சுசிகரன், ஜோலார்பேட்டை

எனக்கு முதுகுத் தண்டுவடத்தில் நீண்டநாட்களாகப் பிரச்சினை உள்ளது. நான் ரயில்வே பாதுகாப்புத்துறையில் பணிபுரிகிறேன். சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார்கள். ஆனால், வேறுசில மருத்துவர்கள் வேண்டாம் என்றார்கள். ஜோதிட ஆலோசனையில் தங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்

dd

நவகிரகங்களுள் ஆயுள்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி, ஒருவர் ஜாதகத் தில் பலமாக அமைவது சிறப்பான ஆரோக்கியத்தைத் தரும். ரிஷப லக்னம், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந் துள்ள உங்களுக்கு 9, 10-ஆம் அதிபதி சனி உங்கள் ஜாதகத்தில் 12-ல் நீசம்பெற்றுள்ளார். தற்போது ராகு தசையில் சனி புக்தி 9-3-2023 வரை நடப்பதால், உடல் பலவீனம், ஆரோக்கியப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சனி நீசம்பெற்றாலும், செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்றிருப்பதால் நீசபங்க ராஜயோகம் இருப்பதால் பிரச்சினைகள் தீர வாய்ப்புண்டு. ராகு தசை, சனி புக்தியில் சனி அந்தரம் 14-10-2020-ல் முடிந்து, புதன் அந்தரம் தொடங்கும்போது சற்று நல்ல நிலை ஏற்படும். கேது நட்சத்திரமான அஸ்வினியில் பிறந்து ராகு தசை நடப்பதால், இயற்கை மருத்தும், ஆயுர்வேத மருந்தும் நல்ல பலன் தரும். சனி புக்தி நடப்பதால் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்து, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்க ளால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

Advertisment

மகாதேவன், சேந்தமங்கலம்.

என் மனைவி இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. எனக்கு மறுமண யோகம் உண்டா?

தனுசு லக்னம், பூர நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ள தங்களின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி புதன், லக்ன கேந்திரம் பெற்று, லக்னாதி பதி குரு புதனையும், லக்னத் திலுள்ள சுக்கிரனையும் பார்ப்பது நல்ல அமைப்பாகும். 2-ஆம் அதிபதி சனி 3-ல் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பாகும். மறுமணத்திற்கு முயன்றால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது சிறப்பு.

Advertisment

தினேஷ்குமார், வேலூர்.

எனக்கு மேற்படிப்பு எப்படி அமையும்? வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?

பொதுவாக ஒருவரது கல்வி, உயர் கல்வியைப் பற்றி அறிய 4, 5-ஆம் பாவம் உறுதுணையாக இருக்கிறது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாயும், 5-ஆம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருப் பது அற்புதமான அமைப்பாகும். கல்வி காரகன் புதன், சூரியன் சேர்க்கை பெற்று 4-ல் அமைந்திருப்பதும் புதாதித்திய யோகமாகும். இதனால் சிறப்பான கல்வி யோகம் உண்டு. லக்னாதிபதி சனி 4-ல் நீசம் பெற்றாலும், செவ்வாய் பரிவர்த் தனை பெற்று நீசபங்க ராஜயோகம் இருப்பதால் நல்ல நிலை அடையமுடியும். தற்போது நீசம்பெற்ற சனி தசை நடந்தாலும் வாழ்வில் வளர்ச்சி ஏற்படும். 10-ஆம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று, சூரியன் சேர்க்கை பெற்று 4-ல் இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும். 10-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முதலில் ஒரு துறையில் இருந்து, அதன்பின்பு வேறு ஒரு துறைக் குச் செல்லும் யோகம் ஏற்படும். சனி தசை நடப்பதால் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.

சவீதா, திமாப்பூர். (நாகலாந்து).

நான் கடந்த ஐந்து வருடங்களாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகிறேன். நான் பூரணமாக இதிலிருந்து விடுபடுவேனா? ஆம் எனில் எப்போது குணமடைவேன்?

சித்திரை நட்சத்திரம், துலா ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஆயுள்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி 12-ல் இருந்தாலும், புதன் நட்சத்திரத்தில் அமைந்து குரு பார்வை பெறுவது நல்ல அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் 1, 4-க்கு அதிபதியான குரு 4-ல் ஆட்சிபெற்றிருந்தாலும் வக்ரம் பெற்று தற்போது குரு தசை 22-3-2022 வரை நடப்பது நல்ல தல்ல. குரு பார்வை 8-ஆம் வீட் டிற்கு இருப்பதால், இருக்கும் பாதிப்புகள் குறைய வாய்ப்புண்டு. தற்போது நடக்கும் குரு தசை முடிந்து, அடுத்துவரும் சனி தசையில் ஆரோக்கியத்தில் முன் னேற்றம் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும், குலதெய்வ வழிபாடு களை மேற்கொள்வதும் சிறப்பு.