பரணங்களை விரும்பாதவர் யார்? ஆணானா லும் பெண்ணானாலும் அணிகலன்கள்மீது ஆசை உடையவராகத்தான் இருக்கிறார்கள். "பெண்ணுக்குப் பொன் நகை வேண்டாம்; புன்னைகையே போதும்' என்ற காலமெல்லாம் போயே போய்விட்டது. பெண் பார்க்கும் படலத்தில்கூட பெண்ணைப் பிடிக்கிறதோ இல்லையோ, முதலில் எத்தனை சவரன் நகை போடுவார்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

Advertisment

இப்பொழுதெல்லாம் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருப்பதால், மக்கள் தங்களின் முதலீட்டை பொன்னில் போட விரும்புகிறார் கள். ஆண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? நகை போட்டுக் கொள்வதில் நடமாடும் நகைக் கடையாகவே பல ஆண்கள் இருக்கிறார்கள். பொன்னை வைத்த இடத்தில் பூவை வைத்துப் பார்ப்பதென்பதெல்லாம் தற்போது நடக்காத கதை. பொன்னை வைக்கும் இடத்தில் கட்டி கட்டியாக தங்கத்தை வைத்துப் பார்க்க ஆசைப்படும் நிலை வந்துவிட்டது.

dd

மனிதனுக்கு மதிப்பிருக்கிறதோ இல்லையோ- அணிந்திருக்கும் ஆபரணங்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். வசதியே இல்லாதவர்கள்கூட பத்து சவரன்களுக்கு குறைவாக வைத்திருப்பதில்லை. நகைகளைப் போட்டு அனுபவிக்கும் யோகம் அனைவருக்கும் அமைகிறதா என்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும். கடனை வாங்கித் தன் மகளுக்குப் பத்து சவரன் போட்டு கட்டிக்கொடுத்தால், மூன்றாவது நாளே அவற்றை அடமானம் வைக்கும் கணவர்கள் எத்தனையோ பேர். அப்படியென்றால் அவர்களுக்கு அந்த நகைகளை அனுபவிக்கும் யோகம் இல்லை என்றுதானே கூறவேண்டும்? பொன்னாபரணங்களை அதிகம் வாங்கி அனுபவிக்கும் யோகம் யாருக்கு அமைகிறதென்று பார்ப்போமா?

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந் திருப்பது யோகத்தை ஏற்படுத்தும். அணிகலன்கள், பொன்னாபரணங்களை அனுபவிக்கக்கூடிய யோகம், சுக்கிரனும் குருவும் பலமாக அமையப்பெற்றவர்களுக்குதான் உண்டாகும். சேமிப்பென்பது வீடு, மனை மட்டுமின்றி ஆபரணங்களை சேர்ப்பதும் ஒரு சேமிப்புதான். இப்படிப்பட்ட சேமிப்புகள் பலமாக இருக்க ஒருவரின் ஜாதகத்தில் 4-ஆமதிபதியும், 4-ஆம் வீடும் பலம்பெறுவது மட்டுமின்றி, 4-ல் குரு, சுக்கிரன் அமையப்பெற்றாலும், 4-ஆமதிபதிக்கு குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுபகிரகங்களின் தொடர்பிருந்தாலும் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப் பாக அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் 3-ஆமதிபதியானவர் குரு வீட்டிலோ, சுக்கிரன் வீட்டிலோ அமைந்திருந் தாலும், 3-ல் குரு, சுக்கிரன் அமைந்து பலம்பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 3-ஆமதிபதி 8-ஆமதிபதியுடன் இணைந்து பலம்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3, 8-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், ஆபரணங்கள்மீது ஆசை கொண்டவர்களாகவும், ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர். 3-ஆமதிபதி பலம்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் ஆபரணச் சேர்க்கைகளும் அவற்றை அனுபவிக்கும் யோகமும் உண்டாகும். 3-ல் சந்திரன் அமைவது, 5-ல் குரு அமைவது, 8-ஆமதிபதி ராகு சேர்க்கைப்பெற்று 9-ல் அமைவது போன்றவற்றால் ஆபரணச் சேர்க்கையையும் நவரத்தினங்கள் அணியும் யோகத்தையும் கொடுக்கும்.