ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குத் தடைகளாக இருக்கின்றன. அவற்றில் செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம், களத்திர தோஷம் போன்றவை ஜாதகத்தைப் பார்த்த வுடன் எளிதில் கண்டறியும் விதத்தில் இருக்கும்.

ஆனால், பலரும் அறிந்திராத- ஜோதிடருக்கும், ஜோதிடத்திற்கும் "செக்பாயின்ட்' வைக்கக் கூடிய ஒரு தோஷம் திதிசூன்ய தோஷமாகும். ஜோதிடப் பலன்கள் அனைத்தையும் பொய் யாக்குவது திதிசூனிய தோஷம்.

பஞ்சாங்கத்தின் ஒரு அங்கமான திதியைப் பற்றியும், அது எவ்வாறு சூன்யமடைகிறது, அதனால் ஜாதகருக்கு ஏற்படும் நன்மை- தீமைகள் போன்றவற்றையும் இங்கு காணலாம்.

திதிசூன்யம் என்பது சூரியனின் பயணப் பாதைக்கும், சந்திரனின் பயணப்பாதைக்கு முள்ள தூரமாகும்.

Advertisment

வளர்பிறைத் திதி: 15

தேய்பிறைத் திதி: 15

ஆக, 30 திதிகளாகக் கணக்கீடு செய்கி றோம்.

Advertisment

உலகின் அனைத்து ஜீவராசிகளும் ஒளிகிரகங்களான சூரிய- சந்திரர்களின் ஒளியைப் பெற்றே இயங்குகின்றன. அதனால் தான் விதி- லக்னத்தை சூரியனைக்கொண்டும், மதி- ராசியை சந்திரனைக்கொண்டும் அறிகிறோம்.

இத்தகைய சூரிய- சந்திரர்களின் கதிர் வீச்சுகள் 12 ராசிகளுக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்போது மட்டுமே ஒவ்வொரு ராசியும், அதில்நின்ற கிரகங் களும் தத்தம் வேலையை நடத்தும். சூரிய சந்திரருடைய கதிர்வீச்சு கிடைக்காத ராசியே திதிசூன்ய ராசிகள் எனப்படும்.

tt

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பன்னிரு ராசிகளுக்கும் பரிபூரணக் கதிர்வீச்சு கிடைக் கிறது. மற்ற திதிகளில் பிரதமைமுதல் திரயோதசி வரையான நாட்களில் இரண்டு ராசிகள் சூன்ய மடைகின்றன. சதுர்த்தசி திதியில் மட்டும் நான்கு ராசிகள் சூன்யமடைகின்றன.

(அட்டவணை காண்க.)

இத்தகைய திதிசூன்ய ராசிகள் ஜாதகப் பலன்களைத் தீர்மானம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நம் ஜாதகத்தில் ஆட்சி, உச்சமடைந்து வலிமைபெற்ற லக்ன சுபகிரகங்கள்கூட மிகுதியான அசுபப் பலனையும், அசுப கிரகங்கள் சுபப் பலனையும் தந்துவிடும்.

திதிசூன்ய தோஷத்திற்கான விதிவிலக்குகள்

திதிசூன்ய கிரகம் நீசமடைவது அல்லது வக்ரமடைவது.

சூன்ய ராசியில் நீச, வக்ர கிரக அமர்வு, ராகு- கேதுக்கள் அமர்வு.

சூன்ய கிரகம் அஸ்தமனம் பெறுவது.

மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12-ஆமிடங்களும், அதன் அதிபதிகளும் சூன்யம் அடையும்போது நன்மை செய்யும்.

சூன்யமடைந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகமும் வலிமையிழக்கும்.

இரண்டு ஆதிபத்தியம்கொண்ட கிரகத்தின் ஒரு வீடு சூன்யமடைந்தாலும் மற்ற வீட்டிற்கு சுப பலம் ஏற்படும். சிலசமயம் ஒரே காலகட்டத்தில் இரண்டு பாவகம் பாதிக்கும் சூழலும் உருவாகும்.

திதி சூன்யமடைந்த கிரகம் நின்ற, பார்த்த, இணைந்த கிரகத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

பலர் திதிசூன்யம் பெற்ற கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேதுவுடன் இருந் தாலும் தோஷமில்லை என்றும், சிலர் சூரியன், சந்திரனை சூன்ய தோஷம் கட்டுப் படுத்தாது என்றும் கூறுகிறார்கள்.

திதிசூன்ய ராசியிலுள்ள கிரகம் மற்றும் அந்த ராசி அதிபதியின் பலன்கள்

சூரியன்: ஜாதகரின் புகழ், தோற்றம், அந்தஸ்து குறையும். தந்தையுடன் கருத்து வேறுபாடு. தந்தைக்கு உடல்நலக் குறைவு, பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாமை ஏற்படும். ஜாதகரின் கண் பாதிக்கப்படலாம். அரசுவழியில் ஆதாயம் குறையும்.

ஜாதகருக்கு கண் பார்வைக் குறைபாடு, தீராத ஒற்றைத் தலைவலி, பித்த நோய்கள், உஷ்ண நோய்கள், சித்த பிரம்மை போன்ற நோய்த்தாக்கம் இருக்கும்.

சந்திரன்: தாய்க்கு தோஷம். தாயாரின் உடல்நலம் குறையும். தாயாரின் அன்பைப் பெறமுடியாது. மன அமைதி இருக்காது. மந்த புத்தி, புத்தி சாமர்த்தியம் இருக்காது. பலருக்கு மனநோய் ஏற்படும். அடிக்கடி ஜலதோஷம் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறையும்.

ஞாபக மறதி மற்றும் சந்தேக எண்ணம் இருக்கும். நீரில் கண்டம், பயணங்களில் சிக்கல் ஏற்படும்.

செவ்வாய்: வீடு, வாகன யோகம் தடைப்படும். சகோதரருக்கு தோஷம், உடன்பிறப்புகளால் நன்மை இருக்கும். தைரியக்குறைவு, ரத்த சம்பந்தமான வியாதி, பற்கள் பாதிப்பு, மண்ணீரல் தொடர்பான வியாதி ஏற்படும்.

மிதமிஞ்சிய காமம் அல்லது வீரியக்குறைவு இருக்கும். ஜாதகர் பெண் என்றால் கணவருடன் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும் புதன்: கல்வியில் தடை, கணிதத்தில் மதிப்பெண் மிகக்குறையும். காதல் பிரச்சினை இருக்கும். தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை இருக்காது.

தாய்மாமன், நண்பர்களால் அனுகூலம் இருக்காது. சோம்பேறி. கடின உடலுழைப்பில் ஈடுபட இயலாது. தோல், நரம்பு மண்டல பாதிப்பிருக்கும்.

குரு: பொருளாதாரப் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், நிம்மதியின்மை உருவாகும்.

குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளால் பிரச்சினை, குலதெய்வ அனுக்கிரகமின்மை உருவாகும். உயர்கல்வியில் தடை, தீய சிந்தனைகள், ஒழுங்கீனம், கோழைத்தனம், நெருப்பால் கண்டம் ஏற்படும். போலிச் சாமியார், குரு துரோகம், வஞ்சக எண்ணம் மிகும். தங்க நகை சேராது. மூளை, கல்லீரல், பித்தப்பை போன்ற உடலுறுப்புகளின் செயல்பாடு குறைவுபடும்.

சுக்கிரன்: ஆண்களுக்குத் திருமணம் தாமதப்படும். மனைவியிடம் கருத்து வேறுபாடு மிகும். அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை குறைவுபடும்.

பணப்புழக்கம் இருக்காது. கண் கோளாறு, போகம், வாகனம், அழகுணர்வு, கௌரவம் ஆகியவை பாதிக்கப்படும். உடலின் சுரப்பிகளின் இயக்கம் பாதிக்கப்படும். அத்தை, அக்கா, பெரியம்மா போன்ற உறவுகளிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.

சனி: சனி சுபப் பலன் தரும் நிலை யிலிருந்தால் திடீர் தொழில் முடக்கம், வேலையிழப்பு, நிரந்தர வருமானமின்மை உருவாகும். மூட்டுவலி, எலும்பு, நரம்பு தொடர்பான பிரச்சினைஇருக்கும்.

சனி அசுபப் பலன் தரும் நிலையில் நின்றால், நல்ல பலன்கள் உண்டு. வாக் குவண்மை ஏற்படும். சனிப்பெயர்ச்சி களால் பாதிப்பிருக்காது. பக்தி மானாகவும் நேர்மையானவராகவும் இருப்பார். தொழிற்சாலை, இரும்பாலை போன்றவற்றின்மூலம் பெரும் லாபமுண்டு. இவரிடம் வேலையாட்கள் பலர் இருப்பார்கள்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் தசா, புக்திக் காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406