பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 22, 23, 29, 30, 31.

Advertisment

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: உங்கள் மனம் இம்மாதம் அடிக்கடி உணர்ச்சிவசப்படும். அதனை அடக்கவேண்டும். 4, 5, 6 தேதிகள் குடும்பத்தாருடன் மகிழ்வுடன் இருக்கச் செய்யும். 11, 12, 13 தேதிக்குமேல், மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தில் இருப் போருர் வீட்டை அழகு செய்வ தோடு, வாங்கல்- விற்றல் எல்லாமே சீராக செயல்படும். சனி மூன்றில் இருப்பதால், தெற்கு திசை தலை வாசல் அமைப்புடையோர் கன்னிமூலை அதிக பளிச் சென்றிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் ஆலோ சனைகளை உதாசீனப்படுத்தல் நன்மைக்கு வழிவகுக்கும். கேது தடைகளைத் தருவார். மனைவி யுடன் கருத்து வேற்றுமை கூடாது; பிரிவினைக்கு வழி வகுக்கும். வாய்ச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது. வலம் புரிச்சங்கில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பையெண் ணெய் கலந்து, தாமரைத்தண்டு திரியில் தீபமேற்றல் நன்று.

சுவாதி: மௌனமாய் இருக் கும்போது, குற்றங்களைப்பற்றி சிந்தனைசெய்து அகற்ற முயல வேண்டும். 16, 17 தேதிகள் இதனை உறுதிசெய்யும். பெண்களுக்கு 20, 21 தேதிகளில் கூடுதல் பொறுப்புகள் வரும். வயதில் பெரியவர்கள், பிள்ளைகளின்மூலம் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்க இயலாது. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. அதிலும் ஆற்று நீரைக் கடக்கும்போது எச்சரிக்கை தேவை. இம்மாதம் மாமனார் வீட்டிலிருந்து சிறு உதவி கிடைத்தாலும் அது விருத்தியாகும். குரு தனுசில் இருப்பதால் துர்க்கையை வணங்குவது நல்லது. கன்றுடன் உள்ள பசுவுக்கு புல், கீரை தருதல் நன்று. இயலா தென்றால் பால் கலந்த நீரால் அந்தரங்க உறுப் பைத் தூய்மை செய்வதால் கெடுதல் போகும்.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: சேவைதான் பணத்திற்கான விதை. அதை இம்மாதம் முன்னிலைப்படுத்தவேண்டும். உத்தியோகம் பார்ப்போர், அரசுப் பணி யாளர்கள் இம்மாதம் 24, 25, 26 தேதிகளில், மூத்த அதிகாரிகளின் செயலைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. மாணவர் களுக்கு நல்ல பாதை சுலபமாகிவிடும். 27, 28 தேதிகளில் அதிகம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமையும். சூரியனுடன் புதன் மகரத்தில் இருப்பதால், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, "வைவா' போன்றவற்றில் பின்னடைவு வரலாம். எனவே வீட்டை விட்டுப் புறப்படும்போது பன்னீர், ரோஸ் வாட்டரில் முகத்தை அலம்பிவிட்டுச் செல்லுதல் மிக நல்லது. 3-ல் சனி, கேது இருப்பதால் பூமிசார்ந்த எல்லா விவகாரங் களும் வெற்றி. (இவ்வருடம் மே 14 முதல் செப்டம்பர்வரை குடும்பத்தில் குழப்பம் வரலாம். அமைதியாக செயல்பட வேண்டும்.)

விருச்சிகம்

Advertisment

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 5, 6, 12, 24, 25, 26.

விசாகம் 4-ஆம் பாதம்: 6-ஆம் தேதிக்குமேல் நல்லவற்றை எதிர்பார்க்கலாம். பணிபுரியும் இடங்களில் நிம்மதியை எதிர்பார்க்க இயலாது. 9, 10 தேதிகளில் வீணான வாக்குவாதம் வரும். 11, 13 தேதிக்குமேல் அமைதியான சூழ்நிலையை எதிர்பார்க்கலாம். ஆயத்த ஆடை விற்போர், விவசாயம், வருங்கால சந்ததிக்கான முதலீடு போன்றவற்றில் கவனம் செலுத்துவோருக்கு குரு ஆதரவு தருவார். சுக்கிரன் பேராதரவு தருவார். சுக்கிரனை மட்டும் வணங்குவது போதுமானது. வெள்ளிக்கிழமை ஒரு பொழுது விரதம், நெய், தயிர், கற்பூரம் கோவிலுக்கு தானம் நன்று. மணக்கும் திரவியங்கள் (சென்ட்) உபயோகிக்க வேண்டும் தீயில் கருகாத ஆடை உடுத்த வேண்டும். இம்மாதம். (இவ்வருடம் ஜூன் 30-க்குப் பிறகு நவம்பர் 20-க்குள்ளாக குடும்பத்தில் புது நபர் வருவார்.)

அனுஷம்: 16, 17 தேதிக்குமேல் பணவரவை எதிர்பார்க்கலாம். எழுத்தாளர்கள், கற்பனைத் திறன் படைத்தோர், கலைஞர்கள் சுலப நன்மை களை எதிர்பார்க்கலாம். 19, 21 தேதிகளில் சந்திரனும் செவ்வாயும் லட்சுமிகடாட்சம் தருவார்கள். சிலருக்கு இலாகாக்கள் சார்ந்த பின்னடைவு மனம் நோகவைக்கும். ராகு 8-ல். கருவுற்ற மனைவியை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். பணிபுரிவோருக்கு மனதுக்கு ஒவ்வாத இடமாற்றம், இலாகா மாற்றங் கள் வரும். பிறரால் பணமுடை ஏற்படலாம்; உஷார். சரஸ்வதியை வணங்கவேண்டும். மின்சார உபகரணம் இலவசமாகப் பெறுவது கூடாது. கோமேதக மோதிரம் அணியலாம். இம்மாதம் கூட்டுக்குடும்பத்தைவிட்டுத் தனிக்குடித்தனம் கூடாது.

Advertisment

கேட்டை: இம்மாதம் உங்கள் சுயகௌ ரவம், குலகௌரவம் சிறப்புறும் விதமாக நடைபோடலாம். உத்தியோக உயர்வு, பணவரவு, குடும்பமாக உல்லாச சுற்றுலா- இப்படியாக கிரகநாதர்கள் வழிகாட்டு வார்கள். 27, 28 தேதிகளில் வீணான விவாதம் வேண்டாம். எதிரியின் சூழ்ச்சியால் மனம் வேதனைப்பட நேரிடும். ஜோதிட சித்தாந்தம்,

"யஸ்ய யஸ்ய யதா துஸ்த்த:

ஸதம் யத்னேன பூஜயேத்/

பிரம்ஹனைஷாம் வரோதத்த:

பூஜிதா: பூஜயிஷ்யத'

என்கிறது. யார் ஜாதகத்தில் எந்த கிரகம் கெட்ட ஸ்தானங்களில் இருக்கின்றதோ அவர், அந்த கிரகத்தை பயபக்தியுடன் பூஜிக்க வேண்டும். சூரியனை வணங்குவது சிறப் பானது.

தனுசு

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30, 31. பாதக நாட்கள்: 1, 7, 8, 14, 17, 28.

மூலம்: புதுவருடம் புத்துயிர் தருவது போல் தென்படுகிறது. 7-ஆம் தேதி நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். 11, 12, 13 தேதிகளில் மூன்றாவது நபர் தலையீட்டால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வரும். இம்மாதம் பொய் சாட்சி கூறல், அரசுடன் மோதுவது சிக்கலை உருவாக்கும். எல்லா தொல்லையும் போவதற்கு பச்சைப்பாலுடன் இனிப்பு கலந்து கிழக்கு நோக்கிச் செல்லும் அரசமர வேரின் மண்மேல் ஊற்றிக்கலந்து, அந்த மண்ணை சிறிது எடுத்துவந்து நெற்றியில் திலகம்போல் வைத்து வந்தால் நன்மைகள் தொடரும். புதன்கிழமை ராகுகாலத்தில் கைமாற்றாகப் பணம் வாங்கல்- கொடுப்பது கூடாது.

66

பூராடம்: பிரியம் வைத்தவனைப் பித்தனாக்கு வதில்தான் பெண்ணுக்கு இன்பம் அதிகம். அதற்கு இரண்டில் இருக்கும் சுக்கிரன், சனியுடன் இணைந்து துணைபோவார். ஆடவர்கள் உஷார்நிலையில் செயல்படல் நன்று. இம்மாதம் 18, 19 தேதிகளில் சொத்து களை வாங்க, இளைய தலைமுறையினர் பெரிதும் உதவுவார்கள். 20, 21 தேதிகளில் ஆரோக்கியத்தில் கவனம்வேண்டும். குடும்பம் சார்ந்த கவலைகள் நெருக்கடிகளைத் தரும். நீண்டநாள் திருமணத்தடைகள் இருந்து வந்தால், சுக்கிரஹோரையில் சுக்கிரனை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை பைர வருக்கு வில்வ இலை அர்ச்சனை செய்துவந் தால் செல்வப்பேறு கிடைக்கும். வியாழக் கிழமைகளில் மஞ்சள்நிற கைக்குட்டை உபயோகிப்பது குரு பார்வையை வரவழைக்கும்.

உத்திராடம் 1-ஆம் பாதம்: இம்மாதம் நீங்கள் கூறும் எல்லா கருத்துகளும் பிறரிடம் நன்மதிப்பைப் பெற்றுத்தரும். மகிழ்ச்சி கரமான பொருளாதாரத் தன்னிறைவு காணப் படும். ஆன்மிக ஈடுபாடு மிகையான நன்மைகள், நிம்மதியைப் பெற்றுத்தரும். 13-ஆம் தேதிக்கு மேல் இன்னும் உற்சாகமாகக் காணப்படு வீர்கள். 29, 30 தேதிகளில் கவனக்குறைவான செயலால் கெடுதல் வரலாம். முக்கியமான பத்திரங்களில் கையெழுத்திடும்போது கவன முடன் செயல்படவேண்டும். கருவுற்ற பெண் களும், அவர்களது கணவர்களும் குழந்தை பிறக்கும்வரை கோவிலில் வழிபாடு செய்வ தைத் தவிர்த்தல் நன்று. ஆனால் வீட்டில் மாதா புவனேஸ்வரி தேவிக்கு நெய் தீபமும், பைரவருக்கு மிளகு தீபமும் ஏற்றி வழிபடலாம். குழந்தை பிறந்து 48 நாட்களுக் குப்பிறகு ஆலயம் செல்லலாம். அதுவே சிறந்தது. (இவ்வருடம் நான்கு சக்கர வாகனத்தை மே 11 முதல் செப்டம்பர் 29 வரை கவனமாக ஓட்டுதல் நன்று.)

மகரம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 14, 22, 23. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 16, 29, 30, 31.

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: வசந்தம் ஒரே நாளில் மலர்ந்துவிடுவதில்லை என்பது மகர ராசிக்காரர்களுக்கு நன்றா கவே தெரியும். இவ்வருடம் முதல் மாதமே நிம்மதியைத் தரப்போகிறது. எனினும், 4, 5, 6 தேதிகளில் எல்லாத் துறையினரும் கவனமுடன் செயல்படல் நன்று. 14, 15 தேதிகளில் எதை முதலீடு செய்து வாங்கினாலும் குறைகள் தெரியவரும். அதனால், பி.பி., சுகர் கூடும். அநேகருக்கு தடைப்பட்ட மகளின் திருமணம் உயிர்பெறும். மைத்துனியின் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே இருந்தால், மோதிர விரலில் ஒரு வெள்ளி மோதிரம் அணிவித் தால் தடைகள் மறையும். குடும்பத்தில் தொடர்ச்சியாக சுபநிகழ்ச்சிகள் தடைப் பட்டால், பஞ்சு உருண்டை, பருத்திநூல் (காட்டன் ரோல்) சிறிதாக வாங்கி, வெள்ளிக் கிழமையன்று தென்கிழக்கு திசை நோக்கி நின்று, தன்னைத்தானே திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடுவது நல்ல பரிகாரம்.

திருவோணம்: இரண்டில் சுக்கிரன் இருக்கிறார். தவறாகக் காணும் இன்பங்களுக்கு விலைகொடுக்க நேரிடும். தனுசில் ஒன்றாக இணைந்துள்ள கிரகநாதர்களால், வயது முதிர்ந்தவர்கள் வீட்டிலிருந்தால் ஆரோக் கியக்குறை உச்சத்தையெட்டும். 18, 19 தேதி களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகள் பணம் நெருக்கடியைத் தரும். 20, 21 தேதிகளில் மனைவி, மக்களின் பேராதரவு பெறலாம். வியாழக் கிழமை ராகு காலத்தில் அல்லது மாலை நேரத் தில் கோவிலில் பைரவருக்கு சந்தனக்காப்பு சாற்றி, மஞ்சள்நிற சம்பங்கி மாலை கட்டி, புனுகு பூசி, சுண்டல் படையலிட்டு, வறுத்த கடலைப் பருப்புப் பொடி கலந்த அன்னம் படைத்து, "ஒரு ஆரஞ்சுப்பழ மிளகு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், தனுசிலிருக்கும் கிரக நாதர்களின் வேகம் தணிந்து கெடுதல்போகும்.

அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: இளமை யில் சுமை நிறைந்த நட்சத்திரம். பெண் குழந்தை பிறப்பதும், பூப்படைவதும் சிறப் பானது. செவ்வாயின் ஆதிக்கம். எனவே கொஞ்சம் முரட்டு சுபாவம் இருப்பதைத் தவிர்க்க இயலாது. இம்மாதம் 24, 25, 26 தேதிகள் உயர்வாகத் தெரியவரும். குறிப்பாக கலைஞர்களுக்கு மிக அற்புதமானது. எந்த வயதினருக்கும் செவ்வாய் உயிர்ப்பிரிவைத் தரவேமாட்டார் என்கிறது சாஸ்திரம். உடல்நலம் சீராகும். திருவான்மியூர் மருந் தீசுவரர், பால்வண்ணநாதர், அன்னை திரிபுர சுந்தரி, மார்க்கண்டேயருக்கு வன்னிமரத் தடியில் காட்சிதந்த இடம். அங்குசென்று வணங்கலாம். விருத்தாசலம், கொடுமுடி, திருக் காட்டுப் பள்ளிக்கும் சென்று வருதல் நன்று. விஷ்ணுவை இஷ்ட தெய்வமாக வழிபடலாம். (இவ்வருடம் செப்டம்பர் 29-க்குமேல் பணவரவு கூடுதலாக இருக்கும்.)

கும்பம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 5, 6, 12, 18, 19.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: இவ்வருடம் மே 11-க்குமேல் செப்டம்பர் 29-க்குட்பட்ட கால அளவில் சொந்தபந்தங் களிடம் கடன்பெறுதல் கூடாது. இம்மாதம் கணவன்- மனைவியிடையே ஒருமித்த கருத்து மனதுக்கு நிம்மதி தரும். உடல் அசதி, ஆரோக்கியக் குறைவோடு பயணம் போதல் கூடாது. இரண்டாவது வாரம் தேவையில்லா வாக்குவாதம் வரும். திருமணமாகாதோருக்கு சுக்கிரன் அருள்புரிவார். இறைவணக்கம் நல்லாதரவு தரும். உங்களுடைய நட்சத்திர மந்திரம் கூறுவது நன்று.

"ஸ்ரவிஷ்டா தேவதா:

வந்தே வாஸுந் ரத வராஸ்ரிதான்//

சங்கம் சக்ராங்கித கரான் கிரீடோஜ்வல மஸ்தகான்//'

இதனைக் கூற இயலாவிடில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சுட்டுவிரலால் நீரில் எழுதிப் பருகுவதும் போதுமானது.

சதயம்: மாணவர்கள் இவ்வருடம் மார்ச் 30 முதல் ஜூன் 30 வரை கல்வியில் கவனம் சிதறல் கூடாது. இம்மாதம் 16, 17 தேதிகளில் குடும்பத்தில் சிறுவர்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் சார்ந்த கவலை கூடுதலாகும். அரசு உத்தியோகம் செய்வோர் பிறர் உதவியால் நற்பெயரை சம்பாதிக்கலாம். 22, 23 தேதிகளில் எல்லா துறையினருக்கும் வேலைப்பளு அதிகமாகும். இம்மாதம் புதன், வெள்ளி, சனியை அதிர்ஷ்டக்கிழமைகளாகக் கருதலாம். சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் இம்மாதம் கோபத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். பிறர்மீது சந்தேகம் கொள்வது சிக்கலை உருவாக்கும். இந்த ராசி, இந்த நட்சத்திர மருத்துவர்கள் கைராசிக்காரர் களாக இருப்பார்கள். கோபத்தை அடக்கி செயல்படல் நன்று.

பூரட்டாதி: இவ்வருடம் மே 11-ஆம் தேதிக்குமேல் செப்டம்பர் 29 வரை சனி பகவான் உங்களை சோதிப்பார். அவரை சரணடைதல் நன்று. குடும்பத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துதல் நன்று. 27, 28 தேதிகளில் சாதனை படைக்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வியாழன், சனி நல்ல நாட்கள். வணங்கவேண்டிய தெய்வம் மகாவிஷ்ணு. இம்மாதம் புதன், சனிக்கிழமைகளில் எந்த புது ஆரம்பமும் கூடாது. மாலை நேரம் அதிர்ஷ்டமானது. (பங்குனி மாதமும் ஒத்துவராது.) நீண்டநாட்களாக குடும்பம் அல்லல்பட்டால் சிறிய வெண்கல மணியை ஆலயத்திற்கு தானம் செய்யலாம். வேப்பமர வேர் (பாக மண்ணில் சிறு பள்ளம் தோண்டி, ஒரு வெள்ளி உலோக உருண்டை அல்லது சிறிய துண்டைப்போட்டு மண்ணால் மூடி தண்ணீர் ஊற்றினால், திருஷ்டிகள் போகும். (இவ்வருடம் மாணவர்கள் மார்ச் 30 முதல் ஜூன் 30 வரை கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.)

மீனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 7, 8, 14, 20, 21.

பூரட்டாதி: இவ்வருடம் ஜனவரி 14 தேதிக்குமேல் சனி நல்லவற்றைச் செய்வார். 5, 6 தேதிக்குமுன் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக முன்னேற மனம் தூண்டும். இரண்டாவது வாரம் வங்கி இருப்பு கூடும். குடும்ப சொத்து வராமல் தடைப்பட்டிருந்தால் இம்மாதம் அதற்கான சுபச்செய்தி வந்துவிடும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குபேரன், மகாலட்சுமி யின் செல்வங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரம் பெற்றார். காலையில் எழுந்தவுடன் வடக்கு நோக்கி குபேரனை வணங்குங்கள். பணக்கஷ்டங்கள் போய்விடும். 9, 10 தேதிகளில் ஆரோக்கியத்தில் பின்னடைவு வரும். உயரதிகாரிகளின் ஆதரவால் நல்லவை நடக்கும். மஞ்சள் துணியில் ஒரு தங்க நகையை முடிந்துவைத்து- குருவை வணங்கிவர சுலப நன்மை பெருகும்.

உத்திரட்டாதி: ஒரு வெற்றிகரமான தீர்மானத்தை மனதில் நிலைநிறுத்தி செயல் படப்போகிறீர்கள். இம்மாதம் அதிகமான பணத்தை முதலீடு செய்வது கூடாது. 22, 23 தேதிகளில் சுயகௌரவம் உயர்வடையும். சுக்கிரன் 11-ல். கலைஞர்களுக்கு தடையின்றி வருமானம் கிடைக்கப்பெறும். உங்கள் எதிரியின் எதிரி உங்களுடன் நட்பை வளப்பார். குழந்தையில்லாது வருந்தும் தம்பதி கட்கு மழலைச் செல்வம் வரலாம். நடிகர்கள் அரசியல்வாதியாக மாற நல்ல தருணம். போதைக்கு அடிமையானவர்கள் கவனமுடன் செயல்படவேண்டும். தாத்தா, பாட்டியிடம் வசதியிருந்தால் இம்மாதம் பகைப்பது கூடாது.

"அமெரிக்கன் டைமண்ட்' அல்லது வைர மோதிரம் இருந்தால் அணிவது நல்லது.

ரேவதி: இம்மாதம் பிறருடைய குறை களைப் பார்த்தும் பாராதிருப்பது நன்று. 27, 28 தேதிகளில் குழந்தைகட்கு கல்விக்காக அதிக செலவு செய்ய நேரிடும். 29, 30 தேதிகளில் சந்திரனின் பேராதரவு உயர்வைத் தரும். நீங்கள் நான்காவது பாதத்தில் பிறந் திருந்தால் தந்தையின் ஆரோக்கியம் பின்னடைவாகும். அதிர்ஷ்ட தேவதை லட்சுமி நாராயணர். இம்மாதம் செவ்வாய்க்கிழமை யில் புதுமுயற்சி வேண்டாம். மரகதப் பச்சை மோதிரம் அணிதல் சிறப்பு. இம்மாதம் வயது 14, 23, 32, 41, 50 எனில், சுலபமான வெற்றிகளை எதிர்பார்க்கலாம். மங்கையரின் ஜாதகத்தில் புதன் சிம்மத்தில் இருக்க, குருவும் சுக்கிரனும் ஒன்றுகூடி எங்கிருந்தாலும் இம்மாதம் திருமண முயற்சி வேண்டாம். (இவ்வருடம் மார்ச் 30 முதல் ஜூலை இறுதி வரை கணவன்- மனைவி, குழந்தைகள் யாவரும் விட்டுக்கொடுத்துப் பழகுதல் நன்று.)

செல்: 93801 73464