Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jaotaitapaanau-atairasatama-cai-caupapairamanaiyama-patailakala-1

● ஜே. அன்பழகன், குரோம்பேட்டை.

பலகோடி மக்கள் மனதில் நிறைந்துள்ள அய்யா குருநாதருக்கு கோடானு கோடி வணக்கம்! சாப்பாடு, துணி மணிக்குப் பஞ்சமில்லை. இரு சக்கர வாகனங்கள் மூன்று உண்டு. சொந்த வீடு மட்டும் அமையவில்லை. வேலையில் பிடித்த பணம் இன்னும் வந்துசேரவில்லை. எப்போது கிடைக்கும்? மகன் திருமணம்- மகள் திருமணம் எப்போது நடைபெறும்? மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? தனியார்துறையில் வேலைக்குப் போகலாமா?

Advertisment

அன்பழகன் மகர ராசி, திருவோண நட்சத்திரம். 2020 வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம். இதில் தனது புக்தி முடியவேண்டும். அதன்பிறகு சொந்த வீடு அமையும். உங்களுக்கு வேலை சம்பந்தமாக வரவேண்டிய பணம் வந்துசேர கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து, கார்த்தவீர்யார்ஜுன மந்திர ஸ்லோகத்தை தினசரி ஜெபம் செய்யவும். மகன் சந்தீப் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னம். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதால் 29 அல்லது 30 வயதில்தான் திருமண யோகம். மகள் ஷில்பா மிதுன ராசி, விருச்சிக லக்னம். 2019 மே வரை சனி தசை, ராகு புக்தி முடிந்ததும் குரு புக்தியில் திருப்தியான வேலை அமையும்.

● சேதுராமன், திருவாரூர்.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின கடவுளும் இல்லை. ஜோதிட பானுவுக்கு மிஞ்சின ஜோதிடரும் இல்லை.

இறைவன் தங்களுக்கு நீண்டநெடிய ஆயுளைத் தரவேண்டும் என்று பிரார்த் திக்கிறேன். என் மகன் கல்வியில் சுமாராக இருக்கிறான். அவன் எதிர் காலம் எப்படி அமையும்? அஸ்ட்ரோ நியூமராலஜிப்படி 37-ல் பெயர் அமைத் துள்ளேன். பெயர் எண் 37 நல்ல எண். பிறந்த தேதி 2, கூட்டுத் தேதி 7 என்பதால் 37 பொருத்தமானதே. மகர ராசிக்குத் தற்போது

● ஜே. அன்பழகன், குரோம்பேட்டை.

பலகோடி மக்கள் மனதில் நிறைந்துள்ள அய்யா குருநாதருக்கு கோடானு கோடி வணக்கம்! சாப்பாடு, துணி மணிக்குப் பஞ்சமில்லை. இரு சக்கர வாகனங்கள் மூன்று உண்டு. சொந்த வீடு மட்டும் அமையவில்லை. வேலையில் பிடித்த பணம் இன்னும் வந்துசேரவில்லை. எப்போது கிடைக்கும்? மகன் திருமணம்- மகள் திருமணம் எப்போது நடைபெறும்? மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? தனியார்துறையில் வேலைக்குப் போகலாமா?

Advertisment

அன்பழகன் மகர ராசி, திருவோண நட்சத்திரம். 2020 வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. சனி தசை முடிந்து புதன் தசை ஆரம்பம். இதில் தனது புக்தி முடியவேண்டும். அதன்பிறகு சொந்த வீடு அமையும். உங்களுக்கு வேலை சம்பந்தமாக வரவேண்டிய பணம் வந்துசேர கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து, கார்த்தவீர்யார்ஜுன மந்திர ஸ்லோகத்தை தினசரி ஜெபம் செய்யவும். மகன் சந்தீப் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னம். நாக தோஷம், சனி தோஷம் இருப்பதால் 29 அல்லது 30 வயதில்தான் திருமண யோகம். மகள் ஷில்பா மிதுன ராசி, விருச்சிக லக்னம். 2019 மே வரை சனி தசை, ராகு புக்தி முடிந்ததும் குரு புக்தியில் திருப்தியான வேலை அமையும்.

● சேதுராமன், திருவாரூர்.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின கடவுளும் இல்லை. ஜோதிட பானுவுக்கு மிஞ்சின ஜோதிடரும் இல்லை.

இறைவன் தங்களுக்கு நீண்டநெடிய ஆயுளைத் தரவேண்டும் என்று பிரார்த் திக்கிறேன். என் மகன் கல்வியில் சுமாராக இருக்கிறான். அவன் எதிர் காலம் எப்படி அமையும்? அஸ்ட்ரோ நியூமராலஜிப்படி 37-ல் பெயர் அமைத் துள்ளேன். பெயர் எண் 37 நல்ல எண். பிறந்த தேதி 2, கூட்டுத் தேதி 7 என்பதால் 37 பொருத்தமானதே. மகர ராசிக்குத் தற்போது ஏழரைச்சனி என்பதால் கல்வியில் மந்தம், மறதி. இருந்தாலும் ஐந்து வயதுதானே ஆகிறது. போகப் போக சரியாகிவிடும். 12 வயதுக்குமேல் தெளிவாக இருப்பான். உயர்கல்வி படிப்பான். ஏழரைச்சனி தாக்கம் குறைய 19 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபமேற்றவும். ஏழரைச்சனி முடியும்வரை.

● சண்முகம், திண்டுக்கல்.

Advertisment

2018 புத்தாண்டுப் பலன் எழுதிய ஆர். மகாலட்சுமி புதுவருடம் தனுசு லக்னம் என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் கன்னி லக்னம் என்று எழுதியுள்ளீர்கள். எது சரி?

கன்னி லக்னத்தில்தான் 2018 பிறந்தது. அதுவே சரி. அதாவது 2018 என்பது- 2017 டிசம்பர் நள்ளிரவு 12.00 மணிக்குதான் ஆங்கிலப்புத்தாண்டு ஜனவரி- 1 உதயம். அந்த நேரப்படி கன்னி லக்னம்தான். காலை 6.00 மணி என்ற கணக்கில் சூரியன் நின்ற லக்னம் தனுசுவை அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரை மாதத்துக்குதான் சூரியனைக் கணக்கிட வேண்டும்.

● ஜி. புனிதா, ஆரணிபாளையம்.

என் கணவரையும், பிள்ளைகள் இருவரையும் பிரிந்து வந்து என் வயதான தாய்- தந்தையுடன் வசித்து வருகிறேன். என் கணவரின் மனநிலை சரியில்லாததாலும், மாமியாரின் கொடுமை காரணமாகவும் பிரிந்து வாழ்கிறேன். நான் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை ஏற்படுமா? பிள்ளைகள் என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழும் சூழ்நிலை ஏற்படுமா? என் எதிர்கால நிலை என்ன?

புனிதாவுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னம். 2013 மே முதல் குரு தசை கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டது. ராஜுவுக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னம்.

2021 வரை கேது தசை. முதலில் உங்கள் இருவருக்குமே ராசிப்பொருத்தம் இல்லை. ஆறு ஷ் எட்டு- சஷ்டாஷ்டக ராசி. இந்த ஜாதகத்தைச் சேர்த்ததே தவறு. அதிலும் பிள்ளைகள் பிறந்துவிட்டதால் இல்லற சுகம் இல்லாமல் போய்விட்டது. பிள்ளைகள் இருவரின் நட்சத்திரம், ராசி எழுதவில்லையே. உங்கள் மாமியார் இருக்கும்வரை குடும்பம் ஒன்றுசேர வழியில்லை. 2021-ல் கணவருக்கு சுக்கிர தசை வந்தபிறகு குடும்பம் ஒன்றுசேரும் வாய்ப்பு உருவாகலாம். குடும்பம் ஒன்றுசேரவும், வாழ்க்கையில் வசந்தம் ஏற்படவும் நீங்கள்தான் மாமியார் கொடுமையானாலும் பிள்ளைகளுக்காகப் பொறுத்துக்கொண்டு பொறுமையாகப் போகவேண்டும். ரோஷம் பார்க்காமல் மனப்பக்குவம் ஏற்பட திருவண்ணாமலை அருகில் மணலூர்பேட்டை பாதையில் ஆதி திருவரங்கம் என்ற ஆதிரெங்கநாதர் கோவில் சென்று உங்கள் கோரிக்கைகளை முறையிடலாம். (ரங்கநாதபட்டர், தொலைபேசி: 04158-283877).

● கே. சண்முகம், ஆரணிபாளையம்.

எனக்கு ஜோதிடத்தில் ஈடுபாடு உள்ளதால் ஜாதகப் புத்தகங்களைப் படித்து வருகிறேன். பிறருக்கு பலன் சொல்ல முடியுமா? இதுவரை சொந்த வீடு இல்லை. எதிர்காலத்தில் சொந்த வீடு அமையுமா? புதன், சுக்கிரன் வர்க்கோத்தமப் பலன் என்ன? நீசபங்க ராஜயோகப் பலன் என்ன?

சிம்ம லக்னம், கன்னி ராசி. 28-1-2017 முதல் 4-12-2019 வரை சனி தசையில் ராகு புக்தி. ராகு- கேது தசாபுக்திகள் நடந்தால் ஜாதக ஞானம் உண்டாகும். குரு புக்தியில் பலன் சொல்லும் நாவண்மை, வாக்குப் பலிதம் உண்டாகும். சென்னையில் பி.எஸ்.பி.யின் ஜோதிடப் புத்தகங்களை வரவழைத்துப் படியுங்கள். ஜோதிடத் தெளிவு பிறக்கும். பி.எஸ்.பி. விஜயபாலா, செல்: 98410 40251-ல் தொடர்புகொள்ளவும். முகவரி: 11ஈ/38, பஜனைக்கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94. புதன் நீசபங்கராஜயோகம். புதன் தசை வந்தபிறகு பலன் தரும். வர்க்கோத்தமப் பலனும் மனைவிக்கு ஆயுள் தீர்க்கம், மாங்கல்ய பலம்! 2019 வரை உங்களுக்கு ராகு புக்தி; மனைவிக்கு ராகு தசை. உடல்நலக்குறைவு, தவிர்க்கமுடியாத விரயச்செலவுகள், வயதில் பெரியவர்களுக்கு கண்டம், வைத்தியச்செலவு ஏற்பட இடமுண்டு. அதனால் சூலினிதுர்க்கா ஹோமம் செய்து குடும்பத்தினர் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். 2020-ல் குரு புக்தியில் சொந்த மனை அல்லது வீடு அமையலாம். வடக்குப் பார்த்த அம்மனுக்கு ஞாயிறு, வெள்ளி ராகு காலத்தில் இரண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபடவேண்டும். இது முதலுதவி சிகிச்சைபோல.

● ஆர். கார்த்திகேயன், பண்ணைப்புரம்.

இதுவரை எனக்குத் திருமண மாகவில்லை. எப்போது நடக்கும்? அரசு வேலை அமையுமா?

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னம். 37 வயது நடக்கிறது. லக்னத்துக்கு 7-ல் சனி நிற்க, ராகு பார்ப்பதால் திருமணத்தடை. சனியுடன் லக்னாதிபதி குரு சம்பந்தப்பட்டு லக்னம், ராசியைப் பார்ப்பதால், திருமணம் தாமதமானாலும் நல்ல குணவதியான மனைவி அமைவார். 38 வயதில் நடக்கும். 4-ல் உள்ள சூரியன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும். (ஒரு தபாலை சரியாக ஒட்டவில்லை. கவரோடு லெட்டரும் சேர்ந்து ஒட்டியதால் எடுக்கும்போது கிழிந்துவிட்டது. நீங்கள் மட்டு மல்ல; உங்களைப்போல பலரும் கவரை ஒட்டும்போது எல்லா இடத்திலும் பசையைத் தடவி ஒட்டுகிறார்கள். கிழியாமல் பிரிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.)

● ஜெயந்தி, சிங்கப்பூர்.

தாங்கள் கூறியபடி 2012-ல் பள்ளத் தூரில் ஸ்ரீதரனுக்கு கந்தர்வராஜ ஹோமம் செய்தோம். தற்போது திருமணப் பதிவு மையம்மூலமாக ஒரு பெண் ஜாதகம் (தேவகி) வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செய்து நின்றுவிட்டது. இருவருக்கும் திருமணம் செய்யலாமா?

இரண்டு ஜாதகம் அனுப்பியுள்ளீர்கள். ஸ்ரீதரன் சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி. தேவகி- விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி.

இரண்டும் ஒரே யோனி- புலி. ஏக யோனி வெகு உத்தமம்; சேர்க்கலாம். தேவகிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் 30 வயதுக்கு முன்பு செய்த திருமண ஏற்பாடுகள் நின்று போயிருக்கலாம்; தடைப்பட்டிருக்கலாம். 2018 பிப்ரவரியில் 31 வயது முடியும். இதன்மேல் திருமணம் செய்யலாம். மாங்கல்யம் தீர்க்கம். தோஷ நிவர்த்தி.

● என். காட்டுராஜா, தெற்கு செய்யானேந்தல்.

சுக்கிர தசைக்குத் தகுந்த பரிகாரம் செய்துவிட்டு வெளிநாடு போகலாமா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா?

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. தனுசு லக்னம். 2019 செப்டம்பர் வரை சுக்கிர தசை தனது புக்தி. இக்காலம் சொந்தத் தொழிலும் செய்யமுடியாது. வெளிநாட்டு வேலைக்கும் போக முடியாது. பட்டா வாங்காமல் புறம் போக்கில் வீடுகட்டி வாழ்வதற்குச் சமம். எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றம் வரலாம் அல்லவா? 2019 செப்டம்பர் வரை எந்த பரிகாரமும் பலன் தராது. பொறுமையாக இருப்பதே பரிகாரம்.

● முருகேசன், பேரணி.

எங்கள் மகன் சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்பதால், நான்கு ஆண்டுகளாக வெளியில் தேடியும் பெண் அமையவில்லை. எப்போது பெண் அமையும்?

மகேந்திரனுக்கு விருச்சிக லக்னம். 7-க்குடைய சுக்கிரன், ராகு- கேது சம்பந்தம். 7-ஆம் இடத்துக்கு குரு பார்வை இல்லை. நடப்பு வயது 38. வரும் ஆகஸ்டில் சந்திர தசை, சுக்கிர புக்தி முடியும். அடுத்து வரும் சூரிய புக்தியில் பெண் அமையும்; திருமணம் கூடும். அதற்கு முன்னால் செலவைக் கருதாமல் காரைக்குடி அருகில் வேலங்குடி சென்று சுந்தரம் குருக்களைச் சந்தித்து காமோகர்ஷண ஹோமம், கந்தர்வ ராஜஹோமம் செய்து மகனுக்கு கலச அபிஷேகம் செய்யவும். அசலில் பெண் தருகிறவர்கள் வயதைக் கணக்கிடாமல் முன்வருவார்கள். (சுந்தரம், செல்: 99942 74067)

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe