞ்சேஷ்டி என்ற ஊருக்கு சென்று வழிபாடு செய்யவும். சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்து உண்டு. 2020 செப்டம்பரில் ராகு புக்தி முடிந்ததும் குணம் ஏற்படும்.
● ராஜேஸ்வரி, திண்டுக்கல்.
என் மகன் மதன்குமாருக்கு எப்போது திருமணம் நடக்கும்?
பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னம். 2020 வரை செவ்வாய் தசை. கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. திண்டுக்கல் கசவனம்பட்டி சென்று மௌனகுரு சுவாமி ஜீவசமாதியிலும், மலையடிவாரம் பின்பகுதியில் ஓத சுவாமிகள் ஜீவசமாதியிலும் பிரார்த்தனை செய்யவும். 2019 மார்ச் மாதம் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடும்.
● விஜய்ஸ்ரீதர், சென்னை.
எனது வயிறு கேஸ் டிரபிள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு என்ன?
நல்ல டாக்டரைப் பார்த்து சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்வதே நல்ல தீர்வு. ஜோதிடத்தில் பரிகாரம் கேட்பது சரியா?
● கௌரிசங்கர், எடப்பாடி.
எனக்கு பதவி உயர்வு எப்போது கிட்டும்? தொழிலில் இடமாற்றம் உண்டா? திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் அன்னியமா? உறவா? வேலை பார்க்கும் பெண்ணா?
அடுத்து எப்போது குழந்தை பிறக்கும்- ஆணா பெண்ணா? பிள்ளையின் படிப்பு, எதிர்காலம் எப்படி என்றெல்லாம் கேட்க மறந்துவிட்டீர்களே? இதற்கெல்லாம் பதில் தெரிய நேரில் வந்து காணிக்கை செலுத்தி பலன் கேட்க வேண்டும். இலவச பதிலில் இவ்வளவு கேள்விகள் கூடாது.
● கார்த்திகேயன், ஆழ்வார்திருநகர்.
நான் கொடுக்கும் பணத்தை- சொந்தக்காரர்களானாலும் சரி; நண்பர்களானாலும் சரி; மற்றவர்களானாலும் சரி- திரும்பக்கொடுப்பதில்லை. 500 ரூபாய், 200 ரூபாய் வாங்குகிறார்கள். திரும்பக் கொடுப்பதில்லை. எனவே எந்தக்கிழமை, என்ன நட்சத்திரத்தில் கொடுக்கலாம்?
பொதுவாக செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளிலும் இரவு தீபம் வைத்த பிறகும் கடன் கொடுக்கக்கூடாது. அதைவிட யாருக்கும் கடன் கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி சமாளிப்பது நல்லது.
● ஹைதராபாத் அன்பர்.
எனது மகளுக்கு மூன்று வருடமாக வரன் பார்க்கிறேன்; அமையவில்லை. கடந்த இரண்டு வருடமாக மாற்றுப்பிரிவு பையனையே மணம் புரியப் போவதாக பிடிவாதமாக இருக்கிறாள். என் மனைவி கிராமத்தில் வளர்ந்தவள். மகள் கருத்தை ஏற்க மறுக்கிறாள். அவள் திருமணம் எப்படி நடக்கும்? மகள் விரும்பும் பையன் மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னம்.
உங்கள் மகள் பூர நட்சத்திரம், சிம்ம ராசி, துலா லக்னம். பூரம்- எலி; பையன் மிருகசீரிடம்- பாம்பு. பாம்பும் எலியும் யோனிப்பகை; சேராது. மகள் ஜாதகப்படி கலப்புத் திருமணம்தான். காதல் திருமணம்தான் நடக்கும்! உங்கள் மனைவியை சமாதானப்படுத்தவும். 2019 வைகாசியில் (ஜூன்) இருவருக்கும் 27 வயது முடிந்தவுடன் இந்த திருமணம் பெற்றோர் சம்மதப்பட்டோ அல்லது சம்மதமில்லாமலோ நடந்துவிடும். ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதைவிட பெற்றோரே நடத்திவைப்பது கௌரவமாகிவிடும். அப்படியே இந்த திருமணம் நடந்தாலும் யோனிப் பொருத்தம் இல்லாததால் வாரிசு இருக்காது. அதற்காக சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகளுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும்.